சந்தோசு கோபு : கருத்துக்கள் ( 1085 )
சந்தோசு கோபு
Advertisement
Advertisement
பிப்ரவரி
22
2019
அரசியல் மக்களே என் ஜோசியர் கமல்
எந்த குறிப்பிட்ட இன, மத, ஜாதி அடிப்படையிலான மக்களுக்கு என்றில்லாமல், கமல் அவர்கள், 'மக்கள் நீதி மய்யத்தை' அனைத்து மக்களுக்கும் பொதுவான இயக்கமாக கட்டமைத்திருப்பதே ம.நீ.மவின் முதல் சிறப்பம்சம்.. இது தான் இந்த காலத்திற்குத் தேவையான முதல் மாற்றம்.. ஒரு சில சினிமா பிரபலங்களைத் தவிர பெரும்பாலும் சாமான்ய மக்களே ம.நீ.மவின் முகங்களாக இருக்கிறார்கள்.. கமல் எந்த வி.ஐ.பிக்களின் பின்னாலும் செல்லவில்லை.. சாமானியர்களின் குரலையே கமல் இன்று வரை பிரதிபலிக்கிறார்.. அது ம.நீ.மவின் இரண்டாவது சிறப்பம்சம் ஆகும்.. கிராமங்கள், விவசாயம் அவற்றின் முன்னேற்றம் போன்ற நாட்டின் முதுகெலும்பான அம்சங்களை கையிலெடுத்து அரசியலையும், அரசியல்வாதிகளையும் அவற்றை நோக்கி திருப்பி விட்டிருக்கிறார் கமல்.. உள்ளாட்சி அமைப்புகள் அவற்றின் பலம், இளைஞர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டியதன் அவசியம், ஓட்டுக்கு காசு வாங்கினால் ஏற்படும் அவலங்கள் போன்ற சமூக விழிப்புணர்வுகளைத் தூண்டி வருவது என கமல் தன் அரசியலின் தனித்துவத்தை இந்த ஓராண்டிலேயே உணர்த்திவிட்டார்....   09:40:25 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
22
2019
அரசியல் மக்களே என் ஜோசியர் கமல்
'வாரிசு அரசியல் கூடாது' என்பது சட்டப்படி அல்ல... தார்மீக அடிப்படையில் தான். ஸ்டாலின் அவர்களை யாரும் வாரிசா பார்க்கவில்லை.. ஏன்னா அவர் கடந்து வந்த பாதை அப்படிப்பட்டதாக இருந்தது.. அதே நேரத்தில் கருணாநிதியின் இன்னொரு மகனான அழகிரியை யாரும் பெரும்பான்மையான திமுகவினர் உள்பட யாரும் ஏற்று கொள்ளவில்லை. வாரிசாகத் தான் பார்த்தனர். கனிமொழிக்கும் இன்றளவும் அதே நிலை தான். ஜாதி அடிப்படையில் ஒரு கூட்டத்தை வைத்து கொண்டு தான் கனிமொழி திமுகவில் ஓரளவு சமாளித்து கொண்டிருக்கிறார்.. ஆனால் இந்த உண்மையெல்லாம் தெரிந்திருந்தும், ஸ்டாலின் எப்படி தன் மகனான உதயநிதியை திணிக்கிறார் என்பது தான் புரியவில்லை.. அல்லது ஸ்டாலினுக்கும் இந்த உண்மை புரியவில்லையா என்றேத் தெரியவில்லை.. ஸ்டாலின் அவர்களுக்கு திமுகவினரை பற்றியே சரியாகத் தெரியவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.. திமுக தொண்டர்கள் அதிமுக தொண்டர்களை போல் அடிமைகள் இல்லை.. ஒரு அளவிற்கு மேல போனா, பெரும்பான்மையான திமுகவினரே ஸ்டாலினின் இந்த வாரிசு அரசியலை வெறுத்து விடுவார்கள். ஆகையால் உதயநிதியை திணிக்கும் வேலையை கைவிடுவது ஸ்டாலினுக்கும் நல்லது.. திமுகவுக்கும் நல்லது..   09:15:27 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
அரசியல் தே.மு.தி.க.வுக்கு 5 சீட்?
5 தொகுதிகள் என்பது தேமுதிகவின் இன்றைய நிலைக்கு, ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். பாமகவுக்கு 7+1 கொடுக்கும் போது, பாமகவின் வாக்குவங்கியில் பாதிக்கும் குறைவான வாக்குவங்கி வைத்திருக்கும், தேமுதிகவுக்கு 3 அல்லது 4 கொடுப்பதே அதிகம் தான்.. இது பிரேமலதாவுக்கும் சுதீசுக்கும் ரொம்ப நல்லாவேத் தெரியும், இருந்தாலும் சும்மா போட்டுப் பாக்குறாங்க. ரெண்டு நாள் இழுத்துட்டு, கப்புசிப்புனு கிடைக்கிறதே வாங்கிகிட்டு சைலண்டா ஆயிடுவாங்க பார்த்துகிட்டே இருங்களேன்.   07:34:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
அரசியல் திருநாவுக்கரசர் சந்திப்பு விஜயகாந்துக்கு அழைப்பு
பாவம் விஜயகாந்த்.. ட்ரீட்மெண்ட் கம்ப்ளீட் ஆச்சோ ஆகலையோத் தெரியலை.. தேர்தல் வந்ததால அவசரமா கூட்டிட்டு வந்துட்டாங்க போல..   07:17:23 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
உலகம் மனித குலத்தின் சவால்கள் பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும்
//..மிக விரைவில், இது, இரண்டு மடங்கு வளர்ச்சியை அடைந்து, 355 லட்சம் கோடி ரூபாயாக உயரும்..// ஆரம்பிச்சுட்டாருய்யா ஆரம்பிச்சுட்டாரு.. தேர்தல் காலமாச்சே, இனி இது போன்ற மெகா சைஸ் வடைகளை சுட்டுக் தள்ளிகிட்டே இருப்பாரு தலீவர்.   07:04:23 IST
Rate this:
15 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
பொது காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி
ஒரு ஏழை தாயின் மகன், மக்களின் பணத்திலிருந்து, சில பல லட்சங்களை போட்டு தன் சுய விளமபரம் தேடிக்கொள்வது என்ன அவ்வளவு பெரிய குற்றமா இந்த நாட்டுல? ஒரு ஏழைத் தாயின் மகன் சும்மா ஒரு 10 லட்சத்துல ஒரு கோட் சூட் போடக் கூடாது, சும்மா ஒரு ரெண்டு கோடியிலே விளம்பர படம் நடிச்சுடக் கூடாது.. உடனே வந்துடுவானுங்க வயித்தெரிச்சல் புடிச்சவனுங்க,, சே ஒரு ஏழைத் தாயின் மகனை இப்படியா விமர்சிப்பது?   06:58:41 IST
Rate this:
20 members
1 members
22 members
Share this Comment

பிப்ரவரி
22
2019
அரசியல் மக்களே என் ஜோசியர் கமல்
ஒரு ஊர்ல ஒரு பூசாரி இருந்தாராம்.. அவர் சாவு சடங்குகள், திதி கொடுக்குறது போன்ற காரியங்களையும் செய்து வந்தாராம். அவர் ஒரு நாய் வளர்த்துக்கிட்டு வந்தாராம். பூசாரி எங்கே சடங்கு செய்ய போனாலும், நாயும் கூடவே போகுமாம். பூசாரி அந்த நாயை பக்கத்தில இருக்குற ஏதாவது ஒரு கம்பத்துல கட்டி வச்சுட்டு தன் வேலையை செய்வாராம். அந்த பூசாரிக்கு ஒரு 15 /16 வயசில ஒரு பையன் இருந்தானாம். அவனும் அப்பப்ப தன் அப்பா கூட போயி அவருக்கு உதவி செய்வானாம். இப்படி போயிட்டு இருந்த போது ஒரு நாள் பாவம் அந்த பூசாரி இறந்து போயிடுறார். அந்த தூக்கத்துல அவர் வளர்த்து வந்த நாய் எங்கேயோ ஓடி போயிடுச்சாம். வருமானம் இல்லாம குடும்பம் ரொம்ப கஷ்டப்பட ஆரம்பிச்சதால, பூசாரியோட பையன், தன் தந்தையோட வேலையை தொடரலாம்னு முடிவு பண்ணிட்டானாம். அந்த நிலைமையில ஒரு வீட்டில துக்க சடங்கு செய்யணும்னு அந்த பூசாரி பையனை அணுகினாங்களாம். பையனும் ஓத்துக்கிட்டு சடங்கு செய்ய போனானாம்.. அங்க எல்லாப் பொருள்களும் தயாரா இருந்துச்சாம்.. பையன் சுத்தி சுத்திப் பார்த்தானாம், பார்த்துட்டு கேட்டானாம், 'எங்கே ஒரு நாயையம் காணோம்..? போய் உடனடியா ஒரு நாயை கொண்டு வாங்க, அந்த கம்பத்துல அதை கட்டி வைக்கணும்' என்றானாம்.. ஏன் நாயை கட்டிப் போடணும்னு மர்றவங்கெல்லாம் கேட்டதுக்கு, பையன் சொன்னானாம்.. 'எங்கப்பா காரியம் செய்யும் போது நீங்க பார்த்ததே இல்லையா..? நாயை கட்டிப் போட்டுட்டு தான் காரியம் செய்வாரு.. அப்படி பண்ணா தான் மந்திரமெல்லாம் பலிக்கும். போய் உடனே ஒரு நாயை கொண்டாங்க'.னு சொன்னானாம்...... நான் சொன்ன இந்த கதைக்கும், 'திமுகவின் மூத்த தலைவர்' உதயநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க.   06:48:55 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
அரசியல் வேட்பாளர் தேர்வு கமல் தகவல்
மக்கள் நீதி மய்யம் நிச்சயம் வெல்லும். இன்றல்லது நாளை.. வாழ்த்துகள் மநீம...   15:10:32 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
அரசியல் வேட்பாளர் தேர்வு கமல் தகவல்
கமல்ஹாசன்  மற்றவரை போல குருட்டு அதிர்ஷ்டத்தையோ, தலையெழுத்தையோ நம்பி அரசியலுக்கு வரவில்லை.. இன்னும் சிலரை போல தான் பெரிய ஸ்டாரு, கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டவன் என்ற மூட முட்டாள் தனங்களை நம்பி அரசியலுக்கு வரவில்லை.. தான் சார்ந்த ஜாதி பலமிருக்கு, மத பலமிருக்கு என்று அரசியலுக்கு வரவில்லை.. முழுக்க முழுக்க தன் உழைப்பை மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்திருக்கிறார்.. உழைப்புடன் நேர்மையும் சேர்ந்தே இருப்பதால், கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே களம் காணும் துணிவு  இயற்கையாகவே அவருக்கு வந்துவிட்டது. சோம்பேறி தான் களத்தின் சூழல் தனக்கு சாதகமாகட்டும் என்று காத்திருப்பான்.. உழைப்பாளி களத்தின் சூழலை தனக்கேற்றாற் மாற்றி கொள்வான்..  கமல் கடுமையான உழைப்பாளி..  மாற்றியே தீருவார்.. மக்கள் மனங்களை நிச்சயம் வெல்வார்..   15:10:08 IST
Rate this:
8 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
20
2019
கோர்ட் கோர்ட் அவமதிப்பு வழக்கு அனில் அம்பானி குற்றவாளி
யோவ் கொஞ்சம் பொறுங்கய்யா.. திவாலான அண்ணனை மீட்கத் தான் தலீவர் அவரை ரஃபேல் டீல்ல கோர்த்து விட்டுருக்காரு. டீலு முடியட்டும், சும்மா அண்ணன் ரேஞ்சே வேற.. ஏஜென்ட் ஃபீஸ் போக ஒரு விமானத்துக்கு சுமார் ரூ.1150 கோடின்னு ரஃபேலும் அண்ணனும் பங்குப் போட்டுக்கப்போறாங்க... அப்போ இந்த ஜுஜுபி ரூ.550 கோடியை அண்ணன் உங்களுக்கு டிப்ஸாவே குடுத்துடுவாரு. வெயிட் பண்ணுங்கய்யா கொஞ்சம்.. ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சாம்...   11:49:04 IST
Rate this:
13 members
0 members
21 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X