சச்சின் பைலட்டை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம். அல்லது அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் போன்ற பதவியில் நியமித்துவிட்டு, ஜெயலலிதா பின்னணியில் வாழ்ந்தது போல சோனியா குடும்பத்தினர் அரசியல் செய்யலாம்.
25-செப்-2021 09:17:25 IST
அனிதாவிற்கு வழங்கிய உதவியில் கால்வாசியாவது இந்த சிறுவனுக்கு திமுக அரசு தருமா? அரசியல் வாதிகள் நேரில் சென்று ஆறுதல் சொல்வார்களா? இதையெல்லாம் செய்யாவிட்டால் சரியான எதிர்கட்சியான திமுகவை இழந்து விட்டோமே என்ற எண்ணம் ஒவ்வொருதமிழன் மனதிலும் ஏற்படும்.
12-செப்-2021 13:55:35 IST
அரசுக்கு எதிராக கிளம்பும் தீவிரவாத குழுக்களிடம் இது தான் பிரச்னை. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் ஒற்றுமை காட்டும் இந்த குழுக்கள், தாங்கள் தான் ஆள வேண்டும் என்பதில் வேறு பட்டு நிற்கின்றன. இது சரியாக எப்படியும் ஓராண்டு ஆகலாம்.
17-ஆக-2021 17:32:03 IST
பாடநுால்கழகத் தலைவராக லியோனியை நியமனம் செய்பவர்கள் ஏனோ கட்சியில் இருப்பவர்களில் சிறந்தவர்களை தானே நியமனம் செய்வார்கள் என்று சிந்திப்பதில்லை. கட்சியில் இருப்பவர்களிலில் கல்வி பணியாற்றும் வகையில் சிறந்த தகுதி கொண்டவர் லியோனி என்பதை மறுப்பதற்கு இல்லை.
10-ஜூலை-2021 18:30:34 IST
கொங்கு நாடு என்று பிரிப்பது திமுகவிற்கு பாதகத்தை ஏற்படுத்துவதை விட சாதகமாகத்தான் இருக்கும். இப்போது அந்த பகுதியில் திமுக வலுவற்ற நிலையில் இருக்கிறது. அதே நேரத்தில் கொங்குநாடு என்று எந்த கோரிக்கையும் எழாத நிலையில் தனியாக பிரிக்கும் வேளையில் இறங்குவது மத்திய அரசு மீது கெட்ட பெயரை ஏற்படுத்தும். அதே நேரத்தில் டாக்டர் ராமதாஸ் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கும் வட மாவட்டங்களை பிரித்து தனி யூனியன் பிரதேசமாக மாற்றலாம்.
மத்திய அரசு யோசிப்பது நல்லது.
10-ஜூலை-2021 18:25:30 IST
நாங்கள் பிச்சைக்கார்கள் அல்ல, எங்கள் தகுதிக்கு குறைவான இலவசங்கள் வேண்டாம் என்று வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் முடிவு செய்து செயல்படுத்தினால்,. பிச்சைக்கார்கள் உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது.அரசு இது போன்ற தெளிவை ஏற்படுத்த வேண்டும். மோடி காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்றதும் கோடிக்கணக்கானவர்கள் விட்டுக் கொடுத்ததும் இந்தியாவில் தான் நடந்தது.
03-ஜூலை-2021 20:09:53 IST
மே 2ம் தேதிக்கு பிறகு விடியல் பிறந்தால் எப்படி கரோனா பாதிப்பு இருக்கும் அந்த அரசு எப்படி கரோனாவை கையாளும் என்பது எம்எல்ஏ ஜெ. அன்பழகன் சம்பவத்தில் இருந்தே நன்கு விளங்கும்.
25-ஏப்-2021 16:40:48 IST
புதிய கல்விக் கொள்கை வந்த போதே தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. அதில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் பங்கு அதிகம். அதன்படிபார்த்தால் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று தான் நினைக்க தோன்றுகிறது. மே 2ம் தேதி 11.05க்கு பிறகு ஏற்படும் விடியல் தனி வழியாகத்தான் இருக்கும் என்கிற போது புதிய கல்விக் கொள்கை தமிழில் வந்தால் என்ன வராவிட்டால் என்ன.
25-ஏப்-2021 16:26:54 IST
நல்ல கருத்தை கமல் சொன்னால் கூட அதையும் புரிந்து கொள்ள முடியாமல் விமர்சனம் செய்கிறோம். பேசுபவன் உளறுவதால் மட்டும் கருத்து புரியாமல் இருக்காது. கேட்பவன் கூட முட்டாளாக இருக்கலாம்.
25-ஏப்-2021 11:06:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.