S. SIVAKUMAR : கருத்துக்கள் ( 10 )
S. SIVAKUMAR
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
17
2020
பொது எல்லையில் மோதல் ஏற்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
இந்திய வீரர்களின் மரணத்திற்கு நாம் நம்முடைய கடுமையான கண்டனத்தை கூறவேண்டும். ஆனால் அதே சமயத்தில் நாம் ஒன்றை மறக்க கூடாது, எதிர்ப்பை காட்டுவது என்பது உணர்ச்சி வசப்பட்டு செய்வது அல்ல, உண்மையில் நாம் செய்யவேண்டியது நிரந்தரமாக சீன பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும். அதற்க்கு முதலில் நாம் நிரந்தர தீர்மானமாக எந்தசூழ்நிலையிலும் சீன பொருட்களை வாங்குவது இல்லை என்று முடிவு எடுக்க வேண்டும். அதாவது,சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சமாதானமோ அல்லது நல்ல தீர்வு ஏற்பட்டாலும் நாம் எப்பொழுதும் சீன பொருட்களை வாங்குவது இல்லை என்று. நம்மில் எத்தனை பேர் இந்த முடிவை தீர்மானமாக எடுப்பார்கள். ஏன் என்றால் இந்தியாவும் சீனாவும் எப்பொழுதும் சேர்வது என்பது நடக்காத காரியம் , ஏன் என்றால் இரு நாடுகளும் ஆசியாவில் போட்டியிடும் நாடுகள் , இந்தியாவின் வளர்ச்சி ஒரு போதும் சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியாது . இப்போது இந்த சம்பவங்களும் இந்தியாவை மிரட்டி வைப்பதற்காக மட்டுமே, சீனாவை மிகவும் பணக்கார நாடாக மாற்றி வைத்திருக்கும் பெருமை மிகு நாடுகளில் நம் இந்தியாவும், இந்திய மக்களாகிய நாமும்,மிக முக்கிய பங்கு உண்டு.இனியாவது நாம் உண்மையில் விழித்து கொண்டு, யாராவது இறந்தால் மட்டும் உணர்ச்சி வசப்படுவதை நிறுத்தி ஆக்க பூர்வமாக சிந்தித்து செயல் ஆற்றுவோம் என்று தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.   17:47:44 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
29
2019
அரசியல் இந்தி வளர்ப்பு அமைச்சர்கள் விருப்பு
ஹிந்தி மொழி கற்பது தவிறில்லை, மற்றும் மத்திய அமைச்சர்களும் ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தருவதும் தவறில்லை. உலக அரங்கில் ஹிந்தியை பரப்புவதும் அந்த மொழிக்கு முக்கியத்துவம் தருவதும் தவறில்லை. ஆனால் இந்தியாவில் மாநில வாரியாக நிறைய மொழிகள் இருக்கிறது. அத்தனை மொழிகளும் சிறப்பு வாய்ந்தவை, அவற்றுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றால், மத்திய அரசு அந்த மாநிலத்தையே ஒதுக்கி வைத்து விட்டதாக அர்த்தம் ஆகிவிடும். பிறகு அந்த மாநிலத்தின் மேல் உரிமையோ அதிகாரத்தையோ பலன்களையோ பெரும் உரிமையை மத்திய அரசு இழந்துவிடும். இதை எப்பொழுதும் எந்த அரசாக இருந்தாலும் மறந்து விட கூடாது.ஆங்கிலத்தை கற்பவர்கள் ஏன் ஹிந்தியை கற்க மாட்டார்கள், அந்த மொழியின் மேல் நம் சுயநல அரசியல்வாதிகள் ஒரு தவறான அபிப்பிராயத்தை நம்முல் ஏற்படுத்திவிட்டார்கள். அதை நாம் உடைத்தெறிய வேண்டும். ஹிந்தியை நம் உரிமைக்காகவும் நம் மொழியை காப்பதற்காகவும் பயன்படுத்தவேண்டும். நாம் சொல்வது மத்திய அரசுக்கு முதலில் புரியவேண்டும். நம் MP களை நாடாளுமன்றத்தில் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது, ஆங்கிலமும் சரியில்லை இதில் இவர்கள் பேசும் ஆங்கிலம் அங்குள்ள யாருக்கும் புரிய போவதில்லை , ஏனென்றால் அங்குள்ளவர்கள் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இதில் நம்மாளுங்க தமிழில் வேறு பேசுகிறார்கள். ஓட்டு போட்ட மக்கள் தான் ஏமாளிகள்.   20:39:06 IST
Rate this:
7 members
1 members
2 members

ஜூலை
29
2019
அரசியல் தாவும் எம்எல்ஏ பாவம் காங்கிரஸ்
தாவுகிற குரங்குகளை பற்றி கவலை படாமல் அடுத்து என்ன செய்வது என்று என்பதை பற்றி மட்டும் ஆலோசித்தால் காங்கிரஸ் கட்சி பலம் பெரும் . காங்கிரசின் பலமே அதன் தலைமை ஆகும். உறுதியான தலைமை வேண்டும். இளைஞனாக இருந்தும் ராகுலுக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இப்படி அமைதியாக இருப்பதும் ஓடி ஒளிவதும் , அதிரடி முடிவு எடுத்து பழையது மொத்தமாக துடைத்து ஒழித்து , புதியவர்களையும் குறிப்பாக இளைஞர்களையும் கட்சியில் சேர்த்து முக்கியமாக தமிழகத்தில் அதை உடனடியாக செய்து அடுத்த 5 ஆண்டுகளில் கட்சியை வேற ஒரு புதிய பரிணாமத்திற்கு கொண்டு சென்றால். காங்கிரஸின் ஆட்சி நிச்சயம்.   20:08:02 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
29
2019
அரசியல் தாவும் எம்எல்ஏ பாவம் காங்கிரஸ்
தாவுகிற குரங்குகளை பற்றி கவலை படாமல் அடுத்து என்ன செய்வது என்று என்பதை பற்றி மட்டும் ஆலோசித்தால் காங்கிரஸ் கட்சி பலம் பெரும் . காங்கிரசின் பலமே அதன் தலைமை ஆகும். உறுதியான தலைமை வேண்டும். இளைஞனாக இருந்தும் ராகுலுக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இப்படி அமைதியாக இருப்பதும் ஓடி ஒளிவதும் , அதிரடி முடிவு எடுத்து பழையது மொத்தமாக துடைத்து ஒழித்து , புதியவர்களையும் குறிப்பாக இளைஞர்களையும் கட்சியில் சேர்த்து முக்கியமாக தமிழகத்தில் அதை உடனடியாக செய்து அடுத்த 5 ஆண்டுகளில் கட்சியை வேற ஒரு புதிய பரிணாமத்திற்கு கொண்டு சென்றால். காங்கிரஸின் ஆட்சி நிச்சயம்.   20:04:04 IST
Rate this:
7 members
0 members
8 members

ஜூலை
29
2019
அரசியல் காங்., தலைவராக மீண்டும் ராகுல்?
evvalavu paarambariyam mikka oru katchi..innikki ivvalavu thadu matrathodu.. endha katchiyaaga irundhaalum mana urudhi mikka thalaivar irundhaal mattumey andha katchiyai pinpattrubavargalum nambikkaiyodu iruppargal. Rahul wake up. stop acting and be active...   17:09:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
16
2019
அரசியல் தபால் துறை தேர்வு தமிழில் எழுதலாம்
திரு ரவிசங்கர் அவர்களே , மிக்க நன்றி . உங்களுடைய முடிவு மாநில உரிமைக்கு மதிப்பு அளிப்பதாக உள்ளது. ஆனால், தன் தாய்மொழியில் தேர்வு எழுதும் உரிமைக்காக போராடும் நிலைமை ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்து ஒழிய படவேண்டும்.   16:35:04 IST
Rate this:
5 members
0 members
8 members

ஜூலை
14
2019
சம்பவம் மாஜி அதிகாரி வீட்டில் 100 சவரன் கொள்ளை
அவங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணமா இருக்காது , அப்படின்னா இப்படி அஜாக்கிரதையா விட்டுட்டு போவாங்களா. அம்பை மட்டும் தேடாமல் எய்தவர்களையும் தேடினால் மட்டுமே குற்றம் தடுக்க படும். இல்லையென்றால் குற்றம் தொடரும்.   15:28:32 IST
Rate this:
0 members
1 members
0 members

ஜூலை
15
2019
அரசியல் ஜூலை 18 - கர்நாடகாவில் நம்பிக்கை ஓட்டெடுப்பு
ஆட்சியை தக்க வைக்க முடியாதவர்கள் பதவி விலகுவது தான் சரி.   15:19:09 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
14
2019
அரசியல் காங்., தலைவராக ராகுல் தொடர்கிறாரா?
தோல்வியை கண்டு துவளாத மனஉறுதி மிக்க ஒரு தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு தேவை. தன் கட்சி தலைவர்களை பணிய வைக்க ராஜினாமா நாடகம் ஆடவேண்டிய நிலைமையில் இருக்கும் ஒருவரால் கட்சியை வழிநடத்தும் திறமை நிச்சயம் கிடையாது. அனால் காங்கிரஸின் நிலைமை ராகுலை விட்டால் ஆள் இல்லை.   15:15:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
14
2019
அரசியல் காங்., தலைவராக ராகுல் தொடர்கிறாரா?
இது தான் காங்கிரஸ் பார்ட்டியின் பலவீனம் . அவங்களுக்கு ஸ்ட்ரோங்கான தலைவர் இல்லை அதனால தான் ஜெயிக்க முடியாம இருக்காங்க. மற்ற தலைவர்களை பணிய வைக்க ராஜினாமா செய்யும் நிலைமை மிகவும் பரிதாபம். ஒரு இளைஞ்சராக இருந்தும் போராட்ட குணம் இல்லாத ஒரு தலைவர்.   15:05:07 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X