ஆசிரியரை ஏன் மாற்றவேண்டும்? மதத்தை இழிவு படுத்தும் எந்த அரசு பணியாளராயிருந்தாலும் உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் பயம் வரும்.
21-அக்-2021 11:03:43 IST
பேசாமல் திமுக அரசு கேட்பதை போல நீட் தேர்வே இல்லாமல் செய்து விட்டால் உங்களை போன்ற எதிர்ப்பு அரசியல் வாதிகளுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்குமோ? ஆனால் தரமான மருத்துவர்கள் கிடைக்க மாட்டார்களே? எப்படியும் இந்தியாவும், அதன் மக்களும், மாணவர்களும் முன்னேறவே கூடாது என்று நினைக்கும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை
இந்தியாவிற்கு விமோசனமே கிடையாது.
07-செப்-2021 12:25:17 IST
திரைஅரங்குகளை, பார்களை, டாஸ்மாக் கடைகளை, பீச், ஹெல்த் சென்டர்களை, திறந்துள்ளீர்கள். கிருத்தவ தேவாலயங்களின் விழாக்களுக்கும் ஊர்வலங்களுக்கும் அனுமதி அளித்துள்ளீர்கள். மேலும், வரும் 20ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து கட்சிகளின் கூட்டணியுடன் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளீர்களே அப்போது கொரோனா பரவாதா? விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகளை வைத்தால், கோவில்களுக்கு சென்றால், ஊர்வலம் சென்று நீர் நிலைகளில் கரைத்தால் கொரோனா பரவிவிடுமோ? ஏன் இப்படி இந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்கிறீர்கள்?
06-செப்-2021 19:01:47 IST
கஜானா காலியாகிவிட்டது என்று கூறும் திமுக கடந்த 1987-ம் ஆண்டு நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிசூட்டில் பலியான 21 பேரின் நினைவாக, விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம்
,அயோத்திதாச பண்டிதரின் 175-வது ஆண்டு விழாவையொட்டி அவருக்கு வடசென்னையில் மணிமண்டபம் ஆகியவற்றை மக்களின் வரிப்பணத்திலிருந்து கட்டாமல், தங்களின் சொந்த கட்சி நிதியிலிருந்து ஏன் கட்டக்கூடாது?
03-செப்-2021 12:56:06 IST
பொதுத்துறை சொத்துகளை ஊழலால் கொள்ளையடித்தது காங்கிரஸ். 'தோழர்' என்ற பெயரில் சுரண்டியது கம்யூனிஸ்டுகள். இந்தியாவின் வளர்ச்சியை தடுத்த இரு கட்சிகளுமே தேச விரோத, தொழிலாளர் விரோத கட்சிகளே.
02-செப்-2021 19:05:38 IST
பொதுத்துறை சொத்துகளை ஊழலால் கொள்ளையடித்தது காங்கிரஸ். 'தோழர்' என்ற பெயரில் சுரண்டியது கம்யூனிஸ்டுகள். இந்தியாவின் வளர்ச்சியை தடுத்த இரு கட்சிகளுமே தேச விரோத, தொழிலாளர் விரோத கட்சிகளே.
02-செப்-2021 19:05:38 IST
ரயில்வே துறை, நாட்டின் முக்கியமான துறை என்றும், அதில் தனியார் பங்கேற்பை அனுமதிக்கக் கூடாது என்றும் சிதம்பரம் எழுதியுள்ளார். புதுடில்லி ரயில் நிலையத்தை புனரமைக்க, 2008-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தகுதிகாண் அழைப்பு விடுத்தபோது அவர், தன் எதிர்ப்பைத் தெரிவிக்காதது ஏன்? காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக அப்போது எதிர்ப்பு தெரிவிக்க வில்லையே?
02-செப்-2021 19:03:35 IST
தேசியப் பணமாக்கல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு சொத்தும், விற்பனை செய்யப்படாது என்பது தான் உண்மை. பொது நலனைப் பாதுகாக்கும் விதமாக, வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற ஏலம் வாயிலாக அவை, தனியார் பங்குதாரர்களுக்கு குத்தகைக்குத்தான் விடப்பட உள்ளது.அனைத்து நடவடிக்கைகளும், நாட்டின் சட்டத்தையும், நீதிமன்றங்களையும் திருப்திபடுத்துவதாக இருக்கும். தனியார் பங்குதாரர், அந்த சொத்துக்களைப் பயன்படுத்தி, பராமரித்து, குத்தகை கால முடிவில் அரசிடம் திரும்ப ஒப்படைத்து விடுவார். துரதிருஷ்டவசமாக, 2 ஜி, நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு, காமன்வெல்த் மற்றும் ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு போன்றவை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகால பணமாக்கல் நடவடிக்கைகளை, மாறுபட்ட விதத்தில் நினைவுபடுத்துவதாக உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், சிதம்பரம் நிதியமைச்சராகவும், இதுபோன்ற முடிவுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய அமைச்சசர்கள் குழுவின் தலைவராகவும் இருந்தபோது தான், டில்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டன.
02-செப்-2021 18:58:04 IST
பாராளுமன்ற மற்றும் மாநிலங்களின் லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில் வேண்டுமென்றே தகறாரு செய்யும், சபைகளை முடக்கும் அனைத்து எதிர் கட்சிகள், மற்றும் ஆளும் கட்சிகளின் தினசரி படிகளை சம்பளத்துடன் முடக்கினால் தான் சபைகள் ஒழுங்காக நடைபெறும். மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தது சபை கூடும் நாட்களில் பிரச்னை ஏற்படுத்தவா? அல்லது அவர்கள் தொகுதிகளின் பிரச்னைகளை தீர்க்கவா?
13-ஆக-2021 18:40:24 IST
ஆடி கிருத்திகை, ஆடி வெள்ளி ஆடி செவ்வாய்களில் கோவில்களில் அனுமதி மறுத்த திமுக அரசு, வரும் ஆகஸ்ட் 29முதல் செப்டம்பர் 8வரை நடைபெறும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்களே? அதற்கு என்ன கட்டுப்பாடுகள் விதிப்பார்களா? அல்லது தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக அனுமதி
அளிப்பார்களா?
06-ஆக-2021 11:42:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.