krish : கருத்துக்கள் ( 594 )
krish
Advertisement
Advertisement
Advertisement
மே
31
2020
பொது காட்மேன் நிறுத்தப்படும்!
'கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பிராமணர்களையும், ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட, 'காட்மேன்' என்ற, 'வெப் சீரியல்' தொடர் நிறுத்தப்படும்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியிடம், 'ஜி டிவி' நிர்வாகத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரா உறுதியளித்துள்ளார்.- வரவேற்க்கின்றேன். இந்த விஷயத்தில், அணைத்து சமுதாய மக்களின் ஒருமித்த கருத்து மனித நல்லிணக்கத்தை பிரதிபலிக்கின்றது மனதுக்கு பெரும் நிம்மதி, மகிழ்ச்சி அளிக்கின்றது. வாழ்க சமுதாய நல்லிணக்கம்,ஒழுக்கம் பேணிப்பு, அவதூறு நிராகரிப்பு. அதர்மத்திற்க்கு எதிராக ஒன்றுபட்டால், அனைவருக்கும் உண்டு நல் வாழ்வு.   09:56:57 IST
Rate this:
6 members
0 members
16 members
Share this Comment

மே
26
2020
அரசியல் கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாள்வதில் உத்தவ் அரசு தோல்வி - காங்.,!
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை அரசில் பங்கு வேண்டும், ஆனால் பொறுப்பு வேண்டாம் உமி உனக்கு, அரிசி எனக்கு ஊதி உண்போம்- வெற்றி என்னால் தோல்வி உன்னால் இது தான் காங்கிரஸ் கூடா நட்பு, கேடாய் முடியும்.   20:31:59 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
24
2020
சம்பவம் சிங்கம்பட்டி கடைசி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்
மண்ணின் மைந்தன், மக்களின் மன்னன், பழகுவதற்கு இனியவர், எளிமை, அமைதியுடன் அணைத்து ஊர் மக்களையும் பேணி அரவணைக்கும் செல்வ பெருந்தகை. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டியின் கடைசி ஜமீன்தாரராக இருந்த டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு நம் நெஞ்சார்ந்த அஞ்சலி. அவரை இழந்து சோகத்தில் வாடும், அன்னார் குடும்ப, சொந்த பந்தங்கள், நண்பர் குழாமுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாவதாக. ஆன்மா அழிவற்றது.இறைவன் திருவடி நிழலில் அவரது ஆத்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திப்போம். மண்ணின் மாமைந்தன் இழப்பை நினைவு கூர்ந்த தினமலர் நாளிதழுக்கு கோடி நமஸ்கரங்கள்.   09:44:16 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

மே
24
2020
அரசியல் ம.பி.,யில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோரை களமிறக்குது காங்.,
தற்போதைய நிலைமையில், தேர்தல் நடத்துவது அவசியம்தானா?   13:26:39 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
18
2020
பொது மதுக்கடைகளில் முடிகிறது கோவில்களில் முடியாதா?
உள்ளூர் பக்தர்களை, அடையாளம் கண்டு, கோயிலில் வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும். வெளியூர் பக்தர்களை, குறிப்பாக, யாத்திரை பேருந்துகளில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களை, ஊரடங்குக்கு பின் பயணம் செய்ய வலியுறுத்தவேண்டும். அந்தந்த ஊர்வாசிகள், அவரவர் பக்கத்தில் உள்ள கோயில்களில் வழிபாடு செய்ய அரசு கோயில்களை திறந்து, பக்தர்கள் வழிபாடு முறையை, சீராக, தொற்று பரவா வகையில், செயல்படுத்துதல் அவசியம். இறைவனை தரிசிக்க, பக்தர்கள் ஏங்கும் இச்சமயத்தில் அரசு கருணை பூண்டு ஆவண செய்யவேண்டும்.   19:03:37 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
18
2020
பொது பஸ்கள் இயக்கம் எப்போது? அரசு உத்தரவுக்கு காத்திருப்பு
ஆவின் பால் கார்டு போல், இணையத்தளத்தில் மாத கட்டணம் (10 % கூடுதலாக) வசூலித்து எல்லா ரயில்களையும் விடலாம். அத்தியாவசியம் கருதி பயணிப்பவர் பிரயாணம் செய்ய வசதியாக இருக்கும். பள்ளிகள், கல்லூரிகள் இயங்காத நிலையில், நெரிசல் குறைவாகவே இருக்கும். பயண சீட்டு விற்பனையையும் இரயில் நிலையங்களில் ஊரடங்கு முடியும் வரை தவிர்க்கலாம். நெரிசலில் ஏற்படும் தொற்றை குறைக்கலாம்.   14:00:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2020
பொது விமான போக்குவரத்தை துவக்கினால் கொரோனா வேகமாக பரவும்
அமெரிக்கா உயிரிழப்பு ஒரு இலட்சத்தை எட்டுகிறது. ஏட்டிக்கு போட்டி சரிதாக படவில்லை . இந்தியா மக்கள் தொகை அடர்த்தியாக அதிகம் கொண்ட , தாழ்ந்த வருமானம், சுகாதார வசதிகள் கொண்ட, மக்கள் தொகையில் இளைஞர்களை அதிக பட்சம் உள்ளடக்கிய நாடு, இளைஞர்களை பலிக்கு ஆளாக்க முயற்சித்தால் தவறு. உயிர்கள் காக்கப்படல் வேண்டும்.   17:45:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
15
2020
கோர்ட் மதுக்கடை திறப்புக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மயக்கமா? இல்லை தயக்கமா? இல்லை கலக்கமா? நீதி தேவன் தடுமாற்றம் ஏன்?   18:22:44 IST
Rate this:
38 members
0 members
3 members
Share this Comment

மே
8
2020
கோர்ட் மது விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
@ Vbs மணியன் : வரக்கூடாதுதான் ஆனால் அரசும், மது வெறியர்களும் விஷத்தை தவிர்க்க முயற்சிப்பதாக தெரியவில்லையே சிகரெட்டு குடிப்பவனை விட, அவன் விடும் நச்சு காற்றை சுவாசிக்கும் அருகில் உள்ள அப்பாவிகள்தான், மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, தொற்று அவர்கள் மூலம் சமுதாயத்தில் பரவாமல் தவிர்க்க, மது விற்பனை தடை அத்தியாவசியம். அரசு பொறுப்புடன் செயல் படவேண்டும். கோயில்களில் இறைவழிபாடு மறுக்கப்படும் போது, மது அருந்தும் குடிவெறியர்களுக்கு ஏன் தனி சலுகை? அதுவும் சமுதாயத்திற்கு அது ஒரு பெரிய ஆபத்து, கேடு, விபத்தாகும் என்று குடிமக்கள் நலன் பேணவேண்டிய அரசுக்கு நிச்சயமாக தெரியும் போது.   14:00:56 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
7
2020
பொது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு
ஒய்வு வயது அதிகரிப்பு குறித்து முடிவை அவரவர் இச்சைக்கே அரசு விட வேண்டும். கண்டிப்பு தேவை இல்லை. அவசிய தேவையானால், விருப்பமுள்ள, ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களை , அப்பணியில் கால நேர ஒப்பந்தத்தில் பணிக்கு அமர்த்தலாம்.   11:44:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X