vivek c mani : கருத்துக்கள் ( 203 )
vivek c mani
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
5
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
5
2020
சம்பவம் யானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்
வாய்பேச முடியாத ஜீவன் ஒன்று வயிற்றில் இருக்கும் பிறவா குழந்தையுடன் கொடூரமாக துடி துடிக்க வைத்து கொல்ல பட்டிருக்கிறது. செய்தியில் கேட்டதெல்லாம் அதை போன்று கொல்ல பட்ட பல பிராணிகளுக்காக விளக்கேற்றுதல். மனிதன் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தால் பல வன்முறைகள் நடந்து மேலும் பல மனித உயிர்களும் இழக்க பட்டிருக்கலாம். ஆனால் இந்த யானையோ அவ்வளவு கொடூரத்தையும் பொறுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடாமல் இறந்தது. மற்ற யானை கூட்டங்கள் மக்களையோ அல்லது அவர்கள் சொத்துக்களையோ கோபம் கொண்டு அழிக்கவில்லை. இதற்காக மனிதர்கள் குரல் கொடுப்பது மனிதாபிமானத்தின் அடிப்படையில். மனிதனை விட உயர்ந்த நடத்தையை காட்டிய அந்த மிருகத்திற்காக. இதை மற்ற பிராணிகளுடன் இணைத்து பேசுவது நடைமுறைக்கு ஒவ்வாதது. ஜீவகாருண்யம் மற்றும் அஹிம்சை என்பது இந்த நாடு பழங்காலத்திலிருந்தே வழி காட்டி வந்த ஒன்று. இதன் பரிமாணம் பெரும்பான்மையான கோவில்களில் ஆடு மாடுகளை துன்புறுத்தி காவு கொடுக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது. இறைவனுக்கு உயிர்களின் இறைச்சியைத்தான் அர்ப்பணிக்க வேண்டுமென்பதில்லை. உண்மையான பக்தியுடன் மலர்களையோ , பழங்களையோ, இலைகளையோ இவையெல்லாம் இல்லாவிடின் தண்ணீரோ இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம் என்றும் கூறப்பட்டது.. இருப்பினும் இறைச்சியை உண்ணும் வழக்கம் இன்றும் தொடரத்தான் செய்கிறது. இதை காரணமாக கூறி அந்த கர்ப்பிணியான யானையை கொன்றது ஒன்றும் பெரிய விஷயமல்ல எனும் வாதிடும் மக்கள் ஒன்றை நினைத்து பார்த்துக்கொள்ளவேண்டும் . இறைவனின் படைப்பில் அதுவும் ஒரு நடமாடும் உயிர்தான் , நாமும் அவ்வாறே நடமாடும் உயிரினங்கள்தான் . நம் வாய்க்குள் வெடிவெடித்தால் அது கொடூரம், மிருகத்தனம். அதே மிருகங்கள் வாய்க்குள் வெடிவெடித்தல் மனித நேயம் எனும் எண்ணம் கொண்டோர் இவ்வுலகில் வாழ்வது மனிதஇனத்திற்கே பெரும் இழுக்கு.   15:49:31 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
4
2020
பொது 40 லட்சத்தை கடந்த பரிசோதனைகள் மத்திய சுகாதாரத்துறை பெருமிதம்
குறுகிய காலத்தில் பல்வேறு இடைஞ்சல்கள் இடையே மதிய அரசும் மாநில அரசுகளும் பெரும்பாலும் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவது பாராட்ட தக்கது . மதிய அரசு போர்க்கள நடவடிக்கை போல் பல முயற்சிகளை எடுத்து முன்பின் தெரியாத ஒரு புதுவித நோய்க்கு உலகமே பல உயிர்களை இழக்கும் தருணத்தில் , பல சிகிச்சை முறைகளை பயன்படுத்தி காரோண நோயை பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அதே போல் சாதாரண மக்கள் மற்றும் சிறிய பெரிய தொழிற்சாலைகளும் முன்வந்து பல சிகிச்சைக்கான உபகரணங்களை அதிவேகம் தயாரித்து மருத்துவ மனைகள் மற்றும் பணியாளர்களுக்கு கொடுக்க வழி செய்துள்ளனர். இறக்குமதியை நம்பாமல் சுயமான தயாரிப்பு நம் அரசு மற்றும் மக்களின் உழைப்புக்கும் மற்றும் முயற்சிக்கும் ஒரு சிறந்த உதாரணம். மருத்துவர்களும், காவல் துறையினரும் மற்றும் மருத்துவ பணியாளர்களும் உழைத்த உழைப்பிற்கு கைமாறு செய்வது கடினம். இந்தியர்கள் என பெருமை படுவோம். பெரியதொரு துன்பத்தை சந்திக்கும் போது சில இடர்கள் தவிர்க்க முடியாது. அதை ஏளனம் செய்யாமல் மேற்கொண்டு எப்படி சரி செய்யலாம் எனும் சிந்தனையோடு முன்னேற வேண்டும்.வாழ்க பாரதம்.வளர்க நற்சிந்தனை.   17:35:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
4
2020
சம்பவம் பாக்.,கில் புத்த சின்னங்கள் சேதம் இந்தியா கடும் கண்டனம்
கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டது. திரும்ப கோவிலாகிறது. புத்த சின்னங்கள் பாறைகளில் அமைக்கப்பட்டவை . அங்கும் இப்போது அழித்து வேறு மதச்சின்னம் தான் தீட்டப்பட்டு உள்ளது. பிறரை மற்றும் பிற மதங்களை அழித்துத்தான் நாம் வாழமுடியும் எனும் நிலைப்பாடு பல நூறு ஆண்டுகளாக நாம் காண்கிறோம். அப்காஹனிஸ்தானில் சில வருடங்களுக்கு முன்னாள் அழிக்க பட்ட புகழ் வாய்ந்த பாமியன் புத்த சிலைகளையும் இங்கு நினைவு கூறலாம். இராக்கில் சிலவருடங்களுக்கு முன்னால் அழிக்கப்பட்ட அருங்காட்சியகம் ஆயிரக்கணக்கான பெருமை வாய்ந்த சிந்து சுமேரிய பெர்சியா நாகரீக சின்னங்களை கொண்டது . அதை வெறி கொண்டு தரை மட்டமாக்கினர். இதுதான் மத மற்றும் மனித நாகரீகமா? .   17:08:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
4
2020
அரசியல் யானை கொல்லப்பட்ட சம்பவம் ராகுல் மீது மேனகா ஆவேசம்
மனிதன் அடிபட்டால் மருத்துவ மனை சென்று மருந்து மற்றும் சிகிச்சை மேற்கொள்கிறோம். இந்த கர்ப்பிணி யானையோ பெரும் துன்பத்தை சகித்து கொண்டு, மற்றவர்களுக்கு போராட்டம் கூட்டி துன்பம் இழைக்காமல் பொறுமை சாதித்து மரணம் அடைந்திருக்கிறது. அந்த யானைக்கு துன்பமிழைத்தோர் கர்மா பலனை அடைந்தே தீருவார்கள்.   16:38:56 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

மே
31
2020
பொது ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர் பிரதமர் பாராட்டு
வாழ்த்தவேண்டிய செயல். பிறருக்காக நல்லவை நினைப்பவருக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்லருளும் ஆசியும் அளிப்பான்.   15:32:44 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
30
2020
பொது தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர்
நம்ம ஊரில் பல நடிகர்களும், நடிகையரும் , டைரக்டர்களும் பணம் செலவு செய்வது ஹிந்து மதத்தை எப்படி தரக்குறைவா பேசலாம் , ஹிந்துக்களை எப்படி மனம் நோக செய்யலாம் , எப்படி பிற மதங்களை உயர்த்தி இந்து மதத்தை தாழ்தலாம் என்பதிலேதான். நிஜ வாழ்க்கையில் களமிறங்கி ஏழை மக்களுக்கு சோனு ஸூட் மாதிரி உதவுவதில்லை . ஆனால் படங்களில் மட்டும் இவர்களை போல் உத்தமர் யாரும் இல்லை என நடித்து மக்களை ஏமாற்றுவதில் இவர்களை மிஞ்ச முடியாது. இவர்களை சொல்லி குற்றமில்லை. குற்றம் இவர்கள் காழ்ப்புணர்ச்சியை தெரிந்தும் அவர்கள் படத்தை பார்க்க செல்வோரிடமே. காரோணவல் மக்கள் துன்பப்படும் நிலையிலாவது இவர்கள் வாயைமூடி மவுனம் காத்திருக்கலாம். ஆனால் ஹிந்து விரோத மனப்பான்மையை வாழ்வின் குறிக்கோளாக கொண்டவர்களுக்கு ஹிந்து மதத்தில் ஏழைகளுக்கு உதவி செய்து பிரதிபலன் பாராமல் தான தர்மங்கள் செய்ய வேண்டிய கடமையை வலியுறுத்தியிருப்பது தெரிந்திருக்க வழியில்லை. ஏனெனில் குற்றத்தையே கூறுவோர், குணத்தை பாராமல் குருடனை போலாவார்.   10:19:38 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

மே
28
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
28
2020
சினிமா ஒரு விபத்து, ஒரு தற்கொலை: 2 டி.வி நடிகைகள் பரிதாப மரணம்...
இந்தி தொடர் நடிகை பெயர் பிரதியுஷா பனர்ஜீ.. இவர் தற்கொலை செய்து கொண்டது 2016 ல் .   20:32:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
27
2020
பொது இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய காட்மேன் டீசர்
ஹிந்து மதத்தை பற்றி கேவலமாக பேசுவதும், பழிப்பதும், ஹிந்துக்கள் பழக்க வழக்கங்களை மற்றும் கொள்கைகளை நிந்திப்பதும் குறிப்பாக ப்ராஹ்மண சமூகத்தை அவமதிப்பதும் இன்று நேற்று உருவான வெறியல்ல. இவெறிக்கு வித்திட்டது 200 ஆண்டுகளுக்கும் முன்பாக. ஆங்கிலேயர்கள் . ஹிந்து மதத்தை அழிக்க பல்வேறு முயற்சிகள் 1800 களிலிருந்து செய்துவந்தனர். ஹிந்துக்கள் மதம் மாற தடை பெரும்பாலும் ப்ராஹ்மணர்கள் என்பதை அறிந்து அவர்களை மற்ற மக்களிடமிருந்து தனிப்படுத்த ஒன்றன் பின் ஒன்றாக பல முயற்சிகளை எடுத்தனர். அப்பே டுபாய்ஸ் ( Abbe Dubois ) எனும் பிரெஞ்சு மிஷனரி 1792- 1823 இடையில் இந்தியாவில் வாழ்ந்தார். அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி இந்தியாவை கிருத்துவ நாடாக மாற்றுவதற்கான வழிமுறைகள். இதற்காக அவர் இந்தியா மக்களுடன் ஒன்றுசேர்ந்து வாழ்ந்து அவர்கள் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டு அதன்பின் கிறித்துவ மதத்தை போதித்து மதம் மாற்றுவது குறிக்கோளானது. பிரான்ஸ் நாடும் பிரிடிஷ் நாடும் ஒன்றுக்கொன்று எதிராக போர் தொடுத்தாலும் பிரெஞ்சு மிஷனரி அப்பே வின் குறிக்கோளை மனதில் கொண்டு அவர் செய்யும் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. அவர் ஆராய்ச்சி ஒரு ஆங்கில அரசின் புத்தகமாக பதிக்கப்பட்டு இந்தியாவில் ஹிந்து மதத்திற்கு எதிராக ,ஆங்கில அரசின் பல திட்டங்களுக்கு அஸ்திவாரமாக அமைத்தது. குறிப்பாக மெக்காலே கல்வி திட்டம் இந்தியா கலாச்சாரத்தை இழிவாகக்கட்டி ஆங்கில செயல்முறைகள் உயர்வாக காட்டப்பட்டன. அப்பே விற்கு பணஉதவி மட்டுமல்லாமல் இந்தியா நட்டு பணத்திலிருந்து அவருக்கு பென்ஷனும் கொடுக்கப்பட்டது.அவர் எழுதிய கட்டுரை மற்றும் ஆராய்ச்சி குறிப்புகள் புத்தக வடிவில் வந்தது . அதிலிருந்து முகவுரையின் சில வரிகள்: “Nevertheless what has now become of the innumerable deities of Greece and Rome ? They have vanished like an empty , transitory dream . Let us pray that theAlmighty may be pleased to allow the torch of truth to illumine the countries watered by the Ganges. Doubtless the time is still far distant when the stubborn Hindu will his eyes to the light and tear himself away from his dark superstitions but let us not despair a day will come when the standard of Cross will be flying over temples of India as it flies now over her strong places” சுருக்கமாக இதன்மூலம் அறியவேண்டியதென்னவென்றால் இந்தியர்கள் மூடநம்பிக்கை உள்ளவர்கள் . பண்டைய கிரேக்க மற்றும் ரோம நாகரீகங்கள் நிலைத்ததா என்ன?. கனவாக மறைந்தது . அதுபோல் இந்தியா நாகரீகமும் கலாசாரமும் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாம் நம்பிக்கையிழக்க வேண்டாம் . எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சிலுவை சின்னம் பறக்கும் நாள் வரும். இவர் ஹிந்து மக்கள் பலருடன் வாழ்ந்து அவர்கள் நம்பிக்கையை பெற்று அதன் மூலம் தன கருத்துக்களை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தார் . அதன் பரிமாணமே ஹிந்து மதத்தில் உள்ள சில வித்தியாசங்களை பெரிதுபடுத்தி ஒருவரை ஒருவர் வெறுக்கும் படி செய்து பின் ஆங்கிலேயர்களிடம் சமரசம் நாட வைப்பது. இதனால் ஆங்கிலேயர்கள் மக்கள் மதிப்பை குள்ள நரித்தனமாக பெற்று மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை விரைவில் பரப்பினார்கள். இவர்கள் முக்கிய குறிக்கோள் ஹிந்து மத அஸ்திவாரமாக திகழும் ப்ராஹ்மணர்களை இழிவு செய்வது , மற்ற ஹிந்துக்களிடம் அவர்களுக்கு வெறுப்புணர்வை ஊட்டுவது அதன் மூலமாக ஹிந்துக்கள் பிரிந்து வலுவிழக்கும் பொழுது கிறிஸ்தவராக மத மற்றம் செய்வது . இதுமட்டுமில்லாமல் கோவில் நிர்வாகத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஹிந்துக்கள் ஆங்கிலேயரிடம் கையேந்தும் நிலையை கொண்டு வருவது மற்றும் மகாலே கல்வி திட்டத்தின் படி இந்திய கல்வி கீழ்தரமானது என்று பறைசாற்றி ஆங்கில கல்வியை வளர்ப்பது, ஆங்கிலம் தெரியாதவரை இகழ்வது , ஆங்கிலேயர்கள்தான் உயர்ந்த அறிவாளிகள் , இந்தியர்கள் மண்டையில் ஒன்றுமில்லா பண்டைய மக்கள் என மூளை சலவை செய்வது , மற்றும் பல கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டனர். இந்தியாவின் முதிர்ந்த அறிவிற்கும் , ஆங்கிலேயர்களின் அறிவு எப்படி முதிர்ச்சி இல்லாதது என்பதற்கோர் உதாரணம்- பண்டைய இந்தியாவின் அறிவுவளர்ச்சியும் , விஞ்ஞாந முதிர்ச்சியையும் அறியாத ஆங்கிலேயர்கள் இந்தியாவை கையகப்படுத்த வழிகளை ஆராய்ச்சி செய்தனர். . ஆனால் எந்த அளவிற்கு இவர்கள் இந்தியாவின் உயர் நிலையை அறியாமலிருந்தது , தாங்களே புத்திசாலிகள் எனும் மூடநம்பிக்கை யாரிடமிருந்தது என்பதற்கோர் உதாரணம்- உலகம் உருண்டையானது மற்றும் கிரஹங்களின் சுழற்சி பற்றி வேத புராண காலத்திலிருந்தே இந்தியர்கள் அறிந்திருந்தார்கள். ஆர்யபட்டர் 499CE காலத்திலேயே உலகம் உருண்டை எனவும் மற்றும் பல விண்வெளி நிகழ்ச்சிகளையும் தம் புத்தகத்தில் எழுதியிருந்தார்.. கலிலியோ என்பவர் பிற்காலத்தில் அதையேகூறியது 1633 இல். . அதாவது பிற்கால இந்தியர்கள் 1133 வருடங்களுக்கு முன்னரே கூறியதை கலிலியோ பின்பு 'கண்டுபிடித்தார்'. வேத காலம் எனில் இன்னும் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பாக. கலிலியோ கூறியதை ரோமன் கத்தோலிக்க சர்ச் ஏற்க மறுத்தது. கலிலியோ தாம் கூறியதை ஆர்யபட்டா அவருக்கு 1100 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் கூறியதை /எழுதியதை அறியவில்லை. கலிலியோ மண்டியிட்டு தாம் கூறியது தவறு என சொல்ல நிர்பந்திக்கப்பட்டார். 1992 தான் சர்ச் கலிலியோ கூறியது தவறல்ல என ஒப்புக்கொண்டது. இதை கூறியது எதற்காக எனில் இந்தியாவில் ஆண்ட வெளிநாட்டார்கள் இந்தியர்களை இழித்தும் பழித்தும் , குறைசொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் இந்தியர்களை விட உயந்தவர்கள் என பறைசாற்றுவதெப்படி? அமைதி காக்கும் ஹிந்துக்களிடையே நன்மதிப்பை பெறுவது, மதம் மாற்றுவது எவ்வாறு? இந்த ஆங்கிலேயர்கள் செய்த மற்றொரு காமெடி ஆரியர்- திராவிடர் பிரிவினை . ஹிந்துக்களை எவ்வாரெல்லாம் பிரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் பல யுக்திகளை கையாண்டனர். ஆரியம் என்பது ஆங்கிலேயர்கள் ஹிந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஒரு யுக்தி. ஆரியர்கள் என்று எவரும் இலக்கியங்களிலோ பழங்கால பயணக்கட்டுரைகளிலோ குறிப்பிடப்படவில்லை . இந்தியாவின் தெற்கு பகுதியை குறிப்பதே திராவிடம் எனும் சொல். குசும்பு விவகாரத்தில் தேர்ந்தவர்களான ஆங்கிலேய கட்டு கதை அறிஞர்கள் அந்த காலகட்டத்தில் இம்மாதிரி கூறியது அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் பல அதிகாரங்களில் ஒன்றே. ஆங்கிலேயர் காட்டிய வழிகள் சரியானதே , அவர்கள் கூற்று உண்மையானதே என்று 200 வருடங்களாக என்று நம்பியவர்கள் அவர்களை வழிகாட்டியை கொள்பவர்கள் அவர்கள் அளிப்பதை அள்ளிக்கொண்டவர்கள் அவர்கள் போல் ஹிந்துக்களை இழிக்காமல் வேறு என்ன செய்வார்கள்? பிரிக்கப்பட்டு பழக்கப்பட்ட யானை தனது கூட்டத்தையே காட்டி கொடுப்பது போல்தான் இவர்கள் நடவடிக்கையும். தேவை- இத்தகைய கேவலமான படங்களை, சீரியல் தொடர்களை நிராகரிப்பது. மற்றும் ஒரு பழமொழியை ஹிந்துக்கள் நினைவிற்கொள்வது மற்றும் செயல் படுத்துவது நல்லது - குட்ட குட்ட குனிந்தால் குட்டுவான் -நெட்ட நெட்ட நிமிர்ந்தால் ஓடுவான்.   15:38:14 IST
Rate this:
4 members
0 members
31 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X