Baskaran R V : கருத்துக்கள் ( 15 )
Baskaran R V
Advertisement
Advertisement
Advertisement
மே
14
2021
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
13
2020
பொது வறண்டு கிடக்கும் சோழவரம் ஏரி
மிக நல்ல கருத்து. தற்பொழுது கிடைக்கும் கிருஷ்ணா நீரை நல்ல முறையில் சென்னையை சுற்றி இருக்கும் ஏரிகளில் சேமித்து வைப்பது ஒன்றே, கோடை காலங்களில் ஏற்படும் தட்டுப்பாட்டை தீர்க்க ஓரளவு கை கொடுக்கும். இத்தகைய திட்டங்கள், பொதுபணி துறையிடம் தயாராக இருக்க வேண்டும். பத்த்ரிக்கையோ அல்லது பொது மக்களிடம் இருந்தோ வரக்கூடிய கருத்தாக இருக்க கூடாது. மேலும், இத்தகைய செயல் திட்டங்கள், சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து, பத்த்ரிக்கை வாயிலாக செய்திகளாக வர வேண்டும்.   15:22:43 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
6
2020
பொது சிமென்ட் சாலை மீது தார் சாலை தாம்பரத்தில் அறிவுஜீவி வேலை
கண்டிக்கத்தக்க செயல். சிமெண்ட் சாலை மீது தார் சாலையை அமைத்திட வழி வகுத்த அதிகாரிகள் அனைவரும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த அதிகாரிகளுக்கு செயல் முறை அனுபவம் இல்லையா அல்லது, பொது மக்கள் தானே, பொறுத்துக் கொள்வார்கள் என்ற மன நிலையா? நல்ல நிலையில் இருக்கும் சாலையின் மீது இன்னும் ஒரு முறை புதிய சாலை? அது மட்டுமில்லாது, சிமெண்ட் சாலை மீது, தார் சாலை. செய்தியினை படிப்பதற்க்கே மனது கூசுகிறது. தாம்பரம் கிழக்கு பகுதியில், 700 மீட்டர் நீள கேம்ப் ரோடு சாலை உள்ளது. இந்த சாலை சிமெண்ட் சாலை ஆகும். சுமார், 10 வருடத்திற்கு முன் போடப்பட்ட இந்த சாலையின் இன்றைய நிலையினை சொல்லி மாளாது. 15 முதல் 20 இடங்களில் பெரிய பெரிய பள்ளங்களும், சாலை வெட்டுகளும் உள்ளன. இரு சக்கர வாகனமோ அல்லது, காரிலோ பயணம் செல்வோர் சந்திக்கும் துயரங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒரு முறை இந்த கேம்ப் ரோட்டில், இரு சக்கர வாகனத்தில் வந்து, விஜயம் செய்தால், உண்மை நிலை என்ன என்று புரியும். இந்த சாலை, ஏன் தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் கண்ணில் படவில்லை ? இந்த பகுதி மக்களுக்கு புதிய சாலை அமைக்கப்படும் வரை, குறைந்த பட்சம், 15-20 பள்ளங்களை "பேட்ச்" செய்து மூடலாமே ? அதற்கும், பிரேரணை, தீர்மானம், முதல்வரின் அனுமதி என்றெல்லாம் உண்டோ ? சாலையினை புதுப்பிக்க கோரி, முதல்வரின் ஆன் லைன் குறை தீர்க்கும் வழியிலும் புகார் கொடுக்கப்பட்டு, தீர்வுக்காக காத்து கொண்டிருக்கும் நிலைமை தான் இங்கு. என்று சரி யாகும் இந்த சாலை ?   11:37:08 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
30
2020
முக்கிய செய்திகள் மதுரை மாவட்டத்தில் மணல் கடத்துவோருக்கு எச்சரிக்கை இனியும் தொடர்ந்தால் குண்டர் சட்டம்தான்
இந்த நடைமுறை, எல்லா ஆறுகள், நீர் நிலைகளில் இருந்து சுரண்டப்படும் செயல்களுக்கு பொருந்த வேண்டும். சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும். ஆற்று மணல் சுரண்டப் படுவதை செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்கப்பட்டு தலைமை காவல் நிலையத்துக்கு அனுப்பும் வகையில் செய்திட வேண்டும். எந்த பாரபட்சமும் காட்டாமல் தண்டிக்கப்பட வேண்டும். அபராத தொகையோடு, எடுக்கப்பட்ட மணலினை, அதே ஆற்றில் அல்லது நீர் நிலைகளில் கொட்டப்பட நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். இத்தகைய வேலைகளில் ஈடுபடுவோரின் பின் பக்கம் எத்தகைய சக்திகள் இருக்கிறன்றன என்பதை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும். .இப்படி, நீர் நிலைகளை சுரண்டி தான் பிழைக்க வேண்டுமா ? மனது வலிக்கின்றது.   13:06:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
28
2020
சினிமா 86வது பிறந்த நாள்: வறுமையில் வாடிய பாடகி ஏ.பி.கோமளவல்லி...
மிகவும் வருந்த தக்க செய்தி. அவருடைய வங்கி கணக்கு விவரங்களை அளித்தால், உதவி செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். நன்றி   09:17:50 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
29
2020
பொது பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க, ரோபோ
பாராட்டுக்களோடு நின்று விட கூடிய விஷயம் அல்ல இது. சம்பந்தப்பட்ட அரசு துறை, இது போன்ற மாணவர்களின் கண்டு பிடிப்புகளை ஊக்குவித்து, குறைந்த பட்சம், மாநில அளவில் இருக்கும் எல்ல அரசு துறைகளில், இது போன்ற தானியங்கி "ரோபோ"க்களை உபயோகப் படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும். சுதந்திர தினம் மற்றும், குடியரசு தினங்களில், இது போன்ற பல அறிய கண்டுபிடிப்புகளை செய்த மாணவர் குழுக்களை உலகிற்கு அறிமுகப் படுத்தப் பட வேண்டும். பல விருதுகள் அளித்து, கவுரவிக்க வேண்டும்.   12:43:38 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
29
2020
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
7
2019
பொது 120 அடியை நெருங்கும் மேட்டூர் அணை
மேட்டூர் அணை நிரம்பியாகி விட்டது. இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கவில்லை. இதற்க்கு பிறகு, அணைக்கு வந்து சேரும் அனைத்து நீரும் காவேரி வழியாக கடலுக்கு சென்று சங்கமமாகும். காவிரி பாயும் வழி எங்கும் உள்ள நீர் நிலைகள் நிரம்புமா? அவ்வாறு, நீர் நிலைகள் நிரம்பி விட்டது, அதனால், மீதமுள்ள நீர் மட்டுமே, கடலுக்கு செல்கிறது, என்று, அரசோ, பொது பணி துறையோ, தயக்கமில்லாமல், உறுதியாக கூற முடியுமா ? இல்லையே ? மேட்டூரில் இருந்து, திறந்து விடப்படும், தண்ணீர், கடை மடை பகுதிகளுக்கு இன்னும் போய் சேர் வதில்லையே ? காவிரி-வைகை இணைப்பு திட்டம் என்ன ஆயிற்று ? மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காவிரி வழியாக வைகைக்கு வரும் பொழுது , வழி எங்கும் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறுமே வைகை அணை நிரம்பி வழியும் நீர், வைகை வழியாக, பெரிய ராமநாதபுரம் கண்மாயை நிரப்பலாமே அன்றைய, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இயற்கை கொடுக்கும் மழை பொழிவினை சேமித்து வைப்பதற்கு பல நீர் நிலைகளை அமைத்தனர். இன்று அரசாள்பவர்களோ, அண்டை மாநிலங்களோடு, சண்டை போடுவதற்க்கே நேரம் போத வில்லை. இன்னும் நாள் கடந்து விடவில்லை. சில நூறு கோடிகளுடன், நதி நீர் இணைப்பு மற்றும், நூறு சதவீத நீர் நிலை பராமரிப்பு பணிகளை மேற் கொண்டாலே, அடுத்த 10 வருடங்களில், நம் மாநிலம், அண்டை மாநிலங்களுக்கு, தண்ணீர் தந்து உதவும் நிலைக்கு உயர்ந்து விடும் என்பதில் சற்றும் ஐயம் இல்லை. அரசு சிந்திக்குமா ?   16:47:55 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
2
2019
முக்கிய செய்திகள் 6 மேம்பாலங்கள்!  ராஜிவ் காந்தி சாலையில் அமைகிறது...ரூ.586 கோடியில் கட்ட அரசு திட்டம்... மெட்ரோ, மேம்பால சாலையும் உண்டு
இந்த மாதிரியான அறிவிப்புகள் பல வந்த வண்ணம் இருக்கின்றன. அத்தனையும் திட்டங்களே. எப்போது இந்த திட்டங்கள் செயலாக்கப்படும் என்ற விவரங்கள் இல்லை. ஒரே சாலையில் ஆறு பாலங்கள், மேம் பாலங்கள். இது சாத்தியமா ? இது தேவையா ? போக்குவரத்து நெரிசல் உள்ள இச் சாலையில், இதனை செயல் படுத்த முடியுமா ? ஒரு மேம்பால வேலையினை ஆரம்பித்தால் அது எவ்வளவு "வேகமாக" முடியும் என்று நமக்கு தான் தெரியுமே தவிர, இந்த சாலையில், மெட்ரோ அமைப்பதற்கான, மண் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. நினைத்தாலே தலை சுற்றுகிறதே அத்தனை, பாலங்களை, ஏன் ஒரே சாலையில் அமைப்பதற்கு பணத்தை வாரி இறைக்க வேண்டும் ? மாடம்பாக்கம்-சேலையூர் அருகே மேம்பாலம், இரும்புலியூர் அருகே மேம்பாலம், குன்றத்தூர், கொரட்டூர், மடிப்பாக்கம் மற்றும் வடபழனி அருகே இரண்டடுக்கு மேம்பாலம் அறிவிப்புகள், அப்படியே தான் இருக்கின்றன. திட்ட மதிப்பீடு தயார் செய்து, சமர்ப்பித்து, நிதி ஒதுக்கி, டெண்டர் விட்டு...... மேம்பாலங்களை, கண்ணால் காண்பதற்குள், இன்னொரு முறை, அத்தி வரதரே வந்து விடுவார்...   19:10:58 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
11
2019
பொது மேட்டூர் அணை ஒரே நாளில் 10 அடி உயர்வு
மகிழ்ச்சியான செய்தி. தென்மேற்கு பருவ மழை, தமிழ்நாட்டில் பெய்யா விடினும், மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்துள்ள அண்டை மாநிலங்களில் பெய்த நல்ல மழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் மேட்டூருக்கு வருவது, இயற்கை அளித்த வர பிரசாதம். வண்டல் மண் மேடிட்ட ஒரு சில அடிகளை நீக்கி விட்டால், அணை நிரம்பினால், ஒரு முழு போக பாசனத்தி ற்கு போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகமே. மழை காலங்களில், இப்படி கிடைக்கும் உபரிai நீரை, சேமித்து வைக்க, காவிரி படுகையில் போதிய தடுப்பு அணைகள் இருக்க வேண்டும். மேட்டூர் அணையின் பாசன பகுதிகளில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்கள், ஏரிகளை,ஒன்றுடன் ஒன்று இணைப்பு ஏற்படுத்தி, நீரை சேமித்து வைக்க, நீண்ட கால திட்டம் தேவை. மேட்டூர் ஆணையினை, கால்வாய் மூலம், வைகை அணையுடன் இணைக்கலாம். வைகை நிரம்பினால், ராமநாதபுரம் பெரிய கண்மாயில் உபரி நீரை சேமிக்கலாம். அரசே, அரசு அதிகாரிகளே, கொஞ்சம் உங்கள் தரப்பட்ட அமைச்சர்களுக்கு திட்டத்தை எடுத்து கூறுங்களேன். செய்வீர்களா ?   20:18:16 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X