Perumal Alagarsamy : கருத்துக்கள் ( 22 )
Perumal Alagarsamy
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2019
சம்பவம் பள்ளியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
மிகவும் வருத்தமான செய்தி. இந்த மாதிரி செயல்கள் மற்ற குழந்தைகளையும் வெகுவாக பாதிக்கும். சம்பந்தப்பட்ட நிர்வாகம், ஒவ்வொரு வகுப்பறையிலும் கேமரா பொருத்தினால், உண்மை என்னவென தெறிய வாய்ப்புகள் உண்டு. மற்றும் இது மாதிரியான தவறான முடிவுகள் குறையலாம். அந்த மாணவியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.   10:12:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
23
2019
வாரமலர் தந்தை சொல் மிக்க...
அருமையான படைப்பு. உள்ளதை விட்டு விட்டு இல்லாததை தேடி அலைவது மிக பெரிய தவறு என்பதை அழகாக ஒரு அன்பான குடும்பத்திற்குள் எடுத்து கூறியிருக்கிறார்கள் அன்பிற்குரிய பானுமதி பார்த்தசாரதி. இன்றைய வாழ்க்கை சுழற்சியில், பணமே வாழ்க்கை ஆகி விட்டது. பணத்தை விட, ஒரு அன்பான குடும்பம் மிக பெரியது என்பதை உணர வைக்கும் நிறைவான படைப்பு. வாழ்க வளமுடன்.   06:06:52 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
9
2019
வாரமலர் கடவுளின் கணக்கு புரிவதில்லை!
வாழ்க்கையில் நிகழும் மறக்க முடியாத சம்பவத்திற்கு எப்பொழுதுமே ஒரு அர்த்தமுண்டு. அதை புரிவதற்கு சில நாட்கள், ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம். அந்த வகையில் இந்த கதையும் அப்படியே. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.   11:27:06 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
7
2019
சிறப்பு பகுதிகள் குடும்பத்தலைவி என்றால் குறைவானவரா?
தேவையான கருத்துக்கள். ஆணும் பெண்ணும் சமம். குணாதிசியங்களில் மட்டுமே வேறுபடுகிறார்கள். பெண்களின் மற்றோரு சிறப்பு என்னவென்றால், அவர்கள் பொறுமையின் சிகரமே. இதேயே தான் நம்முடைய புராண காப்பியங்களும் விளக்குகின்றன. இதை அறிந்தவர் வீட்டில் எப்போதும் ஆனந்த அலை. பணம் சம்பாதிப்பது மட்டும் ஒருவருடைய அடையாளத்தை உயர்த்தி விட முடியாது. வாழ்க புரிதல், வளர்க குடும்பம்.   07:43:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
5
2019
வாரமலர் ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (1)
Each individual aircraft has an optimum altitude (for minimum cost or minimum fuel burn) which will be based on its individual weight . Concorde flew five miles all above, i.e., at much higher altitudes - 50,000/60,000 feet Just for information.   04:55:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
2
2019
கோர்ட் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு போலீஸ் ஒத்துழைக்கா விட்டால் ராணுவம் வரும்
இதுவே இப்போதய நிலை. மிகவும் சரியான வழிகாட்டுதல். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நல்ல ஆடை அணிவதிலும், ஒரு சில துறைகளை மற்றும் விளையாட்டுகளை மட்டும் வளர்ச்சிப்படுத்தி காட்டுவதில் இல்லை. அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் சுத்தமான காற்று, கலப்படமில்லாத தண்ணீர் அனைவருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இது நோயில்லாத வாழ்விற்கு மிகவும் அவசியம். கலப்படமில்லாத தண்ணீர் கிடைக்க, நீர் நிலைகளை அதிகப்படுத்த வேண்டும். நிறைய மரங்கள் நடவேண்டும். இந்த வளர்ச்சி முறையான சுழற்சியில் மழை பெய்ய மற்றும் காற்றை சுத்தப்படுத்த வழிவகுக்கும். தேசிய நெடுங்சாலைகள் மற்றும் இதர சாலைகள் ஓரத்தில் மரங்கள் நட வேண்டும். இப்போதுள்ள நவநாகரிக வளர்ச்சியில், மரங்கள் மற்றும் காடுகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இது மனித சமுதாயத்திற்கே ஒரு நாள் வேட்டு வைக்கும் என்பது நிச்சயம். முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், மதிப்பிற்குரிய ஐயா நீதிபதிகள் அவர்களின் கணிப்பாகிய "பேர குழந்தைகள், தண்ணீரை, மாத்திரை வடிவத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது" என்பது உண்மையாக வெகுதூரம் இல்லை. மரங்களை வளர்ப்போம், நீர் நிலைகள் பாதுகாப்போம், ஒளிமயமான சந்தோசமான நோயில்லா வாழ்க்கைக்கு. வாழ்க வளமுடன்.   05:11:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
21
2019
வாரமலர் கோடை பயணம்...
அருமையான படைப்பு. இது மாதிரி நம்முடைய உன்னதமான தமிழ் கலாச்சார கலைகளையும் எடுத்து சொல்ல வேண்டும். அது மட்டும் அல்லாமல், கலைகளை வளர்க்கும் வழிகளையும் உணர்த்தவேண்டும். வாழ்க கிராமம். வளர்க நகரம்.   13:24:57 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
24
2019
வாரமலர் வேண்டாதவனாகி விட்டேன்!
வயதான காலத்தை அனுபவிப்பது ஒரு தனியான கலை. அந்த வயதிலும் தனக்கு மற்றவர்கள் அடிபணிய வேண்டும், தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்று நினைத்தால் மிஞ்சுவது ஏமாற்றமே. ஏனெனில், அவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த செயல்கள், அவர்களை தொடரும். அவர்கள் நினைத்தால் நிறைய வழிகள் இருக்கின்றன சுகமாய் அனுபவிக்க. தினந்தோறும் ஒரு நடைப்பயிற்சி, நிறைய புத்தகம் படித்தல், அவர்களின் அனுபவத்தை தன்னுடைய குடும்பத்திற்கு முக்கியமாக குழந்தைகளுக்கு பகிரலாம், தன்னுடைய நெருங்கிய நண்பர்களை சந்தித்து வரலாம், முடியாத மற்றும் வசதி இல்லாத குழந்தைகளுக்கு மாலை கல்வி கற்பிக்கலாம் (இலவச கல்வி மையம்). தங்களுடைய ஊரில் வங்கி/தபால் மையம் இருந்தால், அதிகாரியின் சம்மதத்தோடு அங்கு வரும் நிறைய பேருக்கு உதவி செய்யலாம். ஏனெனில் இன்றும் இந்த மாதிரி பொது இடங்களில் வருவோர் உதவியை எதிர்பார்க்கிறார்கள். முதுமையை தவிர்ப்பது கடினமே. ஆனாலும் சிறிது திட்டமிட்ட வாழ்க்கை, அவர்களின் முதுமை வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும். வாழ்க வளமுடன்.   07:09:41 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
17
2019
வாரமலர் ஒரு டீக்கடைக்காரரின் கதை!
மற்றவர்களுக்கு உதவும் அவரை கடவுளின் அவதாரம் என்றே சொல்லலாம். வாழ்க அவரின் பொதுநல சேவை. மேலும் உதவிசெய்ய, என்றென்றும் கடவுள் துணை நிற்பாராக.   06:07:43 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
5
2019
சிறப்பு கட்டுரைகள் உடல், பொருள், ஆவி - மனைவி
இயல்பான கட்டுரை, எளிமையான மற்றும் முக்கியமான அறிவுரை. வாழ்த்துக்கள் அமுதா நடராஜன் அவர்களுக்கு. கணவன் - மனைவி இடையே ஒளிவு-மறைவு இல்லாத வாழ்க்கை எப்போதுமே இனிமையாகத்தான் பயணிக்கும். அதுவும் அன்றைய நாளில் நடக்கும் நிகழ்வுகளை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளும் போது, குடும்பத்தில் எல்லோருக்கும் அனுபவங்களை சேர்க்கின்றன. மேலும், இந்த மாதிரியான எதிர்கால வாழ்வுக்கான தேவையான திட்டமிடல் அவசியங்களை கட்டாயம் பகிர்ந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், ஒரு மனிதன் இறந்த பின்பும், நல்ல கணவனாக மற்றும் நல்ல தந்தையாக இல்லையே என்று தூற்றப்படுவான். இல்லறம் இனிதே அமைய குடும்பத்தில் அனைவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் புரிந்துகொள்ள வேண்டும்.   04:38:11 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X