Raja : கருத்துக்கள் ( 2 )
Raja
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
28
2020
பொது மதம் மாற்றுதல் ஏமாற்று வேலை!
இந்தியா இன்று உலக அளவில் மற்ற நாடுகளுக்கு சவால் விடுகிறதெனில் அதற்கு கல்வியிலும் மருத்துவத்திலும்,அறிவியலிலும் மேலை நாட்டு மிஷனெரிகள் அமைத்து தந்த அஸ்திவாரம் தான் காரணம் என்பதை மறந்து விட கூடாது. கிறித்துவ மதத்தில் சாதி பாகுபாடும் ஏற்ற தாழ்வும் இல்லை என்று சொல்லவில்லை. இங்கும் மதவாதிகள் உள்ளனர்.ஆனால் இயேசுவின் போதனைகளில் வேதத்தில் இல்லாததினை மற்றவர்களை பார்த்து சூடு போட்டுக்கொண்டு பெருமை பாராட்டுபவர்கள். இவர்கள் இயேசுவின் உபதேசத்தையும் அன்பையும் உணராதவர்கள். இவர்கள் கிறித்துவின் அடியார்கள் அல்ல. அன்பை மையமாக கொண்டு அன்பை மட்டுமே போதிக்கும் கிறித்துவமே மெய்கிறித்துவம். இந்த உண்மையை அறிந்து கொள்ளாமல் மதவாதியாக சேற்றினை வாரி இறைப்பவர்களை கண்டு பரிதாப படுகிறோம்.   13:05:44 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
28
2020
பொது மதம் மாற்றுதல் ஏமாற்று வேலை!
கருணாகரன் அலை பேசி : 9444493945 அன்பான அய்யா...சற்று நேரத்துக்கு முன் போன் செய்தேன். ஒரு அம்மையார் பேசினார். உங்களுக்கு மெசேஜ் அனுப்ப சொன்னார்கள். அய்யா என் பெயர் கருணாகரன். இயேசுவின் அடியவன். கிறிஸ்தவ மதம் மாற்றம் பற்றி நீங்கள் எழுதியது அனைத்தும் உண்மை. உங்கள் கட்டுரைக்கு நன்றி. இந்நிலையை திருத்த எங்களால் ஆனவற்றை செய்து வருகிறோம். இப்போது எனக்கு வயது 59. ஏன் வாழ்கிறேன் எதற்கு வாழவேண்டும் வெந்ததை தின்று வெறுமனே வாழ்ந்து விதிவந்தால் சாவு என்பதுதான் வாழ்க்கையின் அர்த்தமா என பல கேள்விகளால் விடையைத் தேடி அலைந்த போது தீயபழக்கவழக்கங்களால் ஏமாற்றமடைந்து நிம்மதி இழந்து உள்ளொன்றும் வெளியொன்றுமாக போலித்தன இரட்டை வாழ்க்கையில் மூழ்கி கடவுள் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்துடன் யார் கடவுள் என்று தேடி அலையும் மனதுடன் நடைபிணமாக வாழ்ந்த நான் எனது 26 ஆம் வயதில் இயேசுவின் தூய பிறப்பு தூய வாழ்க்கை இறையன்பின் உச்சகட்டமாக எனக்காக தன்னை பலியாக்கின அவர் அன்பால் கவரப்பட்டு "என்னிடம் வா...நான் வாழ்வளிப்பேன்.." எனும் அவர் திருவார்த்தைக்கு கட்டுப்பட்டு இயேசுவிடம் என்னை இழந்துவிட்டேன். அவரோ என் வாழ்வை முழுமையாக்கி அர்த்தமுள்ளதாக்கிவிட்டார் என்றே கூறவேண்டும். புதிதாக பிறந்த உணர்வு. மறுஜென்மம் எடுத்தது போன்ற புதிய புரிதல். அன்றுமுதல் இயேசுவின் அடியவனாக அவருடன் வாழும் பாக்கியம் பெற்றேன். உங்கள் முகவரி கொடுத்தால் எனது சிறு கட்டுரைகளை அனுப்பி வைக்க விரும்புகிறேன். கடைசியாக உங்களுக்கு ஒரு செய்தி. பணத்துக்காக வரும் செல்வாக்குக்காவும் மதம்மாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள் மேல் உள்ள வெறுப்பினால், தியாகத்துடன் இயேசுவின் தெய்வீக அன்பினால் உந்தப்பட்டு மக்கள் மேல் உண்மையான கரிசனையினால் பணி செய்யும் பல இயேசுவின் அடியவர்கள் வெகுவாக அநியாயமாக வன்கொடுமைக்குள்ளாகிறார்கள். திருமறையில் இயேசுவின் திருத்தூவரால் எழுதப்பட்ட திருவார்த்தை களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 6 ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார். உரோமையர் 2:6 7 மனஉறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார். உரோமையர் 2:7 8 ஆனால், தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும். உரோமையர் 2:8 இறையருள் உங்களுக்கு ஆசி வழங்கட்டும்   09:48:22 IST
Rate this:
21 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X