ஸ்ரீநிவாஸ் வெங்கட் : கருத்துக்கள் ( 36 )
ஸ்ரீநிவாஸ்  வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
17
2020
உலகம் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்த பிரேசில்
கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக காவல்துறையிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். எத்தனை பெரிய போராட்டம் என்றாலும் ஒர் இரு காவலர்கள் தான் வருவார்கள். அவர் போராட்டம் நடத்துவர்களிடம் காலில் விழா குறையாக கெஞ்சுவார்கள். போராட்டம் நடத்துபவர்கள் இவனுக கெஞ்சுறாங்களே, என்று முதல்வர் நேரில் தான் கலைவோம் என்று வீராப்பு காட்டுவார்கள். இன்னோருபுறம், அடித்து அள்ளிப் போட்டு செல்ல அதிக எண்ணிக்கையில் காவலர்கள், வாகன ஏற்பாடுகள் நடந்து கொண்டே இருக்கும்.இது எதுவும் கொள்கை கோமாளிகளுக்கு தெரியாது. காவல்துறையும் ஒரு பக்கம் கெஞ்சி கொண்டே மற்றொரு பக்கம் எல்லா நடவடிக்கைகளையும் முடித்துவிடும். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து அரசாங்க வாய்மொழி உத்தரவு கிடைத்ததும், போலீசின் போக்கே மாறி, சார்ஜ் என்ற ஒற்றை ஒலியில் அனைத்து போராட்ட காரர்களையும் கலைத்து கிடைத்த இளிச்சவாயர்களை அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். கரோனாவும் இப்படித்தான். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், மருத்துவசதியை பெருக்க வேண்டும். குறைந்தது மக்கள் தொகையில் 20 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்று அரசு யோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து கண்டு பிடிப்பது ஒரு நீண்ட செயல்திட்டம் என்றாலும், அதை தவிர்த்து மற்ற ஏற்பாடுளை செய்ய வேண்டும். அதற்கு ரோட்டரி, லையன்ஸ் போன்ற சங்கங்கள் உதவியை நாடலாம். இந்த ஏற்பாடு முடிந்ததும் அனைத்து தடைகளையும் திறந்து விட வேண்டும். அப்போது கரோனா தாக்குதல் உச்சத்திற்கு செல்லும். அதை சமாளிக்க வேண்டும். அப்போது தான் குறிப்பிட்ட காலத்திற்குள் கரோனாவை கட்டுப்படுத்த முடியும். இல்லாதவிட்டால் ஊரடங்கு ஊரே அடிங்கி விடும் வரை நீட்டித்துக் கொண்டே செல்ல வேண்டியது தான்.   13:52:08 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
6
2020
அரசியல் வீட்டின் முன் கூடி முழக்கமிடுங்கள்ஸ்டாலின் அழைப்பு
திமுக பிரமுகர்கள் மது உற்பத்தி தொழிற்சாலைகள் வைத்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை நீண்ட காலமாக இருக்கிறது. அது உண்மை என்றால் அவர்களை உற்பத்தி செய்ய வேண்டாம் என்று கூறலாம். அவர்கள் இந்த தொழிற்சாலையை நடத்தி தான் சாப்பிட வேண்டிய நிலையில் இல்லை. திமுக பிரமுகர்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றால், நேராக சென்று அந்த தொழிற்சாலை வாயில் முன்பாக சமூக இடைவெளியுடன் மாஸ் அணிந்து உற்பத்தியை நிறுத்த சொல்லி போராடலாம். அதை விடுத்து தெருவில் நின்று கத்த சொல்வது கேலி கூத்து. உங்கள் கட்டளையை மது பிரியர்கள் மதிக்கமாட்டார்கள். மது அருந்தாதவர்கள் நின்று கத்தியும் பலன் இல்லை. இதில் நீங்கள் எதிர்பார்க்கம் விளம்பரத்தை தவிர்த்து வேறு எதுவும் கிடைக்காது. அப்புறம் மோடி விளக்கு ஏற்றவும், கைதட்டவும் சொன்ன போது திமுகவினர் செய்த விமர்சனம் அனைத்தும் இதற்கும் பொருந்தும். அவற்றை ஸ்டாலின் சார் தேடி படித்து பார்க்கவும்.   08:18:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
2
2020
பொது கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை விரிவான வழிமுறை
.பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்சார்பு அவசியம். மருத்துவத்துறை அதில் முக்கியமானது. அறுவை சிகிச்சை தேவைப்படுவதை தவிர்த்து இதர மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவமுறைகளை அறிமுகம் செய்யலாம். அதற்கு தரமான மருந்துகள், மருத்துவமனைகள் உருவாக்க அரசு முன்வர வேண்டும். அலோபதி மருத்துவத்திற்கு அரசு செய்யும் முதலீட்டில் 3ல் ஒரு பங்கு செலவு செய்தாலே, பாரம்பரிய முறைகள் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும். கடந்த சில ஆண்டுளில் தமிழகத்தில் 9 மருத்துவ கல்லுாரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதில் எத்தனை பாரம்பரிய மருத்துவக் கல்லுாரி என்று பார்ததாலே நாம் அவற்றை எந்த அளவிற்கு மதிக்கிறோம் என்பது தெரியும். இந்த முறையை மாற்ற அரசு முன்வர வேண்டும்.   07:58:37 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூன்
1
2020
உலகம் அமெரிக்கா வன்முறை குழியில் பதுங்கினார் டொனால்டு டிரம்ப்
ஜாதி, மத, இனவாத பிரச்சனைகள் உலகம் முழுவதும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது இந்த விவகாரத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் வித்தியாசம் இல்லை என்பதை இந்த போராட்டம் வெளிக் கொண்டு வந்துள்ளது. மோதிக் கொள்பவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.   19:57:04 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூன்
1
2020
கோர்ட் இ -பேப்பர் சேனல்களை நீக்க டெலிகிராம் நிறுவனத்திற்கு கெடு
வெல்லம் தின்றது ஒருவன் விரல் சூப்பியவன் ஒருவன் என்பது போல், சினிமா, புத்தகங்கள் எப்போதுமே காப்புரிமை மீறல்களை சந்தித்தே வந்து இருக்கிறது. ஆங்கில புத்தகங்களின் போலிகளின் விலை உண்மை வெளியீட்டை விட மிக மிக குறைவு. போலிதான் வாசகர்கள் விரல்களில் தவழும். இப்போது இணைய வெளி அதிகரித்ததும் இ-பேப்பர் வலம் வருவது அதிகரித்து உள்ளது. டெலிகிராப் மட்டும் அல்லாமல் வாட்ஸ் அப் குரூப்களில் கூட சிலர் இது போல பரவ விடுகிறார்கள். எழுத்தாளர்களின் ஒரே வருமானம் நுால் விற்பனை என்ற நிலையில் பிடிஎப் முறையில் அதை உலாவிடுவது, அநியாயம். நீதிமன்றம் இந்த ஒரு வழக்கில் மட்டும் தீர்ப்பு அளிக்காமல், இது போன்ற நடைமுறை அனைத்தையும் தடை செய்ய உத்தரவிட வேண்டும்.   19:51:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
16
2018
சிறப்பு கட்டுரைகள் முன்னேற்றப் பாதையில் முன்னேறுவோம்!
இந்த கட்டுரையில் 13 நாட்களில் ஜெயலலிதா பிடிவாதத்தால் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது என்று உள்ளது. இது தவறு. 13 மாதம் என்று இருக்க வேண்டும். அதுதான் சரி. 13 நாள் பாஜ ஆட்சியை ஆதரிக்க யாரும் இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தோற்றது.   08:24:44 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
14
2018
சம்பவம் கடற்கரையில், கண்ணாமூச்சி ரே ரே... கணவனுக்கு, ஸ்கெட்ச் போட்ட மனைவி கைது
சுப்ரீம் கோர்ட் கள்ளக்காதல் தவறில்லை என்று தீர்ப்பு அளித்த பிறகு, பத்திரிக்கைகள் , மற்றும் ஊடகங்கள்'கள்ளக்காதல்' என்ற வார்த்தையை பயன்படுத்துவது என்ன நியாயம். அதற்கு பதிலாக இந்த செய்தி கணவனை, கொல்ல முயற்சி, மனைவியின் நண்பர் கைது என்று தான் இருக்க வேண்டும்.   11:24:09 IST
Rate this:
2 members
0 members
11 members

அக்டோபர்
19
2018
சம்பவம் காத்திருக்கும் 2 பெண்கள் பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்று வருகின்றனர். அதில் இந்து பெண்கள், அவர்கள் இடதுசாரி சிந்தனை, நாத்திக சிந்தனை கொண்டவர்களாக இருந்தால் கூட அவர்கள் எண்ணம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்கள் இந்த போராட்டத்தில் குதிப்பது என்பது முழுமையான அரசியல். இதை அந்த மதத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் தனிப்பட்ட முறையில் மாற்று மத நம்பிக்கைகளை கடைபிடிக்கும் போது அவர்களை ஜமாத் நீக்குகிறது. அது போன்ற நடவடிக்கைகயில் தற்போது ஈடுபட்டால்தான், அனைத்து மதத்தினரும் சமம் என்பது உண்மையாகும். ஜமாத் செய்ய முன்வர வேண்டும். இந்துக்கள் விவகாரத்தை இந்துக்கள் பார்த்துக் கொள்ளட்டும் பிளீஸ்.   11:19:25 IST
Rate this:
0 members
0 members
27 members

அக்டோபர்
13
2018
கோர்ட் அனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது
சபரி மலை விவகாரத்தில் தான் ஒரு தீர்ப்பளி்த்தால் அது நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் என்று நம்பும் சுப்ரீ்ம் கோர்ட் சைவ உணவு விவகாரத்தில் வேறமாதிரி பேசுவது வேடிக்கை. அந்த வழக்கு இந்துக்கள் மட்டும் தொடர்புடையது, மற்றது கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களையும் பாதிக்கும் என்பதாலோ கோர்ட்மவுனத்தை தீர்ப்பாக்கிவிட்டது.   13:26:27 IST
Rate this:
9 members
0 members
15 members

அக்டோபர்
7
2018
அரசியல் மூக்குடைப்பு! காங்கிரசுக்கு பாடம் புகட்டியது சமாஜ்வாதி
திருமணத்திற்கு வரும் போது மிகவும் பொறுமையாக வருவார்கள், தாலிகட்டி முடியும் வரை பல்லைக்கடித்தக் கொண்டு அமர்ந்து இருப்பார்கள். அது முடிந்ததும் மண்டத்தில் சாப்பாடு போட கதவு கூட திறந்து இருக்கமாட்டார்கள், போய்நின்று விடுவார்கள். அது போலதான் எதிர்கட்சிகள், இதுவரை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றியவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ஓடிவிட்டார்கள். இது தான் காங்.பாஜ பலம், பலவீனம்.   06:58:35 IST
Rate this:
0 members
0 members
52 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X