sundaram : கருத்துக்கள் ( 25 )
sundaram
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
25
2022
வர்த்தகம் ரூ.30 ஆயிரம் சம்பளம் தந்து ப்ரெஷர்களை சுரண்டுகின்றனர்
பெரும்பாலான ஊழியர்களின் திறமையின்மையும் அவர்கள் சுரண்டப்படுவதற்கு ஒரு காரணம். நான்கு வருடம் படிக்கும் பொழுது அப்போதைய மார்க்கெட் தேவை என்ன என்பதை உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் திறமைகளை வளர்த்துக்கொண்டு வேலைக்கு வருவதற்கு தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் பல இன்ஜினியரிங் காலேஜ்களில் இதற்கு ஏற்ற சூழ்நிலையோ ஆசிரியர்களோ இல்லை. இதனால் கிடைத்த வேலை போதும் கிடைத்த சம்பளம் போதும் என்ற மனநிலைக்கு பலர் ஆளாகின்றனர். இதுவும் சுரண்டபடுவதற்கு ஒரு காரணம்.   19:30:11 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
9
2022
சிறப்பு பகுதிகள் குடும்பஸ்தனான செஸ் தம்பி
ஆண்களுக்கு கட்டணம் இரண்டாயிரம் ருபாய். இது மிகவும் அதிகம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கட்டணம் இருநூறு ருபாய். இது என்ன லாஜிக் என்பது புரியவே இல்லை. இந்த விஷயத்தை எந்த பத்திரிகையும் குறிப்பிடவில்லை. போட்டி நடக்கும் இடத்திற்கு சென்ற பிறகு டிக்கெட் எடுக்கவே பெரிய கூட்டம் நின்று கொண்டு இருப்பதை காண முடிந்தது. எத்தனையோ சினிமா மற்றும் ட்ராமா டிக்கெட்கள் online மூலம் எளிதாக கிடைப்பதுபோல் இதையும் நன்றாக கையாண்டு இருக்கலாம். பற்பல விஷயங்களில் மிகவும் ஆச்சர்யமூட்டும் வகையில் அழகாக செயல் பட்டவர்கள் இது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.   19:21:04 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
16
2022
சினிமா
பட்டணத்தில் பூதம் என்ற பழைய படம் மிகவும் அற்புதமாக இருக்கும். முடிந்தால் பாருங்கள்.   19:12:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2022
முக்கிய செய்திகள் சட்டவிரோத ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் அடாவடி ஓட்டுனர்கள் மீது அதிரடி நடவடிக்கை
பெண்களுக்கு இலவசம் என்ற திட்டத்தால் ஷேர் ஆட்டோவில் பெண்கள் பயணிப்பது குறைந்து விட்டதாக ஆட்டோ ஓட்டுனர்கள் தெரிவிக்கிறார்கள். பெட்ரோல் விலை ஏற்றத்தால் ஆட்டோவில் செல்பவர்களும் குறைந்து விட்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவர்களது சேவை பலதரப்பட்ட மக்களுக்கு தேவை என்பதை உணர்ந்துகொண்டு அவர்களது பிரச்சினைகளை அரசாங்கம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் காது கொடுத்துக்கேட்க வேண்டும். அவற்றை களைய முன்வரவேண்டும். இது செய்யாமல் நடவடிக்கை மட்டும் எடுப்பது தீர்வாகாது என்பது எனது கருத்து.   15:55:14 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
7
2022
அரசியல் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் நியமனம் அண்ணாமலைக்கு மூத்த தலைகள் முட்டுக்கட்டை!
திரு.கணேஷ் அவர்கள் எழுதி இருப்பது போல் திரு.ராஜா, திரு. எஸ்.வீ.சேகர், பொன்னார், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் இவர்களை போல் மூத்தவர்கள் விலகி இளையவர்களுக்கு வழி விட வேண்டும். திரு.அண்ணாமலை அவர்கள் மிகவும் துடிப்பாக, சரியான திசையில் கட்சியை நடத்துகிறார். இப்போது கிடைத்துள்ள நல்ல தலைவரை பின்பற்றி நாட்டுக்கு நல்லது நடக்க எல்லோரும் துணை புரிய வேண்டும் என்பது தான் எனது தாழமையான வேண்டுகொள்   09:16:33 IST
Rate this:
2 members
0 members
19 members

மார்ச்
31
2022
அரசியல் அமைச்சர் துரைமுருகனின் துபாய் பயணம் ரத்தானது ஏன்?
லூலூ குழுமத்தின் தலைவர் ஒரு கேரளத்துகாரர். இவரை கேரளா விலேயே சந்திக்க இயலாதா? துபாய் சென்றுதான் சந்திக்க வேண்டுமா? தெரிந்தவர் விளக்கவும். நன்றி.   09:54:47 IST
Rate this:
1 members
0 members
25 members

மார்ச்
13
2022
வாரமலர் இதுபோல் மழைக்காலம்!
மிகவும் அருமையான கதை. இந்த கதையில் வருவது போன்ற விஷயங்களை அனுபவித்து பார்த்தால் தான் பல ஊர்களில் வேலை செய்வதால் கிடைக்கும் அனுபவமும் பல இடங்களையும் மனிதர்களையும் சந்திக்கும் அனுபவங்களும் வாழ்க்கையை வளமாக்கும் என்பது புரியும். கதாசிரியருக்கு நல்வாழ்த்துகள்.   08:23:47 IST
Rate this:
0 members
0 members
10 members

டிசம்பர்
15
2021
பொது இது உங்கள் இடம் பஸ் ஓட்டுனர், நடத்துனர்களும் மனிதர்கள் தான்!
சாலை பராமரிப்புக்களும் மிகவும் அவசியமானவை. இல்லை என்றால் பஸ் மெதுவாக செல்ல நேரிடும். மற்றும் விபத்துக்கள் ஏற்படும். இந்த விஷயத்தில் அரசும், ஓட்டுநர்களும், தொழில் சங்கங்களும் கவனம் செலுத்தி ஒரு நல்ல முடிவை காண வேண்டும்.   10:49:05 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
13
2021
சினிமா
டம்மீஸ் நாடக சபா தயாரித்து பலமுறை அரங்கேறிய ஒரு நாடகம் "வினோதய சித்தம்". மிகவும் அருமையான நாடகம் பார்த்தபோது எனக்கு இதனை பலரிடமும் கொண்டு செல்வதற்கு சினிமாவாக எடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். இது திரைப்படமாக வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஸ்ரீவட்சன் அவர்கள், ஸ்ரீதர் அவர்கள் மற்றும் "கால தூதன்" பாத்திரத்தில் நடித்தவர் மிக மிக அருமையாக நடித்திருந்தார். குடும்பத்துடன் கண்டிப்பாக குறைந்த பட்சம் இரண்டு தடவையாவது பார்க்கவேண்டும். வாழ்க வளமுடன்.   10:10:17 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
5
2021
சம்பவம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி
இது போன்ற சம்பவங்களில் "போலீஸ்" என்ன செய்ய இயலும் என்று சொல்ல இயலுமா?   12:58:05 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X