இளைய சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை. அத்துடன் மாற்றம் விரும்பும் அனைவரும் தவறியும் திமுகவுக்கு ஓட்டு போட நினைக்கக் கூடாது. அதிமுக பல நெருக்கடிகளுடன் நல்ல ஆட்சியைத் தான் நடத்துகிறது. பழனிச்சாமியின் கரத்தை வலுப்படுத்தினால் சிறந்த ஆட்சி கிடைக்கும். நல்லதை நினைப்போம். நன்மை அடைவோம்.
26-ஜன-2021 08:04:20 IST
வேல் கொடுத்தவர் ஒரு காவி வேஷ்டியும் கட்டிவிட்டிருந்தார் என்றால் போட்ட வேஷத்துக்கு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். பாவம் ஸ்டாலின். முதல்வர் கனவில் எப்படி யெல்லாம் தகிடு தத்தம் செய்கிறார். எல்லாம் இறைவன் விட்ட வழி.தெய்வம் நின்று கொல்லும்.தெய்வத்தால் ஆகாது எனினும் மெய் வருத்த கூலி தரும்.
25-ஜன-2021 06:14:28 IST
ராகுல் சீன் போடுவதை தேவைக்கு அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறது. வயதானவர்களுடன் சாப்பிடுவது, கூட்டத்தில் கொக்கரிப்பது எல்லாம் அரசியல்வாதிகள் செய்யும் சம்பிரதாயமாகி விட்ட இந்த டிராமாக்கள் புளித்துப் போய் விட்டது. சரியான தொண்டர்களை ஊக்குவித்து கோஷ்டி அட்டகாசத்திற்கு முடிவு கட்ட உருப்படியான வேலையை செய்தால் அழிந்து கொண்டிருக்கும் கட்சிக்கு உயிர் தண்ணீர் விட்டது போல் இருக்கும்.
15-ஜன-2021 07:17:17 IST
திராணி இருந்தால் சவாலுக்கு சவால் விடலாம். வழக்கம் போல் அறிக்கை மூலம் பதுங்கும் இந்த செயலும் உதயநிதியின் கீழ்த்தரமான பேச்சுகளும் கருணாநிதிக்கு தான் களங்கம். போகிற போக்கை பார்த்தால் இன்னும் 20 வருஷத்தில் காங்கிரஸ் கட்சி போல் காணாமல் போகுமோ என்று தோன்றுகிறது.
08-ஜன-2021 05:04:38 IST
அதிகாரிகள் ஆயிரம், லட்சம் என்று லஞ்சம் வாங்கி சேர்த்து கோடி கோடியாக மந்திரிகளுக்கு கொடுக்கிறார்கள். இப்படி செய்யாத அதிகாரிகள் மாட்டிக் கொள்கிறார்கள். இதில் அடி மட்ட அதிகாரிகள் வாழ்வு பலமாக பாதிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பணபலத்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து மீண்டும் லஞ்ச வேட்டையை தீவிரமாக செய்கிறார்கள். மந்திரிகள் எப்படிப்பட்ட ஊழல் செய்தாலும் அப்பட்டமாக சட்டம் தண்டித்தாலும் பல வருடங்கள் இழுக்கடிக்கப்பட்டு சொகுசு வாழ்வுக்கு பங்கம் வராமல் வழக்கையும் முடித்து கொள்ளையடித்ததை பத்திரப்படுத்திக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். லஞ்சம் ஒழிய கட்சி நடத்துபவர்களும் கட்சி தலைவர்களும் நேர்மையாக செயல்பட்டால் லஞ்சம் வாங்குவது குறையும்.கமல்ஹாசன் கட்சியும் அப்படி வெளிப்படைத் தன்மையோடு கட்சிக்கு நிதி திரட்டி அரசியல் பேசினால் லஞ்சம் வாங்குவது குறையும். குதர்க்கம் பேசாமல் செய்வாரா ?
05-ஜன-2021 06:48:43 IST
எவ்வளவு சொத்து இருந்தாலும், உயர்ந்தாலும் சரியான கணக்கு காட்டினால் போதும். அந்த அளவுக்கு நேர்மையாக இருந்தால் போதும். நியாயமே !இதுவரை சொத்து குவித்த அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் என்ன தண்டனையானாலும் அவர்கள் வாழ்வு நிலை பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. வாய்ச் சவடால் பேசியே மீண்டும் அதே பாணியில் மேலும் மேலும் வருமானத்தை பெருக்கிக் கொள்கிறார்கள், சட்டம் தன் கடமையை செய்த பின்பும். வாழ்க வளமுடன். நிதிஷ் குடும்ப சொத்து மற்ற சுருட்டல் மன்னர்களை ஒப்பிடும் போது வெரும் கொசுருதான். மீண்டும் வாழ்க வளமுடன்.
02-ஜன-2021 06:51:26 IST
கமல் சில படங்களில் கோமாளியாக நடித்து மக்களிடம் நல்ல வசூல் செய்து வந்துள்ளார். அதே பாணியில் அரசியலும் செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். பாவம். அரசியல் சாக்கடையில் ஊறிய திராவிட கட்சிகளிடம் ஜம்பம் எடுபடுமா ? கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் நினைவுக்கு வருகிறது. அர்ச்சகர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எப்படியெல்லாம் தங்களை தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள். பரிதாபமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
31-டிச-2020 06:25:21 IST
நீங்கள், குறிப்பாக கருணாநிதியின் வழிகாட்டுதலின்படிதான் எல்லா ஊழல்களும் விஞ்ஞான ரீதியில் அமோகமாக நடக்கிறது. இதில் நீ என்ன, நான் என்ன - எல்லாம் ஒரே ஊழல் குட்டையில் ஊறி திளைத்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
27-டிச-2020 07:45:54 IST
அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் அதிமுக அரசு ஏன் கணினிமயம் ஆக்காமல் சுணங்கி இருக்கிறது. சுருட்டல் வியாபாரம் தொய்வடைந்து விடும் என்று தானே. திமுகவை மிஞ்சும் அளவுக்கு அமைதியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
27-டிச-2020 07:34:07 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.