என் வேர்வையில் கட்டிய வருமான வரிப்பணம்… இப்படி இலவசமாக… திராவிட மாடல்.. இந்த மாடல், ஒருபுறம் உழைக்கும் மக்களை சோம்பேறி ஆக்கும், மறுபுறம் நேர்மையாக வருமான வரி கட்டுபவர்களை வெறுப்பேற்றி வருமானத்தை மறைக்க வழிவகுக்கும்…
07-மே-2022 11:49:56 IST
மன்னிக்கவும், 'ஆலோசகர்.லலிதா ஜெயபாலன்' கணவன் & மனைவி திருமண திட்டமிடல், அத்தியாவசிய சிலவு எனச் சொல்லிப் பாதுகாப்பாக, ஒரு தலை பட்சமாக இளைய தலைமுறைக்கு எதிர்கால நிதி சுமை தவிர்த்தல் போல எழுதி உள்ளார். இது தவறான கண்ணோட்டம். உண்மையில், நிச்சயக்கப்பட்ட திருமணம் என்றாலும், காதல் திருமணம் என்றாலும், பெற்றோர்களே பெரும்பாலும் தங்கள் சேர்த்து வைத்த நிதியிலிருந்து தான் திருமண சிலவு செய்வார்கள் (கல்யாணம் பண்ணிப்பார் - சொலவடை உண்டு), அதைத் தன் வாழ்நாள் கடமையாகவும், பெருமையாகவும் பிறரிடம் சொல்வார்கள் (பிள்ளைகளின் வருமானத்தில் பெற்றோர்கள் ஆடம்பரமாகச் சிலவு செய்வார்கள் என்பது நம்ப முடியாதது, ஏற்று கொள்ளவும் முடியாது). மேலும், ஒரு திருமணம் என்பது அத்தியாவசிய சிலவு அல்ல, நம் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் வாழ்த்துவது என்பது சுயநல சிந்தனை, கல்யாண மண்டப முதலாளி நன்மை அடைவார்கள் என்பது வியாபார சிந்தனை. உண்மையில், பூ விற்கும், வாடகை கார், அலங்கார வண்டி வாடகைக்கு விடும் சிறு வியாபாரி முதல், மண்டப அலங்காரம், சமையல் செய்பவர்கள், சமையல் பரிமாறுபவர்கள், மண்டபத்தைச் சுத்தம் செய்பவர்கள் எனும் தினக்கூலிகள் வரை அனைவரும் அனைவரும் பயன் அடைவார்கள். இது ஆடம்பர சிலவு இல்லை, பெற்றோர்கள் தன் வாழ் நாளில் சேர்த்து வைத்த செல்வத்தைத் தன் பிள்ளைகளுக்கு மட்டுமே என்ற சிந்தனை இல்லாமல் மேற்கூரிய அனைவரிடமும் பகிர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை கொண்டு சிலவு செய்யவது, ஆலோசகர் சற்றே யோசித்து இந்திய பெற்றோர் பார்வையிலிருந்து எழுத வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
05-மே-2022 15:51:39 IST
அப்படியானல், தமிழகத்தில் கவர்னர் சென்ற வண்டியின் மீது, பாதகைகளும், கொடிகளும் வீசியது, மேலை நாடுகளில் இருப்பதை போன்று ஏற்று கொண்டு, வழக்கு பதியக்கூடாது போல்…
28-ஏப்-2022 17:11:19 IST
Sanny Australia அவர்கள் சொல்வதை பார்த்தால் முட்டை, தக்காளி, கேக் கொண்டு நாட்டின் அதிபரை அடித்தால் பெரிய விஷயமில்லை போல்.. அப்படியானல், தமிழகத்தில் கவர்னர் சென்ற வண்டியின் மீது, பாதகைகளும், கொடிகளும் வீசியதும் பெரிய விஷயமாக்க கூடாது போல்… அ-வை நீக்கிய அஹிம்சா சரிதான் போல..
28-ஏப்-2022 17:08:56 IST
அமைதி, அமைதி… ஏன் 'எப்பொழுதும் நடைமுறையில் உள்ள தேர் வரும் பொழுது முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்படும்' அனைத்து மின்சாரமும் நிறுத்தப்படவில்லை? அந்த மாமனிதனை பொறுப்பேற்க்க வைத்தால் போதும் - வேறு எந்த தவறும் இல்லை.
28-ஏப்-2022 12:56:35 IST
எல்லாவற்றையும் மூடி மறைத்து என்ன பயன், திரு.கலெக்டர் அவர்களே…? பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது… நினைவு இருக்கட்டும், இப்படி பதிவு செய்ததால் தான், மாணவர்கள் நன்நடத்தை நமக்கு (உலகுக்கு) தெரிந்தது…
26-ஏப்-2022 13:12:16 IST
கடைசி வருடத்தில் இருப்பவர்களுக்கு (House Surgeon) இந்திய மருத்துவமனையில் பயிலலாம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு முடிவெடிக்கவில்லை.. மாணவர்கள் எதிர்காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்… முடிவெடுப்பது மிகவும் கடினமான ஒன்று..
18-ஏப்-2022 01:20:45 IST
நீ அவருக்கு லஞ்சம் கொடுத்தியா (அ) அவர் மற்றவருக்கிட்ட லஞ்சம் வாங்கியதை பார்த்தாயா? ஏன் இந்த தாழ்மையான எண்ணம். அவர் குடும்பம் அவரை இழந்து என்ன பாடுபடும் என நினைத்தாயா? இறைவனடி சேர்ந்தவர்க்கு நல்ல வார்த்தைகளை பயன்படுத்து… அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு இறைவன் துணையிருக்கட்டும். அண்ணார் ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி.
15-ஏப்-2022 12:34:41 IST
பட்டும் படாமலும் சொன்னாலும் உண்மையைச் சொன்னீர்கள்... ஆண் பிள்ளையைச் சரியாக வளர்க்கவும் வேண்டும் கூடவே கண்காணிக்கவும் வேண்டும் இல்லையெனில் இழப்பது பெண் பிள்ளைகள் தான் - மேற்கு வங்கத்திலும் ஒரு பள்ளி செல்லும் 10ஆம் வகுப்பு படிக்கும் பெண் பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்... இதைப் படிக்கையில் மனம் மிக வேதனை படுகின்றது... அப்பெண்களின் பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தோர்களுக்கும் இறைவன் துணை இருக்கட்டும். அப்பெண்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
13-ஏப்-2022 16:41:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.