P.S.Balajrishnan : கருத்துக்கள் ( 268 )
P.S.Balajrishnan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
27
2021
பொது அதிகாரிகளோடு நானும் களத்தில் நிற்கிறேன், நிற்பேன் முதல்வர் ஸ்டாலின்
அதிகாரிகளும், பணியாளர்களும் கலத்தில் இறங்கி கடும் பணியாற்றுவார்கள். முதலமைச்சர் ஓடிவந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு அறிக்கை விடுவார். மற்ற அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் கிடைத்தவரை லாபம் என்று நிவாரணம் வழங்குமிடத்தில் கூத்தடிப்பார்கள். இதுவும் விடியல் ஆட்சியின் மற்றுமொரு கட்சி.   06:47:28 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
28
2021
பொது அமைச்சர் சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆறு மாதம் அமைச்சரின் வேலையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளராக தேர்வு செய்த குழுமத்தின் திறமையை உலகம் பாராட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம் வாங்கப் போகிறது. இதுபோன்ற அமைப்புக்கள் தான் மக்கள் சேவையை ஊக்குவிக்கும் ஊற்றுக் கண்கள். சுகாதார செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களை நினைத்து பார்க்க யாரும் இல்லை. ஏனென்றால் அவர் அரசாங்க ஊழியர். சம்பளத்திற்கு வேலை செய்பவர். கொரோனா கட்டுப்பட்டு விட்ட காரணத்தினால் மீண்டும் அவரை ஒரு மூலையில் உட்கார உத்தரவு போட்டு விடலாம். விடியல் ஆட்சி கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இல்லை.   06:24:39 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
25
2021
பொது இது உங்கள் இடம் இதற்கு பெயர் தான் விடியலா!
சந்தனமரம் கடத்தல், செம்மரக் கடத்தல் கும்பல்களும், மணல் திருடர்களும் மிக மோசமான திருடர்கள். மணல் திருட்டை பகிரங்கமாக பொது உடமை ஆக்கி ஆட்சியை பிடித்தவர்கள் தான் இந்த திமுக அரசு. ஏற்கனவே பல கொலையாளிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் அரசு - கருத்து சுதந்திரம் என்று கடவுளை நிந்திக்கும் கும்பலுக்கும், கலைக்கூத்தாடிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் அரசு - இப்படி அரசாங்க அதிகாரிகளை கொலை செய்யும் குற்றவாளிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.   07:04:41 IST
Rate this:
3 members
0 members
10 members

நவம்பர்
24
2021
அரசியல் அரசியல் பேசாமல் அரசியல் பேச வைத்த முதல்வர் ஸ்டாலின்!
மிகப் பெரிய உலக மகா சாதனை செய்து விட்டார். இதை காலங்கடந்து பதிவிடுவதன் ரகசியம் என்ன ?ஏதாவது உளரிக் கொட்டி இன்னும் கேவலப் பட வேண்டாம் என்று இருக்கலாம். திட்டங்களை ஆரம்பிக்குமுன்பே ஊழல் வதந்தி வருவது இவருடைய ஆளுமையில் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.   10:40:24 IST
Rate this:
12 members
0 members
14 members

நவம்பர்
20
2021
பொது இது உங்கள் இடம் ஓட்டு எனும் விதை!
யாரைக் குறை கூறி என்ன லாபம் ?ஓட்டுப் போட்டு உட்கார வைத்து விட்டோம். இன்னும் நான்கு வருடம் இப்படித் தான் பேசுவார்கள். ஏதாவது சொன்னால் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும். மீடியாக்கள் ஜால்ரா அடிக்கும். எல்லாம் புது விதமான விடியல் தான். இதையே சாதனைகள் என்று விளம்பரப் படுத்தி இன்னும் 500 வாக்குறுதிகளை சேர்த்து அள்ளி வீசி மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். ஜனநாயகம் வாழ்க.   08:26:41 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
16
2021
அரசியல் இது உங்கள் இடம் வாழ்த்து கூற தகுதி வேண்டும்!
திரு.எஸ்.ஆர்.ரத்தினம், செங்கல்பட்டு அவர்களின் கட்டுரை நல்ல சம்மட்டி அடி. உணர்வுள்ளவர்கள் வெட்கி வேதனைப்படும் அளவுக்கு மிக அழகாக, முட்டாள்களும் உணரும் வகையில் தெளிவாக வாழ்த்துக் கூறும் தகுதியை சொல்லி இருக்கிறார். ஓட்டுப் போட்டு ஆட்சியில் உட்கார வைத்த இந்துக்கள் கட்டாயம் உணர்வார்கள். வாழ்த்துப் சொல்ல தகுதி இல்லாதவராக இருந்தாலும் பொறுப்பேற்ற பின் தகுதியை உண்டாக்கிக் கொள்ளத் தெரியாதவரை ஆட்சியில் அமர வைத்த வருத்தம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டாயம் உண்டாகும். வாழ்க இந்து கலாச்சாரம்.   10:29:19 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
14
2021
பொது இது உங்கள் இடம் இதெல்லாம் ஒரு பிழைப்பா!
இந்த திராவிடக் கட்சிகள் திருவள்ளுவருக்கு விபூதி பூசக் கூடாது - உத்ராஷ்ட மாலை அணிவிக்கக்கூடாது - காலி வேட்டி அணிவிக்கக்கூடாது என்று ஆரம்பித்தபோதே அவர்களை வாயை மூடும் படி செய்திருக்கவேண்டும். அப்போது அவர்களை அலட்சியமாக விட்டதால் தான் இப்போது திருவள்ளுவரையும் மதமாற்ற புத்தகங்கள் எழுத துணிகிறார்கள்.சட்ட நடவடிக்கை மூலம் அயோக்கியர்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும்.   09:51:58 IST
Rate this:
3 members
0 members
14 members

நவம்பர்
14
2021
அரசியல் பாஜ., குறித்த விமர்சனம் வைகோவுக்கு தகுதி கிடையாது பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
அப்படி போடுங்க அரிவாளை !தன்நிலை உணரும் தன்மை இழந்த வைகோ உளர ஆரம்பித்து விட்டார். அடுத்தவருக்கு தெரியாது என்று சொல்லும் தகுதி வைகோவுக்கு இல்லை. தேசிய அரசியல் செய்து அடங்கி, அசிங்கப்பட்டு கேவலமான நிலையில் மாவட்ட அரசியலுக்கு கூட தகுதியை இழந்த வைகோ, உலக நாடுகளின் நடுவே பாரதத்தின் பெருமைமிக்க தலைவனைப் பெற்ற தேசிய கட்சியின் மாநில தலைவரை பற்றி பேச அரசியல் கைக்கூலியாகி விட்ட வைகோவுக்கு எந்த அருகதையும் கிடையாது.   09:28:06 IST
Rate this:
0 members
0 members
18 members

நவம்பர்
13
2021
பொது உங்கள் புரிதலுக்கு நன்றி சூர்யா
"நாடு முழுதும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது", இந்த வாக்கியத்தில் உண்மை இருக்கிறதா ? உங்கள் அறக்கட்டளையின் குளறுபடிகளை ஊடகங்கள் கிழித்து எடுத்தபோது தானே உன் வேஷம் கலைய ஆரம்பித்தது. பணம் சம்பாதிக்க அவரவர்களுக்கு தெரிந்தமுறையில் திருடன் முதல் கொண்டு அரசியல் வாதிகள் உட்பட அனைத்து கபடதாரிகளும் தங்கள் தவறை ஏதாவது ஒரு விதத்தில் நியாயப்படுத்தி, நீதிமன்றங்களும் மன்னித்து விடுகிறது. அதனால் அவர்கள் உத்தமர்கள் ஆகிவிட முடியுமா ? பித்தலாட்டமும், வன்மமும் கருத்து சுதந்திரமா ? பிழைப்புக்காக பாடுபடும் எளியவர்களை சாதி, மதம் என்று பிரித்து, இழிவு படுத்தி, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆதாயம் தேடிய ஒரு சம்பவத்தை ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் மனம் நோகும் விதத்தில் சினிமா தயாரித்து இப்படி நரித்தனமாக சீண்டி விடும் உன்னை போன்ற நடிகனும் ஒரு மனித ஜன்மமா ? இதுதான் நீ தேடும் பேரன்பா ?இதுதான் நீ தேடும் பேராதரவா ? கூத்தாடிக்கு, கை தட்டும் சத்தம் மட்டுமே பேராதரவாகி விடாது. இதற்கு மேலும் உன் தரத்தை நீயே தாழ்த்திக் கொள்ளாமல், மனசாட்சி என்று ஒன்று இருந்தால் உன்னை திருத்திக் கொள்ள முயற்சி செய்.   06:49:51 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
12
2021
அரசியல் இது உங்கள் இடம் எதிர்ப்பைக் காட்ட நாகரிகமான வழிகள் இருக்கு!
ஒருவன் தவறு செய்தால் அவன் திருத்த சரியான முறையில் புத்தி புகட்ட வேண்டும். குள்ள நரியை கல்லெறிந்து ஒடுக்கமுடியுமா? ஏற்கனவே உள்ள கலங்கத்தை போக்கி சாத்வீக முறையில் நியாயத்தை விளக்கி/உணர்த்தி அனைத்து தரப்பு மக்கள் ஆதரவுடன் கட்சியை வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயம். உணர்ந்து செயல்பட்டால் கட்சி பிழைக்கும். தவறினால் வைகோ மாதிரி, தமிழக காங்கிரஸ் மாதிரி அழிவது நிச்சயம்.   12:04:55 IST
Rate this:
1 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X