ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு , மத்திய அரசிடமிருந்து ஆன்லைன் மூலமாக , தனித்தனியே அனுமதி பெறுவது, அவசியமாகிறது. அனுமதி பெறுவதற்கு ஆதார் அட்டை எண்னை வழங்க வேண்டும். இதன் மூலமாக ஏற்கனவே திருமணம் ஆனவர்களா , வயது சரியாக உள்ளதா, divorce செய்து திருமணம் செய்கிறார்களா போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். இதற்கு app ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும். டைவர்ஸ் செய்தவர்களை , அரசே பதிய வைக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதி சான்றிதழ் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது. பதிவு திருமணம் செய்வதாக இருந்தாலும் இந்த சான்றிதழ்கள் அவசியமே. வங்கி , குடும்ப அட்டை, தொலைபேசி போன்றவற்றோடு ஆதார் எண்னை இணைப்பது போல, நடக்கப் போகிற திருமணங்களோடும் இணைக்க வேண்டும். திருமண சான்றிதழ் , app மூலமாகவே உடனடியாக கிடைக்க வேண்டும்.
25-அக்-2022 05:16:19 IST
ரேஷன் கடை மூலமாக ஓட்டு போடுதல்.ரேஷன் கடையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில், வாக்காளர், விரலை வைக்க வேண்டும். உடனே அவருடைய ஆதார் நம்பர் display ஆகும். அதன் கீழே, வாக்காளரின் தொகுதியின் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் தெரியும். வாக்காளர் , மேலும் கீழும் தள்ளி, ஒரு சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படியே ரேஷன் கடை வாயிலாக, வாக்காளர்கள் எங்கிருந்தாலும் ஓட்டு போடலாம். இதனை தேர்தல் வாரியம் , ஒரு தொகுதியில் சோதனை செய்து பார்க்கலாம். தேர்தல் செலவும் குறையும். வாக்காளரின் கைவிரல் ரேகை சரியாக இல்லாவிட்டால், கண்களை ஸ்கேன் செய்யலாம். இந்தியாவில் உள்ள எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும், சாமான்களை வாங்கலாம் என்ற நிலை இருப்பதால், இது சாத்தியமாகலாம்
18-ஜூன்-2022 19:17:27 IST
பிறப்பு சான்றிதழ் வழங்கும் போதே ஆதார் கார்டு வழங்க வேண்டும். இறப்பு சான்றிதழ் வழங்கும் போதே, ஆதார் கார்டை நீக்க வேண்டும். இப்படி செய்தால் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சமமாகுமா
24-மே-2022 10:49:08 IST
மக்களுக்கு இனாம் தருவது என்பது, தேர்தல் வாக்குறுதியிலேயே இடம்பெறுகிறது . அதனை பிச்சை போடுவதாகவோ அல்லது மக்கள் பிச்சை எடுப்பதாகவோ , வர்ணனை செய்தால், அதனை ஏன் தேர்தல் வாரியம் , தேர்தலுக்கு முன்பே அனுமதிக்கிறது .
17-ஜன-2022 10:19:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.