@sathyam Even if you hate them for their political approach/ performance, be respectful of the comments. Avoid personal attacks.
19-ஜூலை-2023 00:01:20 IST
வேலை இல்லாதவர்களுக்கு வேலை செய்ய பயிற்சி கொடுக்கும் புரட்சியினை அரசு ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் சீனாவுடன் போட்டி போட முடியும்.
30-மே-2023 23:16:56 IST
இங்கு கனடாவில் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பதில்லை. ஆசிரியர்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து நண்பர்களைப்போல் பேசுகிறார்கள். அப்படியே பாடத்தையும் சொல்லி கொடுக்கிறார்கள். இந்த பழக்கம் ஐந்தாம் வகுப்பு வரை நடை முறையாக இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை ஒரு வகுப்பிற்கு ஒரே ஆசிரியர் எல்லா பாடங்களையும் சொல்லி தருகிறார். பாடம் மட்டும் சொல்லி தராமல் பல உலக விஷயங்களையும் பற்றி பேசுகிறார்கள். மற்றவரின் கருத்துக்களுக்கு மரியாதை கொடுப்பது எப்படி, யார் எதை சொன்னாலும் உண்மை அறிவது எப்படி, மற்றவர்கள் தவறு செய்தால் அதை எப்படி அணுகுவது, கருது வேறுபாடுகளை எப்படி பேசி தீர்க்க வேண்டும், சில கருத்து வேறுபாடுகள் இர்ருக்கத்தான் செய்யும் அதை எப்படி கையால்வது என்பது போன்ற பல விஷயங்களை சொல்லி கொடுக்கிறார்கள். என் மகன் இராண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது "என் ஆசிரியர் மிஸ்டர் பி எனக்கு மிகவும் பிடிக்கும்" என்பான். சிலர் மிகவும் குறுப்பு தனமாக இருந்தால் அவர்களை பற்றி பெற்றோடம் சொல்லி மெதுவாக சரி செய்கிறார்கள். மிரட்டும் தொனியில், அதிகார தொனியில் குழந்தைகளிடம் பேசுவதில்லை. சிறு சிறு தவறுகளை பெரிது படுத்தாமல் "உங்கள் பிள்ளை மிகவும் கெட்டிக்காரன், மிகவும் புத்திசாலி" என்று பெற்றோரின் முன் புகழ்கிறார்கள். பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள். இது போன்று நாமும் நம்முடைய கற்பித்தல் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
23-மார்ச்-2023 20:43:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.