Saravanan Raman : கருத்துக்கள் ( 42 )
Saravanan Raman
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
26
2020
வாரமலர் அம்மாவும், கை ராட்டையும்!
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஐயா, இன்றைய வாரமலரில், தங்களது சிறுகதை, ‘அம்மாவும் கை ராட்டையும்’ படித்தேன். ‘எதிர்பார்ப்பு ஊட்டும் அருமையான இந்த தலைப்புதான் நம் மனதில் தோன்றிவிட்டதே நமக்குத்தான் வாரமலரில் உடனடி வாய்ப்பு இருக்கிறதே எனவே, இதை எழுதாமல் விடக்கூடாது’ என்ற முனைப்புடன் வலிந்து எழுதப்பட்டதாவே காட்சி அளிக்கிறது, இக்கதை இதற்கு, ‘அம்மாவின் மனோதைரியம்’ என்ற தலைப்பு தான் பொருத்தம். ‘நாகப்பைய்யர் தெருவில்… என்பதில் தொடங்கி, அம்மாவின் மனோதைரியத்தை என்னவென்று சொல்வது?’ என்பதோடு முடித்திருந்தால், நல்ல மதிப்பெண் கிடைத்திருக்கும் தேவையில்லாத தலையையும், வகை இல்லாத வாலையும் ஒட்ட வைத்த காரணத்தினால், ஒளி குன்றி போய்விட்டது. இந்த குறைகள் நீங்கிய, தங்களது புதிய சிறுகதை ஒன்றை, விரைவில் வாரமலரில் வாசிக்க ஆசைப்படுகிறேன் நன்றி   16:31:30 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
8
2019
வாரமலர் பணக்கார அப்பா!
'பணக்கார அப்பா' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள, சுவாரஸ்யமற்ற இச்சிறுகதையை, என் மதிப்பிற்குரிய மேடம், திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்களா எழுதினார்? சாரி, நம்ப முடியவில்லை என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி   12:24:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2019
வாரமலர் இது உங்கள் இடம்
கோயம்புத்தூரை சேர்ந்த நண்பர் ராஜ் என்பவர், 'எதற்கு இவ்வளவு என்ற கேள்விகள்?' என்று கேட்டுள்ளார் அவசியமற்ற கேள்விகள் இதில் ஏதுமில்லை. இந்த கடிதத்தில் சொல்லப்பட்ட செய்திகளை ஒட்டியே, கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது இவர் சொல்கிறார்: நான் ஒருமுறை மீட்டருக்கு மேல் கொடுக்க முடியாது என்று சொன்னதற்கு அடிக்க வந்த ஓட்டுநர்களும் உண்டு எழுகின்ற கேள்வி: இவர் ''ஒரு முறையில்' சென்ற 'ஒரு ஆட்டோவை' எததனை ஓட்டுநர் ஓட்டினார்கள்?   13:18:16 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2019
வாரமலர் இது உங்கள் இடம்
டியர் சார் 18.08.2019 தேதியிட்ட வாரமலரில், இது உங்கள் இடம் பகுதியில் ‘ஆட்டோ ஓட்டும் மாணவர்’ என்ற தலைப்பில் வெளியான கடிதம் படித்தேன் ‘அடிக்கடி முதுகு வலி வரும் ஒரு மனிதன், ஆட்டோவில் பயணித்தால், அதன் குலுக்கல் காரணமாக, வலி மேலும் அதிகரிக்கும்’ என்ற பொது அறிவு கூட இல்லாதவரா ஆட்டோவில் சென்ற, கடைசியில், தாராளமாக கட்டணம் செலுத்திய அந்த நோயாளி நண்பர்? அந்த நண்பர் எந்த ஊர்? அந்த ஊரின், எந்த இடத்திலிருந்து, எந்த மருத்துவமனைக்கு, ஆட்டோவில் சென்றார்? “இந்த சவாரிக்கு, எவ்வளவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த தொகையை மட்டும் போட்டால் போதும்...' என்றிருக்கிறார், ஆட்டோ டிரைவர், என்பது எப்போதும் பயன் தருமா? ‘ஒரு பயணத்திற்கு எவ்வளவு தொகை நியாயமானது’ என்பது, அந்த தொழிலை தொடர்ந்து செய்பவருக்குத்தான் தெளிவாக விளங்கும். ஆட்டோவில் பயணிக்கும் பலவகையான மனிதர்களுக்கும், இந்த விபரம் தெரிந்திருக்காது. சரியான கட்டணத்தையே, ‘கூடுதல் கட்டணம் இது’ என்று நினைக்கும் மனோபாவமே இங்கு அதிகம். இந்நிலையில், பெட்டியில் போட சொல்வது, ஆட்டோ தொழிலை புதைக்குழியில் தள்ள சொல்வதற்கு சமம் ஐம்பது ரூபாய் மதிப்புள்ள சவாரிக்கு ஐந்து ரூபாய் பெட்டியில் போடப்பட்டால் என்ன செய்வார், அந்த ஆட்டோ ஓட்டும் மாணவர்? “தன் படிப்பு செலவுக்கு போக மீதமுள்ள பணத்தை இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுத்துவிடுவார்.” என்று மேல் விபரம் சொன்னராம் அந்த மருத்துவனை காவலாளி. ‘சும்மா அதிருது’ இல்லீங்களா? ‘ஆட்டோ ஓட்டி அந்த அளவுக்கு பெரிய வருமானம் வருகிறது என்றால், அவர் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்?’ என்று நாம் சிந்திக்க வேண்டும். இப்படி ஆட்டோவே ஓட்டிக்கொண்டிருந்தால், அவர் தனக்கான மருத்துவ பாடங்களை என்றைக்கு படிப்பார்? பின்னர், நமக்கெல்லாம் என்ன சிகிச்சை அளிப்பார்? “முரட்டுத்தனமான பேச்சும், அடாவடியாக நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்களை பார்த்தும் பழகிப்போன எனக்கு, நண்பர் கூறியதைக் கேட்டதும் வித்தியாகமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கடிதாசிகாரர். ‘மருத்துவம் படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்டினால் தான் இந்த உயர்குணங்கள் வரும்’ என்ற கருத்தை விதைக்கிறாரா? மரியாதையான அணுகுமுறையும், மென்மையான நடவடிக்கையும் கொண்ட லட்சகணக்கான நம்முடைய ஆட்டோ ஓட்டுநர்களின் ஒருவரை கூட தம் வாழ்நாளில் இந்த மாலா உத்ஸ் சந்திக்கவே இல்லையா? மருத்துவம் பயிலும் அந்த ஆட்டோ ஓட்டுநரை மனதார பாராட்டினேன் என்று முடிக்கிறார். என்று? எங்கு? என்பதையும் சொல்லாமல் மறைக்கிறார். மத்திய அரசு நிறுவனத்தின் ஒரு நல்ல உயரதிகாரி, திரு உத்தண்டராமன் அவர்கள். மாலா உத்தண்டராமன் என்ற புனைப்பெயரில் இவர் எழுதுவார் என்பது தெரியும் ‘மாலா உத்ஸ்’ என்ற இன்னொரு புது புனைப்பெயரில் இது உங்கள் இடம் பகுதியில் விட்ட கதையை நம்பமுடியவில்லை நன்றி என்றென்றும் அன்புடன், இராதாராமன், நெய்வேலி   13:11:39 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
21
2019
வாரமலர் தாயாய் அவள்!
டியர் சார் 21.07.2019 தேதியிட்ட வாரமலரில், பூபதி பெரியசாமி எழுதிய 'தாயாய் அவள்' சிறுகதை படித்தேன். இதில் வேகமும் இல்லை விவேகமும் இல்லை விறுவிறுப்பும் இல்லை நன்றி என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி   12:20:56 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
14
2019
வாரமலர் திண்ணை!
14.07.2019 தேதியிட்ட வாரமலரில், நடுத்தெரு நாராயணன். ‘திண்ணை’பகுதியில்,அளித்த, முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜர் பற்றிய நினைவலைகள், கண்ணில் நீரலையையே ஏற்படுத்திவிட்டது இது போன்ற இனிய, எளிய, மனிதர்கள் இனிமேல் கனவில் மட்டும் தானா? நன்றி என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி.   19:51:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
14
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
14.07.2019 தேதியிட்ட வாரமலரில், 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியில், சகுந்தலா கோபிநாத் அளித்துள்ள ஆலோசனை அசத்தல் ரகம் அதிலும், 'வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும் இன்னொரு கதவு திறக்காவிட்டால், ஆவேசமாக தட்டி, திறக்க வை' என்ற வரிகள் ஊக்கத்தின் உச்சம் 'சங்கட பெண்ணாய் இருந்தது போதும் இனி சாதனை பெண்ணாய் உயர்ந்து நில் என் தங்க மகளே' என்ற வரிகள் பொன்னால் பொறிக்கப்பட்டவை நன்றி என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி   19:46:26 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
7
2019
வாரமலர் விஞ்ஞானியாக விரும்பும் ஏழை மாணவியின் கனவு!
07.07.2019 தேதியிட்ட வாரமலரில் வெளியான, ‘விஞ்ஞானியாக விரும்பும் ஏழை மாணவியின் கனவு’ என்னும் கட்டுரை, வாரமலர் இதழுக்கு பெருமை சேர்க்கின்றது இப்போது, உக்கிரைனில் இருக்கும் உதயகீர்த்திகா, இக்கட்டுரையின் மூலமாக, போதுமான பொருளாதார உதவி கிடைத்து, படிப்பில், அடுத்த உயரத்திற்கு செல்லப்போவது மட்டுமின்றி, விண்வெளி வீராங்கனையாக உலா வரப்போவதும் உறுதி இவ்வாறான தொண்டு மூலம், தினமலர் - வாரமலர் மக்கள் மனதில், ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரையை எழுதிய கட்டுரையாளர், திரு எல். முருக ராஜ் அவர்களையும், வெளியிட்ட பொ. ஆ,, (இது அண்ணன் அந்துமணி அவர்களின் பாணி) அவர்களையும் பாராட்டுகின்றேன். நன்றி என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி   11:53:59 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
26
2019
வாரமலர் அப்பாவும், பணமும்!
டியர் சார் 26.05.2019 தேதியிட்ட வாரமலரில் பிரசுரமாகியுள்ள, படுதலம் சுகுமாரன் எழுதிய 'அப்பாவும் பணமும்' சிறுகதையும், கே. ஆனந்தன் எழுதிய 'தனிக்குடுத்தனம்' சிறுகதையும் யதார்த்தமாக, நன்றாக இருந்தன. 'நடைமுறைக்கு சாத்தியமான சம்பவங்கள் நிறைந்த கதைகளை மட்டுமே, பாரபட்சம் பாராமல், பிரசுரத்திற்கு இனி மேல் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்' …..என்னும் தீர்மானத்தை, பொறுப்பாசிரியர் உடனடியாக மேற்கொள்வார் என்றால், இனிமேல், ஒவ்வொரு வாரமும் நல்ல கதைகள் மட்டுமே, நம் வாரமலரில் பிரசுரமாகும் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி.   09:52:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
19
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
டியர் சார் 19.05.2019 தேதியிட்ட வாரமலரில், ‘இது உங்கள் இடம்’ பகுதியில், சென்னை, கல்பனா குணசேகரன் எழுதி, “பாரதி கண்ட புதுமைப் பெண்” என்ற தலைப்பில் வெளியான, பயனற்ற கடிதம் படித்தேன் இதில், “பாரதி கண்ணம்மா’ என்று வர்ணிக்கப்பட்டுள்ள ஒரு அரைவேக்காடு, ஒரு ஸ்வீட் கடை முதலாளியிடம், “நீங்கள் துணிப்பைக்கு தனியே விலை வைத்து, பணம் கேட்டால், நான் கொடுத்துள்ள ஆயிரம் ரூபாய்க்கான ஸ்வீட் ஆர்டரையே, கேன்சல் செய்து விடுவேன்” என்று பயமுறுத்தி…… “அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்கள் எல்லாம் வீணாய் போக காரணம்…. உங்களை போன்ற ஆட்கள்தான்” என்று மிரட்டி….. பெரிய புரட்சி செய்துவிட்டாராம் அந்த முதலாளிக்கு ஏசியிலும் வியர்த்துவிட்டதாம் அங்கே குழுமியிருந்த அத்தனை பேரும், “அந்த பாரதி கண்ணம்மா பாப்பாவை()’ பாராட்டோ பாராட்டுன்னு பாராட்டிவிட்டாங்களாம் அதைப் பார்த்ததும், அதீத கற்பனா சக்தியுள்ள, இந்த கல்பனா குணசேகர் அவர்கள், ‘சமுதாயத்தில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம், அரசே பார்த்துக் கொள்ளும் என்று இல்லாமல், நாமும் தட்டி கேட்கலாம்’ என்று அந்த சின்னப்பெண்ணிடம் பாடம் கற்றுக் கொண்டாராம் (அட மனுஷன்னு இருந்தா ஏதோ அக்கம் பக்கம்ன்னு, சின்ன சின்ன பொய் சொல்லறது இயல்பு தாங்க ஆனாலும், இந்த வாசகி, வாரமலரின் தலைமேல் ஏறிகிட்டு இப்படி எல்லார் காதுலேயும் பூ சுத்தக்கூடாதுங்க) ‘எந்த ஒரு அரசாங்கம் ஆனாலும், நம் நாட்டில் வாழும் அத்தனை பேருக்கும், நேரிடையாக அரசு பணிகளை தரவே இயலாது’ என்பது யாவரும் அறிந்த உண்மை. இச்சூழ்நிலையில், ஒவ்வொருவரும், ஏதேனும் ஒரு சுயதொழிலை மேற்கொண்டு, அதன் மூலமே ஜீவித்தாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஒரு இனிப்பு கடையையோ, அல்லது வேறு ஒரு விற்பனை நிலையத்தையோ, இது போன்ற தனி ஒரு முதலாளி சொந்தமாக தொடங்கி, அதனை வெற்றிகரமாக நடத்திசெல்வதில், பல்வேறு சவால்கள் உள்ளன முட்டையிடும் கோழிக்குத்தான் வலி தெரியும் சிறு முதலாளிகளின் நிலைமையை, பொதுமக்கள் நாம் பரிவுடனும், நியாயத்துடனும் எண்ணிப் பார்க்க வேண்டும். பல இடர்களுக்கு மத்தியில், தொழில் செய்து வரும் இது போன்ற தனியார் அமைப்புகளிடம், ‘சட்டம், நியாயம்’ பேசும் இந்த காகிதப் புலிகள்….. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நடத்தும் ரேஷன் கடைகளில், தரமான அரிசி, சரியான எடையில், சரியான நாளில், கிடைப்பதற்காக புரட்சி செய்து…. அன்றாடம் காய்ச்சிகளின் பசிப்பிணியை போக்குவார்களா? அந்த வாயாடி, ‘அரசு விதிகளை அப்படியே மதிக்கும் அவ்வளவு பெரிய ஆள்’ என்றால்… ஒரு துணிப்பையை தன் வீட்டிலிருந்தே எடுத்து சென்றிருக்கலாமே அரைவேக்காடு, வயிற்று வலியைத்தான் தரும் எருதுவின் வலியை காக்காக்கள் அறியாது நன்றி என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி.   19:11:47 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X