ஐயா வணக்கம் ஊர் ஊருக்கு இப்ப மெட்ரோ ரயில் என்பது மிகவும் தேவையில்லாத ஒன்று ஏற்கனவே இருக்கும் ரயில் வலைத்தளங்களில் அதிகப்படியான நகரங்களை இணைக்கும் வகையில் ரயிலை இயக்கினால் நன்றாக இருக்கும் உள்ளுக்குள்ளே 30 கிலோமீட்டர் செல்வதற்கு இவ்வளவு கோடிகள் செலவழித்து இவ்வளவு தனி நபர் சொத்துக்களை எடுத்து இது செய்வது அபத்தம் மெட்ரோவை யாரும் வேண்டும் என்று கேட்கவில்லை ஆனால் பல நகரங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து என்னும் இல்லாமல் இருக்கிறது சில வருடங்களில் பற்றாக்குறையாக இருக்கிறது இப்ப கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்காகட்டும் டெல்டா மாவட்டங்களுக்காகட்டும் இந்த பகுதிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்கலாம் கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கும் வகையில் சென்னை பெங்களூரு கன்னியாகுமரி திருநெல்வேலி காரைக்கால் ஆகியவர்களுக்கு ரயில்களை இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
31-மார்ச்-2023 11:12:28 IST
ஐயா கோவையிலிருந்து திருப்பூர் வழியாக தொடர்வண்டி பயணங்கள் மிகவும் குறைவு திருப்பூரில் தென் மாவட்ட மக்கள் சேர்ந்த பல தொழிலாளர் குடும்பங்கள் அதிகம் உள்ளனர் திருப்பூரில் உள்ளவர்கள் தென்மாவட்டம் செல்ல வேண்டும் ஆனால் கோவை அல்லது ஈரோடு சென்று ஏற வேண்டி உள்ளது அதனால் கோவையிலிருந்து புறப்படும் ரயில் திருப்பூர் ஈரோடு வழியாக நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அல்லது தூத்துக்குடி கன்னியாகுமரி கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகியோர்களுக்கு தினசரி ஒரு ரயிலையாவது இயக்க வேண்டும் கோவையிலிருந்து திருச்சி மார்க்கமாக தினசரி மூன்று ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது அனைத்துமே மூன்றுமே கோவையிலிருந்து காலை நேரத்தில் புறப்படுகிறது மாலை நேரத்தில் மயிலாடுதுறை மன்னார்குடி காரைக்காலில் இருந்து புறப்படுகிறது திருப்பூர் கோவை தொழிலாளர்கள் வேலையை முடித்துக் கொண்டு ஒரு மதியத்திற்கு மேல் புறப்பட வேண்டும் என்றால் தொடர் வண்டி பயணங்கள் இல்லை ஆகவே இந்த ஜனசதாப்தி போன்ற ரயில்களை ரயில்களைப் போன்று அங்கிருந்து மன்னார்குடி அல்லது மயிலாடுதுறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு ஈரோடு திருப்பூர் வழியாக கோவைக்கு வந்தால் மீண்டும் மதியத்திற்கு மேல் 3 மணி அல்லது இரண்டு மணி புறப்பட்டாள் கோவையில் புறப்பட்டாள் இரவு 10 மணிக்குள் திருச்சி தஞ்சாவூர் மயிலாடுதுறை கும்பகோணம் வழியாக சென்றடைந்தால் திருப்பூர் கோவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஆகவே புதியதொரு ரயில் தடங்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் இரவு நேரங்களில் திருப்பூர் கோவையிலிருந்து தற்போது அதிக ஆம்னி பேருந்துகள் செல்கின்றன
09-மார்ச்-2023 14:06:42 IST
மின் கணக்கீட்டாளர் 60 நாட்களுக்கு ஒரு முறை சரியாக வர வேண்டும் ஆனால் 60 நாட்களுக்கு மேல் 65 67 நாட்களுக்கு எடுத்தால் கண்டிப்பாக நார்மல் ரீடிங்கை விட 10 யூனிட் 20 யூனிட் எதிராக ஓடி இருக்கும் ஆனால் அதையும் சேர்த்து அவர்கள் கணக்கிட்டு கொள்கிறார்கள் 70 நாள் கழித்து எடுத்தால் பரவாயில்லை தவறு இல்லை ஆனால் அதை 60 நாட்களுக்கு உண்டான யூனிட்டை சரியாக கணக்கிட்டால் குறைத்துப் போட்டால் சரியாக இருக்கும் ஆனால் மின் கணக்கிட்டாளர் 70 நாட்களுக்கு உண்டானதையே போடுவார் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து யூனிட் பயன்படுத்துவோர் என்றால் 60 நாட்களுக்கு 300 யூனிட் ஆகிவிட்டது அதுவே 70 நாட்களுக்கு என்றால் 350 யூனிட் ஆகிவிடும் அதனை கழித்து வகுத்து 60 நாட்களுக்கு கணக்கிட்டால் எந்த தொல்லையும் இல்லை ஆனால் வரும் மின் கணக்கீட்டாளர் 70 நாட்களுக்கு உண்டான ரேடிங்கையே போட்டு விடுவார் 100 யூனிட்டுக்கு ஒரு ஸ்லாப் என்ற வகையில் 301 யூனிட்டுக்கு மேல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் இவர்கள் எடுக்கும் விடுப்பு ஆள்பற்றாக்குறை அனைத்துக்கும் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்
07-பிப்-2023 10:37:41 IST
தற்போது திருப்பூர் மக்கள் பேருந்து பயணம் செய்வது என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது..கோவில்வழி ,கலெக்டர் அலுவலகம் ,பழைய பேருந்து நிலையம், யூனிவேர்சல் தியேட்டர் மற்றும் புதிய பேருந்து நிலையம் என்று ஐந்து இடங்களில் உள்ளது..ஆனால் அணைத்து பகுதிகளுக்கும் செல்ல தொடர் பேருந்துகள் இல்லை.தற்போதைய கொராணா கால கட்டத்தில் நகர பேருந்துகளும் குறைவாக வே இயக்கப்படுகிறது..வடக்கு பகுதியில் இருந்து அதாவது ஊட்டி மேட்டுப்பாளையம்,கருமத்தம்பட்டி, அன்னூர் ,சத்தி ,கோபி ,நம்பியூர் ஆகிய ஊர்களிலுருந்து தேனீ,மதுரை,திண்டுக்கல் ,பழனி, கரூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது, எந்த ஊரிலிருந்து கிளம்புகிறதோ அங்கேயே திருப்பூர் கோவில்வழி பேருந்து நிலையம் என்று பெயர் பலகை போட்டு பயணிகளை ஏற்றி செல்ல அறிவுறுத்த வேண்டும்.பல ஓட்டுநர் நடத்துனர்கள் ஏற்றமருக்கிறார்கள்.பழைய பேருந்து நிலையது வரை மட்டும் பயணிகளை இறக்கி விட்டு காலி வண்டியாக கோவில்வழி பேருந்து நிலையம் செல்கிறார்கள்.. அதேபோல் பேருந்து கட்டணம் அதிகரித்து கொள்ளலாம்,, பழைய பேருந்து நிலையம் தாண்டி செல்வதுக்கு அடுத்த ஸ்டேஜ் கட்டணம் வசூலிக்கலாம், அதே போல் தென் மாவட்டங்களிலி ருந்து வரும் பேருந்துகள் கோவில்வழியோடு பயணிகளை இறக்கிவிட்டாலும்,பழைய கட்டணத்தையே வசூலிக்கிறார்கள்.புது பஸ்ஸ்டாண்ட் டு கோவில்வழி பஸ்ஸ்டாண்ட் பனிரெண்டு கி மீ ..ஆனாலும் பழைய கட்டணத்தையே வசூலிக்கிறார்கள். பெருமாநல்லூர், அவினாஷி டு கோவில்வழி ,ஆகிய ஊர்களிலுருந்து நகர பேருந்துகள் அதிகமாக இயக்க வேண்டும்
30-செப்-2020 21:49:03 IST
மின்சார கணக்கீடு என்பது அறுபது நாட்களுக்கு ஒரு முறை சரியாக எடுத்தாலே இந்த பிரச்னை வராது.. அரசாங்கம் ஒரு ஆயிரத்தை மக்களிடம் கொடுத்து விட்டு சில ஆயிரங்கலை பல வழிகளில் டீசல் பெட்ரோல் சுங்க கட்டணம் என்று எல்லா வழிகளிலும் பிடுங்கிகிறது.அதில் ஒன்று மின்சார கட்டண கொள்ளை.இது என்வீட்டு சொந்த அனுபவம் .நார்மலாக பத்தாம் தேதி வாக்கில் ரீடிங் எடுப்பார்கள் மே மாதம் இருபத்திரண்டாம் தேதி ரீடிங் எடுத்தார்கள் ..அதாவது பனிரெண்டு நாட்கள் அதிகம்.அதனால் மேலே சில நல்ல உள்ளங்கள் அரசாங்கத்தை வாழ வைப்பவர்கள் சொன்னார்கள் அரசாங்கம் சரியாகத்தான் கணக்கீடு செய்துள்ளது என்று.அதே போல் 72 நாள் களைத்து ரீடிங் எடுத்து 536 unit வந்தது. 500 யூனிட்க்கு மேல் 3.65 plus 50. 536 unit i 536/72=7.44 perday consumption 60 nalukku 446 unit தான் வருகிறது.. 446 ஊனிட்டு கணக்கு போட்டால் சரி ...446 kku rs 2.5 pottal 1115 thaan varum. மக்களை ஏமாற்றுவது என்று முடிவு செய்து விட்டால் அரசாங்கம் என்ன தனியார் என்ன எல்லாம் ஏமாற்று காரர்கள் தான்,,
05-ஜூலை-2020 20:26:27 IST
ஒரு வருடமே பாதியாக குறைகிறது ,பாடத்திட்டங்கள் குறைக்கபடுகிறது ஆனால் பெற்றோர்களின் பள்ளி செலவை மட்டும் யாரும் குறைக்க முன் வரமாட்டார்கள் ..ஆறு மாத மட்டும் நடக்கும் பள்ளிக்கு முழு பீஸையும் கட்ட சொல்லி ஏன் பெற்றோர்களின் பீஸை பிடுங்குகிறார்கள் .இதை பற்றி யாரும் கேட்கமாட்டார்களா?????
27-ஜூன்-2020 13:26:49 IST
சாதாரண மக்களின் இரு உயிர்கள் காவல் துறையினரின் 15 நாள் அல்லது ஒரு மாத சஸ்பெண்டுக்கு சம என்று அரசும் ஆட்சியாளர்களும் சொல்கிறார்கள்.. உயிர்கள் அனைவருக்கும் சமம்,. ஒரு உயிரை அடித்து துன்புறுத்தி கொள்வது என்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது. பணியிடை நீக்கம் ,அல்லது துறை றீத்யான நடவடிக்கை என்பது காவல்துறையினருக்கு மிகப்பெரிய தண்டனையா ...நிச்சயம் சம்மந்தப்பட்ட அணைத்து அதிகாரிகளும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் . கடும் தண்டனை அளிக்க வேண்டும்.
24-ஜூன்-2020 11:16:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.