spr : கருத்துக்கள் ( 1078 )
spr
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
28
2023
உலகம் அமெரிக்காவால் அழைக்கப்பட்ட 4 தென்னிந்திய இளம் அரசியல்வாதிகள்
"இளம் அரசியல்வாதிகளுக்கான சர்வதேச விசிட்டர் லீடர்ஷிப், எதிர்கால இந்திய ஜனநாயகம் என்ற தலைப்பில் வகுப்பு" எதிர்கால இந்திய ஜனநாயகம் குறித்து அமெரிக்கா ஏன் பாடமெடுக்க வேண்டும் ? பொருந்தாத ஒன்றாக இருக்கிறது அவர்கள் சொல்லிக் கொடுக்காத போதே இன்று பல அமெரிக்க ஐரோப்பிய செய்திப் பத்திரிக்கைகள் ஊடகங்களுக்கு, இந்தியா குறித்துத் தவறான தகவல் கொடுப்பதே நம் இந்தியர்கள்தான் இந்த லட்சணத்தில் இப்படி வகுப்பே எடுத்தால் இந்த அறிவுஜீவிகள் திரும்பி வந்து நம்மை இன்னும் இழிவாகப் பேசுவார்கள்   22:32:46 IST
Rate this:
0 members
1 members
3 members

ஜனவரி
25
2023
அரசியல் கோபாலபுரத்து அரசியல்வாதியின் பிள்ளை தமிழ்!
ஜாதி மதம் இனம் மொழி என்ற வேறுபாடுகள் மக்களிடையே இருப்பதனால் பிரச்சினையில்லை ஆனால் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைக்கும் அரசியல்வியாதிகளால்தான் அனைத்துப் பிரச்சினைகளும் அவரவர் ஜாதி மதம் இனம் மொழி என்று கொண்டாடுவது அடிப்படைக்கு கருத்து சுதந்திரம் அதனை சட்டத்தின் மூலம் தடை செய்ய முயற்சிப்பது போல நடிப்பது முறையற்ற செயல். வாக்கு வங்கி வலுவாக இருக்கும் தேவர் போராடாத தயாராக இருப்பதால் அஞ்சும் இந்த வியாதிகள் மறைமுகமாக பிறரும் அப்படியே மாறவேண்டுமென்று விரும்புகிறார்கள் போலும் பிரச்சினைகளை உருவாக்கி வேறுபாடுகளை உருவாக்கி பிழைக்கும் இந்த ஈனப்பிழைப்பு அவசியமா இவர்கள் விழா எடுக்கவில்லையென்று திரு பிள்ளையவர்கள் அழுதாரா   19:08:00 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
24
2023
தமிழகம் திருப்பூர் புத்தக கண்காட்சி பா.ஜ., எதிர்ப்பு
ஆதாயமில்லாதவன் ஆற்றோடு போக மாட்டான் என்றொரு பழமொழியுண்டு பொதுவாகவே எவரும் தான தர்மம் உள்ளிட்ட எந்த ஒரு செயலையும் காரணமின்றிச் செய்ய மாட்டார்கள் தனியார் ஆயினும் மறைமுகமாக பணம் கிடைக்குமென்றால் அதற்கேற்றபடி பெரும் பேர் வாங்கிய பேச்சாளர்களை பேசச் சொல்லி தங்கள் கருத்துக்களை மக்களிடம் பரப்புவது இன்று நேற்றல்ல பல காலமாகவே நடக்கிறது. இதனையே "வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பது" என்றொரு பேச்சாளர் சொல்வார் மதச் சார்பின்மை போல இதர செயல்களிலும் அரசு நடுநிலையோடு நடந்து கொள்வதே நல்லதொரு ஆட்சி. கொள்கை வகுப்பது மட்டுமே அரசின் கடமை செயலாற்றுவது அதிகாரிகள் மட்டுமே எனவே உண்மை என்னவென்று அறியாத நிலையில் எதற்கெடுத்தாலும் முதல்வரையோ பிரதமரையோ குறை கூறுவதுவும் சரியல்ல   21:40:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2023
பொது சிறுநீர் கழித்த விவகாரம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.10 லட்சம் அபராதம்
இந்தநாட்டில் என்றுமே குற்றம் செய்தவருக்கு தண்டனை தரப்படக் கூடாது என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது போலும் ஆயிரம் குற்றவாளிகளை விடுவிப்போம் ஆனால் ஒரு நிரபராதி இழப்புக்கு ஆளானாலும் கண்டு கொள்ள மாட்டோம் என்பது அனைத்து நீதி நிர்வாக அமைப்புக்களின் என்னமோ? இனி அந்த நபர் அடிக்கடி விமானத்தில் மலமூத்திரம் கழித்து ஏர் இந்தியாவுக்கு தொடர்ந்து இவ்வாறு இழப்பு ஏற்படுத்துவாரோ ஒருவேளை மோடி ஆதரிக்கும் ஏர் இந்தியா லாபகரமான ஒன்றாக இயங்கவே கூடாது என்று நினைப்பவர்கள் செய்யும் சதியோ   21:29:11 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
22
2023
அரசியல் தமிழகத்திற்கு தேவை இல்லாத ஆணி அறநிலைய துறை தான் அண்ணாமலை
இது தவறான கருத்து. இதனை பாஜகவின் தலைமையும் ஆதரிப்பதாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது அறநிலையத்துறை முறையாகச் செயல்படவேண்டும் என்று சொல்வது நியாயம் பிற மதங்களுக்கும் அத்தகு துறை அமைக்க வேண்டுமென்றால் அது கூட சரி ஆனால், முக்கியமாக அந்தந்த மதம் சார்ந்த ஆலைய வருமானம் சொத்துக்கள் அனைத்தையும் அந்தந்த மதம் சார்ந்த ஆலையங்களுக்கு மட்டும் செலவழிக்க வேண்டும் அதில் அரசோ அதிகாரிகளோ கட்சித் தலைவர்களோ கொள்ளையடிக்கக் கூடாது என்றால் அது பொருத்தமான ஒன்றாக இருக்கும் ஆலையங்கள் தனியார் வசம் இருப்பது சரியல்ல கல்வித்துறை போல அதிலும் முறைகேடுகள் அதிகரிக்கும் நடந்து கொண்டிருக்கின்றன அப்படி நடக்காமல் இருக்கவே அறனிலையத்துறை அமைக்கப்பட்ட்டது. முறைகேடுகள் தனிமனித வழிபாடு அதிகரிக்கும் என்பதனை நிரூபிக்க ஈஷா ஒன்று போதும் ஆலையம் சார்ந்த அனைத்து முடிவுகளும் அந்தந்த ஆலையம் சார்ந்த மக்களால் எடுக்கப்பட வேண்டும் அண்ணாமலை கூட பிற மதங்களுக்கு அறநிலையத் துறை விரிவாக்கப்பட வேண்டும் என்று சொல்லத் துணியவில்லை போலும்   20:25:16 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
18
2023
பொது எனது பேச்சின் அடிப்படை புரியாமல் விவாதமாகி உள்ளது தமிழ்நாடு சர்ச்சைக்கு கவர்னர் விளக்கம்
"வரலாற்று பண்பாட்டு சூழலில், தமிழகம் என்பதை 'பொருத்தமான வெளிப்பாடு' என்ற விளக்கம் பொருத்தமான ஒன்றே தொன்மைத் தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற தமிழகம் என்று குறிப்பிடுவதுதான் முறை ஆனால் "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு"என்று கூவியவர்களுக்கு குறைந்த பட்சம் தமிழ்நாடு என்று சொன்னாலாவது அதில் நாடு என வருமே என்ற ஒரு சிறு நப்பாசை அன்று அண்ணா சொன்னதாக வெளியானதொரு செய்தி " 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்துவிடுவதாகும்." நாடு இருந்தால்தான் கட்சி நடத்த முடியும் நல்ல உத்தியே   21:08:22 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜனவரி
21
2023
சிறப்பு பகுதிகள் போதையில்லா பண்டிகை கொண்டாடப்படுமா?
பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர் அப்பாவாக நடித்த ஒரு படத்தில் மகனுக்கு அவரே பணம் கொடுத்து "கொஞ்சம் ஊத்திக்கோடா கவலை குறையும்" என்ற வசனம் வருகிறது படம் பார்க்கும் இளைய தலைமுறைக்கு இது ஒரு பெரிய செய்தி கொண்டாட மாட்டார்களா தொன்று தொட்டு குடிப்பதுவும் பரத்தையர் உறவு வைத்துகிருப்பதுவும் தமிழன் பண்பாடு என்று சொல்லியே நம் இளைய தலைமுறையை பாழாக்கிவிட்டார்கள் காதல் வீரம் இந்த இரண்டைவிட்டால் வாழ்வில் வேறெதுவும் இல்லை என்பதுதானே பெரும்பாலான சங்கத்தமிழ்ச் செய்தி நல்ல வேளை பெரும்பாலான நம் இளைய தலைமுறைக்கு சங்க இலக்கியங்கள் படிக்கும் ஆர்வம் இல்லை அப்படியிருக்கும் போதே பயனின்றி வீரம் காட்டப் போராட்டமெல்லாம் நடத்துகிறார்கள் சேலை கட்டினாலே போதும் பின் தொடர்ந்து வம்பு செய்கிறார்கள்   20:59:38 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
21
2023
அரசியல் ஜாதி, மதம், வேறுபாடற்ற சமுதாயம் என்ற தி.மு.க., கொள்கை பொய்....யா... கோப்ப்ப்பால்... கொந்தளிக்கும் நிர்வாகிகள்
வாய் மொழி உத்தரவாம் - இதைத்தான் வாய் மெய்யை வெல்லும் என்கிறார்களா ஜாதி இனம் மொழி என்ற பாகுபடுத்தித்தானே அனைத்து அரசியலும் நடக்கிறது அதிலும் திமுக தோன்றியதே அப்படித்தானே தேர்தலில் தொகுதி பெற்ற கழகக் கண்மணிகளுக்குத் தெரியாதா தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு வழியுண்டு மறந்து போனார்களா   20:48:03 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
20
2023
பொது சிறுநீர் கழித்த விவகாரம் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்
இது ஒரு தவறான முன்னுதாரணமாகத் தெரிகிறது.மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம், தவறு செய்தவர் மீது வழக்கு தொடுத்து அவரைச் சிறையில் அடைத்துத் தண்டித்திருக்கலாம் குறைந்த பட்சம் அவரைப் பணிவிலக்கம் செய்ய அவரது நிறுவனத்திற்குப் பரிந்துரை செய்யலாம் அவரது பாஸ்போர்ட்டை முடக்கலாம் விமானத்தில் மது விற்பனை செய்வதனைக்கூட, தடை செய்திருக்கலாம். விமானப் பணிப்பெண்கள் வேறெதுவும் செய்ய முடியாதவர்கள் அவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டார்களென்றால் கூட அவர்களை எச்சரித்து இனி அப்படியொரு நிகழ்வு நடக்காமல் பார்த்துக் கொள்ளச் சொல்வதில் பொருளுண்டு. இதையெல்லாம் விடுத்து பைலட் விமான நிறுவனம் இவற்றுக்கு தண்டனை தருவது முறையற்ற செயல் பைலட் விமானத்தை ஓட்டுவாரா இல்லை பயணிகள் சிறுநீர் கழிப்பதனைக் கண்காணிப்பாரா ஏர் இந்தியா அரசு நிறுவனமாக இருந்தால் இந்த தண்டனையிருக்குமா   23:29:54 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
15
2023
அரசியல் உலக அரங்கில் கவனம் பெறுகிறோம் துக்ளக் விழாவில் ஜெய்சங்கர் பெருமிதம்
இந்த ஆட்சி பாராட்டப்படத் தக்கதே மோடி அரசின் பல நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும் இன்னமும் படித்த படிப்பிற்குத் தக்க வேலை வாய்ப்புக்கள் இல்லை பெரிய தொழிற்சாலைகள் துவங்கப்படவில்லை சிறு குறு தொழில்கள் அதிகம் வளரவேண்டும் சீனாவினைப் போல உலகச் சந்தையில் போட்டியிடத்தக்க தரம் வேண்டும் பங்குச் சந்தை வளர்ச்சி முழுமையான, நிரந்தரமான வளர்ச்சி இல்லை அது ஒரு சூதாட்டம். சாலை போடும், கட்டிடம் கட்டும் அடிமட்டத் தொழிலாளர்களாக பெரும்பாலான மக்களை உருவாக்குவதால் ஏழ்மை ஒழியாது. மோடி என்ற தனிமனிதரை நம்பி ஆட்சியிருந்தால் பிரதமர் லீ மறைவுக்குப் பின் சிங்கப்பூர் ஆனது போல இந்த சிறப்புக்கள் குறையும் "தம்மின்தம் அமைச்சர் திறனுடைமை இந்திய மன்னுயிர்க்கு எல்லாம் இனிது"என்று மோடி எண்ணிச் செயல்பட்டால் நல்லது   21:38:57 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X