பலரையும் இரக்கமற்ற முறையில் கொன்று குவித்தோரை விடுதலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு மக்கள் தலைவரை கொலை செய்த குற்றவாளிகளே விடுதலை செய்யப்பட்டால் சாதாரண மக்களின் பாதுகாப்புக்கு என்ன வழி? இந்த குற்றாவாளிகள் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ? ஜனாதிபதி இதில் தலையிட வேண்டிய நேரம் வந்திருக்கிறது
18-மே-2022 12:08:13 IST
அறிவியல் அறிஞர் திரு நம்பி நாராயணன் அவர்கள் மிகப் பொருத்தமானவர். ஒரு நல்ல மனிதர் சந்திக்க கூடாத கொடுமைகளை சந்தித்தார். சட்டத்தை மட்டுமே நம்பி போராடினார். இறுதியில் வெற்றி பெற்றார். குடியரசுத் தலைவர் பதவிக்கு இவரை விடத் தகுதியான நபர் தற்போது யாரும் இல்லை.
08-மே-2022 20:17:22 IST
மூச்சுக்கு முன்னொரு தடவை திராவிட என்ற சம்ஸ்கிருத சொல்லை உச்சரித்து கொண்டிருக்கும் கூட்டத்துக்கு இதை பற்றி கருத்து சொல்ல எந்த தகுதியும் இல்லை. தமிழில்தான் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று சொன்னால் பாராட்டலாம். ஆனால் கிரேக்க மொழியில்தான் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஐரோப்பிய அடிமைத்தனத்தின் வெளிப்பாடு. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறி வாழ்நாள் முழுவதும் தமிழை வெறுத்த வேற்றுமொழி பெரியவரின் சீடர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். இது திராவிட மாடல்
02-மே-2022 14:58:38 IST
அறநிலைய துறைக்கு அர்ச்சகரை நியமிக்கும் அதிகாரம் கிடையாது. நீக்கும் அதிகாரமும் கிடையாது. அறநிலையத்துறை அதிகாரி இந்து மதத்தை சேராதவர் . இப்படி ஏகப்பட்ட விதிமீறல்கள். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கும் பா ஜ போராடும் என்றெல்லாம் காத்திராமல் ஒவ்வொரு ஆலயத்துக்கும் அந்தந்த பகுதி மக்கள் பாதுகாப்பு வளையத்தை அமைத்து முறைகேடுகளை தவிர்க்க ஒருங்கிணைப்பு முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும்
01-மே-2022 10:32:07 IST
திராவிடம் என்பது இனத்தின் பெயர் அல்ல. நிலப்பரப்பை குறிக்கும் சொல். தென்னாட்டில் இருந்து வருபவரை முன்பு வடநாட்டில் மதராசி என்று அழைத்தனர். அதனால் மதராஸி என்பது இனத்தின் பெயரா ? திராவிடன் என்ற தவறான மூட நம்பிக்கையை கற்பித்தவர் ஆங்கிலேயர். பரப்பியவர் கன்னடர். அந்த பொய்யினை நம்பி ஏமாந்தவன் தமிழன்.
26-ஏப்-2022 20:55:38 IST
எம்மதமும் சம்மதம். இதுவே உயர்குணம். இந்துமதம் மட்டுமே எதிர்மதம். இது உயர்குணத்தின் எதிர்குணம். முதல்வருக்கு உயர்குணம் மட்டும் இருக்க வேண்டும். சாதி மதத்தை வைத்து அரசியல் செய்வது முறையன்று. முதல்வரான பின்னும் அதை தொடர்வது நியாயமற்ற செயல். தீபாவளிக்கு வாழ்த்து இல்லை. திருக்கார்த்திகைக்கு வாழ்த்து இல்லை. தமிழ் புத்தாண்டுக்கு கூட வாழ்த்து சொல்ல மனமில்லாத ஒருவர் தமிழர் பற்றி கவலைப்படுவது தமிழர்களை கேலி செய்வது போல் உள்ளது. நோன்பு கஞ்சி அருந்தும் முதல்வர் அம்மன் கோயில் கூழும் அருந்தலாம். தவறில்லை. அம்மன் கோவில்களுக்கு ராகியும் வழங்கலாம். தவறேயில்லை. போற்றத்தக்க ரம்ஜான் நோன்பை போற்றி புகழும் முதல்வருக்கு ஏகாதசி விரதத்தையோ சஷ்டி விரதத்தையோ பாராட்ட மனமில்லை. ஹஜ் யாத்திரைக்கு வாரி வழங்கும் வள்ளலுக்கு சபரிமலை செல்வோருக்கு வசதிகள் செய்து தர முடியவில்லை. மதம் சார்ந்த நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு மதசார்பின்மை பற்றி பேசுவதுதான் திராவிட மாடலா? இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதா ?
25-ஏப்-2022 11:46:22 IST
திட்டத்தின் பெயரை மாற்றி விட்டோம். வேறு வகையில் பயன் தருகிறோம் என்பதல்லாம் இருக்கட்டும். 3,34,913 பயனாளிகள் என்று விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கினால் (334913 X 40000 (8 GRAM))கூட 1340 கோடிதான் தேவைப்படும் அப்படி இருக்க 3000 கோடி என்பது என்ன கணக்கு? இதிலும் 24.5 சதவீதம் பேர்தான் தகுதி பெற்றவர்கள் என்ற நிலையில் 328 கோடி ரூபாய்தான் செல்வாகும். இந்துக்கள் அதிக அளவில் பயன்பெறும் திட்டம். அதோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதால் மட்டுமே இது நிறுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை
22-மார்ச்-2022 11:11:22 IST
உபி யில் இரண்டாவது முறை வெற்றி என்பது அபூர்வமான விஷயம். வாரிசு அரசியலை நடுநிலை மக்கள் விரும்பாததால் அகிலேஷ் மெஜாரிட்டி பெற முடியவில்லை. யோகியின் சாதனை பாராட்டுக்கு உரியது. தமிழ்நாட்டில் அரசியல் என்பது கல்வி வள்ளல்கள் கையிலும் மதமாற்ற சக்திகள் கையிலும் இருப்பது போல் பஞ்சாபில் விவசாய இடை தரகர்கள் கையில் அரசியல் இருக்கிறது. பல்வேறு பிரச்சனைகளை கொண்ட பஞ்சாபில் ஆம் ஆத்மீ எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
10-மார்ச்-2022 15:48:10 IST
மதவாத அரசியலுக்கு சிறுபான்மை நலன் என்றும், சாதிய அரசியலுக்கு சமூக நீதி என்றும் பெயர் சூட்டி தமிழகத்தில் திமுக காலூன்றியது . இதே நிலைப்பாட்டை தான் திமுகவில் இருந்து பிரிந்த அதிமுக, மதிமுக போன்ற கட்சிகளும் பின்பற்றி வருகின்றன. ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை மறைந்த பின் அதிமுக கட்சி எல்லா விதத்திலும் திமுக போன்றுதான் செயல்படுகிறது. மாற்றம் கொண்டு வர முயன்ற தேமுதிக தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் வைத்து பா ம க ஒரு சில பகுதிகளில் மட்டும் செயல்படுகிறது. நா த கட்சி மொழி அரசியல் செய்கிறது. சாதி மதம் பாராது செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ம நீ ம கட்சி தி மு க வின் அதே அரசியல் நிலையை பின்பற்றி வருகிறது. ஒட்டு வாங்க சுலபமான வழி சமூக நீதி சிறுபான்மையினர் நலன் என்று பேசுவதுதான் . பா ஜ இதை மாற்றி அமைக்க முயல்கிறது. கடினமான பணிதான். ஆனால் மாற்றத்தை ஏற்படுத்த பா ஜ வால் மட்டுமே முடியும் என்பதே இன்றைய தமிழக நிலை.
12-பிப்-2022 14:23:03 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.