கட்டுரை ஆசிரியர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் குறிப்பிட்டது போல் பல பிராமணர்கள் இன்று கீழ் ஜாதி மேல் ஜாதி என்று வேற்றுமை காட்டுவதில்லை. அதை போல் மற்றவர்களும் என்று துவேஷம் காட்டுவதில்லை. இதுவும் உண்மை.
ஆனால், 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிலை இருந்ததா என்றால் நிச்சயம் இல்லை. SC/ST வன்கொடுமை சட்டம் வரும் வரை ப்ராஹ்மணர்கள் மட்டும் அல்ல மற்ற மேல் ஜாதியினரும் அவர்களை எப்படி நடத்தி இருப்பார்கள் என்பதற்கு இன்றைய சில சான்றுகள்:
1. s://www.dinamalar.com/news_detail.asp?id=2571239 ,
2. s://finance.yahoo.com/news/california-accuses-cisco-job-discrimination-004302531.html
இன்றும் இப்படிப்பட்ட இந்த கேவலமான எண்ணங்களும், அதைச் செய்யக் கூடிய துணிவும் இருக்கிறது என்றால் 70 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்து இருக்கும் என்று உண்மையாக உணர வேண்டும். இந்த விஷ விதை யாரால் விதைக்கப்பட்டது என்று அறிய வேண்டும். அதை யார் செய்து இருந்தாலும், அவர்கள் கண்டிக்க தக்கவர்கள்,ஈனமானவர்கள் காந்தி 'தீண்டாமை ஒழிப்பு' என்று சொல்லி, அவர் தான் மலம் கழித்த இடத்தை(பாத்திரத்தை) தானே சுத்தம் செய்து மற்றவர்களையும் செய்ய சொன்னார். (இதற்காகத் தான் RSS இயக்கம் காந்தியை கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பது எனது கருத்து.) ஆனால் இன்றும் மனிதர்கள் மலம் அள்ளும் அவலம் U.P. போன்ற மாநிலத்தில் நடப்பதை பார்க்கிறோம். தமிழ்நாட்டில் சாக்கடை/ மலம் குழிக்குள், மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் அவலம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதைத் தான் பெரியார், அண்ணா போன்றோர் கண்டித்தனர். அவர்கள் ஒரு போதும் தனிப்பட்ட மனிதனை கேவலப்படுத்தி பார்க்கவில்லை. அவர்கள் கண்டித்தது ப்ராஹ்மணர்களை மட்டும் அல்ல, மற்ற மேல் ஜாதி என்று நினைத்துக் கொண்டு இருக்கும் முதலியார், செட்டியார், கவுண்டர் என அனைவரையும் தான் கண்டித்தார்கள். அண்ணாவின் நூல்களை படியுங்கள். இதற்கான ஆதாரங்கள் பார்க்கலாம். பல ஊர்களில், ப்ராஹ்மண ஜாதியினரும் 'தீண்டாமை ஒழிப்பில்' பங்கு கொண்டனர். இதற்கும் பல ஆதாரங்கள் உண்டு.
ஜாதி மதம் மட்டும் இல்லை. மொழி துவேஷமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமஸ்க்ரித மொழி தேவ மொழி என்றும் மற்ற மொழிகள் நீச்ச மொழிகள் என்று எல்லாம் பெரியவர்களே பேசியது நமக்கு தெரியும். இவை அனைத்தும் தர்மத்திற்கு எதிரானவை.
ஜாதி, மத, மொழி துவேஷம் இல்லாமல் நாம் நடந்து கொள்கிறோமா என்று நமக்கே தெரியும்.
நீ முஸ்லீம், உனக்கு இங்கு சம உரிமை இல்லை. நீ கீழ் ஜாதி, உனக்கு சம உரிமை இல்லை, சமஸ்க்ரித மொழி உயர்ந்தது தமிழ் மொழி உட்பட மற்ற மொழிகள் தாழ்ந்தது என்று எல்லாம் கருத்தை பரப்பி கொண்டு இருக்காமல், பொதுவாக, நாம் நல்ல மனிதர்களாக இருப்போம். நல்லதே நடக்கும். நீதியும், தர்மமும் என்றும் வெல்லும்.
06-ஜூலை-2020 08:26:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.