கிட்டத்தட்ட என் அம்மாவின் நிகழ்கால வாழ்க்கை மாதிரியே இருக்கிறது. மிகுந்த உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். என் மனைவியும் என் ஏழு வயது மகனை என் பெற்றோரிடம் பேச பழக அனுமதி மறுக்கிறாள். என்னால் சண்டை போட்டுக்கொண்டே இருக்க முடியவில்லை. என் பெற்றோர் மற்றும் மனைவி, பிள்ளை மகிழ்ச்சியை என்னால் உருவாக்க முடியவில்லை. மனதும் வருத்தப்படுகிறது. கடவுள் தான் அருள் புரியவேண்டும்
27-டிச-2020 15:43:03 IST
திருமதி சகுந்தலா அதிகமாகவே ஆண்களை வெறுக்கிறார். அவர் எழுதிய அத்தனை குணங்களைக் கொண்ட அநேகம் பெண்களை என்னாலும் காட்ட முடியும். எல்லா ஆண்களும் ஆதிக்கம் செலுத்துவதில்லை. என் நண்பரின் மனைவி அவர் கொண்டுவந்த சீர் வரிசை பாத்திரங்கள் அனைத்தையும் விற்று காசாக்கி அவர் பெற்றோர் பாதுகாப்பில் வைத்துள்ளார். தன் கணவருடைய நகைகளையும் வைத்துக்கொண்டு இன்னும் பணமே தரவில்லை என்றும் குற்றம் சுமத்துகிறார். திருடனையும் திருத்தும் குணம் தாய்மைக்கு உண்டு. அப்படி இருக்க திருப்பி அடிக்க சொல்வது சரியா? ஒருவேளை எசகுபிசகாகி விட்டால் குழந்தையின் கதி?
12-செப்-2020 11:11:08 IST
என் நண்பரின் மனைவி தான் கொண்டுவந்த சீர் எல்லாவற்றையும் விற்று காசாக்கி வைத்துக்கொண்டார். தங்க நகைகளையும் அவர் பெற்றோர் வசம் ஒப்படைத்துவிட்டார். குறை சொல்லி பழி சுமத்தி தன் கணவனுக்குரிய நகைகளையும் எடுத்துக்கொண்டு இப்போதும் அவர் கணவன் பணம் கொடுப்பதில்லை என்று குறை கூறிக்கொண்டு தான் இருக்கிறார்.திருடனைக்கூட திருத்தும் பக்குவம் தாய்மைக்கு உண்டு.
12-செப்-2020 08:43:17 IST
தாய்ப்பாலை தன்னலம் கருதா தாய்மார்கள் பலர் தானமாக கொடுத்தனர் அன்றும்... கொடுக்கின்றனர் இன்றும். கொடுப்பர் என்றும்.இதனை மற்றுமொருமுறை எடுத்துக்காட்டியது கதை. வாழ்த்துக்கள். அன்றைய நாளிதழில் ஆடு நாயிடம் பால் குடித்த செய்தி கூட வெளியாகி இருந்ததே. நல்ல ஒற்றுமை...
25-ஆக-2020 13:03:17 IST
ராமாயணம், மகாபாரதம்,சாண்டில்யன், கல்கி, சுஜாதா, பாலசந்தர், பாலமுரளி கிருஷ்ணா... அப்பப்பா ... அருமையான தகவல் தொகுப்பு... பாராட்டுக்கள். ஆனாலும் பிரபல எழுத்தாளர்கள், பிரபல இசை மேதைகள் முன் இந்த கதை எடுபடாது என்பதே எனது எண்ணம்.
25-ஆக-2020 12:56:14 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.