MB THIRUMURUGAN : கருத்துக்கள் ( 16 )
MB THIRUMURUGAN
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2018
பொது பெருமழை கற்று தந்தது பாடம் மறக்காமல் இருந்தால் தீரும் சாபம்
காவிரி வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கடலில் வீணாகக் கலந்து கொண்டிருக்கிறது. வழியில் தென்பட்ட தடைகளை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு போயிருக்கின்றது. இப்படிப்பட்ட நேரத்தில் கடை மடை பகுதிகளில் காவிரி நீர் வரவில்லையென்று காத்திருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சிகப்புத் துண்டு போட்ட விவசாயிகளைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. தமிழகத்தின் அரசியல் சாக்கடையில் தலைமுறை தலைமுறையாகப் பெருமை கொண்ட உழவனும் பலியாகிப் போன பாவத்தை என்னென்று சொல்வது? "உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்பது பொய்த்துப் போனதே இன்று இங்கே உழவனே வீணில் உண்டு களித்து தனது தொழிலில் கவனம் செலுத்தாமல், அதற்கான முயற்சிகளை எடுக்காமல் பிறரை நிந்தனை செய்வதையே வாழ்நாள் சாதனையாய் அரசியல் அரிதாரம் பூசி செய்து கொண்டிருக்கின்றானே அரசியல் வாதிகளிடம் தனது பாரம்பரியத்தை அடகு வைத்து விட்டானே கரிகால் சோழன் மட்டும்தான் ஆறுகளையும் ஏரிகளையும் தூர் வார வேண்டுமா என்ன? அரசியல் வியாதிகள் செய்யாவிட்டால் என்ன வீடெங்கும் திண்ணை கட்டி, வெறும் பேச்சு வெள்ளை வேட்டி விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஆறுகளைத் தூர்வாரி, கால்வாய்களைத் தூர்வாரி இருந்தால் கடைமடைக்கும் காவிரி வந்திருக்குமே கூக்குரலிட்டு புலம்பத் தேவை என்ன இருக்கிறது? இவர்களைப் பார்த்து நிலமென்னும் நல்லாள் நகாமல் என்ன செய்வாள் விவசாயிகள், தண்ணீர் விஷயத்தில் அரசியல்வாதிகளையோ, அரசாங்கத்தையோ நம்பாமல் தங்களுக்குள் ஒற்றுமையோடு சேர்ந்து செயல்பட்டு விவசாயத்தின் பெருமையை உணர்ந்து தாங்களே முயன்று அனைத்தையும் சீர்செய்து கொள்ள வேண்டும் இல்லையேல் ஒரு மிகப்பெரிய உணவுப் பஞ்சம் உருவாக இவர்களே வித்திடுகின்றார்கள் என்றுதான் தோன்றுகிறது.   16:10:12 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
அரசியல் பிரதமரை மரியாதை குறைவாக பேசும் வைகோ
என்ன ஆயிற்று இவருக்கு? மனுஷன் வர வர ரொம்ப மோசமாக இருக்கிறாரே   13:12:38 IST
Rate this:
15 members
1 members
54 members
Share this Comment

மார்ச்
22
2018
சிறப்பு கட்டுரைகள் மூச்சுக்கு மூச்சு முருகா -சீர்காழி! என்பார்வை
சீர்காழி கோவிந்தராஜன் ஆஹா அவர் பேரை சொல்லும் போதே அவரின் வெண்கலக் குரல் காதில் ஒலிக்கத் துவங்குகிறது எத்தனை எத்தனை பாடல்கள் அத்தனையும் அவரது கம்பீரக் குரலில், பசுமை போர்த்திய மலை ராணியின் உச்சியிலிருந்து வெள்ளி அருவி வீழ்வதை நாம் தூரத்திலிருந்த்து பார்த்தால் எப்படியிருக்குமோ அவ்வளவு ஆனந்தமாக ஒலிக்கும் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல இரவின் மடியில் நிலவின் ஒளியில் "அமுதும் தேனும் எதற்கு" என்ற உவமைக் கவிஞர் சுரதாவின் பாடலை இன்றைக்கும் நாம் கேட்டாலும் இதயத்தில் அந்த நாள் நினைவுகள் நம் மனதில் நிழலாடுகின்றதே "குற்றால அருவியில் குளிச்சது போல் இருக்குதா" என்ற பாடலும், "தேவன் கோவில் மணியோசை" பாடலும், "என்னை விட்டு ஓடிப் போக முடியுமா" பாடலும், "கண்ணான கண்மணிக்கு அவசரமா" பாடலும், "எங்கிருந்தோ வந்தான் இடைச்ச்சாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" பாடலும், 'ஒருவர் வாழும் ஆலயம்" பாடலும், கர்ணன் படத்தில் வரும் "மழைகொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்", "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரமெய்தாது" பாடல்களும், அனைவரின் மனதையும் கட்டிப் போட்ட "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடலும், ராஜராஜ சோழனில் வரும் "தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே" பாடலும் அடடா இதைச் சொல்வது எதை விடுவது? காலத்தால் அழியாத காவியமாகிப் போன அந்த மஹா புருஷரின் நினைவலைகளில் மூழ்கி திளைப்பதே அவருக்கு நாம் செலுத்திடும் நன்றி கடனாகும் அவரின் திருக் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை இன்றைய தினத்தில் தெரிவித்துக் கொள்வதில் சீர்காழியின் ரசிகனாக பெருமிதம் கொள்கிறேன்   10:29:12 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
15
2018
பொது துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்
ஒன்றும் சொல்வதற்கில்லை ................................. அவ்வளவுதான்..........................   15:55:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
15
2018
உலகம் 90% குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்
தமிழகத்த்தில் தண்ணீர் கேன் ஏற்றி வரும் வாகனங்களை கவனித்து இருக்கிறீர்களா? ஓப்பன் டிரக்கில் வெயிலில் காய்ந்தபடி எடுத்து வருவார்கள். ஆனால் ஒவ்வொரு கேனிலும் "AVOID DIRECT SUNLIGHT" என்று எழுதப் பட்டிருக்கும். நமது சுகாதாரத்துறை கண்களில் இவையெல்லாம் படவில்லையா? அல்லது இவர்கள் வீட்டில் தண்ணீர் கேன் வாங்குவதே இல்லையா? UV treatment செய்யப்பட்ட இந்த நீரானது சூரிய வெளிச்சம் படுமானால் விஷத் தன்மை உடையதாக நிச்சயம் மாறும். தெரிந்தே தான் வாட்டர் கம்பனிகளும் இப்படி ஏற்றிச் செல்ல அனுமதிக்கிறார்கள். நாமும் வாங்கி "எனக்கு கேன் வாட்டர் தான் ஒத்துக்கும்" என்று விஷத்தைக் குடிக்கிறோம் என்பதை உணராமல் பீற்றிக் கொள்கிறோம் கேன் வாட்டர் குடித்து யாருக்காவது ஏதேனும் விபரீதம் சம்பவித்தாலன்றி நமது சுகாதாரத்துறை சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக் கொள்ள மாட்டார்கள். ஆடும் வரை ஆட்டம்...ஆயிரத்தில் நாட்டம்   10:53:51 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
13
2018
எக்ஸ்குளுசிவ் பள்ளி கல்வித் துறையில் மாற்றம் அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
ஆசிரிய பணி என்பதே தொண்டு சார்ந்த பணிதான். "செல்லுமிடத்து சினம் காக்க" என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஈகோ வருவது என்பதே கூடாது. நான் படித்த போது இருந்த ஆசிரியர்களை போல உயர்ந்த மனிதர்களை இப்போது எங்குமே பார்க்க முடியவில்லை. ஆசிரியரிடம் ஒருவித விநயத்துடன் மாணவர்கள் பழகிய காலம்போய், இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்ளும் காலமாக இருப்பதை பார்க்கும் போது மனது வலிக்கத்தான் செய்கிறது. மாணவர்கள் இதற்கு பொறுப்பாக முடியாது. ஆசிரிகள் தான் தங்கள் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய தலைமுறை மாணவர்களின் அறிவுக்கு அடுத்த கட்டத்தில் ஆசிரியர்கள் அறிவுக்கூர்மையுடன் இருக்க வேண்டும். பாடத்துடன் பன்பையும் சொல்லிக் கொடுக்கும் வகையில் ஆசிரியர்கள் ஒரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்பது எனது ஆதங்கம்.   17:24:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
12
2018
எக்ஸ்குளுசிவ் பிற மாநிலத்தவருக்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு
வரவேற்கத் தக்க முடிவு. மக்களுக்கு எப்படியாவது நல்லது நடக்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே என்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும்.   12:03:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
13
2018
பொது குரங்கணி தீவிபத்து கவர்னர் நேரில் ஆறுதல்
பதவியை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றும் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் அவர்களையும், அண்டை மாநிலமான புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் திருமதி. கிரண்பேடி அவர்களையும் அரசியல், மதம் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு மனிதரும் பாராட்ட வேண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து இவர்கள் செயல்பாடுகளில் அரசியல் சாயம் பூச வேண்டாம் சகோதரர்களே. இவர்களுடைய வயதிற்கும், அனுபவத்திற்கும் தயவு செய்து மதிப்பளியுங்கள்.   11:55:29 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

மார்ச்
12
2018
பொது சிறுவர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை
தான் வாழும் சமூகம் மேல் அக்கறை கொண்ட ஒரு மனிதாபிமானியின் [நீதியரசரின்] மிக அருமையான தீர்ப்பு   11:43:21 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
12
2018
சம்பவம் குரங்கணி காட்டுத் தீ 9 பேர் பலி
கட்டுப்படாத இளம் உள்ளங்கள்... கட்டுப்படாத பேரார்வம் கொண்ட பெற்றோர்கள்... இவர்களை குறிவைத்து கட்டுப்படாமல் புதிது புதிதாக உருவாகின்ற கிளப்கள்...இளைஞர்களுக்கு எது சாகசம் என்ற தெளிவு ஏற்படாதவரை, இதுபோன்ற இழப்புகள் தவிர்க்க முடியாததுதான்...குறிப்பாக மாணவிகளை அனுப்பிய அவர்களின் பெற்றோர்கள் எந்த துணிச்சலில் இக் காரியம் செய்ய அனுமதித்தார்கள்? தங்களின் பெண் சாகசம் புரிய வேண்டும் என்ற இவர்களின் தணியாத பேராசைக்கும், முறையாக அனுமதி பெற்றுத்தான் மலையேற்றம் அழைத்துச் செல்கிறார்களா என்பதைக்கூட ஆராய்ந்து தெளியாத இப்படிப்பட்ட பெற்றோர்கள் சம்பவம் நிகழ்ந்த பின் அரசாங்கத்தை குறை கூறுவதும் சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பதும்... கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகளையே நினைவு படுத்துகிறது "தொட்டபின் பாம்பு என்றும் சுட்டபின் நெருப்பு என்றும் பட்டபின் உணர்வதே நம் பழக்கமென்றானபின்பு கெட்டவன் அழுகைதானே கெடுவதை நிறுத்த வேண்டும்: பட்டபின் தெளிதல் தானே பட்டினத்தார்கள் வாழ்வு"   15:10:40 IST
Rate this:
22 members
0 members
28 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X