Rajagopal : கருத்துக்கள் ( 388 )
Rajagopal
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2019
உலகம் ஹிந்து மாநாடு சீர்குலைப்பு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
வெளி நாடுகளில் குடியேறிய இந்தியர்களால் தான் இன்று இந்தியாவுக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியர்களை அவர்கள் மதிக்கத் தொடங்கியதே நம் மக்களின் கடின உழைப்பினால்தான். தவிர, பலர் அரசியல் கலந்த இட ஒதுக்கீட்டினால் முன்னேற இயலாமல், வெளி நாடுகளுக்கு குடி பெயர்ந்து, கடினமாக உழைத்து, வாழ்க்கையில் முன்னேறியவர்கள். இந்தியாவில் இந்து மதத்தை கம்யூனிஸ்டுகளும், கிறித்துவத் திருச்சபைகளும், இஸ்லாமிய இயக்கங்களும், திராவிட இயக்கங்களும், இடது சாரியினரும் சிதைத்து அழிப்பதைத் தடுக்க வேண்டுமானால், சர்வ தேச அளவில் இந்து இயக்கம் வளர்ந்து பலமாக வேண்டும். அதுதான் இத்தனை வருடங்களில் நடந்திருக்கிறது. மேலை நாடுகளில் இந்தியர்கள் வலுப் பெற்றதால்தான் இன்று இந்தியாவால் சர்வதேச அளவில் தனக்கு சாதகமாக எல்லாம் அமைத்துக் கொள்ள முடிகிறது. நமக்கு ஆதரவும் முன்னை விட நிறையக் கிடைக்கிறது. நம் மீதும், நம் திறமையின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. நமது நாடு பயங்கரவாதத்தால் படும் அவதியை அவர்களால் உணர முடிகிறது. திரை கடல் ஓடி திரவியம் தேடியதால் இன்று சர்வதேச அளவில் இந்தியா மதிக்கப் படுகிறது. எல்லோரும் நாட்டுக்குள்ளே அடங்கி இருந்தால் தேக்கம் ஏற்படும். நமது மக்கள் இன்னும் பல நாடுகளில் குடி பெயர வேண்டும். நம்மைப் பற்றி ரொம்பவும் தெரியாது. நமது பாரம்பரியத்தையும், நமது நீண்ட வரலாற்றையும் அவர்களுக்குத் தெரியவில்லை. இப்போதுதான் அது அவர்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. இது வெளி நாட்டில் வாழும் இந்தியர்களால் உண்டாகி இருக்கிறது. இதை யாரும் மறந்து விடக்கூடாது. பாகிஸ்தான், காலிஸ்தான், காஷ்மீர், ஈழம் போன்ற நாட்டு இயக்கங்கள் பெரிய அளவில் இங்கே இயங்குகின்றன. இந்த நாட்டு அரசியல்வாதிகளைக் கையில் போட்டுக் கொண்டு, நம் நாட்டைப் பற்றி இழிவான செய்திகளை பரப்புகின்றன. இந்த அரசியல்வாதிகளும் அவர்கள் சொல்வதை நம்பிக்கொண்டு நம் நாட்டை அவதூற்றுக்கு ஆளாக்குகிறார்கள். இதை முறியடிக்க வெளி நாட்டு இந்தியர்களின் உழைப்பு மிகவும் அவசியம். இந்துக்களைக் கேவலமாக நினைத்து வளர்த்திருக்கிறார்கள். இதை மாற்றத்தால் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி உழைக்கிறோம்.   20:31:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
17
2019
அரசியல் மக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை மோடி
கொள்ளை அடித்தவர்கள் எண்ணிக்கை நமது சனத்தொகை அளவுக்கு இருந்தால், எங்கிருந்துத் தொடங்குவது? எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் தங்களது எண் வருவதற்காக வருடக் கணக்கில் காத்திருக்கின்றன? சட்டங்கள் பல மிகவும் பழமையானவை. தண்டனைகள், அபராதங்கள் மிகவும் குறைவானவை. பூனைக்கு யார் மணி கட்டுவது?   19:19:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
17
2019
அரசியல் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் அமித்ஷா
வரலாறு என்பது ஒரு கதை மாதிரி. அதை யார் எழுதுகிறார் என்பதை பொறுத்து முடிவு மாறும். இந்திய வரலாற்றில் பல வன்முறை சம்பவங்களும், சமூக அநீதிகளும் நடந்திருக்கின்றன. அவற்றைப் பட்டியல் போட்டால் பக்கங்களுக்கு முடிவே இருக்காது. எல்லோரும் ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒத்து கொள்ளும் படியாக வரலாற்றை எப்படி எழுதுவது?   19:14:07 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
17
2019
கோர்ட் அயோத்தி வழக்கு வக்கீல் ‛‛நாடகம்
இந்த மாதிரி விஷயங்களுக்கு National Referendum என்ற முறையை சட்டத்தில் கொண்டு வர வேண்டும். அதாவது அரசும், நீதி மன்றமும் விஷயங்களை இழுத்தடித்துக் கொண்டே போனால், மக்கள் வாக்களித்து ஒரு தீர்வைக் கொண்டு வரும் வழி உண்டாகும். இந்தியா முழுதும் இந்த மாதிரி விஷயங்களில் மக்கள் வாக்களித்தால், பெரும்பான்மையினர் என்ன தேர்தெடுக்கிறார்களோ, அது சட்டமாகும். தவறாக அரசியல்வாதிகள் தங்களது ஆதாயத்துக்காக சட்டங்களை இயற்றினால், இந்த மாதிரி பொது மக்கள் அதை நிராகரிக்கும் சக்தி இருக்க வேண்டும். முத்தலாக், அயோத்தியா, சபரி மலை, இட ஒதுக்கீடு, காஷ்மீர் என்ற விஷயங்களில் பொது மக்கள் எதைத் தேர்தெடுக்கிறார்களோ அது, அரசு இயற்றும் சட்டங்களை விட அதிக அதிகாரமுள்ளதாகும். மந்திரிகளை பதவியிலிருந்துத் தூக்கவும் இது பயன்படும்.   19:08:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
16
2019
அரசியல் ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் ம.பி., அமைச்சர் சர்ச்சை
ஹேமா மாலினிக்கு இப்போது எழுபது வயதிருக்கும். அந்த வயதில் கன்னம் அத்தனை சீராக இருக்காது. மேடு பள்ளங்கள்தான் அதிகம் இருக்கும். அதனால் ரோடுகளின் நிலைமை மாறாது என்று பூடகமாக சொல்கிறார்.   19:33:43 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
16
2019
அரசியல் பாக்., செல்லும் நீரை தடுப்போம் மோடி
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நதி நீரை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் இருக்கிறது. சர்வதேச நீதி மன்றத்தில் பாகிஸ்தான் முறையிட உரிமை இருக்கிறது. இது வெறும் தேர்தல் பிரச்சாரம். பாகிஸ்தானின் வாழ்வாதாரம், காஷ்மீரில் தொடங்கும் நதிகளால் ஓடுகிறது. எல்லா நதிகளும் இந்திய காஷ்மீரில் தொடங்குகின்றன. இந்திய அவற்றில் அணைகள் கட்டி, தனக்கு வேண்டிய நீரை எடுத்துக் கொள்கிறது. மீதி பாகிஸ்தானுக்குப் போகிறது. அதை தடுத்தால் போர் உண்டாகும். தீவிரவாதிகளை நிறுத்தா விட்டால் தண்ணீரைத் தர மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு சொல்லலாம். ஒரு வேலை மோடிக்கு அந்த எண்ணம் தோன்றியிருக்கலாம். பாகிஸ்தானை போர் தொடுக்கத் தூண்டினால், அதன் பொருளாதாரம் அழிந்து விடும். அதை வைத்து அதை சிறிய நாடுகளாக்கி விடலாம் என்று ஒரு எண்ணம் இருக்கலாம். ஆனால் அணு ஆயுதப் போரை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.   19:31:28 IST
Rate this:
2 members
1 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் பிரதமரின் நடவடிக்கைகளை அரசியலாக்க கூடாது குஷ்பு
தமிழகத்தில் இருக்கும் குப்பைகளை (திராவிட கட்சிகள், மத மாற்ற இயக்கங்கள், தீவிரவாதம், ஊழல்) இதே போல அகற்றப் போகிறேன் என்பதை மோடி இந்த சிறிய விளம்பரத்தின் மூலமாக சொல்லி விட்டார்.   22:41:41 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
15
2019
கோர்ட் அயோத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை துவக்கம்
பாபரின் ஆணையில் இந்து கோயில் இடிக்கப் பட்டு ஒரு மசூதி கட்டப்பட்டதை மீர் பாகி என்பவர் பட்டாவில் எழுதியிருக்கிறார். இது மட்டுமல்ல, முஸ்லீம் அரசர்கள் பல இடங்களில் இந்து கோயில்களை இடித்து அதன் மேல் மசூதி கட்டியிருக்கிறார்கள். காசி விசுவநாதர் கோயிலின் புனிதம் கெடுக்கப்பட்டு அதன் ஒரு பாதியில் மசூதி இருக்கிறது. மதுராவில் அதே போல. டெல்லியில் முதன் முதலாக, பிருதிவி ராஜை தோற்கடித்ததும், கோரி முஹம்மதின் அடியாட்கள் அங்கிருந்த இந்து கோயில் மேல் குதுப் மினாரைக் கட்டினார்கள். அதற்குப் பெயர், "கவ்வாத் உல் இஸ்லாம்" (இஸ்லாமின் வலிமை). அங்கேதான் புகழ் வாய்ந்தத் துருப்பிடிக்காத தூண் இருக்கிறது. எங்கு சென்றாலும் முஸ்லிம்கள் ஏற்கனவே இருப்பதைத் தங்களதாக்கிக் கொண்டு, அதைத் திரும்பத் தர மறுக்கிறார்கள். இசுரேலில் டோம் ஆப் தி ராக் என்ற இடத்தில் மசூதியைக் கட்டி வைத்திருக்கிறார்கள். துருக்கியில் ஹாகியா சோபியாவின் கதியும் அதேதான். இவர்கள் மற்றவர்களின் மத சார்பின்மையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களை பொறுத்தவரை மற்றவர்களுக்கு இடம் எதுவும் கிடையாது. உரிமைகளும் கிடையாது. மற்றவர்கள் பெரும்பான்மையாக இருந்தால் உடனே தங்களது உரிமைகளுக்காவும், சலுகைகளுக்காகவும் போராடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பெரும்பான்மையானால், மற்றவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. துருக்கிய, இஸ்லாமிய சுல்தான்கள் செய்த மாற்றங்களை நாம் திரும்ப மாற்ற வேண்டும். இந்திய நமது நாடு. நமது கோயில்கள் நமக்கு சொந்தம். அடுத்தவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு அதில் உரிமை கொண்டாட விடக்கூடாது. மத சார்பின்மை என்றால் இந்துக்கள் அனைவரும் இளித்த வாயர்கள் என்று பொருளல்ல. அவர்களது மசூதிகளை இடித்து அவற்றின் மேல் கோயில்கள் கட்ட வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. எங்களது பாரம்பரியத்துக்கு சொந்தமானதை விட்டு விலகுங்கள் என்று கேட்கிறோம். அதுவும் சட்ட பூர்வமாகக் கேட்கிறோம். இதே முஸ்லீம் நாடாக இருந்தால், எந்த மசூதியின் மீதும் ஒரு கோயிலோ, சர்ச்சோ இருந்தால் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். நேராக அடுத்து மசூதியைக் கட்டி முடித்திருப்பார்கள். நாம் இளித்த வாயர்களாக, முதுகெலும்பில்லாதவர்களாக எத்தனை காலம்தான் இருப்போம்?   21:33:55 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
15
2019
அரசியல் நான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன் கமல்
நேர்மையாக இருப்பது எல்லோருக்கும் தேவை. நாம் மட்டும் தனியாகவோ, இல்லை முழு சர்வாதிகாரம் பெற்றோ இருந்தால், நேர்மையாக இருப்பது சுலபம். ஆனால் அரசியல் என்பது ஒரு சாக்கடை. நம்மை சுற்றி இருப்பவர்களும், நமக்கு கீழே இருப்பவர்களும் நேர்மை அற்றவர்களாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். நல்ல ஆசிரியராக இருந்தாலும், கத்திக் கூச்சல் போட்டு, கவனம் செலுத்தாத மாணவர்கள் இருந்தால், அது பயனற்றதாகி விடும். தலைவர் நேர்மையாக இருந்தாலும், இருக்க முயற்சித்தாலும், கட்டுக்கடங்காத கும்பல் இருந்தால் அது நல்லாட்சியைத் தாராது. கமலை சுற்றி யார் இருக்கிறார்கள்? கமலுக்குப் பின்னால் யார் வருவார்கள்? அவர்களுக்கும் அதே எண்ணம் இருக்கிறதா? மற்ற கட்சிகளிலிருந்து தாவி வரும் சந்தர்ப்பவாதிக் குரங்குகளை கமல் ஏற்றுக்கொண்டால், அவர்கள் கட்சிப் பூமாலையை உடனேயே பிய்த்து உதறி விடுவார்கள். அரசியலில் கட்சி தாவி வருபவர்கள் ஏராளம். அவர்களை வைத்துத்தான் பெரும்பான்மை அடைய முடியும். அவர்கள் அடிக்கும் கும்மாளத்தைப் பார்த்தும் பார்க்காதது போல இருக்க முடியுமா? பேசுவது சுலபம். காந்தி வழி நடத்திய காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை எவ்வளவு கேவலமாகி விட்டது? இது சினிமா அல்ல, மூன்று மணி நேரத்தில் வில்லன்களை ஒழித்து, காதலியைக் கரம் பிடித்து டூயட் பாட.   21:02:26 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
வேலன் அவர்களுக்கு, சீமான் சும்மா வாயை விடுகிறார். மக்கள் என்ன கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை சொல்கிறார். அவரது திட்டங்களில் பல இந்த காலத்தில் பயன் தராது. அரசாங்கமே எல்லாம் எடுத்து நடத்த வேண்டும் என்று அவர் சொல்வது தரித்திரத்தில் கொண்டு விடும். தவிர அவர் வாயை விடும் பல திட்டங்களுக்குப் பணம் எங்கேயிருந்து வரும் என்று அவர் சொல்வதில். "நான் அதை செய்வேன், நான் இதை செய்வேன்" என்று சிறிய பையனைப் போலப் பேசுவது நிர்வாகத் திறமையின்மையைக் குறிக்கிறது. போராடுவோம் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றவர்களுக்கு, அது ஒன்று தான் தெரியும். பதவிக்கையைக் கையில் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று அவரைப் போன்றவர்களுக்குத் தெரியாது. அவரை சுற்றி யார் இருக்கிறார்கள்? அவர்கள் சீமானைப் போலவே எல்லாம் செய்வார்களா, அவர்களுக்கு என்ன ஆளும் தகுதி இருக்கிறது, சீமான் பின்னால் ஒளிந்து கொண்டு அவர்களும் ஊழலில் ஈடு பட்டால் சீமானால் என்ன செய்ய முடியும்? மொழியை வைத்து மக்களை இணைக்க முடியாது. அவர் தேடும் ஒற்றுமைக்கு ஒரு எதிரி எப்பொழுதும் தேவைப் படுகிறது. எதிரியை வைத்து வரும் ஒற்றுமை விரயத்தில்தான் முடியும். அவர் பெற்ற தகுதி சிறையில் இல்லை மன நோய் மருத்துவ மனையில் இருப்பது. வெறி பிடித்த ஆசாமிகள் சிந்திப்பதில்லை. ஹிட்லர் என்ன செய்தார் என்ற வரலாறு இருக்கிறது. சீமான் பேசுவது ஹிட்லர் பேசுவதை போலவே இருக்கிறது. வெறியை வைத்து இளைஞர்களை நன்றாகத் தூண்டி விட முடியும். ஆனால் ஒரு நாட்டையோ, மாநிலத்தையோ நிர்வாகம் செய்ய முடியாது. தமிழகம் இப்போதுதான் வறண்டு ஒரு பெரியார் மண்ணாக மாறியிருக்கிறது. சீமானிடம் அதை ஒப்படைத்தால் அது சுடுகாடாக மாறும்.   03:33:24 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X