vetri : கருத்துக்கள் ( 21 )
vetri
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
3
2019
கோர்ட் மோடிக்கு பேனர் ஐகோர்ட் அனுமதி
பேனர் வைக்க அனுமதி கொடுத்து, அப்போது ஏதாவது விபரீதம் நடந்தால், அதற்கு யார் பொறுப்பு? அரசா, நீதிமன்றமா? பேனர் கலாசாரமே வேண்டாம். நடைபாதையில் நடக்க முடியவில்லை. எந்த கட்சியாக இருந்தாலும், நீதிமன்றம் இதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது.   12:57:33 IST
Rate this:
4 members
0 members
47 members
Share this Comment

ஜூலை
14
2019
சிறப்பு பகுதிகள் இவனுங்க போராளிகளாம்!
அன்னை தெரேசா அல்பேனியா பால்கன் குடாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே மொண்டெனேகுரோ, வடகிழக்கே கொசோவோ, கிழக்கே மாக்கடோனியா, தெற்கு, மற்றும் தென்கிழக்கே கிரேக்கம் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் பெருமாலான பகுதிகள் மலைப்பாங்கானவை. வடக்கே அல்பேனிய ஆல்ப்சு மலைகள், கிழக்கே கோராப் மலைகள், தெற்கே செரோனிய மலைகள், நடுவே இசுக்காண்டர்பெக் மலைகள் அமைந்துள்ளன. அல்பேனியாவின் கரைப் பகுதிகள் மேற்கே ஏட்ரியாட்டிக் கடல், தென்மேற்கே அயோனியன் கடல் ஆகியவற்றைத் தொடுகிறது. அன்னை தெரசா அல்பேனியா நாட்டைச் சேர்ந்தவர். இது ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடு.   10:47:31 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
18
2019
பொது புதிய பாடத்திட்ட புத்தகங்கள் 2 நாளில் வழங்கப்படும்
பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு, 10ம் வகுப்பு, 7, 8, 9 வகுப்பு புத்தகங்கள் வழங்கப்பட வில்லை. ஆனால், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எல்லாம் தனியார் மயம்தான்.   13:03:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
7
2019
அரசியல் இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவிப்புசெங்கோட்டையன்
இந்தியா ஒன்றும் திரும்பி பார்க்க வேண்டாம். தமிழ்நாட்டில் உள்ள மக்கள் எல்ராம் திரும்பி பார்த்தால் போதும். தனியார் பள்ளியை ஊக்கும் உங்கள் திட்டத்தைத் தான் எல்லோரும் திரும்பி பார்க்கிறார்கள். பல அரசு பள்ளிக்கு புத்தகங்கள் இன்னும் வழங்கவில்லை. இது தான் திரும்பி பார்க்க வைப்பதா? 2014 டெட் தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு வேலை கொடுக்க தகுதி இல்லை. 2019 டெட் தேர்வு எதற்கு? அவர்களிடம் இருந்து 500 ரூபாய் வாங்கி கொள்ளையடிக்கவா?   09:50:05 IST
Rate this:
14 members
1 members
1 members
Share this Comment

ஜூன்
5
2019
எக்ஸ்குளுசிவ் நாங்க செய்ய மாட்டோம் உங்களையும் விட மாட்டோம்! கழிவு நீர்க் குட்டையாக மாறிய நெமிலிச்சேரி ஏரி!
பொது மக்களின் நியாயமான கோரிக்கையை செய்ய விடாத, பொதுப்பணி அதிகாரி மற்றும் அவரது குடும்பத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. தண்ணீர் இல்லாமல் அவரது குடும்பம் காலி குடங்களுடன் நடுத்தெருவிற்கு வர வேண்டும். அப்படி வந்தால் தான் பொது மக்களின் கஷ்டம் தெரியும். இது பொதுப்பணி துறை அமைச்சருக்கும் தான். இது போல பல அநியாயங்களை தினமலர் நாளிதழ் துணிச்சலுடன் வெளியிட வேண்டும். தினமலருக்கு நன்றி   10:42:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
5
2019
பொது தூக்கியடிக்கப்பட்டார் நேர்மையான கலெக்டர் ஆளுங்கட்சி ஷாக்
நேர்மையானவர் என பெற்ற கலெக்டர் நாகராஜனை மீண்டும் அப்பணியில் அமர்த்தினால் தான், நடக்கும் ஆட்சி நல்லாட்சி என்று கூறலாம். இந்த ஊழல் ஆட்சியை அம்மாவின் ஆன்மா என்றும் மன்னிக்காது. மக்களும் மன்னிக்கவும், மறக்கவும் மாட்டார்கள்.   10:37:00 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மே
27
2019
அரசியல் தமிழக அமைச்சரவையில் இப்போதைக்கு... மாற்றமில்லை!
மாற்றித் தான் பார்க்கட்டுமே...   10:26:48 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மே
22
2019
பொது சிவன் கோயில் சொத்து கூவி கூவி விற்பனை
கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்து விற்பனை செய்யும், ஏரியா கவுன்சிலர்களையும், அதற்கு உடைந்தையாக இருக்கும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் நீதிமன்றம் வாயிலாக தண்டிக்க வேண்டும். மின் வாரிய ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தவுடன் மின் இணைப்பு கொடுப்பதையும் தடுக்க வேண்டும். அதற்குமேலும், மின் இணைப்பு கொடுத்தால், மின் பொறியாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். நீதிமன்றம் இந்த செய்தியை முன் மாதிரியாக வைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பக்கத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான ஜடா ஏரியை ஆக்கிரமித்துள் குடியிருப்புகளையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமலருக்கு நன்றிகள் பல   11:46:32 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
சினிமா தேவராட்டம் சாதிப் படம்தான் : தயாரிப்பாளர் அறிவிப்பு...
இயக்குனர் முத்தையாவின் அனைத்து படங்களும் ஜாதிப் படம் தான். உதாரணத்திற்கு, கொம்பன், மருது, குட்டிப்புலி, கொடி வீரன். அவரது படத்தை பார்த்தால், கொலை செய்வது எப்படி என்பதற்கு பல, புதுப் புது ஐடியாக்களை கொடுப்பார். அது தான் அவரது சிறப்பு. சமூகத்திற்கு நல்ல படங்களை கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள் முத்தையா சார்.   12:56:11 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
30
2019
அரசியல் நிதிநிலை சரியானதும் கோரிக்கை பரிசீலிப்பு
அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்படும் அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் சேர்த்து தான். உதாரணம்,மொபைல் கட்டணம் 5000 ரூபாய். தற்போது மாதம் 1000 ரூபாய்க்கு அன்லிமிடட் கால்கள், மொபைல் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்துக்கு சம்பளம், லஞ்சம், கமிஷன் என்று ஏகப்பட்ட வருமானம். சாதாரண கவுன்சிலரே கோடிக் கணக்கில் வைத்திருக்கிறார். உங்களுக்கு சொல்லவா வேண்டும்.   12:10:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X