Parameswaran Rajeswaran : கருத்துக்கள் ( 5 )
Parameswaran Rajeswaran
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
27
2020
சிறப்பு கட்டுரைகள் என்று தணியும் இந்த பிராமண துவேஷம்?
என்று தணியும் இந்த பிராமண துவேஷம்? மாற்றம் செய்த நாள்: ஜூன் 30 - (29-06-2020) கிட்டத்தட்ட இந்த கட்டுரையாளர் வாழ்வின் அனுபவங்களைப் பெற்றவன் நான் என்றாலும், அவரின் மன நிலையில்தான் நானும் உள்ளேன் என்றாலும், ஒரு சில கருத்துகளில் அவருடன் வேறுபடுகிறேன் என்பதால், இத்தொடரில் நானும் ஒரு 'பங்காளி' யாக இருக்க விரும்பி, என் கணிப்புப் பங்கைச் சமர்ப்பிக்கிறேன், வாசகர்களின் பார்வைக்காக. கட்டுரையின் இறுதியில் அவர எழுதியது: <<பிராமணர் மீதான காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்ச்சியையும், இன்னும் எத்தனை காலம் தான் காட்டி, புண்படுத்துவர் என்று தெரியவில்லை. எந்த காரணமும் இன்றி, இன்னும் புண்படுத்திக் கொண்டேயிருக்கிறோமே என்றும் அவர்களுக்கு உறுத்துவதும் இல்லை.இதையெல்லாம் காணும் போது, இந்த, 70 வயது கிழவனுக்கும், 'என்று தணியும் இந்த பிராமண துவேஷம்...' என்று தான் வேதனை எழுகிறது>> இந்த வேதனை எனக்கும் உள்ளது. இந்த நிலை இன்று நிலவ யாரெல்லாம் காரணம் என அலசியதில், முதற்காரணம் பிராமணர்களே என்பதுதான் என் ஆய்வின் / கணிப்பின் முடிவு. எந்த ஒரு பிரச்சினை வந்தாலும், அது உண்டானதில் நம் பங்கு என்ன, அதைத் தீர்த்து வைக்க நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டு அதன்படி நம் பங்கைச் செவ்வனே செய்வதே சிறந்த வழி என்று நான் கருதுகிறேன். இதற்கும் அந்த வழியே சிறந்தது. 1. இந்த நிலை ஏற்பட பிராமணர்கள் என்ன பங்களித்தார்கள்? 2. இதனை சரிப்படுத்த, இப்போது பிராமணர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் என் விடைகள் இதோ: <<தங்களை எப்போதும், உயர் ஜாதி என்று, பிராமணர்கள் சொல்லிக் கொள்வ தில்லை ஆனால், அவ்வாறு சிலரால், அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.>> 'வெளியே சொல்லிகொள்வதில்லை' என்று அவர் எழுதியிருந்தால், நான் மனமார ஒப்புக் கொண்டிருப்பேன். தமிழக பிராமணர்கள் எவ்வளவோ பரவாயில்லைதான். வெளியே அபூர்வமாகவும், தங்களுக்குள்ளே எப்போதாவதும் சொல்லிக் கொள்வார்கள். மற்ற -குறிப்பாக வடமாநிலங்களில் உள்ள -பிராமணர்கள் வெளியே எப்போதாவதும், தங்களுக்குள் மிக அதிகமாகவும் சொல்லிக் கொள்வார்கள். இது என் கணிப்பு. சுமார் 4000 வருடங்களாக, ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காலத்தில் இருந்தே, தம்மை உயர்ந்தவர்களாகவும், அவர்கள் வருகைக்குமுன் இங்கிருந்த அனைத்து தரப்பு மக்களையும் சற்றே + மிகவும் மட்டமாகவும் கருதியும் நடத்தியும் வந்தார்கள். இந்தப் பின்னணி உண்மையல்ல என வாதம் செய்வோருக்கு, நான் தனியாக ஒரு கட்டுரை எழுதி விளக்குகிறேன். அவர்களின் ஆதிக்கம் வட மேற்கு எல்லையில் ஆரம்பித்து, வட இந்தியா முழுவதும் பரவி, தென் பகுதிகளையும் ஆளுமை கொள்ள 2000 ஆண்டுகள் ஆயின. சரியாகச் சொல்லப் போனால், தமிழகப் பகுதிகளில் அவர்கள் ஆளுமை பரவவும் முழு ஆளுமை கொள்ளவும் இன்னும் 600-700 ஆண்டுகள்.ஆயின. 2600-2700 ஆண்டுகள். இந்த காலகட்டத்தில், ஆரியர்கள் என்று முதலில் அறியப்பட்டாலும், நாட்கள் செல்லச் செல்ல, ஆரியச் சந்ததியினர் எனும் பெயரில் அதிக 'ஆரிய'த்தன்மை கொண்டவர்களாக பிராமணர்கள், அதனை அடுத்து சற்று ஆரியக் கலப்புக் குறைவாக சத்திரியர்கள், அதற்கும் சற்றுக் குறைவாக வைசியர்கள் என வர்ணப் பிரிவு நடந்தேறி விட்டது வட சமுதாயத்தில். அந்தக் கலப்பு இல்லாதவர்கள் அனைவரும் கீழ் வர்ணத்தினர். அதுவே இங்கும் பரவ ஆரம்பித்தது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த மூன்று - ஏன், நான்கு - வர்ணங்களிலும், பல தரப்பட்ட நிலைகளில், தொழில்களில் உள்ளவர்களிடையே உள்ள வாழ்நிலை வேறுபாடுகளை வைத்து, அங்கும் மேல்-கீழ் என தட்டுகள் அமைக்கப்பட்டன. இதில் 'தமக்கு மேல் நிலை வேண்டும்' என்று ஒவ்வொரு தரப்பும் வேண்டி விரும்பி அதனை “ஏற்று”க் கொள்ள பிராமணர்களின் அங்கீகாரத்தையே நாடினார்கள் என்பதும் பிராமணர்களின் ஒப்புதலோடுதான் அவர்களின் “தட்டு” நிலைபெறப் பெற்றது என்பதும் மறுக்கப்பட இயலாத உண்மை. சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் கூட அதே நிலைதான். (ராமாயணம் எழுதிய வால்மிகியும், பின்னர் வந்த நம் சுவாமி விவேகானந்தரும் சார்ந்த 'காயஸ்தர்” எனும் ஒரு சாரார், தம்மை உயர்சாதி என அங்கீகரிக்கவேண்டும் (பிராமணர்கள் மறுத்ததால்) என ஆங்கிலேயர்கள் காலத்தில் வழக்குத் தொடர்ந்து, பல ஆண்டுகள் கழித்து 'அவர்களை உயர்சாதி' அன்று ஒரு ஆங்கிலேய நீதிபதி அங்கீகரிக்கும் அவலம் எல்லாம் இந்த நாட்டில் நடந்தேறின) அந்தக் காலகட்டங்களில் இருந்து, உயர் சாதி, கீழ்சாதி என்பதெல்லாம் நிலைபெற்று, நம் சமுதாயமே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டது. அதாவது, கி மு 200க்கு முன் இருந்த சமுதாயத்தோடு ஒப்பிடுகையில். முக்கியமாக கி மு 187வில் மௌரிய சக்கரவர்த்தியான அசோகனின் பேரன் பிருஹுதத்தனை, அவனின் படைத் தளபதியாக இருந்த பிராமணர் புஷ்யமித்திர சுங்கர், அவனை படைகளின் எதிரிலேயே ரதத்தை ஏற்றிக் கொன்று () சக்கரவர்த்தியாக தம்மை நிறுவிக்கொண்டதில் தொடங்கி, கி பி 600 வரைக்குமான கால கட்டத்தில், பிராமணர்களே தம்மை சமுதாயத்தின் மிக உயர் தட்டில் வைத்துக் கொண்டனர். யாகம், பூசை, இறை வழிபாடு, அனைத்துக் குடும்பச் சடங்குகள், அரசின் அனைத்து நிகழ்ச்சிகள் என ஒவ்வொன்றிலும், பிராமணர் தலைமை இல்லாமல் செய்ய முடியாது - கூடாது - எனும் நடைமுறையை வெற்றிகரமாக அமல்படுத்தினர். வைதிக மதத்தினை எதிர்த்துக் கிளம்பிய மற்ற அனைத்து மதங்களும் ஒடுக்கப்பட்டன. இந்த நடைமுறைதான் இன்றளவும் அவர்களை சமுதாயத்தின் மேல் தட்டில் வைத்தது - அவர்களே இப்போதெல்லாம் அப்படி சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும். முதல் இடம்தான் சமுதாயத்தில் திட்டவட்டமாக உறுதி செய்யப் பட்டுவிட்டதே, இனிமேல் நாமே எதற்கு தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டும்? அதற்குத்தான் ஒரு கூட்டத்தையே தயார் செய்துவிட்டோமே இந்த காலகட்டம்தான் சம்ஸ்கிருத்த்தின் 'பொற்காலம்' எனவும் வர்ணிக்கப் படுகின்றது. (குறிப்பாக கி பி100 - 600). யாரும் அவர்களை மேலே கொண்டு நிறுத்தவில்லை. அவர்களே தங்களை அப்படி நிறுத்திக் கொண்டார்கள். எதிர்த்தவர்களை, தமக்கு இசைந்து போனவர்களின் உதவியுடம் ஒழித்துக் கட்டினார்கள். பௌத்த மதம், ஜைன மதம் ஒடுக்கப்பட்டன. ஜைன மதம் வைணவத்துடன் சற்று உறவாடித் தன்னை முழுதும் அழியாமல் காத்துக் கொண்டது - சில இடங்களில். பௌத்தம் வைதீக மதத்தை எதிர்த்து, கிட்டத்தட்ட அழிந்தே போனது. இந்த நீண்ட கால சமுதாய மாற்றம், பாதிப்புகள்தாம் இன்றளவும் கீழ் சாதியினர் என்றும், அதற்கும் கீழாக பஞ்சமர் என்றும் மிகக் கொடுமையாக, மனிதர்களை மனிதர்களாகவே நடத்தப்படாத ஒரு சமுதாயம் உருவானது. 1500 ஆண்டுகளாக இன்னல் ஒன்றையே சந்தித்து வந்ததனர் அந்த கீழ்தட்டு . இந்திய மக்கள் தொகையில் பாதி இவர்களே இருக்கின்றனர். 1000 ஆண்டுகளுக்கு முன்னர், அதே வடமேற்கு எல்லை வழியாக, இஸ்லாமியர்கள் வந்தனர். அப்போது தொடங்கி, சுமார் 800ஆண்டுகள் அவர்கள் ஆளுமை செலுத்தினாலும், நன்றாக நிலைபெற்றுவிட்ட வைதிக மதத்தை பெரிதளவில் அசைத்துப் பார்க்க முடியவில்லை. இந்தப் பெரிய நாட்டை ஆள, இங்கு அவர்கள் வரும்போது சமுதாயத்தில் உயர்நிலையில் இருந்த பிராமணர்களின் உதவி அவர்களுக்குத் தேவைப் பட்டது. அதனால், தம் நிலைக்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டார்கள் பிராமணர்கள். அடிபட்ட்து பெரும்பாலும் சத்திரியர்கள்தாம். சில கோவில்கள் சூறையாடப்பட்டன, சில பிராமணர்கள் அழிக்க / வதைக்கப் பட்டார்கள். ஆனாலும், பெருமளவு பிராமணர்கள் தங்களைக் காத்துக் கொண்டார்கள். அதன்பின் வந்த ஆங்கிலேயர் ஆட்சியிலும், பிராமணர்கள் தயவு இல்லாமல் ஆளமுடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், ஒரு பக்கம் அவர்களுக்கு எதிராக மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரைத் தூண்டிவிட்டுக் கொண்டே, மறுபக்கம், தம்மோடு இயைந்துபோகும் உயர் சாதியினரை வைத்துதான் ஆட்சியை நடத்தினார்கள். இங்குதான் ஒரு பெரிய சமுதாய மாற்றம் நிகழ்த்துவங்கியது. 19ம், 20ம் நூற்றாண்டுகளில், ஆங்கிலேயரின் ஆளுமையின்போது, இங்கிலாந்தும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் கல்வி பயிலச் சென்ற இந்திய உயர்சாதிப் பிள்ளைகள், அங்கு நிலவிய சமுதாய சமநிலைப் படிமங்களைப் பார்த்து (ஏழை - பணக்காரன் படிமம் இருந்தது), ஏன் இந்தியாவில் மட்டும் இவ்வளவு கீழ்த்தரமாக மற்ற மக்க்களை நம் உயர்சாதியினர் நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பி, பல சமுதாய சீர்திருத்தங்களுக்கு அடி கோலினார்கள். அப்போது ஏற்பட்ட பல சமுதாய சிந்தனை மாற்றங்களின் விளைவுதான் இன்று (இந்த கட்டுரையாளர்கள் இருவரும்) 'தங்களை உயர் சாதி' என எண்ணாமல் இருப்பதன் காரணம். மேலும், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திலேயே அழுத்தம் திருத்தமாக சாதிப் பிரிவு பேசக்கூடாது என வந்துவிட்ட்தால், பேச நினைக்கும் கொஞ்சநஞ்சம் பேரும் பேசுவதில்லை. நூற்றுக்கு நூறு மனதளவிலும்கூட, தம்மை 'உயர்ந்தவர்' என நினக்காத பிராமணர்கள் + மற்ற உயர்சாதியினர் குறைவு இதில் பிராமணர்களை விட மற்ற உயர்சாதியினர் + பிற்படுத்தப்பட்ட சாதிகளிலேயே உட்பிரிவில் உயர்வு-தாழ்வு எண்ணுவோர் என பலரும் இன்னமும் சாதி வன்மங்களை உயிர்ப்புடன் வைத்துள்ளார்கள். ஆக, 1500 ஆண்டுக்கால கொடுமைகளின் விளைவுகளை அனுபவிப்போர், இன்று 'பழையதை மறந்து விடுங்கள்” என்று மற்றவர்கள் சொல்லக் கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்., “ஆமாம், அன்று எங்கள் மூதாதையர் அப்படி உங்களை நடத்தியது உண்மைதான், அது பெரும் தவறுதான்” என மனம் விட்டுச் சொல்ல ஒவ்வொரு உயர்சாதி மனிதரும் முன்வந்தாலே ஒழிய, இந்தப் பிரச்சினை சுலபமாகத் தீர்ந்துவிடாது. அப்படிச் சொன்னாலாவது தீர வாய்ப்புண்டு. அதற்கும் மேலாக, 'இனி இந்த நாட்டில் ஒரு நாளும் நாங்களும் எம் சந்ததியினரும் உயர்வு+தாழ்வு நினைக்கவோ நடந்துகொள்ளவோ மாட்டோம்” என உறுதிமொழி அளிக்காதவரை, நடைமுறைப் படுத்தாதவரை, இந்த அவலங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். கர்மா வலியது என்று வைதீக மதம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. முன்வினைப் பயன் என்போம் தமிழில். எந்த ஒரு சுவடும் இல்லாமல் அதன் பாதிப்புகளை ஒட்டு மொத்தமாக நம் சமுதாயம் என்று களையுமோ, அன்றுதான் நம் எல்லோருக்கும் நல்ல காலம் பிறக்கும். காத்துக் கொண்டிருக்கிறேன். - ப. ராஜேஸ்வரன் கேபரோனெ, போட்ஸ்வானா, தெற்கு ஆப்பிரிக்கா. பூர்வீகம் - புதுவை. - அ பே: +267 71675675 - rajeswaran53@gmail.com   02:06:57 IST
Rate this:
0 members
1 members
10 members

ஏப்ரல்
22
2020
சினிமா தஞ்சை பெரிய கோவில் கருத்து - ஜோதிகாவுக்கு குவியும் கண்டனம்...
அவர் கூறியதில் என்னால் தவறொன்றும் காண இயலவில்லை. அவர் அந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு உண்டியலில் காசு போடுவதைப் பார்த்திருக்கிறார். அங்கு போடுவதை மருத்துவ நிலையங்களுக்கு போட்டு உதவலாமே எங்கிறார். அதில் எதற்கு ஸ்ர்ச்சுகளையும் மசூதிகளையும் இழுக்க வேண்டும்? தஞ்சை பெரிய கோவில் இருப்பதை அவர் குறை சொல்லவில்லை அதற்கு பணம் போடுவதற்கு பதில் மருத்துவத்துக்குப் போடுங்களேன் எங்கிறார். எந்த மத வழிபாட்டுத் தலங்களுக்கும் கொடுப்பதை விட முன்னுரிமை மருத்துவத் தலங்களுக்குக் கொடுங்கள்.   01:24:03 IST
Rate this:
59 members
0 members
9 members

ஏப்ரல்
8
2020
பொது இளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை
muRRilumm thavaRu. முற்றிலும் தவறு. உலகில் 90 % இறைச்சி உண்பவர்கள். அத்தனை பேருமா வைரஸ் பரவ காரணம்? இந்தியாவில்தான் குறைவு - சுமார் 65-70%. சதித் திட்டங்கள் பற்றிய இரு தரப்பு வாதங்களையும் கேட்டால் (அமெரிக்கா, சீனா), மிருகங்களிடமிருந்துதான் பரவியது என்ற கோட்பாடே மாறிவிடும் நிலையில், இவர் சொல்வது ஏற்புடையதல்ல.   01:13:49 IST
Rate this:
8 members
0 members
6 members

அக்டோபர்
29
2018
சினிமா சர்கார் கதையை வெளிப்படையாக சொன்ன பாக்யராஜ்: படக்குழு அதிர்ச்சி...
பாக்கியராஜ் பற்றி நமக்கெல்லாம் நன்கு தெரியும். முருகதாஸ்தான் 'என் ஸ்கிரிப்டைப்' படிக்காமல் எப்படி கருத்து சொல்லலாம்? என்று கேட்டாரே, அதற்குத்தான், பதில் கூறும் விதமாக, 'பார், உன் ஸ்கிரிப்டைப் படித்தேன் என்பதற்கு ஆதாரம்,' என்று கதையையே சொல்லி விட்டார் அவரைப் பொய் மாட்டவைக்க முடியுமா? தான் மேற்கொண்டுள்ள பதவிக்கு நேர்மையாக பனி செய்து விட்டார். இனி, நீதி மன்றம் போகலாம், உண்மை கதாசிரியர் முருகதாஸ் இனி, மனதுக்குள்ளேயே, 'மரூக' தாஸ்   00:27:11 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
4
2018
சினிமா டுவிட்டர் நிர்வாகத்தை கிண்டலடித்த அமிதாப் பச்சன்...
உங்கள் பின் தொடர்வோர் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள், அமிதாப் சார்   00:15:16 IST
Rate this:
2 members
1 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X