அரசுத் துறைகள் அனைத்திலும் ஊடுறுவியுள்ள ஊழலுக்கு முடிவு கட்டி, கமிஷன், கையூட்டு இல்லாத நேர்மையான ஆட்சி நிர்வாகம் நடைபெற வழி செய்தாலே, அரசு நிதி நிர்வாகம் மேம்படும் என்பதை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும்.
18-ஏப்-2023 13:19:48 IST
பணத்தை கோடி கோடியாக கொட்டி செலவு செய்து அதன் மூலம் வெற்றி பெறும் எந்த ஒரு கட்சியும், நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க இயலாது. மாறாக ஆட்சி நிர்வாகத்தில் கமிஷன் போன்ற லஞ்ச லாவண்யம்தான் ஆறாக பெருகி ஓடும்.
25-பிப்-2023 13:41:29 IST
இந்தியாவை எந்த வகையிலாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக, மறைமுகமாக தீவிரவாதத்தை இந்தியாவுக்குள் ஏவி ஒருபுறம் நாசகார வேலைகளை செய்தது, மறுபுறம் இந்திய பொருளாதாரத்தை வீழ்த்தும் நோக்கில், இந்திய ரூபாய் நோட்டுக்களை கள்ளத்தனமாக அச்சிட்டு விநியோகம் செய்தது போன்ற பஞ்சமா பாதக செயல்களை செய்து வந்த பாகிஸ்தான், இன்று திவாலாகும் நிலைக்கு ஆளாகி நிற்கிறது. வினையை விதைத்தவன் வினையை அறுவடை செய்து தானே ஆக வேண்டும்.
19-பிப்-2023 17:12:29 IST
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவில் இருக்கும் என வானிலை அறிவிப்பில் கூறப்பட்டது. ஆனால் சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இதுவரை போதுமான மழை இல்லாததால் வறட்சிக்கு உள்ளாகும் சூழ்நிலைதான் உள்ளது.
25-நவ-2022 17:25:53 IST
மதுரையில் ஒரு பெண் கவுன்சிலர் வார்டில், அவரது கணவர் தனக்கு தெரியாமல் எப்படி வீடு கட்டலாம் என கர்ஜனை செய்ததை கண்டோம். இவர் போன்ற நபர்கள் நிறைந்துள்ள கட்சி ஆட்சியில் பொங்கினால், இந்த போராளிகளின் கதி அதோ கதிதான்.
22-நவ-2022 18:39:48 IST
தமிழகத்தை தனியாக பிரிக்க கோறுவதன் நோக்கம், நாட்டை துண்டு துண்டாக ஜமீன்களாக பிரிக்கலாம், நோட்டை தாங்களே அச்சடித்து விநியோகிக்கலாம் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.
18-நவ-2022 08:14:29 IST
முன்பெல்லாம் மணமக்களை வாழ்த்தும் போது, நிலவும் வானமும் போல், தமிழும் இனிமையும் போல் இணை பிரியாமல் வாழ்க என வாழ்த்துவார்கள். இனி அரசு ஊழியர்களும், லஞ்சமும் போல் இணை பிரியாமல் வாழ்க என்பதனையும் சேர்த்துக் கொள்ளலாம். வெட்கக்கேடு.
17-நவ-2022 21:29:29 IST
தமிழகத்தில் பாஜக, நோட்டாவுக்கும் கீழ் என்றிருந்த நிலை மாறி, அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூறியது போல் ராட்சசனாக அல்ல, ரட்சகனாக வளர்ந்து இருப்பது பாராட்டுக்குரியதே.
17-நவ-2022 20:52:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.