shanmugasundaram.R. : கருத்துக்கள் ( 15 )
shanmugasundaram.R.
Advertisement
Advertisement
மார்ச்
4
2018
சிறப்பு கட்டுரைகள் சினிமா கவர்ச்சி இனி எடுபடாது!
தமிழ் நாட்டின் தற்போதைய நிலை என்னவென்றால் மக்கள் பெரும்பாலும் பணத்திற்கு மட்டுமே வாக்களிக்கும் மனோபாவத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். இனிமேல் பணம் யார் அதிகமாக தருகிறார்களோ அவருக்குத்தான் வாக்களிப்பார்கள். பணமே ஆட்சியை தீர்மானிக்கும். எனவே ரஜினியும் , கமலும், வந்தாலும் அவர்களால், ஜெயிக்க முடியாது. எனவே நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். பாவம் இந்த பதிவை இட்ட நபருக்கு ஊழல், லஞ்சம், மிகுந்த ஆட்சி வந்தாலும் பரவாயில்லை. ரஜினியும் , கமலும் வரக்கூடாது என்பது அவர் எண்ணமாக உள்ளது. நன்றி. வாழ்க ஜனநாயகம்.   12:56:13 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

மார்ச்
4
2018
சிறப்பு கட்டுரைகள் சினிமா கவர்ச்சி இனி எடுபடாது!
நான் இல்லை என்று சொல்லவில்லை. நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் சகாயம் ஒரு அரசு ஊழியர் . அவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு வர வேண்டும். அப்படி வந்தாலும் படித்த விபரம் தெரிந்த கொஞ்சபேர்தான் அவருக்கு வாக்களிப்பார்கள். அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டார். ஒரு கட்சியில் சேர்ந்தால் மற்ற கட்சிகள் அவரை கவிழ்க்க பார்க்கும். அவர் புது கட்சி ஆரம்பித்தால் இப்போது தேசியம், திராவிடம் பேசும் எந்த கட்சியும் அவரோடு சேர மாட்டார்கள். ஏனென்றால் எல்லோருக்கும் அவரவர் தான் முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு உள்ளது. நடிகர்களை நம்பி நாடு உள்ளது என்றால் அது கேவலம்தான் . ஆனால் இந்த 2 திராவிட கட்சிகளும் இத்தனை வருடங்களாக கொள்ளை அடித்தது தொடரலாமா? வேண்டாமா? என்பதுதான் கேள்வி. அவர்களை வீழ்த்த ஒரு வெகுஜன ஈர்ப்பான நபர் தேவை படுகிறார். அவர் யார் என்பதுதான் இங்கே இப்போது கேள்வியே? நீங்களே சொல்லுங்கள் பொது மக்களை கவர்ந்த 30 % வாக்குகளை பெறக்கூடிய ஒரு நபர் தமிழ்நாட்டில் இப்போது யார் உள்ளார் ?(அவர் நல்லவராக இருக்க வேண்டும்) அதனால் நான் ரஜினி, கமல் இருவரும் அப்பழுக்கற்றவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் ஊழல் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் சம்பாரிக்க வேண்டுமென்றால் திரை துறையிலேயே இருந்து சம்பாரிக்கலாம். நீங்கள் சொல்வதுபோல் திரை வாய்ப்பு இல்லாமல் அவர்கள் வரவில்லை. கமலின் மார்க்கெட் எப்படி என்று தற்சமயம் தெரியவில்லை. ஆனால் ரஜினி இன்றுவரை தென் இந்திய சினிமாவின் சக்கரவர்த்தி அவர்தான். இது 100 % உண்மை. யாரும் மறுக்க முடியாது. எனவே இந்த ஊழல் மலிந்த திராவிட ஆட்சிகளை வீழ்த்த ஒருவர் வர வேண்டும். அது ரஜினியோ , கமலோ, இருக்கட்டுமே வேறு ஒரு நபர் ஆட்சியை பிடிக்க முற்பட்டால் இன்னும் குறைந்தது 30 ஆண்டுகள் ஆகும். இப்போதைய தமிழ்நாட்டின் தேவை ஊழலற்ற , நேர்மையான , இலவசம் தராத ஒரு ஆட்சி. அது யாரால் அமைந்தால் என்ன?   12:49:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் படிக்கிற காலத்தில் அரசியல் வேண்டாம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ரஜினி அறிவுரை
தவறு Mr .கணபதி . படிக்கிற வயதில் அண்ணா காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா? சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்துகொண்டுள்ளது அவர்களின் குடும்பம். ஆனால் அந்த திராவிட கட்சியின் குடும்பம் எப்படி உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே படிக்கும் வயதில் அரசியல் வேண்டவே வேண்டாம். அவர் சொன்னது 100 % உண்மை. யார் சொல்கிறார் என்று பார்க்காதீர். என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.   10:54:13 IST
Rate this:
3 members
0 members
31 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை ரஜினி
அவரை குறை சொல்வதற்கு முன்னர் நீங்கள் அதற்கு தகுதியானவர்களா என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்.   10:44:44 IST
Rate this:
10 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை ரஜினி
முதலில் நடுநிலையோடு அலசி ஆராய்ந்து பதிவிடுங்கள். அவர் ஒன்றும் விருப்பம் கொண்டு அரசியலுக்கு வரவில்லை. MGR காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். அண்டை மாநிலங்களோடு அன்போடு பேசி தண்ணீர் பெற்றுக் கொடுத்தார். ஊழல் இல்லாமல் இல்லை. ஆனால் இப்போது உள்ளதுபோல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் இல்லை. இப்போது ரௌடிகளின் ராஜ்யமாக உள்ளது தமிழ்நாடு. நிச்சயம் இது இரண்டு திராவிட கட்சிகளால் மாற்றம் வரப்போவது இல்லை. ஏன் தமிழ்நாட்டில் நல்ல அரசியல்வாதிகள் இல்லையா? நல்லகண்ணு, வைகோ போன்ற தன்னலம் அற்ற நபர்கள் இல்லை. ஆனால் அவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ , அவ்வளவு கேவலப்படுத்தி ஜோக்கர் ஆக்கி விட்டார்கள்., தமிழநாட்டிற்கு இப்போதைய தேவை ஒரு நல்ல மக்களை வசப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு பிம்பம். அது யாரால் முடியும் என்றால் ரஜினி அங்கு முதன்மையாக வருகிறார். மற்றபடி அவர் அரசியலுக்கு 100% பொருத்தமானவர் என்று இல்லை. அவர் வந்தால் நிச்சயம் ஊழல் செய்ய மாட்டார். சிறந்த நிர்வாகத்தை அளிப்பார். எனவே அவர் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை.   10:42:37 IST
Rate this:
14 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
15
2018
சம்பவம் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் மீண்டும் போராட்டம்
இங்கே ஒரே ஒரு கருத்தை மட்டும் பதிவு செய்து மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். தமிழன் தமிழன் என்று சொல்கிறார்கள். யார் யார் தமிழன் என்று வரையறை செய்தது யார்? தமிழ் பேசுபவனெல்லாம் தமிழன் என்றால் இங்கே எல்லோரும் தமிழ் பேசுகிறார்கள். அவர்கள் எல்லாம் யார்? வெளியே தமிழ் பேசி வீட்டிலே வேறு மொழி பேசுபவர்கள் தமிழர்கள் இல்லை என்கிறார்கள். அப்படி என்றால் தமிழ் நாட்டில் உள்ள முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்கள் யாரும் தமிழர்கள் இல்லையா? தமிழர் திருநாள் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். பிற மொழி பேசும் இந்துக்கள் எல்லோரும் பொங்கலை கொண்டாடுகிறோம். அப்போது அவர்கள் எல்லோரும் தமிழர்கள்தானே? பொங்கலை பிற மதத்தை சார்ந்த கிருத்துவ , இஸ்லாமிய மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடுவது இல்லை. அப்படி என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லைதானே? இதற்கு பதில் சொல்லிவிட்டு நான் தமிழன் என்று மார்தட்டி கொள்ளுங்கள். கடவுளை நிந்திக்கும் கயவர்கள் மட்டுமே தமிழர்கள் என்றால் , தமிழ் கலாச்சாரத்தோடு , மண்ணின் மணத்தோடு, இறை நம்பிக்கையில் வாழும் கோடிக்கணக்கான தமிழ் பேசும் நாங்கள் எல்லாம் யார்? ஓட்டுக்காக மட்டுமே பிற மதத்தினரை (Minority ) புகழ்ந்து பேசும் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். இது முஸ்லீம் , கிருத்துவ மதத்தை சார்ந்த எல்லா மக்களுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள். இன்று இந்து மதத்தை கேலி செய்யும் இவர்கள் , நாளை உங்கள் மதத்தையும் , பணத்திற்காகவும், பதவிக்காகவும், தூக்கி எரிந்து பேசுவார்கள். ஆன்மிகம் என்பது எல்லா மதத்திற்கும் பொதுவானது. நான் எனது கடவுள்களை கும்பிடுவது இந்து ஆன்மிகம். முஸ்லீம் , அல்லாஹ்வை கும்பிடுவது முஸ்லீம் ஆன்மிகம், கிருத்துவன் இயேசுவை வணங்குவது கிருத்துவ ஆன்மிகம். எந்த மதமும் பிற மதத்தை பலித்து சொல்வதில்லை. இதை புரிந்துகொண்டு இந்திய மக்கள் எல்லோரும் அவரவர் மதத்தை பின்பற்றி வாழ்வதே நல்ல ஆன்மிகம்.   10:39:18 IST
Rate this:
4 members
0 members
50 members
Share this Comment

ஜனவரி
3
2018
சினிமா ரஜினி கட்சியில் சேருகிறார் ராகவா லாரன்ஸ் : நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு...
ரஜினி வந்தால் நாடு கெட்டுபோய்விடும். அவர் மராட்டியர், கன்னடர், தமிழரல்ல. ஆஹா ஓஹோ என்று குதிக்கும் நண்பர்களுக்கு ஒரே ஒரு கேள்வி. திராவிடம் என்று பேசும் நீங்கள் திராவிடத்திற்கு அர்த்தம் சொல்லுங்கள்.   13:10:08 IST
Rate this:
10 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
29
2017
அரசியல் எம்.ஜி.ஆர்., போல் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் ரஜினி
திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் யாரை ஏமாற்றி சொத்து சேர்த்து வைத்துள்ளார். வெளியே தெரியாமல் எத்தனையோ அனாதை குழந்தைகளுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருகிறார். அவருடைய பள்ளியில் உள்ள பிரச்சினை அவருக்கும் மற்றொருவருக்கும் சம்பந்தப்பட்டது. அதை பொது வாழ்க்கையில் முடிச்சு போட்டு பேச வேண்டாம். இவர் மீது தவறு என்று கூறும் நீங்கள் , அந்த மற்றொரு நபரை பற்றி அறியாமல் பேசுகிறீர்கள். உங்களுக்கு எல்லாம் நல்லவர்களாக இருந்தால் பிடிக்காது.   12:48:03 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
29
2017
அரசியல் எம்.ஜி.ஆர்., போல் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் ரஜினி
இன்றைய காலகட்டத்தில் MGR இருந்தால் கூட அவரையும் திட்டுவார்கள். ஏனென்றால் எல்லோர் கையிலும் இணையம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தங்களின் மன அழுக்குகளை , வஞ்சத்தை , சுயநலத்தை அதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். நீ என்ன கொடுத்தாய் ? என்று கேட்கும் நண்பர்கள் எல்லோரும் எத்தனை பேருக்கு என்னென்ன செய்தீர்கள்?   10:35:35 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
29
2017
அரசியல் எம்.ஜி.ஆர்., போல் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் ரஜினி
அவர்கள் ஆண்டுக்கணக்கில் சம்பளம் கொடுக்கவில்லை என்று யார் சொன்னது? மேலும் ரஜினி எந்த உதவிகளும் செய்யவில்லை என்று உங்களுக்கு தெரியுமா? எத்தனையோ உதவிகளை செய்துகொண்டுதான் உள்ளார். ஆனால் அதை மேடை போட்டு தம்பட்டம் அடித்துக்கொள்ள மாட்டார். அவருக்கு நெருங்கியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இது எல்லா மீடியாவுக்கும் தெரியும். ஆனால் சொல்ல மாட்டார்கள்.   10:31:24 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X