ஒரு ருபாய் பணம் என்றாலும் மக்கள் பணத்தை சுரண்டறவங்களுக்கு முச்சந்தியில் நிற்கவைத்து சவுக்கடி தரணும். தனியார் கம்பெனி என்றால் முதலாளிக்கு பயப்படணும். மாணவன் என்றால் வாத்தியாரிடம் பயம் இருக்கணும். பொது பணத்தை கையாடல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பயம் வரும் அளவுக்கு தண்டனை கடுமையாக இருக்கணும். மக்களை கண்டா பயம் வரணும்.
29-மே-2023 15:51:29 IST
ஐயா முதல்வர் அவர்களே நீங்க கேட்ட புல்லட் ரயில் இந்தியாவுக்கா அல்லது தமிழ்நாட்டுக்கா? இந்தியாவுக்கு அப்படின்னா குஜராத்தில் ஏற்பாடு நடந்துக்கிட்டுருக்கு நம்ம தமிழ்நாடு அப்படின்னா ரயிலை பத்தி மத்திய அரசாங்கம் பார்த்துக்கும் முதல்ல எல்லா கிராமங்களுக்கும் குண்டும் குழியும் இல்லாம தரமான ரோடு போடுங்க சின்ன சின்ன கிராமங்களுக்கும் மினி பஸ் விடுங்க இருக்கிற பஸ் அனைத்தையும் ரிப்பேர் ஆகாத வண்ணம் அடிக்கடி பராமரிப்பு செய்ய ஆணையிடுங்க கூட்ட நேரத்தில் அதிக பேருந்தை விடுங்க ரோட்டோரத்தில் கடை போட்டு டிராபிக் ஜாம் பண்றன்வாங்க மேல நடவடிக்கை எடுங்க குறுகலான சாலை எல்லாத்தையும் விசாலமாக்குங்க நம்ம ஊரு சாலை அனைத்தயும் சரி பண்ணிவிட்டு அப்புறம் புல்லட் ரயில் பத்தி அப்புறம் பேசலாம்
29-மே-2023 14:58:07 IST
அண்ணாமலை ஐ.பி.எஸ். ஆனதற்கு கருணாநிதி புத்தகம் வாங்கி கொடுத்தாரா ? டியூசன் பீஸ் கட்டினாரா ? ஆசிரியராக பாடம் நடத்தினாரா ? அல்லது இரவெல்லாம் கண்விழித்து படித்த அவருக்கு காபியோ டீயோ போட்டுத்தர யாரையாவது நியமித்தாரா ? ? ராஜா இதை விளக்கலாமே ? ஓட்டுக்காக இடஒதுக்கீடு, ஜாதி பிரிவினை, இவற்றை மட்டுமே முன்னெடுத்து அடுக்குமொழியில் பேசி மக்களை மயக்கி வோட்டுவாங்கி ஆட்சியில் அமர்ந்தபின்னர் சொத்து குவித்ததுதான் தி.மு.க மற்றும் அவர்கள் கட்சியினர் செய்த சாதனை.
26-மே-2023 16:10:07 IST
ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் வருமான துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். இது நேற்று சொல்லி இன்று நடந்தது அல்ல. பலகாலமாக காத்திருந்து ஸ்கெட்ச் போட்டு நடக்கிறமாதிரி தெரிகிறது. பொறியில் ஏதாவது ஒன்று மாட்டினாலும் அது நல்லதற்குத்தான்.
26-மே-2023 14:41:50 IST
மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால் எப்படிப்பட்ட உறுதிமொழி அளித்தாலும் அதை நிறைவேற்ற முடியாது என்பதை இந்த முதல்வர் நன்றாக அறிவார். ஆனாலும் மத்திய அரசை குறிப்பாக மோடியை மற்றும் ஆளுநரை விமர்சித்து மட்டுமே அரசியல் நாடகத்தை நன்றாக நடத்துகிறார்.
25-மே-2023 13:05:51 IST
இந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் இந்த புதிய பாராளுமன்ற கட்டடத்துக்குள் வருவார்களா ? மாட்டார்களா ? பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு வராமல் அதையும் புறக்கணிப்பார்களா ??
25-மே-2023 10:57:11 IST
பாராளுமன்ற தேர்தல் என்று வரும்போது இங்கு அண்ணா.தி.மு.க என்ற ஒரு கட்சியை உதறிவிட்டு செல்ல ஆளும் பா.ஜ.க விரும்பாது. எனவே காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியே தொடரும். அண்ணாமலை இருக்கும்வரை பாஜக தி.மு.க பக்கம் போகாது. மீறி சென்றால் அது தற்கொலைக்கு சமம் என்று ஆகிவிடும். . அண்ணாமலையின் பாதயாத்திரை முடியும் வரை அரசியல் நிலைமையை தமிழ்நாட்டில் கணிக்கமுடியாது என்று சொல்லலாம். ஒரு கட்சிக்கு இன்று இருக்கும் மக்கள் ஆதரவு தேர்தல் சமயத்தில் நிச்சயம் மாறிவிடும்.
23-மே-2023 11:18:27 IST
கடந்த முறை மோடி பணமதிப்பு இழப்பு என்ற அறிவிப்பை இரவு வெளியிட்டார். அப்போது ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது .ஆளும் கட்சியின் அரசியல் தந்திரங்களில் இதுவும் ஒன்று.
ஒரு வகையில் எதிர்கட்சிகளை வலுவிழக்க வைக்கும் செயல். இனி வரப்போகும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கையில் பணப்புழக்கம் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது. நாங்கள் எதுவும் சொல்லவில்லை.
ரிசர்வ் வங்கி ரொக்க நடவடிக்கை மேலாண்மையில் இதுவும் ஒன்று என்று சொல்லிவிடுவார்கள். மத்திய அரசை விமர்சித்து நீதிமன்றத்தில் யாரும் குற்றம் சொல்லிவிட முடியாது. வழக்கும் தொடுக்க முடியாது.
20-மே-2023 12:59:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.