P.S.Balajrishnan : கருத்துக்கள் ( 232 )
P.S.Balajrishnan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2021
அரசியல் சொந்த கட்சிக்கு சூனியம் வைக்கிறார் அண்ணாமலை
திமுக எப்படிப்பட்ட கட்சி என்ற இந்த அம்மையார் விளக்கம் அளித்தது ஒரு விஷயமே அல்ல. நயினார் நாகேந்திரனை தேர்ந்த எடுத்த வாக்காளர்கள் எல்லோருக்கும் மறைந்த பிரதமர் வாஜ்பாயையும் தெரியும்: இன்றைய பிரதமர் மோடியையும் தெரியும். திமுக தலைவர்களுக்கு இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் பழக்கம் இதுவரை இருந்ததா ? புழக்கடை்கடை வழியாக இந்து கோவில்களுக்கு செல்லும் திமுக தலைவர்கள் இப்போது தானே இலைமறை காய் மறையாக வாசல் வழியாக செல்லுகிறார்கள். மேலும் இந்திய கிருத்துவர்கள் அனைவரும் பாதிரியார்கள் உள்பட இந்திய இந்து மதத்தில் இருந்து கிருத்துவ மதம் மாறியவர்கள் என்று உலக கிருஸ்தவ இனத்துக்கே தெரியும். விளம்பரத்துக்கு அறிக்கை விடும் கைக் கூலித் தலைவர் தானே நீங்களும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். இயேசு அருள் புரிவார். சூன்யம் வைக்கத்தெரிந்தால் பாஜக தலைவருக்கும் வையுங்கள். அதற்கும் ஊதியம் கிடைக்கும். அவர் நல்ல பண்புகள் நிறைந்தவர்.   08:57:41 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டச் சொன்ன இயேசு நாதரைப் பற்றி பேச வேண்டிய பாதிரிமார்கள் எங்கே ? காலைக் கழுவிய வேசிக்கு மோட்சம் கொடுத்த இயேசு நாதரை இந்த பாதிரியாருக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா ? நான் படித்த கிருத்துவ பள்ளி பாதிரியார்களை இன்றும் மிக மரியாதையுடன் நினைவு கொள்கிறேன்.பாவம் இயேசு நாதர். அவர் புகழ் பரப்பும் வேலையைச் செய்ய மனிதர்களா இவர்கள் ?   07:33:03 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
14
2021
பொது "நல்லா இருக்கிற நாட்டை ஏன் பிரிக்கிறீங்க..." நடிகர் வடிவேலு
நல்லா இருக்கிற நாடும் நம் மாநில மக்கள் அனைவரும் நல்லா இருக்கனும்னு தான் பிரிக்க சொல்றாங்க. வடிவேல் பிழைக்க வந்த இடம் நல்லா இருக்கிற மாதிரி பொறந்து வளர்ந்த ( சிங்கி அடித்துக் கொண்டு திரிந்த) ஊரும் நல்லா இருக்கனும்னு நெனைச்சு தான் பிரிக்க சொல்றாங்க. அரசியல்வாதிங்க கொள்ளையடித்தது போக மீதம் விட்டு வைக்கரதை சீரா எல்லா தமிழ் நாட்டு மாவட்ட மக்களுக்கும் போய் ஒழுங்கா சேர இது தான் ஒரே வழி. இது காலத்தின் கட்டாயம்.   14:00:44 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜூலை
13
2021
அரசியல் இது உங்கள் இடம் கல்வி துறைக்கு திண்டுக்கல் பூட்டு!
லியோனி மீது ஒரு தவறும் இல்லை. ஸ்டாலின் அவருக்கு - அவர் அறிவுக்கு தகுதியுள்ள நல்ல மனிதனை தமிழ்நாட்டில் தேடி கண்டுபிடித்து போட்டிருக்கிறார். அவருடைய தேர்வு திறனை வெகுவாக பாராட்டத்தான் வேண்டும்.   09:18:58 IST
Rate this:
6 members
0 members
42 members

ஜூலை
10
2021
பொது தனி மாநிலம் ஆகிறதா கொங்கு நாடு டுவிட்டரில் டிரெண்டிங்
கொங்கு நாடும் வேண்டும். பாண்டிய நாடும் வேண்டும். மூன்று மாநிலங்களாக பிரித்தாலும் சரி. மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரித்தாலும் சரி. மூன்று ஒன்றியங்களாக பிரித்தாலும் சரி. எதுவானாலும் சரி. வளர்ச்சி தான் முக்கியம். வெற்றிக் களிப்பில் வெறி ஆட்டம் ஆடாமல் ஒழுங்காக வளர்ச்சி பணியில் பாகுபாடின்றி செயல் பட்டிருந்தால் இப்படி ஒரு அவல நிலை வந்திருக்குமா ? வாழ்க முத்தமிழ் நாடு.ஜெய் ஹிந்த்.   18:33:00 IST
Rate this:
9 members
0 members
20 members

ஜூலை
9
2021
அரசியல் கேந்திர வித்யாலயாவில் சமஸ்கிருதம் வைகோவுக்கு பா.ஜ., பதிலடி
எவ்வளவு தரமற்ற விஷயமானாலும் செய்தி வெளியிட்டு விவாத கருத்தாக்கி மக்களை குழப்பி சுயநல ஆதாயம் தேடும் அரசியல்வாதி தான் இந்த வைகோ. மத்திய அரசின் மதிப்புமிக்க அரசியல்வாதியாக திகழ்ந்தவர் இப்படி திமுக வின் ஒன்றிய மனிதனாகி உருமாறி காணாமல் போகிறார். கலி முற்றிவிட்டதை கண்கூடாக பார்க்க முடிகிறது.   06:54:18 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
8
2021
அரசியல் வரி வசூல் மிரட்டலால் அரசு இயங்குகிறது ராகுல்
மிரட்டியோ உருட்டியோ எப்படியோ முடிந்ததை செய்கிறார்கள். நீங்கள் ஏதாவது செய்து மிச்சம் மீதி இருக்கும் உங்கள் கட்சி தப்பிக்க வழி செய்யுங்களேன்.   16:57:09 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூலை
5
2021
அரசியல் நம் மாநிலத்தில் தான் எல்லாவற்றிலும் அரசியல்...
புதிய அரசில் பொறுப்பேற்று அணில் பாலாஜி அவர்கள் மின் துறையில் பிரபலமானார். இப்போது வேளாண் துறை அமைச்சர் தன் பங்கிற்கு நெல்லை வைத்து அரசியல் செய்து நெல் பன்னீர் செல்வம் ஆக ஆசைப் படுகிறார் போலும்.பொறுப்புடன் தவறு நடந்ததை திருத்தி விவசாயிகளுக்கு நல்ல நெல்லை விரைந்து கொடுத்து உற்பத்தியை பெருக்க முனைந்தால் நல்லது. முந்தைய முதலமைச்சர் விவசாயியாக இல்லை விவசாயிபோல் வேஷம் போட்டு விளம்பரம் தேடினாரா என்பது எல்லாம் இப்போது விவாதம் செய்தார் வேண்டுமா ?   09:25:37 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
4
2021
முக்கிய செய்திகள் போலீசை கண்டால் திருடன் தான் பயப்படுவான்! சினிமா சட்ட எதிர்ப்பாளர்களை உரிக்கும் எஸ்.வி.சேகர்
ஒருசில நல்ல படங்களை தயாரித்தும், நடித்தும் ரசிகர்களிடையே நல்ல பெயர் எடுத்து விட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பலவிதமாக பொதுமக்களை கற்பனை செய்து கொண்டு பணத்திமிரில் ஆட்டம் போடுகின்றனர். பொதுமக்களை பொறுத்தவரை சினிமா ஒரு பொழுது போக்கு அம்சம் தான். பெரும்பாலான சினிமா துறையினருக்கு சினிமா தான் ஆதாரம். ரசிகர்கள் ஆதரவு பெறுவதால் ரசிகர்கள் எல்லாம் இவர்கள் அடிமைகள் அல்ல. தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் சமுதாய நலனில் உண்மை அக்கறையுடன் நடந்து கொண்டால் நல்லது.   07:29:31 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
2
2021
பொது சகிப்புத்தன்மை இல்லையா? சர்ச்சை பேச்சுக்கு சமாளிப்பு!
பசப்பல் விளக்கம். ஆரம்பத்திலேயே ஒரு சில அமைச்சர்கள் அரசியல் அனுபவம் உள்ள காரணத்தால் கொஞ்சம் அதிகமாகவே தேவையில்லாமல் மக்களை சீண்டுகிறார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு சிலர் உலக ஞானம் படைத்தவர்களாக கற்பனை செய்து கொண்டும் படித்து விட்டோம் என்று கற்பனை செய்து கொண்டும் ஆணவத்தில் ஆட்டம் போடுகிறார்கள். முதல்வர் தொண்டர்களுக்கு தான் கட்டுப்பாடுகளை விதிப்பாரா ? அமைச்சர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படவும் அடக்கி வாசிக்கவும் சொல்லி கொடுக்க வேண்டும்.   07:37:59 IST
Rate this:
1 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X