அண்ணாதுரை, கருணாநிதி காலத்திலிருந்து எதிர் கட்சிகளை விமர்சிக்கும் பாணியே அலாதி. அதிலும் முரசொலிக்கு தனியாகவா சொல்லித்தரவேண்டும்? இதில் ரொம்ப கட்டுப்பாடாக கட்சிக்காரர்கள் முதல்வரிடம் அனுமதி கேட்பதும், அவர் அதை மறுத்து, முரசொலியில் பார்த்துக் கொள்ளலாம் என்பதும், அரசியல் நாகரீகத்தின் உச்சக்கட்டம்.
21-ஏப்-2022 12:23:32 IST
நமது முதல்வர் டில்லியில் அரசுப்பள்ளிகளை ஆய்வு செய்து வந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வலைத்தளம் சொல்கிறது. அதன்படி, முதல்வர் அரசுப்பள்ளிகளில் தர மேம்பாடு செய்து அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களும் நீட்டில் வென்று வாகை சூடி, தமிழகம் எந்த மாநிலத்துக்கும் தரம் தாழ்ந்ததல்ல என்று செய்து காண்பிப்பார். ஏகடியம் செய்பவர்கள் வாய்பொத்தி போகவேண்டியதுதான். அதன்பின் நீட் தேர்வை ரத்து செய்தாலென்ன, செய்யாவிட்டால் என்ன? மாணவர்களுக்கு ஒரு சேதாரமும் கிடையாது. தனியார் மருத்துவ கல்லூரிகள், உகிரினிலிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் அனைவரையும் ஏற்று, அவர்கள் மூலம் வருமானத்தை பெருக்க கழகம் திட்டம் தீட்டும், கலோரி அதிபர்கள் கவலை கொள்ள தேவையில்லை .
03-ஏப்-2022 14:52:38 IST
ஐ ஏ எஸ் தேர்வில் தமிழக பங்களிப்பு 67 க்கு முன்பு , பிறகு என்று பிரித்து எண்ணிக்கையை ஆராய்ந்தால் உண்மை புலப்படும். ஆனால் இதை செய்ய யார் முன்வருவார்கள்? நிலைமை இன்னும் மோசமாகும் முன்னம் , தேர்வில் தமிழில் மட்டுமே நடத்தி , தமிழகத்துக்கு உண்டான ஒதுக்கீடை தமிழகமே நிர்வகிக்க , ஒன்றிய அரசை வற்புறுத்தி ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயம் .
29-மார்ச்-2022 12:29:19 IST
இந்தியாவில் வேளாண் போராட்டம் நடந்தபோது, அண்ணன் ட்ருடோ இந்திய அரசுக்கு போராட்டங்களை எப்படி எதிர்கொள்ளவேண்டுமென்று வகுப்பு எடுத்தார் மோடிக்கு போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சிபாரிசு செய்தார். அத்தனையும், கனடாவில் உள்ள சீக்கியர்களின் நல்லெண்ணத்தை பெற. இப்போது அவருடைய அறிவுரைகள் காற்றில் பறந்தன. சீக்கியர்கள், போராட்டம் செய்யும் கனரக வாகன ஓட்டிகளுக்கு ஆதரவு. சக்கரம் சுழல்கிறது. மோடி வேளாண் சட்டங்களை, அகம்பாவம் கொள்ளாமல், திரும்ப பெற்றார் போராட்டக்காரர்கள் பேச்சு வார்த்தைக்கு மறுப்பு தெரிவித்தபோதிலும். ட்ருடோ அப்படி செய்வாரா, தடுப்பு ஊசி கட்டாயத்தை விலக்குவாரா?
15-பிப்-2022 14:20:55 IST
பா ஜெ க மசோதா விவாதத்தில் பங்கேற்று,தங்கள் வாதங்களை முன்வைத்து ,பதிவுசெய்து பின்னர் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருக்கவேண்டும். அப்போதுதான் , இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லையென்று அனைவருக்கும் தெரியவரும். வெளிநடப்பு செய்தது தவறான அரசியல் முறை .
09-பிப்-2022 14:06:45 IST
வழக்கு தொடர்ந்து, வளர்ந்து வரும் இளைய தளபதியை அவதூறு கூறி, அவருடைய நற்பெயரை களங்கப்படுத்தியவரை, இப்போதே, எப் ஐ ஆர் பதிந்து சிறையில் தள்ளி, பெயிலில் வெளியே வரமுடியாதபடி, தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் வழக்கு தொடர்ந்தவர் மீது, புகார் கொடுத்து காவல் துறையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
22-டிச-2021 12:45:28 IST
தமிழ்நாட்டுக்கு ஒரு சாபகேடு. தகுதியற்றவர்களுக்கு கிடைக்கும் விருது. முன்பு எம் ஜி ஆருக்கு பாரத ரத்னா , இப்போது ரஜினிக்கு தாதா சாஹீப் பால்கி விருது. அரசியல் காரணங்களுக்கு கொடுக்கப்பட்டாலும் , வாங்க கூசாதா ?
24-அக்-2021 19:25:11 IST
தாக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், கொலைக்குற்ற பிரிவின் கீழ் எப் ஐ ஆர் போடமாட்டார்கள். ஆனால் , தாக்கியவர்கள் வீட்டு தோட்டக்காரன் புகார் கொடுத்தால், தீண்டாமை சட்டத்தின்கீழ் எப் ஐ ஆர் போடுவார்கள். குமரி மாவட்ட போலீஸ், அரசியல் எல்லாம் மத வழிதான் . புகார் கொடுத்த தோட்டக்காரர் ஒரு க்ரிப்டோ கிருத்துவரோ?
11-அக்-2021 09:29:56 IST
நாட்டின் மின்னுற்பத்தி நிலையங்கள் பெரும்பாலானவை அனல் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரித்தான் எரிபொருள். கமல் சற்று ஊன்றிப்படித்திருந்தால் தெரியும் : நாட்டின் எல்லா பகுதிகளிலும் இதே நிலைதான் . நிலக்கரி ஸ்டாக் மூன்று நாளைக்குத்தான் இருக்கிறது. நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாடு ஆரம்பமாகியிருக்கிறது. உ பி , ஜார்கண்ட் மாநிலங்களில் சில இடங்களில் 12-14 மணி நேரம் மின்தடை அமுலுக்கு வந்துள்ளது. சீனாவில் ஆரம்பித்ததை , இந்தியா மற்ற நாடுகளிலும் பரவ வெகு நாட்கள் ஆகாது. எதிர்கொள்ள தயாராவதை தவிர வேற வழியில்லை.
10-அக்-2021 12:09:21 IST
பழம் பெரும் கட்சியில் இப்போது இருப்பது , பழம் பெரும் பெருச்சாளிகள் G 23 என்ற பெயரில் . அவர்களை தவிர மிஞ்சியது காந்தி குடும்பத்து மூவர்தான் . இரண்டும் கே ட்டான் ராஹுலோடு இணைந்தோ கீழையோ இருக்க எந்த கட்சியும் விரும்பாது, அதுவும் முக்கியமாக , மமதாவின் திரிணமூல் காங் , சரத் பவரின் தேசிய காங் முதலானவை. மக்களவை தேர்தல் நேரத்தில் சிவா சேனா யார் பக்கம் இருக்கும் என்று அவர்களுக்கே தெரியாது. எனவே , பிரஷாந்த் கிஷோர் மனப்பால் குடித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் . காங் கட்சிக்கு எதிர்காலம் கிடையாது.
08-அக்-2021 21:48:54 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.