Suri : கருத்துக்கள் ( 1431 )
Suri
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
5
2019
பொது முடிகிறது 35 ஏ விடிகிறது புதிய காஷ்மீர்
கருத்தை முழுமையாக படிக்காமல் , பெயரை வைத்து ஆராய்ச்சி செய்து அவன் பாக்கிஸ்தான் ஆளா, வேற்று மதத்தவனா என்று முடிவு கட்டுவது தான் வலதுசாரிகள் முனைப்பு. இந்த நடவடிக்கை மற்றோரு தோல்வி நடவடிக்கை ஆகக்கூடாது என்பதே என் அவா. நாட்டு பொருளாதாரம் சரிந்துகொண்டு இருக்கும் போது, அனைத்து பொருளாதார புள்ளிவிவரங்களும் சரிவை குறிக்கும் போது இப்படிப்பட்ட மிக பெரிய நடவடிக்கை தேவை தானா? இந்த நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்க ஏற்பட்ட காரணத்தை தெளிவாக்குங்குள். டிரம்ப், தன்னுடைய இம்ரான் கான் சந்திப்பில் மோடியை /காஷ்மீரை இழுத்து விட்டது தான் காரணமா? அது தான் பொறி என்றால் தனிப்பட்ட மனிதரின் ஈகோ பாதித்தது என்பதற்கான இப்படிப்பட்ட முடிவும் எடுக்கலாமா ? ஒருவரோ இல்லை இருவர் மட்டும் முடிவு எடுத்து அதை நாட்டு மக்கள் மீது திணிப்பது தான் ஜனநாயகமா? ஜனநாயகத்தின் அடிநாதம் மாற்று கருத்தின் பால் மரியாதை கொடுப்பது. கேள்விகளுக்கு தகுந்த பதில் கொடுப்பது. ஒருவர் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடி கொண்டு ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், மாற்று கருத்து முன் வைப்போரை வசை பாடுவதும், நாகரீகமான செயலா? என் நாட்டு பற்று இங்கு கருத்து பதிவிடுவோரின் நாட்டு பற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. இன்னும் கூற போனால், அவர்களை விட அதிகம் என்று பறை சாற்றிக்கொள்வேன்.   13:39:57 IST
Rate this:
30 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2019
பொது முடிகிறது 35 ஏ விடிகிறது புதிய காஷ்மீர்
மற்றோரு நீண்டகால பொருளாதார பாதிப்புக்கு வழி தேடியுள்ளார்கள். நாட்டு மக்களின் சென்டிமென்டை உபயோகப்படுத்தி ஹிட்லர் தன் நாட்டு மக்களை வசியப்படுத்த பரந்த ஜெர்மனி என்ற ஆசையை காட்டி தான் அத்தனை அக்கிரமங்களையும் செய்தான். நான் நடைமுறை சாத்தியங்களை அலசிப்பார்க்கிறேன். எனக்கு என் உணர்வுகளை உசுப்பி எனக்கு பாதிப்பு ஏற்படுத்தி அதில் ஆதாயம் அடைபவர்களை பிடிக்காது. இதில் collateral damage நிச்சயம். அதை எவ்வளவு minimize செய்வார்கள் என்பதை தான் எதிர்நோக்கி இருக்கிறேன்.   12:37:25 IST
Rate this:
52 members
1 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2019
பொது முடிகிறது 35 ஏ விடிகிறது புதிய காஷ்மீர்
தேனை பாதிப்பு இல்லாம எடுக்க பல வழிகள் இருக்கும் போது , தேன் கூட்டில் கல்லெறிபவனை என்ன வென்று கூறுவீர்கள், விஜய் அவர்களே??   12:30:01 IST
Rate this:
52 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2019
பொது முடிகிறது 35 ஏ விடிகிறது புதிய காஷ்மீர்
கோவிலை வைத்து எவ்வளவு காலம் பூச்சாண்டி காட்டுவது?? இப்போ வேற விஷயத்தை கையில் எடுத்திக்கொண்டாகிவிட்டது. தேன் கூடு. அதில் கல்லெறிந்தாகிவிட்டது. இனி நடப்பவை பாரதத்துக்கு நல்லதாக நடக்கட்டும் என்று நினைப்போம். என்ன பணமதிப்பிழக்கம் போல நடந்து விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் நம் நடவடிக்கை தோல்வி அடையக் கூடாது என்பதே என் பிரார்த்தனை. உலகளாவிய வகையில் இந்த நடவடிக்கைக்கு எதிர் வினை கண்டிப்பாக நடக்கும். அந்த எதிர்வினையை நல்ல விதமாக சமாளிக்க வேண்டும். பாக்கிஸ்தான் ஆட்களை கூட்டும், பஞ்சாயத்துக்கு. முஸ்லீம் நாடுகள் இப்பொழுது உள்ள சர்வதேச நிலவரத்தில், யாருடைய பக்கம் சாய்வார்கள் என்று கணிக்க இயலவில்லை. ஏற்கனவே டிரம்ப் நடவடிக்கைகள் மூலம் மத்திய கிழக்கு நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் திரும்பி கொண்டுள்ளன. பல கால மத்திய கிழக்கு நட்பு நாடுகள் கூட முறுக்கிக்கொண்டு உள்ளன. இதில் குளிர் காய பல நாடுகள் ஆர்வமாக இருக்கும். இவற்றை எல்லாம் எப்படி சமாளிப்பார்கள்?? நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி. 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வைக்கப்பட்டுள்ள குறிக்கோள் இதனால் என்ன ஆகும்? நாம் இப்பொழுது காஷ்மீரத்துக்காக செலவிடும் தொகையில் இருந்து அதிகமாக செலவிட நேர்ந்தால் இந்த திட்டம் அதன் குறிக்கோளை அடையாது. தற்பொழுது செலவிடப்படும் தொகையில் இருந்து மிச்சம் பிடித்து காட்டினால் மட்டுமே இது நாட்டுக்கு நன்மை பயக்கும். இதனால் மேலும் அதிகமாக செலவிடப்பட நேர்ந்தால், அது நாட்டு மக்களின் மீது தான் சுமையாக விடியும். வீரத்தை விட விவேகம் முக்கியம்.   12:15:42 IST
Rate this:
85 members
4 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2019
பொது கொடுத்த கோடிகள் எங்கே?
காங்கிரஸ் சார்பு இருந்ததால் பீ ஜே பீ தன்னுடைய வருமானவரித்துறை மூலம் அழுத்தம் கொடுத்து உயிரை இழக்க காரணம் ஆகிவிட்டது. பழி விழாமல் இருக்க இறந்தவரை அசிங்கபடுதுகிறார்கள். குஜராத்தில் ராஜ்ய சபா தேர்தலின் போது பீ ஜே பீ மூக்குடைந்த நேரத்தில் இருந்து சிவகுமார் பழிவாங்கபடுகிரார்.. பின்விளைவு இந்த தற்கொலை. தற்கொலைக்கு தூண்டிய குற்றம் பீ ஜே பீ யை மட்டுமே சாரும்.   11:39:29 IST
Rate this:
21 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2019
பொது யூனியன் பிரதேசமாகிறது காஷ்மீர், லடாக் ?
தேன் கூட்டில் கை வைக்கும் செயல். தகுந்த பாதுகாப்பு கவசங்கள் தேவை. prima facie நல்ல முடிவாக தெரியலாம். காலம் தான் இதன் வெற்றியை தெரிவிக்கும். மற்றோரு பணமதிப்பிழக்க நடவடிக்கை போல் ஆகாமல் மிக மிக கவனமாக நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டம். Pessimist ஆக இதை நினைக்க மனம் மறுக்கிறது. ஏனெனில் இது மற்றோரு நீண்ட கால வடுவாக மாற வாய்ப்புகள் அதிகம். திட்டம் வெற்றி பெற்றால் நிச்சயமாக மோடிக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.   12:07:25 IST
Rate this:
19 members
3 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2019
அரசியல் கல்விக்கொள்கை கூட்டத்தில் தி.மு.க.,-அ.தி.மு.க., மோதல்
ஒருவருடன் இருந்துகொண்டே மற்றவருடன் குலாவுவது சசிகலாவுக்கு கை வந்த கலை. அடிமை கூட்டத்தின் MP ஆனால் ஜால்ரா அடிப்பது பீ ஜெ பீ க்கு. பீ ஜெ பீ க்கு இப்படிப்பட்ட ஆட்களிடம் தான் நெருக்கம் அதிகம். கூட இருந்தே குழி பறிப்பவர்கள் என்றால் பீ ஜெ பீ க்கு கொள்ளை பிரியம். அதை அரசியல் சாணக்கியம் என்று சப்பை கட்டு கட்டுவார்கள்.   08:09:25 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
31
2019
கோர்ட் ஏழைகள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதா? ஆவேசம்!
இட ஒதுக்கீடு சமூக அவலத்தை களைவதற்கு கொண்டுவரப்பட்டது. ஏழ்மயை போக்குவது அரசின் கடமை. இட ஒதுக்கீடு தீர்வல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுக்கள் போல பல பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. ஆனால் பொருளாதார தீர்வுக்கும், இட ஒதிக்கீடுக்கும் தொடர்பு இல்லை. நமது அரசியல் அமைப்பிலும் பொருளாதார இட ஒதிக்கீட்டிற்கு இடம் அளிக்கவில்லை. சமூக நிலை சார்ந்த நிலைக்கு இட ஒதுக்கீடு உள்ளது. எதோ ஒரு தலைமுறையினர் பணக்காரராக இருந்ததால் அடுத்த தலைமுறைக்கு மறுப்பது அநீதி என்று கூறும் உங்களுக்கு, இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக , பல நூறு தலைமுறைகளாக சமூக மறுப்புக்கு உள்ளான ஆட்களுக்கு என்ன பதில் வைத்துளீர்கள்?   15:27:16 IST
Rate this:
7 members
1 members
4 members
Share this Comment

ஜூலை
31
2019
கோர்ட் ஏழைகள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதா? ஆவேசம்!
அந்த படத்தின் மூலம் வெளிப்படுத்தும் குறியீட்டை உணர முடியாத அறிவிலிகள், படத்தை எடுத்தவனை மடையன் என்று புறம் தள்ளும் அளவுக்கு மட்டுமே அறிவுடையவர்கள். இப்படிப்பட்டவர்கள் தான் அறிவிலே முன்னேறிய வகுப்பினர் சிறந்தவர்கள் என்று வெடித்து கூப்பாடு போடுபவர்கள். இன்றும் அந்த சினிமாவில் காட்டப்பட்ட நிகழ்வுகள் நிதர்சனம். களம், மற்றும் இடம் மாறலாம் ஆனால் அந்த படத்தில் காட்சிப்படுத்தியது உண்மைக்கு வெகு சமீபம்.   14:52:49 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2019
அரசியல் 3 நாளில் 3 மசோதா.. பீட்சாவா விற்கிறோம்
இந்த மசோதாக்கள் நீண்ட காலத்து பின் உங்களுக்கு ஆபத்தாக/ஆப்பாக வந்து முடியும் . அப்பொழுது இதையே கூறுங்கள்.   14:43:09 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X