venkat : கருத்துக்கள் ( 234 )
venkat
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
24
2019
பொது கழிவுநீர் சுத்திகரிப்பு மோசம் 13 மாநிலங்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் 34 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (அதாவது இந்தியாவில் சரி இல்லாதவற்றில் 25 சதவிகிதத்துக்கு மேல் தமிழகத்தில்) சரியில்லை என்றால் தமிழக கழிவுநீர், மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள், மாநில ஆட்சியை குறை சொல்ல வேண்டுமா ? அல்லது மத்திய பி ஜெ பி NDA ஆட்சியை குறை சொல்லவேண்டுமா? இந்தியாவை சுத்தம் செய்ய பி ஜெ பி NDA அரசு தலைமை பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை போல 70 வருடங்களாக எந்த பிரதமரும், ஆட்சியும் இதுவரை எடுத்ததில்லை. ஏழைப் பெண்டிர் மானம் காக்க மட்டும் கடந்த 5 வருடத்தில் 9 கோடி இலவச மானிய வீட்டு கழிப்பறைகள் கட்டியுள்ளார். இது தவிர பெரும்பான்மை கிராம, நகர, வட்ட, மாவட்டங்கள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாமல் ஆக்கப் பட்டுள்ளன. பல புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், குப்பை சுத்திகரிப்பு, உரம், எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தூர் போன்ற பல நகரங்கள் குப்பையே இல்லாத தூய்மை நகரங்கள் ஆகின. சம்பந்தம் இல்லாமல் சவுதியில் இருந்து குருட்டுக் குப்பைக் கருத்து இடும் முன் கூகிளில் உண்மை தேடவும். போடவும்.   10:20:39 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
பொது ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்? மும்பை ஐகோர்ட் கேள்வி
// ஷேர் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது என்றே (நீங்கள் சொன்ன புள்ளி விவரம் தவறு என்று தெரிகிறது) வைத்து கொள்வோம் // கண்ணை மூடிய பூனைக்கு பகலிலேயே இருட்டுதான் தெரியும். மோடி எதிர்ப்பு குருட்டுக் கருத்திடுவோர்க்கு காங்கிரஸ் 150514 ல் விட்ட சென்செக்ஸ் 23905 மோடி 220819 தொட்ட சென்செக்ஸ் 36472 தவறாகத்தான் தெரியும். கண்ணை மூடி மோடி எதிர்ப்பு குருட்டு கருத்திடுவோர், பின் குரல் கொடுப்போர், கூகுளை தேடல் செய்ய அறியார்களா? BSE SENSEX 15-05-2014 மற்றும் S &P BSE SENSEX 22-08-2019 என்று தேடவும். அல்லது s://www.bseindia.com/indices/IndexArchiveData.html 15 /05 /2014 ,16 /05 /2014 அடுத்து 21 /08 /2019 , 22 /08 /2019 முன்பின் தேதி போட்டு பார்க்கவும். தெளிவு பிறக்கும்.   14:42:13 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
பொது ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்? மும்பை ஐகோர்ட் கேள்வி
// 5 மாசமா ஷேர் மார்க்கெட் பலத்த அடி.// 150514 ஒட்டு எண்ணிக்கை இறுதியாய் தெரியும் முன் தோற்ற காங்கிரஸ் UPA ஆட்சி விட்ட சென்செக்ஸ் 23905. பின் 5 வருடமாக பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இந்தியாவை உலகத்தில் முதல் நாடாக செயல் வீரர் பி ஜெ பி NDA தலைமை இந்திய பிரதமர் மோடி உயர்த்தி நிறுத்தியதால் பல உச்சங்களை தொட்ட ஷேர் மார்க்கெட், நேற்று 220819 அன்று சென்செக்ஸ் நின்றது 36472. மொத்தத்தில் ஷேர் மார்க்கெட் காங்கிரஸ் UPA விட்ட இடத்தை விட வளர்ச்சித் திட்ட நாயகர் பிரதமர் மோடி பி ஜெ பி ண்ட ஆட்சியில் பெரிதும் உயர்ந்து நிற்கிறது. பொய் கருத்து துணிந்து எழுதுவதில் சிலர் ஆனந்தம் அபத்தமாகும்.   12:39:29 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
பொது ரூபாய் நோட்டின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்? மும்பை ஐகோர்ட் கேள்வி
அச்சடிக்கும் செலவினம் குறைக்க, சிக்கனம் கருதி, ரூபாய் நோட்டு வடிவம் அவ்வப்போது மாற்றும் போது அதன் நீளம் அகலம் பரப்பு குறைத்து புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடுவது காங்கிரஸ் காலத்திலிருந்து உள்ள வழக்கம். இந்த யுக்தி எல்லா பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பிலும் உற்பத்தியாளர் மூடியில் இருந்து அளவு குறைப்பது பார்க்கலாம். ராகுல் அடுத்த பிரதமர், மோடியல்ல என்று தேர்தல் முன் தமிழகத்தில் சூளுரைத்தவர் வாக்கு மண்ணானதை போலவே மோடி அமித்ஷா பற்றிய தங்கள் திருவாக்கும் விவரம் தெரிந்த மக்கள் மண்ணோடு மண்ணாக ஆக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். இவ்விஷயத்தில் அவ்வளவு அக்கறை இருந்தால் ரிசர்வ் வங்கிக்கு ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயத்தில் ஒன்றை சதுரமாகவோ, நெளிவு விளிம்பாகவோ மாற்ற யோசனை அனுப்புங்கள். எல்லாமே மோடியின் வேலை. வேறு உருப்படியான வேலையின்றி, எதற்கும் பயனின்றி மோடியை குறை கூறுவது உங்களை போன்ற குருட்டுக் கருத்துக் கண்ணாயிரங்கள் வேலை.   09:52:16 IST
Rate this:
8 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
சம்பவம் வராந்தாவில் குழந்தை பெற்ற பெண் உ.பி.,யில் சர்ச்சை
// இதெல்லாம் நீங்கள் செய்ததுண்டா? // பல வருடங்களுக்கு முன் பத்திர எழுத்தர்( 2 ), மாநகராட்சி ஊழியர் (1 ),, போக்குவரத்து காவல் டீ காசுக்கு (1 ) என்று வாழ் நாளில் மொத்தம் 4 அல்லது 5 ஒருமுறை சிலர் பணம் பெற்றுள்ளனர். ஆனால் அதில் எந்த வித சிறப்பு பயனும் நான் பெற்றதில்லை. ஆஸ்பத்திரி பிரச்சினைக்கு காரணம் யார் என்று பார்த்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்கு காரணம் மைய அரசா, மாநில அரசா, ஆஸ்பத்திரி நிர்வாகமா, கடைநிலை ஊழியரா, பெண்ணின் குடும்பமா, உறவினரா, பெண்ணிற்கு மறைவு பாதுகாப்பு உதவி அளிக்காத சுற்றி நின்ற பெண்ணினமா, படமெடுத்த, அதை வேடிக்கை பார்த்த, ஷேர் செய்த, பிரசுரித்த வக்கிர ஆணினமா என்று பார்த்தால் > இதில் ஏழை மக்களுக்கு 70 வருடங்களாக அல்லல் படுத்தும் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றாக, விருப்பப்படி சிறந்த சிகிச்சை பெற தனியார் மருத்துவ மனைகளையும் உள்ளடக்கி 50 கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உலகிலேயே முதல் முறையாக உருவாக்கி அளித்த ஏழைப் பங்காளர் மோடி காரணமல்ல. அந்தத் திட்டத்தை, நிறைவேற்ற வேண்டிய அரசு ஊழியர், லஞ்ச லாவண்யங்களை நேரே முறையிடும் வசதி மோடி அளித்தும் சரியாக பயன் படுத்த தெரியாத, விருப்பமில்லாத மக்களை அக்குற்றம் சாரும். அரசு, அரசுத்துறை ஊழியர், மக்கள் மூன்றும் சேர்ந்துதான் நாட்டை சரி செய்ய முடியும். அரசு கடமை திட்டங்கள் சட்டங்கள் ஈட்டித்தரும், கண்காணிப்பில் மக்கள் பங்கு நிறைய உண்டு. திட்டங்களை சரியாக நிறைவேற்றாத ஊழல் அலட்சிய ஊழியரை சட்டம், மக்கள் முன் நிறுத்தி சரி செய்ய முனைய வேண்டியது, கருத்து எழுதும், மற்றும் பாதிப்பான மக்கள் முதல் கடமை. இதை மக்கள் செய்வதில்லை. அமெரிக்கா சிங்கப்பூர் துபாய் ஜப்பான் தூய்மையாய் இருக்க சட்டம் இயற்றிய அரசு, கண்காணித்து நிறைவேற்றும் காவல் நீதி அரசுத் துறையினர், குப்பையை தெருவில் வீசாது தொட்டிக்குள் மட்டுமே போடும் மக்கள் மூவரும் பொறுப்புடன் உள்ளனர். இங்கு மக்கள் பொறுப்பு எவ்வாறு உள்ளது? . தெருவில் வீசி எறியப்பட்ட குப்பை பொறுப்பின்றி தூய இந்தியாவை உருவாக்க சபதமிட்ட, ஏழைப் பெண்டிர் மானம் காக்க 9 கோடி புதிய இலவச, மானிய கழிப்பறை வீடுதோறும் கட்டிய மோடியை சாடும் குருட்டுக் கருத்துக் கண்ணாயிரங்கள் போட்டது.   19:11:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
சம்பவம் வராந்தாவில் குழந்தை பெற்ற பெண் உ.பி.,யில் சர்ச்சை
தவறு செய்தது மாநில அரசு ஊழியர். ஆஸ்பத்திரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. வழக்கம் போல ஏழைகளுக்கு ஒரு நல்ல மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வந்த ஏழைப்பங்காளர் பி ஜெ பி NDA தலைமை இந்திய பிரதமர் மோடியை சம்பந்தம் இன்றி இழுப்பானேன்? அரசு ஆஸ்பத்திரி சரியில்லை என்றால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற மோடிக்கேர் திட்டத்தில் வழி உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் குற்றம் பி ஜெ பி ஆட்சி அல்லாத மாநிலங்களிலும் உள்ளது. உங்களை சுற்றி லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர் ஒருவரையாவது நீங்கள் ஊழல் தடுப்புத்துறையில் வாழ்நாளில் பிடித்துக் கொடுத்தது உண்டா? உங்கள் ஊரில் உங்கள் உதவியோடு தினமும் நடக்கும் ஊழலுக்கு மோடி நேரில் வந்து சரி செய்ய வேண்டும். தெருவில் நீங்கள் தினம் போடும் குப்பையை பிரதமர் நேரில் வந்து எடுக்க வேண்டும். இம்மாதிரி கருத்தெழுத வெட்கமாயில்லை? தமிழக 081218 பத்திரிக்கை செய்தி > ஆஸ்பத்திரி ஊழியர்கள் நோயாளிகளிடம் இருந்து லஞ்சம் கேட்கும் புகார்கள் வந்ததால் தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை தமிழகம் முழுதும் அரசு ஆஸ்பத்திரிகளில் வெள்ளியன்று திடீர் சோதனை நடத்தியது. < இன்றும் தமிழகத்தில் பத்திரம், போக்குவரத்து, காவல், வட்டாச்சியர், பொதுப்பணி போன்ற எந்த அலுவலகத்தில் DVAC திடீர் சோதனை நடத்தினாலும் லட்சக் கணக்கில் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப் படுகிறது. இது நீங்கள் கொடுக்கும் லஞ்சப்பணமும் சேர்த்துத்தான். உங்களை சுற்றி லஞ்சம் வாங்குபவர்களை ஊழல் தடுப்புத் துறை பிடித்து சிறையில் அடைக்க சிறிது முயற்சி எடுங்கள். இந்தியா முழுதும் எல்லா ஆஸ்பத்திரிகளில் ஊழியர் ஒழுங்காக வேலை செய்வார்.   10:37:48 IST
Rate this:
14 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2019
பொது உயர்ந்தது அபராதம் போக்குவரத்து துறை எச்சரிக்கை
அமெரிக்காவில் இருப்பது போல சில முக்கிய சாலை விதிகளை தமிழக போக்குவரத்து காவல், நெடுஞ்சாலை, உள்ளாட்சி அமைப்புகள் லஞ்ச ஊழல் மாமூல் ஓசி டீ பரோட்டாவுக்காக மக்களை விரைந்து செல்லும் வாகனங்களுக்குடையே தள்ளி காவு கொடுக்காமல் அமுல் படுத்தவேண்டும். இவ்விதிகளை யாரும் youtube -ல் யாரும் எளிதில் பார்க்கலாம். (A) அமெரிக்கா சாலை அமைப்பு > (1 ) சாலைகள் அகலமாக தரமாக, பல ஓடுபாதைகளுடன் இருக்கும் (2) ஓடுபாதையில் கடைசிவரை எந்த குறுக்கீடும் இராது, பேருந்து நிறுத்தம் போல விலகி ஓரமாய் நிற்க தனி இடம் கோடிட்டிருக்கும். அக்கோட்டிற்குள்தான் நிற்கும் வண்டிகள் நிற்கும். (3 ) . வலது புறம் செல்ல நடு தடுப்பு புல்வெளி குறுக்கி, நேராக செல்லும் வண்டிகளுக்கு இடையூறு இன்றி ஓடு பாதை பிரிக்கப் பட்டு இருக்கும். (4 ) சேலம், சென்னை போன்று எல்லா நகரங்களையும் இணைத்து சிக்னல் இல்லா விரைவு வழி விரைவுப்பாதைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. (5 ) வலது இடது செல்ல பக்கவாட்டில் தனி சாலை, நேர் சாலைக்கு இடையூறு இன்றி மேலே உயரமாக கிராஸ் செய்யும். (6 ) எண்ணற்ற உயர்மட்ட வழிகள், குறுக்குப் பாதைகள் குறித்த காலத்தில் விரைந்து அமைக்கப் படுகின்றன . (7 ) சேவை இணைப்புகள் சாலை ஓரம் தனி வழியில் அமைக்கப் பட்டு இருக்கும்.மின்சாரம், குடிநீர், சாக்கடை, கேபிள் என்று மாற்றி மாற்றி ஓடும் சாலையை தோண்டமாட்டார்கள். (8 ) சாலை ஓரங்களில் அழகு மரங்கள், புல்வெளிகள், பூச்செடிகள் அமைக்கப்பட்டு இருக்கும். (9) நெடுஞ்சாலைகளில் அடுத்த இடம், திருப்பம் பெரிதாக ஒவ்வொரு ஓடுபாதை மேலும் தெளிவாக உயரத்தில் அறிவிப்பு பலகை இருக்கும். (10 ) நெடுஞ்சாலைகளில், பிரிவு சாலைகள் எண்களில் குறிப்பிடப்படும் (EXIT 101 , 102 , ..) . கூகிள் வழிகாட்டி திரும்ப வேண்டிய பாதை எத்தனை பிரிவு பாதைகள் கடந்து என்று சுலபமாக சொல்லும். அதற்கு ஏற்ப நடுசாலையில் இருந்து ஓரப்பாதைக்கு மெதுவாக மாறிக்கொள்ளலாம். (B ) ஓடுபாதை, நிறுத்தக்கோடு > (1 ) சாலைகளில் ஓடுபாதை (lane ) தெளிவாக கோடிட்டிருக்கும். (2 ) விமான நிலையம், கடைத்தெரு போன்ற பல இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்தம் பல இருக்கும். வண்டியை விட்டு விமானத்தில் கூட சென்று வரலாம் சாலைகளில் வாகன நிறுத்த நெரிசல் இருக்காது. (3 ) இருசக்கர வண்டி செல்ல தனி ஓடுபாதைகள் குறிக்கப் பட்டு இருக்கும். (C ) சிக்னல், திருப்பங்கள்> (1) சாலையோர கம்பத்தில் இருந்து சாலை நடு வரை கம்பம் நீட்டி ) ஒவ்வொரு ஓடு பாதையிலும் நேராக, வலது, இடம் செல்ல தனித்தனி சிக்னல் விளக்கு இருக்கும் (2 ) டோல்கேட் நில்லாமல் செல்லலாம், வண்டி எண் தானாக பதிவாகும், ஒருவாரத்திற்குள் இணையத்தில் டோல் கட்டணம் செலுத்தலாம் (3 ) எல்லா சாலை சந்திப்புகளிலும் எல்லா ஓடுபாதைக்கும் தனியே சிக்னல் இருக்கும். (D ) ஓட்டும் விதம் > (1) சிவப்பு விளக்கில் எல்லா வண்டிகளும் நில் குறுக்கு கோட்டுக்கு முன் கண்டிப்பாக நிற்கும். (2 ) ஓடுபாதைகளில் விதிக்கப்பட்ட வேகத்துக்குள்தான் விரைவார் (3 ) ஓடுபாதை மாறுமுன் பின்னோக்கி கண்ணாடி பார்த்து, பக்க விளக்கு போட்டு மாறுவர் (4 ) நாடு முழுதும் மால் போன்ற இடங்களில் வண்டிகள் நிற்க வரைந்த கோட்டுக்குள்தான் நிற்பார். (5) வண்டிகளில் ஓவர் லோடு அதிக பயணி இராது. லாரிகள் மூடி இருக்கும். ஓட்டுநர் ஓய்வெடுக்க லாரியில், மற்றும் அங்கங்கு தூய்மையான ஓய்விட வசதி உண்டு. (6 ) வண்டிகள் ஒன்றன் பின் ஒன்று இடைவெளி விட்டு அணிவகுத்து விரைந்து செல்லும் (7 ) எல்லோரும் சீட் பெல்ட் அணிவர். (8 ) குழந்தைகளுக்கு தனி கூடை இருக்கை கட்டாயம் (E ) தூய, துணிவு, கடமை உணர்வு அதிகாரிகள் > (1 ) சாலையின் குறுக்கே காவலர் தடை ஏற்படுத்தி, நின்று, கவனிக்க சொல்லி, கம்பு வீசி காயம் ஏற்படுத்த மாட்டார். எங்கிருந்தோ எல்லா விதி மீறல்களையும் கண்காணித்து, விரைந்து வந்து, ஓரம் நிறுத்தி, சீருடை கமெரா மூலம் சாட்சியம் ஏற்படுத்தி விஞ்ஞான முறையில் கேஸ் போடுவார். (2 ) சாலை ஓர, நடை பாதைகளில் எவ்வித கடை, சிலை, கோவில், பதாகை, கொடி, ஆக்கிரமிப்பும் இருக்காது. (3 ) சாலையில் மாடுகள் திரியாது, படுக்காது, மூத்திரம் போகாது (4 ) உரிமம் முதல், ஓட்டுவது வரை சரி பார்க்க காவல், அதிகாரிகள் லஞ்சம், மாமூல் வாங்குவதில்லை, விதிகளை மட்டுமே வற்புறுத்துவார். (5) அமெரிக்காவில் வணிகர்கள் இங்குபோல மரத்தை வெட்டி நடைபாதை ஆக்கிரமித்து, பொருள் பரப்பி, குப்பை சாக்கடை கழிவை சாலையில் விட்டு, கண்காணிப்பு அதிகாரிகள் கவனிக்காமல் கவனிக்க ஓசி பரோட்டா பரிமாற மாட்டார்கள். அதிகாரிகளும் கடைநிலை கருப்பு ஆடுகளும் அங்கு இவ்வாறு சட்டவிதி மீற கை கண்ணசைக்க, பாராமுகமாய் இருக்க, நடவடிக்கை எடுக்காமல் இருக்க கையேந்த மாட்டார்கள். மேற்கூறிய பல சட்ட விதிகளும் அமெரிக்காவில் துல்லியமாக காவல் நீதித்துறையில் செவ்வனே பார பட்சம் இன்றி கண்காணிக்கப்படுகிறது இங்கு சென்னை, சுற்றத்தில் நடக்கும் சில மக்கள் விரோத கடமை தவறும் காவல் போக்குவரத்து நெடுஞ்சாலை உள்ளாட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மாமூல் வாங்கும் ரவுடிகளால், அனுமதிக்கப் படுகின்றது. இதனால், வண்டிகள் நடுத்தெருவில் ஓடுபாதையில் நிறுத்தப்படுகின்றன. மக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர், சாலையோரமாக மறைந்த நடைபாதையில் நடக்க முடியாமல், விரைந்து செல்லும் வண்டிகள் அருகே நடுச்சாலையில் நடந்து விபத்துக்குள்ளாகின்றனர். இத்தகு விபத்து ஏற்படும் சில இடங்களின் உதாரணம்: > (a ) சிறுசேரி IT பார்க் OMR வாசல் முனை இருந்து SBI ATM டோமினோ வரை சாலை ஓரத்தில் இருந்து 50 அடி வரை OMR சாலை பெரும் பகுதியும் மறித்து பீப்பாய்கள் அடுக்கிய பழைய பேப்பர் கடை, அருகில் பல சாலையோர ஆக்கிரமிப்பு உணவகங்கள் பாதசாரிகளின் விபத்துக்கு காரணிகள். (b ) சிறுசேரி SIPCOT வாசல் அருகே சாலையை ஆக்கிரமித்து உணவு பெட்டி கடைகளால் சிபிகாட் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திரும்ப இடமின்றி வரிசை கட்டி நிற்கின்றன. (c ) OMR சிறுசேரி சிபிகாட் சிக்னல் ஒட்டி சாலை பள்ளம் குண்டு குழியாய் மக்களை காவு வாங்க காத்திருக்கிறது. (d ) இதேபோன்ற, நாவலூர் மார்க்கெட் சேவை ரோடு ஆக்கிரமிப்பு OMR ஓடு பாதையில் வண்டிகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறது. (e ) நாவலூர் ஜங்ஷன் முனை தாழம்பூர் குண்டுகுழி சாலை ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி, மக்களை சாலையில் நடக்க வைக்கிறது. (e ) சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் மெயின் ரோடு முதல் மேடவாக்கம் சந்திப்பு வரை நடைபாதை ஆக்கிரமிப்பால் அதிக வண்டிகள் செல்லும் இப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், மக்கள், பள்ளி சிறுவர்கள், நடுச்சாலையில் சென்று விபத்துக்குள்ளாகும் நிலை. (f ) குரோம்பேட்டை மற்றும் சோழிங்கநல்லூர் சரவணா ஸ்டார் திறந்தவுடனேயே அருகே சேவை வண்டி சாலைகளில் ஆக்கிரமிப்பு, இது பற்றி பத்திரிக்கை, பொது நல வழக்குகள் மூலமும் அறிந்தும், பெரிய வண்டியில் சாலையில் தினமும் இந்த சட்ட மீறலை பார்த்தும் பாராது போகும் காவல் நீதி நெடுஞ்சாலைத் துறையினர், உச்ச நீதி மன்ற "நடை பாதை for passing repassing " உத்தரவு பட்டப் பகலில் கண்ணெதிரே மீறப்பட்டு மக்கள் போக்கு வரத்து நெரிசலில் அடிபடும் ஆபத்து நிலையை கண்டும் காணாது கடமை மறந்து செல்கின்றனர். எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது பட்டப்பகல் சட்டவிதி மீறலை ஊக்குவிப்பதாகவே தோன்றுகிறது. விபத்துகள் தானாக நடப்பதில்லை. அலட்சிய ஊழல் அதிகாரிகளால் உருவாக்கப்படுகிறது.   11:37:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
பொது மேட்டூர் அணை ஒரே நாளில் 10 அடி உயர்வு
தற்போது தமிழகத்தில் பல இடங்களில் பெய்து வரும் மழை நீரை முதல்வர் EPS அறிவித்த தொகையை ஊழலின்றி பயன்படுத்தி அரசு இணையத்தில் அறிவிக்கப்பட்ட ஏரி குளங்களில் உண்மையாக தூர்வாரப்பட்டு சேமிக்கப் படுகிறதா என்று அப்பகுதி விவசாயிகள், சங்கங்கள்,சமூக அமைப்பினர் கண்காணித்து முறைகேடுகளை ஊடகங்கள், அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். மற்ற எல்லா நீர்நிலைகள், கண்மாய், வரத்து கால்வாய், வடிகால், தூர்வார விவசாயிகள், மக்கள், பொது நல சங்கங்கள் தினமலர் களத்தில் நமக்கு நாமே முடிவின் படி பெரு மழை வருமுன், கொள்ளளவு அதிகரித்து சேர்த்து வைக்க வேண்டும். மற்ற நாடுகளை விட இந்தியாவில், தமிழகத்தில் அதிக மழை இருந்தும், நீரை முறையாக நீர்நிலைகள், தடுப்பணைகள் மூலம் சேமிக்காமல் கடலில் செலுத்தி வெள்ளம் வறட்சி குடிநீர் பற்றாக்குறை, மற்ற மாநிலங்களை கையேந்துதல் அதிகமாக உள்ளது. அரசு, அரசுத் துறையினர் உண்மையாயும், மக்கள் விழிப்புடனும், நீதிமன்றம் கண்காணிப்புடனும் இருந்தால், ஏரிகளும் நீர்வளமும் செழிப்பும் வேலை வாய்ப்பும் காணாமல் போகாது.   09:28:44 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2019
பொது காஷ்மீரில் பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது பிரதமர் மோடி
இந்தியாவின் தலையில் 70 வருடங்களாய் காங்கிரஸ் ஏற்றி வைத்த தலைவலியை செயல் மாவீரர் அஞ்சா நெஞ்சர் பி ஜெ பி NDA தலைமை இந்திய பிரதமர் மோடி ஒரே நாளில் அகற்றி விட்டார். இனி இந்திய உடல் முழுதும் தீவீர வாதாம் தலை எடுக்காமல் நிம்மதிப் பெரு மூச்சுடன் ஒற்றுமையாக செயலாற்ற முடியும். மோடியை எதிர்க்கிறேன் என்று தேச விரோத பிரிவினை கட்சிகள் மதப் பிரிவினை விஷத்தை நாட்டுடலில் விதைக்காமல் இருந்தால் போதும். மக்கள் நிம்மதியாய் இனி வரும் காலங்களில் வாழ முடியும். பயமின்றி காஷ்மீர் சுற்றுலா செல்ல முடியும். காஷ்மீர் இந்தியரும் தீவிர மத வாதத்தை விட்டு நல்வாழ்வு பெறலாம்   21:28:46 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2019
பொது ரூ.25 ஆயிரம் கோடி ஒப்பந்தம் ரத்து மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க அதிரடி
இன்னும் இந்தியா தொழில் நுட்பம் சுய சார்பு முழுமை பெறாத பொருட்களில் 30 சதவிகித மூல உதிரி பொருட்கள் இந்தியாவில் கொள்முதல் (offset) செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறக்குமதி செய்ய அனுமதிக்கிறார்கள். உதாரணம் ரபால் போர் விமான இறக்குமதி. இந்தியாவில் தொழில் நுட்பம், திறமை ஊழியர்,பெரும்பகுதி மூல உதிரிப் பொருட்கள் இருக்கும் தயாரிப்புகளில், அல்லது அதிக இறக்குமதி தவிர்க்க வேண்டிய நிர்பந்தத்தில், இந்தியாவிலேயே உற்பத்தியை ஊக்குவிக்கிறார்கள். உதாரணம். லித்தியம் அயன பேட்டரி. மேக் இன் இந்தியா என்றால் உதிரி மூலப் பொருட்கள் இறக்குமதியே இல்லா முழுப் பொருள் என்பது அல்ல. இது உலகிலே எங்கும் நடப்பது இல்லை. எதிலும் அதிகம் இறக்குமதியையே நம்பி இருக்கக்கூடாது என்பதே வளர்ச்சித் திட்ட நாயகர் பி பெ பி NDA தலைமை மைய அரசு மக்கள் பிரதமர் மோடியின் கொள்கை. அதனால் அதிகம் இறக்குமதி அந்நிய செலாவணி சாப்பிடும் பெட்ரோலுக்கு மாற்றாக மின்னூர்தி, உள்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தி. சோலார் தகடு உற்பத்தி ஆகியவை முன்னெடுத்தார். ஆட்டோமொபைல், கைபேசி, மெட்ரோ பெட்டி தயாரிப்பு, விண்கலம் ஏவுதல் போன்றவற்றில் இந்தியா பெருத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அடைந்துள்ளது.   10:41:40 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X