நம் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த, விளையாட்டு வீராங்கனைகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவனுக்காக வக்காலத்துவாங்கும் நினைத்தால் கேவலமாக இருக்கிறது...
பெண்கள் என்றால் போகப்பொருள் என்பது மட்டும்தான் இவர்களது என்னமோ என எண்ணத்தோன்றுகிறது...அந்த கயவனை பதவியைவிட்டு தூக்கி கைது செய்யுங்கள் என்று இங்கே ஒருவராவது பதிவு செய்திருக்கிறார்களா???
தான் சார்ந்த கட்சிக்காக எத்தனை பெண்களை அவமானப்படுத்துகிறார்கள்? ஒருவராவது எனது கட்சியே ஆனாலும் இது தவறு என்று கூறுகிறார்களா??? இவர்கள் இப்படித்தான் இவர்களை புரிந்துகொள்ள இதெல்லாம் ஒரு வாய்ப்பு..... நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டால், பழங்குடியினர் தீவிரவாதிகள்...,விவசாயிகள் தீவிரவாதிகள்..., விளையாட்டு வீரர்கள் தீவிரவாதிகள்..., எதிர்க்கட்சிகள் தீவிரவாதிகள்.., கேள்விகேட்கும் பத்திரிக்கை மற்றும் ஊடவியலாளர்கள் தீவிரவாதிகள்...சரி யார்தாண்டா நல்லவர்கள்? இத்தனை அநியாயங்களையும் செய்துகொண்டிருக்கும் நீங்களா???
உங்களுக்கு நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்...
31-மே-2023 16:14:17 IST
ஒரு கட்டிடத்தால் எழுச்சி வந்துவிடாது...வெளிப்படையான ஆட்சியில் தெரியவேண்டும் எழுச்சி. மதநல்லிணக்கம், வேலைவாய்ப்பு,விலைவாசி, தொழில்துறை வளர்ச்சி, சிறு குறு தொழில் வளர்ச்சி, விவசாயம், அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம்,பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துதல் (விற்பனை செய்வது அல்ல) மாநில சுயாட்சி,பல்வேறு தேசிய இனங்கள் உள்ள நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை கடைபிடிப்பது, ஒன்றை தேவையில்லாதவர்கள் மேல் திணிப்பது போன்றவைகளை பரிசீலித்து ஆட்சி செய்யும்போது அதில் வெளிப்படவேண்டும் எழுச்சி..அதுவே உலகம் வியந்து பார்க்கும் எழுச்சியாக இருக்கும்...
28-மே-2023 19:29:27 IST
குஜராத், உபியில் மட்டும்தான் கருத்தேடுப்பு நடத்தினார்களா??? கருத்தெடுப்பு நடத்திய நிறுவனங்கள் எப்படிப்பட்டது என்று நாடே அறியும்...சரிசரி இத நெனச்சு கொஞ்சம் மனச தேத்திக்குங்க...
27-மே-2023 19:18:39 IST
மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பும் இல்லை... ஒரே எதிர்பார்ப்பு, விலைவாசி குறையவேண்டும் நாடும், நாட்டு மக்களும் வெறுப்பும் பகைமையும் இல்லாமல் நிம்மதியாக வாழவேண்டும்...
27-மே-2023 16:39:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.