Dhar G S : கருத்துக்கள் ( 67 )
Dhar G S
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2019
அரசியல் உண்மை நிச்சயம் வெளியில் வரும் கார்த்தி
நிச்சயமாக உண்மை வெளியில் வரத்தான் போகிறது. மக்களும் பார்க்கத்தான் போகிறார்கள். படிக்காதவன் தடயத்தை விட்டு விட்டு திருடுவார்கள். படித்த மேதாவிகள் தடயத்தை விடாமல் திருடுவார்கள். ஆனால் கடவுள் ஒருவன் இருக்கின்றான். அவன் என்றும் நம்மை பார்க்கின்றான். நெருப்பு இல்லாமல் புகையாது. ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸ் திரு குருமூர்த்தி அவர்கள் மேலே மானநஷ்ட வழக்கு போடாத போதே உங்கள் குடும்பத்தின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. நீங்கள் சட்டம் நன்றாக படித்துவிட்டு கொள்ளை அடிக்கிறீர்கள். ஆண்டவனுக்கு இந்திய சட்டம் தெரியாது. அவன் சட்டமே தனி.   22:45:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
5
2019
கோர்ட் ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி
ப.சி, கே.சி, ந.சி தப்பிக்க ஒரு வழி உண்டு. அவர்கள் மன சாட்சிக்கு கட்டுப்பட்டு கொள்ளை அடித்த எல்லா பணத்தையும் வட்டியுடன் அனாதை ஆசிரமங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்துவிட்டு நீதி மன்றத்தில் மன்னிப்பு கோரினால் எந்த வழக்கிலிருந்து ஒரு வேளைதப்பிக்கலாம்.   12:12:10 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2019
கோர்ட் சிதம்பரத்தை கைது செய்ய செப்., 5 வரை தடை நீட்டிப்பு
தடையைத்தான் நீடிக்க முடியும். குற்றம் செய்தவரை மன்னிக்கமுடியுமா. புலனாய்வுத்துறை சொல்வதெல்லாம் உண்மை இல்லை என்றாலும் சிறிதளவாவது உண்மை இல்லாமலா போகிவிடும். \இத்துணை நாளில் அவர்கள் எல்லாவற்றையும் சரிசெய்ய நேரம் நிறைய இருந்தது. ஆனாலும் எல்லா தடயத்தையும் ஒருவராலும் அழிக்கமுடியாது. \குற்றம் செய்தவன் தண்டனை அனுபவித்துத்துதான் ஆகவேண்டும். இவரைப்போல் எவ்வளவு பேர்கள் உள்ளார்களோ. எல்லாம் படித்த சட்டம் இயற்றுபவர்கள் குற்றம் செய்தால் சாதாரண மனிதர்களுக்கு கொடுக்கும் தண்டனையைப்போல் பத்து மடங்கு தண்டனை வழங்கவேண்டும். பல லட்சம் கோடிகளை கையாளும் இந்த அரசியல் வாதிகளுக்கு தான் எவ்வளவு முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்கள். \குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த குற்றத்தில் ஈடுபட்ட வரை தவிர அவருக்காக வாதாடியவர்களுக்கும் சேர்த்து தண்டனை வழங்கவேண்டும். அவர்கள் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும். பொது சொத்து குலநாசம் என்ற சொல் உண்டு. அதற்கு தகுந்தபடி நீதிமன்றம் இந்த வழக்கை சீக்கிரமாக விசாரித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்.   01:46:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2019
கோர்ட் சிதம்பரம் கைது தடை மேலும் நீட்டிப்பு
ப.சி. தமிழ் வல்லுநர். ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுதும் திருக்குறளை உதாரணம் காட்டி பேசுவார். அவருக்கு மனு நீதி சோழன் வரலாறு நன்கு தெரியும் என்று நினைக்கிறன். தன மகன் தேரோட்டி ஒரு பசு கன்றுவை கொன்றதற்கு தன மகனுக்கே தண்டனை கொடுத்த உத்தமர் வாழ்ந்த தமிழ் நாட்டிலிருந்து சென்று, தன மகன் சொத்தை குவிப்பதற்கு நாட்டிலேயே மிக உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு உதவி செய்தது எந்த வகையில் நியாயம். ப.சி. சட்டம் இயற்றுபவர். மக்கள் சட்டத்தின்படி நடப்பவர்கள். வேலியே பயிரை மேய்ந்தாற்போல் அவர் செய்த காரியங்கள் தமிழ் நாட்டிற்கு மிக்வும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.ஐ, இ.டி போன்ற அமைப்புகளை அவர் நிர்வகித்தார். அவர் மீது உள்ள குற்றங்கள் நிரூபணமானால் தமிழ் நாட்டிற்கு நேர்ந்த அவமானம் நீங்க பல பல ஆண்டுகள் ஆகும். நேர்மையான மனிதர் என்று நம்பிய மனிதர் இன்று தினமும் நீதிமன்றத்தில் ஏறி இறங்கும் போது மனது வேதனை அடைகிறது. அவர்கள் மூதாதையர்கள் சேர்த்துவைத்த புகழையும் பெருமையையும் முற்றும் அழித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். ரூபாய் ஆயிரம் இரண்டாயிரம் வாங்கிய அரசு ஊழியர்களுக்கு பல ஆண்டுகள் தண்டனை கொடுக்கும் போது இதை மாதிரி மனிதர்களுக்கு என்ன தண்டனை சரியானது என்று தெரியவில்லை. எல்லா சட்ட திட்டங்களையும் நன்கு அறிந்து, அரசு அணிகளையும் அறிந்து பிடி படாத வகையில் செய்த குற்றங்களுக்கு மிக மிக அதிகபட்ச தண்டனை கொடுத்தால்தான் இனி வரும் அரசியல் வாதிகளுக்கு தவறு செய்யும் போது மிகவும் அச்சமாக இருக்கும்.   00:10:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
29
2018
பொது ஆதார் சர்ச்சைகளுக்கு டிராய் தலைவர் பகிரங்க சவால்
ஆதார் எண்இல்லாமலே இந்தியாவில் இந்த விபரங்கள் மிக சுலபமாக கிடைக்கும் போது ஆதார் எண் எதற்கு?   13:12:28 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
26
2018
பொது சொத்து பறிமுதல் மசோதா நிறைவேற்றம்
பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். திருடுபன் கொஞ்சம் ஜாக்கிரதையாக திருடுவான். இந்தியாவில் சொத்துக்கள் வைத்துக்கொள்ளமாட்டான். எழுபது வருடங்களாக சுரண்டல் பேர்வழிகள் செய்யாததை மோடி செய்துள்ளார். புத்தி சாலிகள் எல்லோரும் வெளிநாட்டில் எல்லாவற்றையும் கொண்டு சென்று விட்டார்கள்.   09:49:03 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

ஜூலை
25
2018
உலகம் சிறை செல்வதை தவிர்க்க மல்லையா புதிய திட்டம்
எவ்வளவு பணம் இருந்தாலும் சொந்த பிறந்த மண்ணில் இறப்பதற்கு கொடுத்து வைக்க வில்லை என்றால் அவன் பிறந்தும் சம்பாதித்ததும் உபயோகமில்லை. ஒருவன் ஏழையாக பிறந்தாலும் சொந்த மண்ணில் உயிர் துறந்தால் அவன் உயர் பதவியை அடைந்தவன் ஆகிறான். இது மக்களுக்கு எங்கே புரியப்போகிறது. இந்த மண்ணில் ஏமாற்றி அடுத்த நாட்டில் ஓடிப்போய் இறப்பவன் ஒரு அனாதை. அவன் வாழந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.   12:54:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
19
2018
அரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா? நிபுணர்கள் கேள்வி
காலம் தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும். பொறுத்து இருந்து பார்க்கலாம்.   11:49:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
11
2018
அரசியல் வருமான வரியை ஒழிக்க வேண்டும் சுப்ரமணியன் சாமி
மத்திய தரை கடல் நாடுகளான துபாய் மற்றும் பல்வேறு நாடுகளில் வரி இல்லாமல் இருந்தது. இப்போது அங்கேயும் மெதுவாக வரிவிதிப்பு முறை உருவாகிக் கொண்டு இருக்கிறது, வருமான வரி என்பது நாட்டின் வருவாய்க்கு மிகவும் முக்கியம். ஆனால் அரசாங்கத்திற்கு மூத்த குடிமகன் மீதும் அக்கறை வேண்டும். அவர்களின் நலனை காப்பது மிகவும் முக்கியம். ஆதலால் முதலில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு பிறகு படிப்படியாக மற்றவர்களுக்கும் வரிச்சுமையை இறக்கினால் நன்றாக இருக்கும்.   12:26:47 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
24
2018
கோர்ட் முன் ஜாமின் எஸ்.வி.சேகர் மனு
எஸ் வி சேகர் நான் படிக்காமல் முகநூலில் பகிர்ந்தேன் என்று சொல்வது நம்பமுடியாமல் இருக்கிறது. அவர் தவறு செய்திருக்கிறார். அதனால் ஒரு பெண்ணின் மானமும் மரியாதையும் பறிபோய் இருக்கிறது.இது மன்னிக்கமுடியாத குற்றம். அதற்குரிய தண்டனையை அனுபவித்து ஆகவேண்டும்.அப்போதுதான் அவரும் மற்றவர்களும் முகநூல் போன்ற வலைத்தளங்களில் செய்திகளை பகிரும் முன் நன்கு படித்து பார்த்து செய்வார்கள். இதை நீதிபதி கருத்தில் கொள்வார் என்று நம்புகிறோம்.   09:56:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X