நட்புடன் மீனவன் : கருத்துக்கள் ( 9 )
நட்புடன் மீனவன்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
10
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
விழுந்தீர்கள். எழ வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருக்கிறது. நிச்சயம் எழுவீர்கள். இந்தக் கருத்தை வாசிக்க நேர்ந்தால் உங்களால் என்ன செய்ய இயலும் என்பதை எழுதுங்கள். நிச்சயம் உதவ முயல்வோம். உதவிய உங்களது மனைவியின் குடும்பத்தார் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஏதாவது தொழில் செய்தால் அதை ஒட்டியதாகவே ஏதாவது செய்ய முயலலாமே. மனைவியின் வருமானத்தை அவரிடமே விட்டுவிடுங்கள். சம்பாதிக்க தொடங்கும்போது மாமனார் கொடுத்து உதவிய பணத்தை மறக்காமல் திரும்பக் கொடுத்து விடுங்கள். முயற்சிகள்தான் இங்கே முக்கியம் நண்பரே. இதே உலகம் உங்களை புகழும் நீங்கள் வெல்லும்போது. நல்ல கருத்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவைகளை புறந்தள்ளுங்கள். நட்புடன்...மீனவன்   07:07:46 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

மார்ச்
10
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நீங்கள் ஏட்டுக்கல்வியாளர்களை விட தெளிவாக சிந்திக்கும் திறமை கொண்டவர் என்பது அழகாகத் தெரிகிறது. 2 வயது மகனுக்காக சேமிக்கத் தொடங்கியது என்ற ஒன்றே உங்களைப்பற்றிய மதிப்பைக் கூட்டுகிறது. இன்னொரு ஆண் துணை தேடவில்லை நீங்கள், தனித்து மகனை வளர்க்கிறீர்கள். சரி, முன்செல்லும் வழிகளைப் பார்ப்போம். தொலைதூரக்கல்வி என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. உங்களது திறமைகள் என்ன , உங்களது அனுபவம் என்ன என்பதின் அடிப்படையில் யோசிப்போம். மருத்துவமனையில் இப்போது ஆயாவாக சேர்ந்திருக்கிறீர்கள். அதை நன்றாக உபயோகப்படுத்தி, எப்படி ஒருவரை நல்ல முறையில் கவனிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு சிறிய அளவில் வயதானவர்களை கவனித்துக் கொள்ளும் ஒரு முதியோர் மனை தொடங்க முடியுமா என்று பாருங்கள். உங்களது சூழலில் கல்வியை விட திறமை அதிகம் உதவும். நீங்கள் வேலைபார்க்கும் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பவர்களுக்கு சரியான விலையில் அவர்களின் உடல் நலனுக்கு ஏற்ற வகையில் தரமான ஆரோக்கியமான காலை சிற்றுண்டி மதிய இரவு உணவு சமைத்து வழங்கலாம். மகனுக்கு கல்வியின் முக்கியத்துவமும் வாழ்க்கையின் மதிப்பையும் கற்றுக்கொடுங்கள். மனம்புரிந்த துணை கிடைத்தால் இணைவதில் தவறில்லை...வாழ்த்துகள்... நட்புடன் மீனவன்   04:47:23 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

மார்ச்
3
2019
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
நல்ல கேள்வி...   09:43:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
3
2019
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
அந்த நண்பருக்கும் அவரது துணவியாருக்கும் பாதம் தொட்டு நன்றிகள்...   09:43:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
3
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
வாழ்க்கையில் புரிதல் அவசியம்....சில உறவுகளை கொஞ்சம் அப்படியே ஏற்றுக் கொள்ள முயல்வோம். அதில் எனக்கு முழுமையான உடன்பாடில்லாத போதும் அப்படிச் சொல்லக் காரணம், அது ஒரு நல்ல தொடக்கமாகட்டும். உங்களுக்கென சில திறமைகளும் சில ஈடுபாடுள்ள விஷயங்களும் இருக்கலாம். அவற்றை நீங்கள் செய்யுங்கள். உங்கள் பின்புலம் அறிந்து திருமணம் செயதவரின் எதிர்பார்ப்புகள், ஒரு நல்ல இல்லத்தரசியாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். ஒரு சிறந்த குடும்பத்தலைவியாகுங்கள். அவரிடம் போட்டி போட வேண்டாம். நகரமானாலும் கிராமமானாலும் நல்லதை மட்டும் எடுத்து முன்செல்லுங்கள். இன்னும் குடும்பம் விரிவாகும்போது அவரிடம் பேசுவதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம். சில குறைவான பேச்சுகளை வைத்து அவர் உங்களை உதாசீனப்படுத்துகிறார் என்று முடிவெடுத்துவிட வேண்டாம். உங்களது தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அவருக்காக மட்டும் அல்ல உங்களுக்காகவும். சிலருக்கு வார்த்தைகள் பேசத்தெரியாது. சாப்பாடு நன்றாக இருக்கிறதென்றால் உண்ணும் அளவு அதிகமாகும் ஆனால் அத்தனை உருண்டைகளுக்கு திறக்கும் வாய், நல்ல சமையல் என்ற வார்த்தை சொல்லத் திறக்காது. அதனால் சொல்லக்கூடாது என்பதில்லை. பல சமயம் சொல்லத் தெரியாது. நமது வளர்ப்புகள் , சுற்றங்கள் அப்படி. அவருக்கு பிடித்தது சாப்பாடாக இருக்கலாம். அவரை அன்பால் ஈர்க்கவேண்டும் என்ற எண்ணம் இரண்டு இடங்களில் பெரும்பாலான சமயம் ஈடேறும். உணவு, உறவு. வீட்டை அழகாய் வைத்துக் கொள்வது, அவரது மற்றும் உங்களின் உறவுக்காரர்களிடம் நல்ல உறவை வளர்ப்பது, மற்றவர்கள் அவரிடம் "நீ கொடுத்து வைத்தவன்" என்ற வார்த்தைகள் சொல்லும் அளவில் ஒரு சிறந்த குடும்பத்தலைவியாக இருப்பதை...வார்த்தைளை வெளியே கொண்டு வராது..ஒரு பெருமிதத்தை அவரில் கொண்டு வரும். உங்களை அதை உணரவைக்கும். நட்புடன் மீனவன்   18:20:02 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

ஜூன்
4
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
எத்தனையோ முறை நாம் வாசித்ததும் எழுதியதும்தான். ஒரு மூன்றாம் மனிதராய் தீர்வுகளை ஆராயாமல் முடிவெடுப்பது என்பது மீண்டும் ஒரு தவறை செய்ததாகிவிடும். ஒரு தீர்க்கமான உண்மை. கணவன் மனைவி விவாகரத்து (உறவறுத்தல்) சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது போல, பெற்றவர்கள் பிள்ளைகளையோ பிள்ளைகள் பெற்றவர்களையோ அல்லது உடன்பிறப்புகள் தங்களுக்குள்ளேயோ உறவறுத்தல் என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால் மறுநிமிடம் அதை உபயோகப்படுத்துவர்களும் இருப்பார்கள்..இருக்கிறார்கள். மனிதன் ஒருவாய்ப்பில்லாதவரை இருக்கும் கட்டுக்குள் வாழ்கிறான்.வாய்ப்புக்கிடைத்தால் அதை உபயோகப்படுத்துகிறான். இத்தனையும் சொன்னதால் சொல்கிறேன்... நான் விவாகரத்துக்கு ஆதரவானவனோ அல்லது எதிர்ப்பாளனோ அல்ல. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று வாழச்சொல்பவனுமில்லை. தும்மினான் குறட்டைவிட்டான் என்று வெட்டச்சொல்பனும் இல்லை. எந்த ஒரு முடிவும், வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவு எடுக்குமுன் ஒரு மூன்றாம் மனிதரோ ஒரு திருமண ஆலோசகரோ கவுன்சலிங் செய்யட்டும். அதன் பின் முடிவெடுங்கள். இங்கே திருமண பந்தம் மீறிய தொடர்பு இருப்பதால் இது இன்னும் கொஞ்சம் சிக்கலாகலாம். இன்று சரியானாலும் நாளை ஒரு நாள் சண்டை வந்தால் வதைக்கும் வார்த்தைகள் கணவன் பக்கம் இருந்து வரலாம். இந்த நேரத்தில் மனமாற்றம் என்பது மிகவும் கடினம். பிரச்னைகள் அடிப்படை காரணங்கள் தெரியவில்லை. கணவர் காரணமா இல்லை உங்கள் தங்கை காரணமா என்று தெரியவில்லை. உங்கள் தங்கை காரணம் என்றால் பிரச்னைகள் அடுத்த கணவரிடம் வராது என்பது நிச்சயமில்லை. இரண்டுங்கெட்டான் வயதில் குழந்தைகள். உங்கள் தங்கையிடம் பேசுங்கள் . ஒரு ஆலோசகரிடம் இருவரையும் அழைத்துச் செல்லுங்கள். குழந்தைகளின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள். ஏமாற்றத்தின் உச்சத்தில் எடுக்கும் முடிவுகள் பல சமயங்களில் சரியான முடிவாக இருப்பதில்லை. அதனால் சாஸ்திரம், வயது, வாழ்க்கை கொடுத்தல் , மறுமணம் இந்தக் கேள்விகளை ஒதுக்கிவைத்து, பிரச்னைகளின் அடிப்படைக்காரணங்களை புரிந்து அதன் அடிப்படையில் முடிவெடுங்கள் எடுக்கச் சொல்லுங்கள்..... நட்புடன் மீனவன்   04:20:55 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
12
2017
வாரமலர் அன்புடன் அந்தங்கம்!
தவறா சரியா என்று தெரியவில்லை. ஆனால் இதை வாசித்தவுடன் என் மனதில் தோன்றியது பெற்ற குழந்தையிடம் பேசும் உரிமைக்குப் போராடும் ஒரு தந்தையின் வலிதான். முதல் கணவரான 75 வயதுத் தாய் போராடிப் பெறவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டதன் காரணம் இந்தப் பெண்ணா? தெரியவில்லை... என்றாலும் நீதிமன்றம் வழி நீதி கிடைக்கும் நிலை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. உறவில்லை, எந்த சுகங்களுமில்லை என்றாலும் 11 ஆண்டுகள் முதல் கணவனுடன் வாழ்ந்த காரணம், வசதிகளாக இருந்திருக்கலாம். அவரது சுய நலம் இல்லையென்றால் அவரது குடும்பத்தினர் தங்களது வசதிக்கு இவரை உபயோகப்படுத்தியிருக்கலாம். பின்னது மிகவும் சாத்தியமாகப் படுகிறது. இரண்டு வழிகள் இந்த நண்பருக்கு இப்போது. ஒரு சட்ட ரீதி, இன்னொன்று கொஞ்சமும் சட்டை செய்யாத ரீதி. உங்களது பொருளாதார நிலைமை இப்போது நல்ல ரீதியில் இருப்பதால், உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். பணம் பெருகும்போது உறவுகள் சூழும். வசதிகள் பெருகும்போது வரவுகள் பெருகும். எழுதும்போதும் விரக்தியும் வெறுப்பும்தான் தோன்றுகிறது. ஆனால் பெரும்பாலும் அதுதான் உண்மை. நட்புடன் மீனவன்   09:23:51 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
12
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பெண்ணே.. தவறு என்று நினைத்தாலோ அல்லது தெரிந்தாலோ தெரிந்தும் ஏன் அதைச் செய்ய வேண்டும்?.(கேள்வி கேட்பது எளிது, செய்வது கடினம்...உண்மை)......பெண்களே ஒன்று புரிந்து கொள்ளுங்கள் ஆண்களைப் பற்றி... மிக முக்கியம் எங்களில் வெளியில் தெரியாத எங்களால் எளிதில் மறைக்க முடிந்த வாழ்க்கையை சிதறடிக்கும் கெட்ட குணம், பெண் சபலம். முதல்முறை வீட்டில் உங்களை கட்டாயப்படுத்தியபோதே தெரிந்திருக்க வேண்டாமா உங்களுக்கு, உங்களின் மாது பற்றிய கருத்து தவறென்று. ஒருமுறை உடலுறவுக்காக உயிர் துறக்கத்தயாராக இருந்த ஒருவருடன் வாழ்க்கையைத் தொலைக்காமல் விட்டது நல்லதென்று முன் செல்லுங்கள். சில கெட்ட பழக்கங்களுக்கும் கெட்ட குணத்திற்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ளுங்கள். நட்புடன் மீனவன்   00:11:15 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
29
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நண்பரே...சொந்த தொழிலில் வெற்றி பெற்ற நீங்கள் ...சொந்தங்களுக்கு உதவிய நீங்கள், வெளியே ஆன்மிகம் தேடி அலையவேண்டாமே...தொழிலில் இன்னும் அதிகக் கவனம் செலுத்துங்கள். தொழில் வாழ்க்கையாகட்டும். உங்களது பெண்குழந்தையுடன் நேரம் செலவழியுங்கள். உதவியதை உடனே மறக்க முடியும் மனப்பான்மையை கொண்டு வாருங்கள். நீங்கள் உதவியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது. எதிர்பார்ப்புகள் வேண்டாம். பணம் அல்லாது மன உதவி வேண்டும் எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கின்றன. அனாதைக் குழந்தைகள் இல்லங்கள் இருக்கின்றன......உதவுங்கள். வாழ்க்கையை உணர்ந்த பலர் அங்கிருப்பார்கள்....தொழிலைப் பெருக்குங்கள். பல விஷயங்கள் தன்னால் சரியாகும். இந்தப் பிரச்னைகளால் தொழில் சரிந்தால் பிரச்னைகள் இன்னும் பெரிதாகும்......மனைவியின் தங்கை விஷயம்.....உங்கள் தவறு. அந்தப் பெண்ணின் மேல் பழி போடவேண்டாம்.... நட்புடன் மீனவன்   09:04:00 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X