ரத்தினம் : கருத்துக்கள் ( 574 )
ரத்தினம்
Advertisement
Advertisement
Advertisement
மே
20
2022
அரசியல் ஹைதராபாதில் நடந்தது போலி என்கவுன்டர் விசாரணை ஆணையம் பகீர் அறிக்கை
//2019 நவம்பரில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார்.// அந்தப் பாவப்பட்ட பெண் மருத்துவரின் மனித உரிமை பற்றி ஏன் யாருமே வாய் திறப்பதில்லை?   02:36:11 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
20
2022
அரசியல் பிரதமர் நாட்டை பாதுகாக்க வேண்டும் ராகுல்
ஐயா நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கண்ணும் கருத்துமாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் தன் பணியைச் செவ்வனே செய்வதால்தான், உங்களைப் போன்றவர்களும் இங்கு சுகமாக சுதந்திரமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாறெல்லாம் கமெண்ட் அடிக்க முடிகிறது என்பதை மறக்கவேண்டாம். அவர்தான் உண்மையில் வாக்களித்தோர், வாக்களிக்காதோர் என்ற பாகுபாடு எதுவும் பார்க்காமல், ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் சேர்த்தே உழைக்கிறார், தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள்வரை அனைவரும் அவ்வாறே நடக்குமாறு பார்த்துக்கொள்கிறார் என்கிற உண்மை ஞாபகமிருக்கட்டும். ஜெய் ஹிந்த்   01:33:48 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
5
2022
முக்கிய செய்திகள் அரசு பஸ்சில் 5 வயது வரை ‛‛ஓசி அரசு அறிவிப்பு
//..பாமர மக்களிடம் மானாவாரியாக வாங்கும் மறைமுக வரியில் சிறிய தொகையை கட்டணமில்லா பயணம்,விலையில்லா பொருள் கொடுத்தால்..// தேசத்துலே எங்க 'பிராந்தியத்துல'தான் பாலாறும் தேனாறுமா ஓடுதுன்னு அறுவது வருஷமா ரீல் உட்டுக்கிட்டிருக்கீங்களே, பாமர ஜனங்க இன்னும் தங்களோட ஐந்து வயதுப்பிள்ளைகளுக்குக் கூட பஸ் கட்டணம் எடுக்கமுடியாமல் இருப்பதால்தானே இந்த அறிவிப்பு தேவைப்படுகிறது? அப்புறம் என்ன மற்ற மாநிலங்களைவிட வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்று கதைக்கிறீர்கள்? அத்தியாவசிய பொருட்களுக்கும், போக்குவரத்திற்குமே இலவசம் தேவைப்படும் அளவிற்குத்தான் மக்கள் உள்ளார்கள் என்றால் அது என்ன விதமான வளர்ச்சி என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.   01:16:33 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
4
2022
அரசியல் நீட் விலக்கு மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார் கவர்னர்
//ஒன்றிய அரசே இதற்கு ஒரு வழியை கண்டுபிடித்து சரணாகதி அடைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை....// ஹாஹாஹா... ஊப்பீக்களின் உலகமே தனிதான்.   00:15:53 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
25
2022
சம்பவம் கோயில்களை இடிக்க கடும் எதிர்ப்பு உடுமலை அருகே போலீஸ் தடியடி
பாஷா படத்துல ஜனகராஜ் ஒருத்தரைப் புடிச்சி வெச்சிக்கிட்டு சில விஷயங்களைக் கேக்கறதுக்கு முன்னாடி ' கோவிலுக்கு ஏன் போன?ன்னு கேப்பாரு. 'சாமி கும்பிட'ன்னு இவர் சொல்லுவாரு. அடுத்து 'உன் பேரென்ன?'ன்னு கேப்பாரு. அவரு பேரை சொன்னதும் 'ஏன்? இப்பல்லாம் ___களை மூடிட்டாங்களா?'ன்னு கேப்பாரு. அந்த பாஷா பட சீன் ஏனோ இப்போ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது. மன்னிச்சுக்குங்கய்யா.   02:14:42 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
26
2022
பொது உ.பி.,யில் இலவச ரேசன் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு
தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் (அட.. சமீபத்துல தமிழக நிதி அமைச்சர் சொன்னதுங்க), 'நாங்க எல்லாம் சூப்பர் மூளை உள்ளவிங்க, உத்திரப்பிரதேசத்துல உள்ளவிங்கதான் கோமியக்குடிக்கி, பின்தங்கியவிங்க'ன்னு திராவிடர்கள் சொல்லும்போது, ' சரிங்க. அப்புடீன்னா, இங்க எதுக்கு ரேஷன் அரிசி, அங்கதான குடுக்கணும்'ங்கறது இயற்கையாகவே எழும் கேள்வி இல்லையா?   02:05:53 IST
Rate this:
2 members
0 members
2 members

மார்ச்
25
2022
பொது உரிமம் பெற்ற பிரசாத கடைக்கும் சீல் பின்னணி என்ன? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் உள்நோக்கம் அம்பலம்
//இந்த செய்திக்கும் உங்கள் கருத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா துர்வாசரே...// எதுக்கும் விடிஞ்சப்புறம்(?), கொஞ்சம் படிச்சிப்பாருங்களேன். ஒருவேளை புரியலாம்.   01:54:18 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
25
2022
பொது உரிமம் பெற்ற பிரசாத கடைக்கும் சீல் பின்னணி என்ன? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் உள்நோக்கம் அம்பலம்
//இந்த அதிகாரி தரிசனம் செய்யும் போது, இவனது அழிவுக்காக்க சங்கல்பம் செய்து பூஜை நடத்தியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.. // இதைவிட மோசமானவர்களையே இதற்குமுன்னிருந்த ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில் பார்த்து அவர்களிடமிருந்து துன்பங்களை அனுபவித்து வந்தாலும், இறைவனிடம் 'இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு' என்று வேண்டுவதைத் தவிர வேறு தெரியாத இறைக்கூட்டமய்யா அது. விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனாலும், பெரும்பாலான இறைப்பணி செய்பவர்கள், இறைவன் மேனியைத் தொட்டு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற சிவாச்சாரியார்கள், குருக்கள்கள், வேதியர்கள், வைணவர்கள், தவறு செய்யும் மனிதர்களை சுட்டிக்காட்டி திருந்தத்தான் வேண்டுகிறார்கள், வழிகாட்டுகிறார்கள். அப்படியும் மீறினால், அதையும் ஆண்டவன் பார்வைக்கே விட்டுவிட்டு 'என் விதி இதுதான் போல' என்று நொந்துகொண்டே வாழ்க்கையைக் கழிக்கிறார்களேயொழிய, வேறு தவறான வழிமுறைகளை மனதாலும் நாடுவதில்லை. அவர்களுக்கு சரியான சமூகப் பாதுகாப்பும் இல்லை. இவர்களின் வாழ்க்கை முறை உயர யாரும் நினைப்பதும் இல்லை. (ஆனால், அவர்களின் தட்டில் விழும் சில்லறைக்கு மட்டும் அலையும் கும்பல் இங்கு பல உண்டு).   01:51:13 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
25
2022
பொது உரிமம் பெற்ற பிரசாத கடைக்கும் சீல் பின்னணி என்ன? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் உள்நோக்கம் அம்பலம்
//..மக்களுக்கு ஆரோக்கியமான பிரசாதம் வழங்க சொல்லலாம்// அதைத்தானே குடுத்துக்கிட்டிருக்காங்க? அப்புறமும் எதுக்கு மிரட்டல், பழிவாங்கல் படலம்? யார் கொடுத்த தைரியம் அந்த கலியுகக் கடவுள் கந்தனின் சந்நிதியிலேயே இவ்வளவு அரட்டல் உருட்டல்கள்? கர்மத்தைத் தொலைக்க கோவிலுக்குப் போவார்கள். அங்கு போயும் பாவத்தைத் தேடித்தேடி சம்பாதிக்கும் இந்த மூடர்கூடத்தை என்னவென்று சொல்ல? அந்த ஆண்டவன் சிரித்துக்கொண்டே பிழை பொறுக்கிறான். என்று ஆணவத்தில் ஆடும் பம்பரத்தை சட்டென்று தலையில் தட்டி உட்காரவைக்கப் போகிறானோ? அதுவரை ஆடலாம், சுற்றலாம், உருளலாம்.   01:42:05 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
26
2022
உலகம் தாக்குதல் தீவிரம் பிரிட்டன் எச்சரிக்கை
ஹை.. ஹை.. அது எப்புடி? அதுவும் '..future governments'-ங்கறதெல்லாம் கொஞ்சம் டூ மச். :-). மற்றபடி, ஜெர்மனி உள்பட ஐரோப்பிய நாடுகள் எல்லாமே இப்பொழுது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை நிறுத்தவில்லை என்பதோடல்லாமல், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி, ஆண்டு இறுதி வரை ரஷ்யாவிடமிருந்து இவற்றை வாங்குவதாக அறிவித்தும்விட்டன.   01:20:58 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X