Thirumalai Ayyathurai : கருத்துக்கள் ( 75 )
Thirumalai Ayyathurai
Advertisement
Advertisement
பிப்ரவரி
4
2018
அரசியல் சசிகலாவை ஓரம் கட்டி தனிக்கட்சி தினகரன் திட்டம்
இங்கே பிரசுரிக்கப்பட்டிருக்கும் செய்தி கற்பனை கலந்த உண்மையாகவே தெரிகிறது. விகே சசிகலா இல்லாமல் காயை நகர்த்தும் துணிச்சல் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. டிடிவி தினகரனையும் அவரது சித்தியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அதைத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சசிகலா இல்லாத தினகரனை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஊடகங்கள் என்னதான் ஆரூடம் கணித்தாலும் அதிமுக-விலுள்ள எல்லா அணிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கிறது. அம்மாவுக்குப் பிறகு சின்னம்மாவையே மக்கள் விரும்புகிறார்கள். அந்த உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.அதுவரை காத்திருப்போம்   07:42:41 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
4
2018
அரசியல் அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைப்பு - சசி தரப்புடன் மந்திரிகள் ரகசிய பேச்சு
ஆட்சியை அதிமுக- இப்போது இழக்க நேரிட்டால், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது எளிதானதல்ல. அனைத்து தரப்பினரும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு செயல்பட்டு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அம்மா அவர்களைக் குற்றவாளியாக்கிய பாஜக-வையும், திமுக-வையும் ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஆட்சி போய்விட்டால், மக்களின் கோபம், திமுக-வுக்கு சாதகத்தை உருவாக்கிவிடும். எனவே இபிஎஸ்- ஒபிஎஸ்-தினகரன் ஆகிய மூவரும் கூடிப்பேசி நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். இதுதான் அதிமுக- தொண்டர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"   10:25:50 IST
Rate this:
18 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
24
2018
அரசியல் கமலை நம்பமாட்டார்கள் தமிழிசை
தமிழிசை அவர்கள் ஊழல் என்று சொவ்வது வழக்கமான ஒன்றுதான் என்று மக்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. இனியாவது ஆதாரத்துடன் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தமிழிசையின் ஊழல் என்ற தலைப்பில் மக்கள் பேசத் தொடங்கி விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கும் பேச்சுரிமை இருக்கிறதாம்.   10:39:56 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
22
2018
அரசியல் என் அரசியல் பயணத்தில் பலர் இணைவர் ரசிகர்களை சந்தித்த நடிகர் கமல் நம்பிக்கை
கருத்துக்கள் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அரசியலில் இருக்கும் அனைவரும் கமலைப் போல் பணம் படைத்தவர்களாக இருந்தால் கமல் எப்போதோ காணாமல் போயிருப்பார். சினிமாவைப் பார்த்து உங்கள் பின்னால் ரசிகர்களாக வந்திருக்கலாம். வாக்காளர்களாக வருவார்களா? அதற்கு வாய்ப்பே இல்லை. உங்களை இப்போதே நெருங்க முடியவில்லை. இதை மக்கள் யோசிக்காமலா இருப்பார்கள்? ஏதாவது அகில இந்தியக் கட்சியில் சேர்ந்து எம்பி பதவியையும் வாங்கிக் கொண்டு சினிமாவிலும் நடிப்பதுதான் உங்கள் "ஸ்டைலுக்குப்" பொருத்தமாக இருக்கும். மக்கள் சேவையை ஒரு ஓரமாக வைத்துக் கொள்வதே நல்லது. சினிமாவைப் போல் அரசியலை உங்களால் இயக்க முடியாது. ஏனென்றால் அரசியலை இயக்கும் ஒரு அதிகாரமாவது மக்களுக்கு இருக்க வேண்டாமா? அதைப் பறிக்க யாராலும் முடியாது.   08:48:32 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
7
2018
அரசியல் தினகரன் குதிரை பேரம் 4 எம்.எல்.ஏ.,க்கள்,சிறை
திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதை, அதிமுக டிடிவி தினகரன் அணிகள் இணைந்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இனியாவது விளையாடுவதை நிறுத்திவிட்டு, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். கவனம் சிதறினால், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குதிரைக் கொம்பாகி விடும். எச்சரிக்கை.   07:34:51 IST
Rate this:
9 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
3
2018
பொது பொங்கலுக்கு 11,983 சிறப்பு பஸ்கள்
அம்மா அவர்கள் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு அளித்திருக்கும் சலுகைகளை, அதிகாரிகள் அரைகுறையாக வழங்கியிருக்கிறார்களே தவிர முழுமையாக செயல்படுத்துவதில் தங்கள் அதிகாரத்தையும் துஷ்பிரயோாகம் செய்திருக்கிறார்கள். எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள், தமிழறிஞர்களுக்கும் தன்மானம் உண்டு என்பதை அதிகாரிகளுக்குப் புரிய வைத்து சலுகைகள் கிடைத்திட ஆணையிட வேண்டுகிறோம்.   03:37:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
3
2018
பொது பொங்கலுக்கு 11,983 சிறப்பு பஸ்கள்
மக்கள் நலனில் பங்கெடுத்து வரும் அமைச்சருக்கு வாழ்த்துக்கள். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசப் பேருந்து அட்டையைப் பயன்படுத்தி அரசு விரைவுப் பேருந்துக் கழக பேருந்துகளிலும் அனைத்து அரசு குளிரூட்டுப் பேருந்துகளிலும் பயணிக்க அனுமதித்திட அன்புடன் வேண்டுகிறோம்.   01:52:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
3
2018
அரசியல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 100 எம்எல்ஏக்கள் பங்கேற்பு
அதிமு-வின் முடிவுகள் வரவேற்கத்தக்கவை. உள்ளாட்சித் தேர்தலுக்கு அவசரம் ஒன்றுமில்லை. பாராளு மன்றத் தேர்தல் முடியும் வரை உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடுவதே மேல். அதுவே மக்களின் விருப்பம்.   01:34:24 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2017
அரசியல் ரஜினி அரசியல் பிரவேசம் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும்
ரஜினியின் வருகை குறித்து எல்லாத் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை இங்கே மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். அதில் தமிழிசை மட்டுமே தங்களுக்கு ஆதரவாக வரவேண்டும் என்று அழைத்திருக்கிறார்.தமிழிசை தன் புத்திசாலித்தனத்தைக் காட்டி இருக்கிறார். முதல் தேர்தலில் பாஜக-வை ஆதரித்துவிட்டு அதற்கடுத்த தேர்தலில் ,பாஜக-வோடு தன் கட்சியை இணைப்பதுதான் ரஜினியின் சஸ்பென்ஸாகக் கூட இருக்கலாம். தமிழிசையா கொக்கா வாழ்த்துக்கள்.   05:21:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
1
2018
அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பால் கட்சிகள்... அதிருது!
டிடிவி தினகரனை நீர்க்குமிழி என்று வர்ணித்திருக்கும் தினமலரின் துணிவைப் பாராட்டுகிறேன். நீர்க்குமிழியால் தனியாகவும் வரமுடியும், படையோடும் வரமுடியும். எப்போது எப்படி வரவேண்டுமோ அப்போது அப்படியே வருவதுதான் நீர்க்குமிழி. அது ஒரு மாயை. அதை இப்போது மக்கள் விரும்புகிறார்கள். அதிமுக ஆட்சி நிச்சயம் நீடிக்கும். அதில் தினகரனின் முக்கியப் பங்கும் இருக்கும். நீர்க்குமிழியைப் பற்றி அப்போது தினமலரும் தெரிந்து கொள்ளும். ரஜினியை ரசிகர்கள் மட்டுமே ஆதரிக்கிறார்கள். தினகரனை தமிழகமே ஆதரிக்கிறது. ஆடிக் காற்றில் அம்மியே நகரும் போது ரஜினி எம்மாத்திரம்.   22:32:37 IST
Rate this:
20 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X