Vaduvooraan : கருத்துக்கள் ( 1257 )
Vaduvooraan
Advertisement
Advertisement
மார்ச்
6
2019
அரசியல் ம.தி.மு.க., நகர செயலர் விலகுவதாக அறிவிப்பு
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா மாதிரி ம.திமு.க லெட்டர் பேட் கட்சியான பிறகு எத்தனை சீட் தருவார்கள் என்று எதிர்பார்த்தார் இந்த நகர் செயலர்? அது போகட்டும், அதென்ன ஸ்தாலினை தளபதி என்ற திமுகவுக்கே உரித்தான பட்டப்பெயருடன் தளபதி என்று கூப்பிடுகிறார்? நிச்சயம் அடுத்து மோடி ஆட்சிதான். அவர் தமிழ் நாட்டுக்கு வரப்போ எல்லாம் கறுப்புக்கொடி காட்டுற வேலையை வைகோ தலைமையின் கீழ் செய்து கொண்டு சும்மா இருக்கக்கூடாதோ?   19:57:00 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
அரசியல் புது ரூட்டில் போகுது கமல் கட்சி!
அடிக்கடி கருப்பு சட்டையை உதறி போட்டு கொண்டு திக கும்பல் நடத்தும் கூட்டங்களுக்கு போய், "நானும் நாத்திகன்தான் அய்யா வழிதான் என் வழி" என்று வழி வழி என்று வழிவார். அது போல ஹிந்து நம்பிக்கைகளை நக்கல் அடிப்பார். இப்போ வேண்டுமானால் சொல்லட்டுமே எனக்கு ஆத்திகர்கள் ஹிந்துக்கள் வோட்டு வேண்டாம் என்று   14:36:52 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
சிறப்பு பகுதிகள் ராகுல் கலக்கம்
.'மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு நெருங்கி வரும் நேரத்தில், இவர்களது சண்டையால், எல்லாமே கை நழுவிப் போய் விடும் போலிருக்கிறது"- அந்த மாதிரி வாய்ப்பு ஏதாச்சும் இருக்குன்னு இப்போ பாகிஸ்தானுக்க எதிரான இந்த வான்வழி தாக்குதலுக்கு அப்புறம் கூட நம்புறீங்களா, என்ன? காங்கிரஸ வெச்சு காமடி பண்ணாதீங்க, பாஸ்...ஏற்கனவே பஞ்சர் ஆகி பாகிஸ்தான திட்டிட்டு இருக்காங்க... இதுல நீங்க வேற...   03:36:42 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
பொது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்
வாட்ஸாப்ப்புல ஒரு வீடியோ வந்துச்சி: நாலு இந்திய ராணுவ வீரருங்க செவனேன்னுன்னு காஷ்மீர் தெருவுல நடந்து போயிட்டு இருக்காங்க. அவங்க பின்னாடி ஒல்லியா செவப்பா அழுக்கா குளிக்காத காஷ்மீர் பயலுவ கெட்ட கெட்ட வார்த்தையிலே திட்டிட்டு கூடவே தெரு நாயிங்க மாதிரி வரானுவ அதுல ஒரு பய ஒரு வீரரின் கையில இருக்கிற ஹெல்மெட்டை தட்டி விட்டு காலாலே உதைச்சு தள்றான். முகத்துல ஒரு சலனம் டென்சன் காட்டாது நம்ம ராணுவ ஆளுங்க பொறுமையா அந்த நாயிங்கள கடந்து போறாங்க. இன்னி வரைக்கும் கண்ணுல நிக்கிதுங்க அந்த காட்சி வேற எந்த ராணுவமாவது அவ்ளோ பொறுமையா கட்டுப்பாடோட இருக்குமான்னு யோசித்து பாருங்க இப்போ அந்த மாதிரி செய்ய சொல்லுங்களேன் பார்க்கலாம் - காஷ்மீர்ல மட்டும் இல்ல இந்தியால வேற எந்த இடத்திலேயும் செய்ய முடியாது. எங்கியுமே உட்கார முடியாத படி பின் புறமே இல்லாம செஞ்சுருவானுங்க நம்ம ஆளுங்க   17:32:13 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
அரசியல் பா.ஜ.,வை வீழ்த்த தயாராகும் எதிர்க்கட்சிகள்... ஆலோசனை! வியூகம் வகுக்க டில்லியில் சந்திக்க திட்டம்
அவ்ளோ நெருக்கமா கையை தூக்கிட்டு நிக்கிறாய்ங்க. Deodorant spray பயன்படுத்தினால் எல்லோருக்கும் நல்லது. கூட்டணியும் காப்பாற்றப்படும். ஆனால் இந்த ஆளுங்களோட ஊழல் நாத்தத்துக்கு எந்த deodorant ம் சரிவராது...என்ன சொல்றீங்க?   12:03:40 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
18
2019
அரசியல் லோக்சபா கூட்டணி விட்டுக் கொடுக்கிறது அ.தி.மு.க.?
உங்கள் விருப்பத்தை சொல்லி இருக்கிறீர்கள். தவறில்லை, ஆனால் வேறு கட்சியே கிடையாதென்றாலும் திமுகவுக்கு ஒட்டுப் போடக்கூடாது என்று உறுதியாக இருக்கும் என்போன்றவர்கள் அதிமுக-பாஜக கூட்டணியை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். திமுகவுக்கு எதிரான அந்த ஒட்டு கிடைத்தாலே அது அது இந்த கூட்டணியை கரை சேர்க்கும் என்று படுகிறது   14:04:45 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
13
2019
அரசியல் மத்திய அரசு மீது சோனியா ஆவேசம்
134 வருடங்களாக சுதேசி சிந்தனையை ஒங்க செய்து சுதந்திரம் பெற்றுத் தந்த ஒரு பழம் பெரும் அரசியல் கட்சி இன்று தனது தலைமை பொறுப்புக்கான ஆளுமையை கூட அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருப்பது காலத்தின் கோலம் அல்லாது வேறென்ன? சச்சின் பைலட், மீனாக்ஷி நடராஜன், ஜோதிர் ஆதித்ய சிந்தியா என்று யாராவது இந்தியர்களை முன் நிறுத்தினால் காங்கிரஸ் பிழைக்குமோ என்னமோ? இந்த சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் அவரது நிழலான கணவர், கபில் சிபல், மணீஷ் திவாரி, அபிஷேக் சிங்க்வி, திக்விஜய், நம்ம ஊர் சிவகங்கை சீமான் இவர்களை முன் நிறுத்த முயன்றால் காங்கிரஸ் கரைந்து போவது உறுதி.   12:01:21 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
6
2019
சினிமா ஜாதியை ஒழிக்க விஜய்சேதுபதி யோசனை...
இவரு ஒருத்தர்தான் பாக்கி வந்துட்டாரு கருத்து சொல்ல...வருசம் முழுக்க நினைவு நாளு பொறந்த நாளு நூறாவது ஆண்டுன்னு மாத்தி மாத்தி ஈவேரா, அண்ணா பேரைச் சொல்லி விழா எடுத்துட்டு இருக்கோம். அப்போ அவிங்க ஒழிக்காத சாதிய, அவிங்களுக்கு தோணாத புது ஐடியா இவருக்கு தோணியிருக்கு..சாதிய ஒழிக்க கெளம்பிட்டாப்ல? நாலு படம் ஹிட் கொடுத்தா ஐடியா கொடுத்து சமூக சிற்பியா காமிச்சுக்க வேண்டியதுதான் நம்ம தலையெழுத்த பாத்தீங்களா?   06:33:18 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கூட்டணி ரகசிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மதுரையில் இந்திராவை கொல்ல குண்டர் படையை ஏவி விட்டு பிறகு நேருவின் மகளே வருக நிலையான் அரசு தருக...அப்புறம் கனி மொழி ஜெயில் வாசம் தொடங்கியதும் கூடா நட்பு...இந்த மாதிரி நெறய ஞாபகத்துக்கு வந்து தொலையுது..ஹ்ம்ம் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா   19:27:11 IST
Rate this:
6 members
0 members
29 members
Share this Comment

பிப்ரவரி
1
2019
சினிமா
பிரச்சினை என்னவென்றால் ராஜீவ் மேனன் பேசுவது போல அவரது படங்கள் பேசுவதில்லை ஆய கலைகள் 64 எல்லாவற்றையும் கரைத்து குடித்துவிட்டது போல பேசுவார் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து திறமையான நடிகர் நடிகைகளை கொண்டு வருவார். கடைசியில் ஒளிப்பதிவு ஒன்றை தவிர விஷயமே இருக்காது. மின்சார கனவு ரஹ்மான் தயவில் எதோ ஓடியது .கண்டு கொண்டேன்..மீண்டும் ரஹ்மான் தயவில் எதோ கரை சேர்ந்தது. பல ஆளுமைகள் வலுவான கதை இல்லாத காரணத்தால் அப்படியே மூழ்கி போயின.   18:32:43 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X