Annan : கருத்துக்கள் ( 71 )
Annan
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2023
அரசியல் பார்லிமென்ட் திறப்பை எதிர்க்கும் கட்சியினருக்கு கண்டனம்!
மாநிலத்திற்கு தமிழக சட்டமன்றத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும் என முடிவெடுத்தது யார்? எங்கு கட்டி யாரை வைத்து திறக்க வேண்டும் என முடிவு செய்தது யார்? கவர்னரா? கருணாநிதியா? மாநிலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி முடிவு செய்யும் போது மத்தியில் பிரதமராக உள்ள மோடிக்கு கட்டிடத்தை கட்டவும் திறக்கவும் அதிகாரமில்லை என எப்படி எதிர்கட்சிகள் சொல்கின்றன. பிரதமருக்கு சங்கடத்தை கொடுப்பதாக நினைத்து ஜனாதிபதிக்கு தர்மசங்கடத்தை உருவாக்குகிறார்கள்.   16:45:51 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
8
2023
அரசியல் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை பிரதமர்
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து பொருளாதாரத்தில் தடுமாறாத நிலையை பார்த்து உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளே பொறாமைப்படுகின்றன. அதன் வெளிப்பாடுதான் பிபிசியின் ஆவணப்படமும் அதானியின் வளர்ச்சியை கெடுப்பதற்கான அறிக்கையும்.   02:37:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2023
அரசியல்  கவர்னரை அவன் இவன் என்று ஒருமையில் பேசிய முதல்வர்
ஒரு கவர்னர் தான் பதவி வகிக்கும் மாநிலத்திற்கு மரியாதை கொடுக்காத போது மக்களிடமிருந்தோ ஆள்பவர்களிடமிருந்தோ பதிலுக்கு மரியாதையை எதிர்பார்க்க முடியாது. ஆளுநர் தவறான ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்டுள்ளார். திமுகவிற்கு போட்டியாக செய்வதாக நினைத்து கொண்டு தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரில் பா. ஜ. க. அரசியல் செய்தால் தொடர்ந்தால் தமிழக நடுநிலை வாக்காளர்களிடம் நன்மதிப்பை பெற முடியாது. பா. ஜ. க. தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் இது போன்ற கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விசயங்களிலிருந்தும் குருட்டு ஆலோசனை கொடுப்பவர்களிடமிருந்தும் விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலில் வெற்றி பகல் கனவாகிவிடும்.   01:07:17 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
12
2022
அரசியல் ஏன்... ஏன்... ஏன்... காரில் தொங்கினேன்? மேயர் பிரியா விளக்கம்
பஸ் படிக்கட்டுகளில் தொங்குபவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? பாதுகாப்பான பயணத்திற்கு ஒரு வண்டியும் கிடைக்கவில்லையா? முதல்வரின் கவனத்தை ஈர்க்கவும் அவரிடம் நல்ல பெயர் வாங்கவும் பாதுகாப்பை புறக்கணித்து காரில் தொங்கியபடி ஆபத்தான சாகச பயணத்தை பயணித்த இவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகியிருந்தால் இதை அனுமதித்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டிருக்கும். உயர் பதவியில், பொறுப்பில் உள்ளவர்கள் அந்த பதவியின் மாண்பிற்கு இழுக்கை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களை தவிர்ப்பது உத்தமம்.   05:30:43 IST
Rate this:
0 members
0 members
20 members

டிசம்பர்
3
2022
பொது அரசின் பதவிக்காலத்தை ஓராண்டாக குறைக்க முடியுமா?அரசுக்கு கேள்வி
அரசின் பதவிக்காலத்தை ஓராண்டாக குறைக்க முடியுமா? அரசுக்கு சரியான கேள்வி... அர்ச்சகர்களுக்கான பயிற்சியை ஐந்தாண்டிலிருந்து ஓராண்டாக குறைத்த அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.   11:56:07 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2022
தமிழகம் பழனிசாமி பிடிவாதம் மாஜிக்கள் மவுனம்!
பழனிச்சாமியை நினைக்கும் போது மகாபாரதத்தில் துரியோதனன் பாண்டவர்களுக்கு ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து போரில் வீழ்ந்த கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. மகாபாரதத்தில், மன்னன் திருதராஷ்டிரன் {தன் மகன் துரியோதனனிடம்} சொன்னான், துரியோதனா, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களுக்குரிய பங்கைத் திருப்பிக் கொடுப்பாயாக... அதற்குத் துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, ஓ தந்தையே, நான், கர்ணன் மற்றும் என் தம்பி துச்சாதனன் ஆகிய மூவரும் சேர்ந்து, போர்க்களத்தில் பாண்டவர்களைக் கொல்வோம்... ஒன்று பாண்டவர்களைக் கொல்லும் நான், இப்பூமியை ஆள்வேன், அல்லது என்னைக் கொன்ற பிறகு, பாண்டவர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கட்டும். உயிர், நாடு, செல்வம், ஏன் அனைத்தையும் நான் தியாகம் செய்வேன், ஆனால் பாண்டவர்களுடன் அருகருகே வாழ்வதென்பது என்னால் இயலாது. ஊசியின் கூரிய முனை மூடும் அளவிலான நிலத்தைக்கூட நான் பாண்டவர்களுக்குத் திருப்பித் தர மாட்டேன்” என்றான் {துரியோதனன்}..... திருதராஷ்டிரன் துரியோதனனிடம், நீ உனது சொந்த விருப்பத்தின் பேரில் இதை மேற்கொள்ளவில்லை. கர்ணன், தீய மனம் கொண்ட துச்சாசனன், சகுனி ஆகியோரே உன்னை அதற்கு {அம்முடிவிற்கு} வழிநடத்துகிறார்கள்.” நீ கொண்டிருக்கும் மடமையின் காரணமாக, உன்னால் இதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. நானோ, பீஷ்மரோ, துரோணரோ, அஸ்வத்தாமனோ, சஞ்சயனோ, போரை விரும்பவில்லை. உண்மையில், இவர்களில் யாருமே போரை விரும்பவில்லை. ஓ குழந்தாய் {துரியோதனா}, அதுவே {அக்கருத்தே} உனக்கும் ஏற்புடையதாக இருக்கட்டும் என்றான். ஆனால் யார் சொல்லையும் கேட்காத துரியோதனன் பாண்டவர்களை போருக்கு அழைத்தான். சொந்தங்களோடு போரா என தயங்கிய அர்ஜீனனுக்கு கீதை எனும் பாடத்தை கிருஷ்ணர் எடுத்தார். போரினில் துரியாதனன் கூட சேர்ந்த பிதாமகர் பீஷ்மர், குரு துரோணாச்சாரியர், கர்ணன் என வெல்ல முடியாதவர்களெல்லாம் வீழ்த்தப்பட்டார்கள். போரின் இறுதியில் அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலைநிறுத்தப்பட்டது.   04:32:39 IST
Rate this:
3 members
0 members
8 members

நவம்பர்
9
2022
அரசியல் கல்வி குறித்து முடிவெடுக்க மாநிலங்களுக்கே தகுதி உண்டு!
மாநில பட்டியலில் திமுக பெரியார் புகழ் பாடினால் பொது பட்டியலில் பாஜக சாவர்க்கர் புகழ் பாடும்.   08:00:38 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
9
2022
அரசியல் கல்வி குறித்து முடிவெடுக்க மாநிலங்களுக்கே தகுதி உண்டு!
மத்திய அரசின் அதிகாரத்தில் ராணுவம், அயல்நாட்டு உறவு, நாணயம் உள்ளிட்ட 97 துறைகள் உள்ளன. இவை அனைத்தும் குறித்த சட்டத்தை மத்திய அரசால்தான் இயற்றப்பட முடியும். அதேபோல மாநில அரசுகளுக்கு நிலம், கல்வி, நூலகம், நீர்ப்பாசனம், சுகாதாரம் முதலிய 65 துறைகள் இருக்கின்றன. இந்த இரு பிரிவுகளுக்கும் இல்லாமல் பொதுவாக இருக்கக்கூடிய பட்டியலும் உண்டு. அதில் 40 அட்டவணைகள் உள்ளன. அதில் 11-ஆவது அட்டவணையில் 29 துறைகள் உள்ளன. இவை பஞ்சாயத்து ஆட்சிக்கு ஒதுக்கப்பட்டவை.. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும், பகுதிக்கும் தனித்துவமான வரலாறு, மொழி, கலாச்சாரம் உள்ள நிலையில் கல்வியானது மாநில அரசுகளிடம் இருப்பதே அவற்றை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகும். மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல், பரிந்துரைகள் செய்யலாமே தவிர அனைத்தையும் தானே முடிவு செய்வேன், முடிவெடுப்பேன் என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தையும் உரிமையையும் பறிக்கும் சர்வாதிகாரமான செயலாகும். பாஜகவின் ஆட்சிமுறை ஜனநாயகத்தை சார்ந்து இல்லாமல் சீனாவின் சர்வாதிகார ஆட்சிமுறையை பின்பற்றுவது போல உள்ளது.   07:34:25 IST
Rate this:
6 members
0 members
4 members

செப்டம்பர்
6
2022
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
21
2022
அரசியல் இது உங்கள் இடம் ஒட்டகம் புகுந்த கதையாகி விடும்!
பழனிச்சாமி என்றால் யாரென்றே மக்களுக்கும் அதிமுகவினருக்கும் தெரியாத நிலையில் தன்னை ஏற்றி விடும் ஏணியை ஏறிய பின் எட்டி உதைத்து, இடத்தை கொடுத்தால் அவர்களின் மடத்தை பிடுங்கும் நன்றி இல்லாத ஒருவர் என்று தெரியாமல் அவரின் கள்ளச்சிரிப்பில் மயங்கி இந்த மன்னார்குடி சசிகலா கும்பல் பழனிச்சாமி என்ற ஒட்டகத்திற்கு அதிமுக என்ற கூடாரத்தில் பழனிச்சாமியால் கனவிலும் நனவிலும் நினைத்து பார்க்க முடியாத முதல்வர் பதவியில் உட்கார இடம் கொடுத்தது. முதல்வர் பதவியில் உட்கார்ந்தவுடன் உட்கார இடம் கொடுத்தவர்களையும், யாரால் நான்கு வருடம் முதல்வர் பதவியில் காலம் தள்ளினாரோ அவர்களையம் அவரது ஆதரவாளர்களையும் கட்சிலிருந்து வெளியேற்றிவிட்டு அதிமுக கட்சி எனும் கூடாரத்தை பழனிச்சாமி என்ற ஒட்டகம் பிடித்து கொண்டது. உள்ளே விட்ட அந்த ஒட்டகத்தை கூடாரத்தை விட்டு எப்படி வெளியேற்றுவது? பன்னீர் செல்வத்திற்கு தற்போது உள்ள ஒரே வழி மன்னார்குடி சசிகலா கும்பலோடு ஒன்று சேர்வது தான்.   13:22:07 IST
Rate this:
6 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X