எதை பேசினாலும் அதற்கு கைதட்ட பாராட்ட ஒரு கூட்டம் இருக்கும் போது எதை சொன்னால் என்ன.இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் நாடு எங்கள் தாத்தா சொத்து அதை நாங்கள் தான் வெள்ளைகாரர்களுக்கு கொடுத்து விட்டோம். இப்போது மீண்டும் தமிழ்நாட்டை திரும்ப பெற்றுக் கொண்டோம். இனி தமிழ்நாடு திராவிட நாடு என்றும் இந்த மக்கள் அனைவரும் எங்கள் அடிமைகள் என்றும் சொல்வார்கள். அப்போதும் அதே கை தட்டல் அதே ஆரவாரந்தான்.
16-மே-2022 14:47:23 IST
தாமஸ் ஜோசப்புக்கு ஆதரவு தரவில்லை என்றால் எப்படி. கட்சியை விட எனக்கு என் மதம் சார்ந்தவர் தான் முக்கியம் என்பதை நிருபித்து விட்டார். வெல்டன்
13-மே-2022 12:27:56 IST
ஆக்கிரமிப்பை அகற்ற போனால் எதிர்கட்சிகள் ஓட்டு பிச்சைக்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டால் நாடு எப்படி உருப்படும். ஆளும்கட்சி எதாவது நல்லது செய்தால் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு வரவேண்டும். அதே நேரத்தில் ஆளும் கட்சி தவறு செய்தால் அதை கண்டிக்க தவறவிடக் கூடாது. ஜனநாயகத்தை காக்க இருவரும் பாடுபட வேண்டும். வெறும் ஓட்டு அரசியல் செய்யக்கூடாது
10-மே-2022 08:58:18 IST
முன்னாள் முதல்வர் பழனிசாமி அவர்களே ஒரேயொரு சின்ன விசயத்தை ஞாபகபடுத்துகிறேன். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராடினார்கள் நீங்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்தீர்கள். அந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய உங்களுக்கு அந்த மக்கள் தந்த பரிசு உங்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யாதது. அதே மாதிரி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மெடிக்கல் காலேஜ் கொண்டு வந்தீர்கள். ஆனால் இந்த மக்களும் உங்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்கவில்லை.இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க கூடாது. அப்புறம் தேர்தல் வாக்குதியில் முடியுமோ முடியாதோ கலர்கலரா இலவசத்தை அள்ளி வீசுங்கள்.பிறகு நீங்கள் தான் அடுத்த முதல்வர்
08-மே-2022 13:02:23 IST
ஒரே குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் அரசு வேலை செய்தால் அதில் ஒருவருடைய வேலையை எடுத்து மற்ற குடும்பத்தை சேர்ந்த அரசு வேலை இல்லாத திறமைமையுள்ள நபருக்கு கொடுத்து இந்த குடும்பத்தையும் வாழ வைக்கலாம்
22-ஏப்-2022 05:43:22 IST
இப்போது உள்ள அமெரிக்கன்னு சொல்றவங்க எல்லாம் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள். உண்மையான பூர்வகுடி மக்களாகிய செவ்விந்தியர்களை கொன்று அவர்களின் நிலத்தை பிடிங்கி இப்போது அமெரிக்கன் என்ற போர்வையில் ஐரோப்பியர் ஆண்டு கொண்டிருக்கிறான்
17-ஏப்-2022 20:24:02 IST
பஸ் ஸ்டாண்டில் உள்ள இலவச பொது கழிப்பறைக்கு போக முடியவில்லை. எல்லா பஸ்ஸ்டாண்ட் கழிப்பறையும் மிககேவலமாக உள்ளது. தண்ணீர் குழாய் உடைந்தும், பேசின் உடைந்தும்,துர்நாற்றம் அதிகமாகவும்,வென்டிலேஷன் இல்லாமலும் உள்ளது.அதை தயவுசெய்து சரிசெய்யுங்கள்
21-மார்ச்-2022 14:10:00 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.