Rangarajan Pg : கருத்துக்கள் ( 259 )
Rangarajan Pg
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
11
2018
பொது செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை
மீண்டும் மீண்டும் இந்த சந்தேகம் எனக்கு வருகிறது. அதாவது மக்கள் தங்களிடம் இருந்த செல்லாத பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்த பொது வங்கிகள் அதை நல்ல பணமா அல்லது கள்ள நோட்டா என்று பார்த்து தானே வாங்கி இருக்கும்? பிறகு ஏன் இவர்கள் இவ்வளவு காலதாமதம் செய்கிறார்கள் எண்ணுவதற்கு? யாருக்காவது ஏதாவது நல்லது செய்ய வேண்டி இருக்கிறதோ என்னவோ   14:56:52 IST
Rate this:
0 members
0 members
22 members

பிப்ரவரி
10
2018
பொது வருமான வரி செலுத்தாதவர்களிடம் கூடுதல் வரி வசூலிப்பு
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அரசாங்கத்தை நடத்தவும் வரி வருவாய் தேவையான ஒன்று தான். மறுப்பதற்கில்லை. ஆனால் நாங்கள் வரி எதற்க்காக செலுத்துகிறோம்? அதற்கான நலன் ஏதாவது வரி கட்டும் மக்களுக்கு கிடைக்கிறதா? நல்ல வாழ்க்கைத்தரம் உள்ளதா? எங்கு நோக்கினும் குப்பைகள், சீர்கெட்ட சாலைகள். விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. நாங்கள் செலுத்தும் வரி பணத்தில் இருந்து அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் எம் பிக்கள் ஆகியோர் நூறு சதவிகிதம் சம்பள உயர்வு பெறுகிறார்கள். குறைந்த விலையில் அவர்களுக்கு தரமான உணவு கிடைக்கிறது. எல்லாம் தேவைகளும் அவர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. தொலைபேசி கட்டணத்திலிருந்து பயண செலவு வீடு வசதிகள் அனைத்தும் இலவசம். ஆனால் அவர்களுக்கு நூறு மடங்கு சம்பள உயர்வு. வரி கட்டும் எங்களுக்கு வருவாய் ஏறுவதில்லை. இவை அனைத்தையும் பொறுத்து கொண்டு சரியாக வரி கட்டும் எங்களுக்கு தேவைகள் எதுவும் கிடைப்பதில்லை. ஏழைகள் என்று கூறி கொண்டு அராஜகம் செய்பவர்களுக்கு எல்லாம் இலவசமாக கிடக்கிறது. அதுவும் எங்களது வரி பணத்தை கொண்டு தான் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அரசியல்வியாதிகள் எதற்கும் அஞ்சுவதில்லை. பெரும் பணக்காரர்கள் சரியானபடி வரி செலுத்துவதில்லை. ஆக எந்த கட்சி ஆட்சி செய்தாலும் மத்தியதர குடும்பங்களை தான் அது நிலைகுலைய வைக்கிறது.   12:10:44 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
6
2018
பொது மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் தடுப்புகள் தீயணைப்பு வாகனம் சுலபமாக வர வழியில்லை
கோவில் சுற்றி ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்தலாமே. கோவிலை சுற்றியுள்ள இடங்களை துப்புரவாக சுத்தம் செய்து வைக்கலாமே. மக்களிடமும் விழிப்புணர்வு தேவை. கோவிலை சுற்றி ஆக்ரமித்து கட்டப்பட்ட கடைகளில் பொருட்கள் வாங்கி அந்த வகையான கடைகளை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாங்குவார் இல்லை என்றால் கடைகளை அவர்களே காலி செய்து கொண்டு போய் விடுவார்கள். அத்தியாவசியமான தேவையான உணவு விடுதிகள், மற்றும் கழிவறைகள் மட்டுமே கோவிலை சுற்றி இருக்க வேண்டும். மற்றவை இருந்தாலும் மக்கள் அந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்ல கூடாது. இப்படி செய்தால் மட்டுமே தேவை இல்லாத ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். அரசாங்கத்தினாலோ அல்லது மாநகராட்சியினாலோ செய்ய முடியாததை மக்கள் செய்யலாம்.   11:21:30 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
2
2018
பொது விரைவில் 8 சதவீத வளர்ச்சி நிதி அமைச்சர் நம்பிக்கை
எங்கே இந்த கட்சியின் ஜால்ராக்களை கருத்து பகுதியில் காணோம். ஒரு வேளை நமது நாட்டில் பா ஜ க ஆட்சியில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத பொருளாதார வளர்ச்சியில் தங்களது வேலைகளை இழந்து வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்களோ என்னவோ   11:40:54 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜனவரி
31
2018
அரசியல் தி.மு.க.,வில் புதுக்குழப்பம்
"இதுவரை செய்த பழைய தவறுகள் இனி தொடராது,, புது தவறுகள் கட்சிக்குள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்"" என்று உறுதி அளித்துள்ளார்.   11:11:24 IST
Rate this:
3 members
0 members
18 members

ஜனவரி
31
2018
அரசியல் தி.மு.க.,வில் புதுக்குழப்பம்
இப்படி எதை பேசினாலும் தவறு என்று ரியாக்ட் செய்தால் பாவம் அந்த செயலற்ற தலைவர் எண்ணத்தை தான் பேசி அரசியல் செய்வார். அவரை கொஞ்சம் PERFORMANCE பண்ண தான் விடுங்களேன்.   11:09:41 IST
Rate this:
1 members
1 members
15 members

ஜனவரி
29
2018
அரசியல் அறக்கட்டளை மூலம் பா.ஜ.,வுக்கு ரூ 290 கோடி நன்கொடை
இத்தனை பணமும் காசோலை மூலமாகவும் RTGS மூலமாகவும் தான் இவர்களை வந்தடைந்திருக்கும் என்று நம்புவோமாக. அத்தனை பணமும் முறையாக வரி கட்டிய பணமாக தான் இருக்கும் என்று நம்புவோமாக. ஏன் என்றால் வாங்கியது ப ஜ க என்ற கட்சி ஆயிற்றே.. அவர்கள் முறையாக தானே எல்லாவற்றையும் செய்வார்கள். முறைகேடாக வரும் பணம் என்றால் அதை அவர்கள் கண்ணால் கூட பார்க்க மாட்டார்கள்.   14:08:27 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜனவரி
29
2018
அரசியல் போக்குவரத்து நஷ்டத்துக்கு காரணம் தி.மு.க. தான் முதல்வர் பழனிசாமி
அண்ணே துணை முதல்வரண்ணே,, நீங்க ஏன் திமுக தான் காரணம் அப்படின்னு சும்மா சில்லறைத்தனமா யோசிச்சி சின்னத்தனமா பேசுறீங்க. பழி போடுறது தான் போடுறீங்க கொஞ்சம் GRAND ஆஅ யோசிச்சி போடுங்க அண்ணே.. சும்மா திமுக பத்தி பேசி உங்களை நீங்களே சின்ன ஆளா காமிச்சிக்காதீங்க,, பேசுறது தான் பேசுறீங்க,, ""இந்த கட்டணம் உயர்வுக்கு நம்மை இதற்க்கு முன்னால் ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் தான் காரணம்,, அதற்க்கு முன்னால் நம்மை ஆண்ட ராஜ ராஜ சோழன் தான் காரணம்"" என்று எடுத்து விடுங்கண்ணே,, யாரு உங்களை கேக்க போறா?? எங்க புளிச்சி போன காதுகளுக்கு இதை எல்லாம் கேக்கறதுக்கும் கொஞ்சம் வித்யாசமா இருக்கும் இல்ல. கொஞ்சம் grand ஆ யோசியுங்க.   12:46:15 IST
Rate this:
1 members
1 members
35 members

ஜனவரி
24
2018
பொது விசாரணைக்கு ஆஜராக முடியாது சசிகலா கடிதம்
இதை அனுமதிப்பது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும். . இப்படியே விட்டால் அடுத்து குற்றவாளிகளை கைது செய்ய போகும்போது ""நான் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறேன், ,, நான் தை பூசத்திற்கு செல்ல போகிறேன் ,, நான் வேளாங்கண்ணிக்கு செல்கிறேன் ,, நான் ஹஜ் யாத்திரைக்கு செல்ல போகிறேன்"" என்று நேரத்துக்கு ஏற்றாற்போல மதம் மாறி தப்பித்து விடுவார்கள் குற்றவாளிகள். நம் குற்றவாளிகளுக்கு சொல்லி தரவா வேண்டும். புள்ளி வைத்தால் புள்ளி ராஜாவாகி விடுவார்களே.   17:27:44 IST
Rate this:
1 members
0 members
15 members

ஜனவரி
24
2018
பொது விசாரணைக்கு ஆஜராக முடியாது சசிகலா கடிதம்
இப்படி கூறி தப்பிக்கும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கி வையுங்கள். அல்லது அரசாங்க கஜானாவில் சேர்த்து விடுங்கள் அப்போது தான் மௌன விரதம் கலையும்.   11:33:37 IST
Rate this:
1 members
0 members
23 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X