ANANDAKANNAN K : கருத்துக்கள் ( 245 )
ANANDAKANNAN K
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
24
2020
அரசியல் வளர்ச்சிக்கு எதிரான கட்சி திமுக ஜேபி நட்டா தாக்கு
உண்மை, திமுக தங்கள் வளர்ச்சிக்கு தான் ஆட்சிக்கு வரணும் னு நினைக்கும் ஒரு போதும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்காது, தொழில் வளர்ச்சி தமிழகத்தில் காமராஜ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டவை அதற்க்கு சான்றாக பல திட்டங்களை சொல்லலாம் 1.தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்,2.காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்[1], சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது. இது போல் திமுக ஆட்சி காலத்தில் ஒன்றை சொல்ல முடியுமா, முடியாது ஏன் என்ற இவர்களின் கொள்கை சுயநலம் மட்டுமே. அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்: பாரத மிகு மின் நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL) இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF) நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை மேட்டூர் காகிதத் தொழிற்சாலை குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.   18:59:11 IST
Rate this:
3 members
0 members
14 members

ஆகஸ்ட்
24
2020
கோர்ட் ரவுடிகளால் தாக்கப்படும் போலீசார் உயர்நீதிமன்றம் வருத்தம்
எதிர் கட்சிகளுக்கு ஓன்று மட்டுமே பிரதானம், சிறுபான்மை மக்கள் அகால மரணம் எய்த வேண்டும், நீட் தேர்வு மரணம் நிகழ வேண்டும், இல்லை என்றால் தூத்துக்குடி ஸ்டெர்லிட் கலவரம் நடக்க வேண்டும், உடனே நம் லெட்டர் பேட் கட்சிகளின் தலைவர்கள் வைகோ,திருமா,சீமான்,திருமுருகன் காந்தி,கமல் ஹாசன்,முத்தரசன்,போன்றவர்கள் படை எடுத்து வருவார்கள் இதுவே கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், தேனீ மாவட்டத்தில் நடந்த அருந்ததி மக்கள் கலவரம்,கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த காவல் ஆய்வாளர் கொலை, தூத்துக்குடியில் நடந்த காவலர் கொலை, சென்னை ரயில் நிலையத்தில் நடந்த ஒரு பெண்ணின் ஆணவ கொலை இது போன்ற கொடூர செயல்கள் இவர்கள் கண்ணில் தென்பட்டது என்றாலும் கூட கண்ணை மூடி விடுவார். இதுவே இவர்களின் கொள்கை, சிறுபான்மை பிணம் என்றால் இவர்களுக்கு சர்க்கரை போல இனிக்கும்.   18:46:02 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
24
2020
அரசியல் நீட் தேர்வை ஒத்திவைக்க ஸ்டாலின் வேண்டுகோள்
எதை எடுத்தாலும் தடை செய்யணும், ஒத்தி வைக்கணும், அப்போ வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை கொரோன வைரஸ் மறையும் வரை தள்ளி வைக்கலாம் தானே ???   18:30:02 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
24
2020
அரசியல் தலைமை பொறுப்பு மாற்றம் காங்., கட்சிக்குள் வெடிக்குது பூகம்பம்
காங்கிரஸ் கட்சியை கலைக்க இதுவே சரியான தருணம், அணைத்து விதமான அரசியல் நிகழ்வுகளும் இந்த கட்சிக்கு எதிராகத்தான் உள்ளது, எதனால் இவர்களின் வாக்கு வாங்கி அரசியல் மற்றும் இவர்களின் ஊழல், அதிகார பசி, வயதான அரசியல், இளைய தலைமுறைக்கு வழிவிடாமல் இருப்பது, எல்லை பிரச்சனையில் மெத்தனம், எதையும் நாளை செய்யலாம் என்ற ஆணவ அலட்சிய போக்கு, காங்கிரஸ் கட்சிக்கு மூடு விழா நடத்த திரு.ராகுல் மட்டும் போதும்.   15:49:38 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
24
2020
பொது திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம் மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
அதானி குழுமத்திற்கு வழங்கினால் இவர்களுக்கு என்ன பிரச்னை, ஏன் இவர்கள் சொல்லும் நிறுவனத்திற்கு வழங்க வில்லையோ, சொப்ன வழக்கை திசை திருப்ப மற்றும் அதை மறைக்க இந்த ஏற்பாடு.   15:38:28 IST
Rate this:
8 members
0 members
9 members

ஆகஸ்ட்
24
2020
சம்பவம் கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்திய கைதி
காசுக்காக மாநில காவல் துறை விலை போய்விட்டது, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற அலட்சிய போக்கு, இந்த துறையின் மந்திரி கூட இது போல் தான் இருப்பார் போல.   15:31:47 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2020
அரசியல் தொழிலாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த போலீசாருக்கு நிவாரணம் முதல்வர்
தயவு செய்து வெளி மாநில கூலி தொழிலார்களை அவர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புங்கள், இவர்கள் இங்கு வந்த காரணத்தால் நம் மாநில தொழிலார்கள் குறைந்த சம்பளத்திற்கும் வேலை இழப்பும் ஏற்படுகின்றது, அது போக குற்ற சம்பவங்கள் மற்றும் போதை பொருள் அதற்க்கு மேல் நகரின் தூய்மை கேள்வி குறி ஆகிறது.   16:59:58 IST
Rate this:
1 members
0 members
7 members

மே
12
2020
பொது ஐ.பி.எல் ரத்தால் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் பிசிசிஐ
மக்களின் உயிர் தான் முக்கியம், ஐபில் நடக்கவில்லை என்றால் எல்லோரும் செத்த போய் விடுவோம், ஐபில் நடக்காத காரணத்தால் கால விரயம் இல்லை மேலும் மின்சார செலவு,மாணவர்கள் கல்வி கெடாமல் இருக்கும் , நகர்ப்புற வாசிகள் டிக்கெட் செலவு மிச்சம், இந்த விளையாட்டை ஒழித்தால் மாணவர்களின் கல்வி திறன் மேம்படும்.   16:54:56 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
12
2020
பொது முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,எந்த விதமான ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பதற்கு ஊரடங்கு காரணமாக உள்ளது, அடுத்த வருடம் நீங்கள் முதல்வராக இருக்க உங்கள் கட்சிக்காரர்கள் மற்றும் பகுத்தறிவு சிற்பிகள் விட மாட்டார்கள், அதனால் இருக்கும் காலத்தில் நம் கொங்கு மண்டலத்திற்கு அத்தி கடவு திட்டத்தை செயல் படுத்திவிட்டு எடப்பாடி வருமாறு கேட்டு கொள்கிறேன்.   16:47:21 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
11
2020
பொது தமிழகத்தில் 8,000 த்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
நம் தமிழக மக்கள் இந்த நேரத்தில் ஒன்றை நன்கு சிந்திக்க வேண்டும், கருணாநிதி,ஜெயலலிதா ஆட்சி செய்து இருந்தால் கூட இந்த அளவிற்கு CORANA VARUS நோயை கட்டுப்படுத்தி இருப்பார்களா என்கிற சந்தேகம் தான் வருகிறது, ஆனால் திரு.பழனிசாமி அவர்கள் தான் ஆளுமை நிறைந்த ஒரு தமிழன் தான் என்று நிரூபணம் செய்து உள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும், மேலும், சுகாதார மந்திரி, பீலா ராஜேஷ், மருத்துவ துறை சார்ந்தவர்கள், நம் கள பணியாளர்கள் "தூய்மைப் பணியாளர்கள்" செயல் போற்ற வேண்டும், சென்னை வாசிகள் தவிர அணைத்து மாவட்ட மக்களும் ஒழுக்கமாக ஊரடங்கை கடை பிடிக்கிறார்கள், தப்லீக் மாநாடு சென்று வந்த சகோதர உள்ளங்கள் பூரணம் பெற்று விட்டார்கள், மேலும் கோயம்பேடு நம் வியாபாரிகளும் விரைவில் குணம் அடைய வேண்டும், தமிழகத்தின் தொழில் நகர்கள் கோவை மற்றும் திருப்பூர் போன்ற 20 லட்சம் ஜன தொகை உள்ள பகுதிகள் ZERO நிலைமைக்கு வந்தாகி விட்டது, இதனால் சமூக இடை விலகி இருத்தால், தனி நபர் கட்டுப்பாடு, வீட்டில் தனிமை மட்டுமே இந்த நோயை விரட்ட முடியும், இதனால் மக்கள் மேலும் சில மாதங்கள் தங்களை சுயமாக காத்து கொள்ள வேண்டும், வந்து விட்டால் நாம் மட்டுமே பாதிப்பு பெற மாட்டோம், நம் குடும்பம், நம் தெரு, நம் நகரம் என்று இந்த பட்டியில் நீளும், தன்னால் முடிந்த அளவுற்கு இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்வோம், மேலும் இந்த அரசு மது கடைய திறக்காமல் இருந்தால் மட்டுமே இந்த 50 நாள் நட வடிக்கிக்கு பலன் கிடைக்கும் இல்லை என்றால் நோய் தொற்று பரவத்தான் செய்யும், எதுவானாலும் மக்கள் உழைத்தால் மட்டுமே சோறு கிடைக்கும்.   10:13:15 IST
Rate this:
3 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X