Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. : கருத்துக்கள் ( 29 )
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D.
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2017
உலகம் இந்தியாவை மிரட்டவே அணுஆயுதங்கள் தயாரித்துள்ளோம்பாக்., பிரதமர்
இந்தியா 1974 லேயே தனது முதல் அணு ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்து விட்டது சகோதரரே ..   11:52:59 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
1
2017
சிறப்பு பகுதிகள் தண்ணீர் மனிதரை கண்ணீர் விடவைத்த வைகை.
சென்ற மாதம் டாக்டர் ராஜேந்திர சிங் அவர்களில் உரையை மதுரையில் கேட்கும் போது அவர் கூறிய மேலும் சில தகவல்களை கூற விரும்புகின்றேன். ராஜஸ்தானில் நிலவும் ஈரப்பதம் இல்லாத வறண்ட சீதோஷ்ண சூழ்நிலையில் டாக்டர் ராஜேந்திர சிங் அவர்கள் முப்பத்து இரண்டு வருடங்களில் சாதித்த சாதனையை, நமது தமிழ்நாட்டில் நிலவும் ஈரப்பதம் நிறைந்த சீதோஷ்ண சூழ்நிலையினால் பத்தே வருடங்களில் நாமெல்லாம் பாடு பட்டால் சாதிக்க முடியும் என்று உறுதி பட கூறினார். மேலும் நமது தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சுட்டிக்காட்டி, அந்த நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் வெள்ள மற்றும் வறட்சியால் தமிழகம் பாதிக்க படாது என்ற கருத்தையும் வலியுறுத்தினார். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது நீர் நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை சீர்செய்து மாசு படாமல் காப்பாற்றி அவற்றினை நமது எதிர்கால சந்ததியினர் பயன் படுத்தும் வண்ணம் மாற்ற வேண்டும். இதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியம். கட்டுரை ஆசிரியரின் சமுதாய முன்னேற்றம் பற்றிய எண்ணம் பாராட்டிற்கு உரியது.. உங்களின் எழுத்து பணி மென்மெலும் சிறக்க வாழ்த்துக்கள்.இன்றைய தேவை உணர்ந்து அருமையான கட்டுரையை வெளியிட்ட தினமலருக்கு நன்றி.   00:04:14 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
2
2017
பொது பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் டிரம்ப்
புவி வெப்ப மயமாதலை தடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. பொருள் சேர்ப்பது ஒன்று மட்டுமே லட்சியம் என்று செயல்படும் நாடுகள் கரியமிலவாயுவின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அமெரிக்க பொருட்களை தங்களின் நாடுகளில் விற்பதற்கு தடை செய்யவேண்டும். அமெரிக்க கம்பெனிகளை தங்களின் நாடுகளில் உற்பத்தி செய்ய அனுமதிக்கக்கூடாது. கச்சா எண்ணையின் விலையை அமெரிக்க டாலரில் நிர்ணயம் செய்யும் போக்கை விட்டுவிட வேண்டும். அமெரிக்காவை உலக நாடுகளில் இருந்து தனிமை படுத்த வேண்டும். புவி வாழ புவியில் வாழும் மக்களாகிய நாம் தான் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததிகள் வாழ வேண்டும் என்றால் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும்.   05:49:18 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

மே
22
2017
பொது வேட்பாளரின் தேர்தல் செலவை அரசே ஏற்பதா? தேர்தல் கமிஷன் எதிர்ப்பு
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே செய்து விட்டால் ஊழல் இன்றி தேர்தலை நடத்த முடியும் என்ற மத்திய அரசின் எண்ணம் சரியானதே. தேர்தல் செலவுக்கு பணத்தை அரசே ஒதுக்கீடு செய்துவிட்டால் வேட்பாளர்கள் செய்யும் சொந்த செலவுகளையும், அவர்களுக்காக மற்றவர்கள் செலவு செய்வதையும் தேர்தல் கமிஷனால் தடுக்கவோ அல்லது தடை செய்யவோ முடியாமல் போய்விடும் என்பது ஏற்று கொள்ள கூடியது இல்லை. ஊழல் இல்லாமல் மக்களுக்காக பணியாற்ற உண்மையிலேயே எண்ணம் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கும் சூழல் உருவாகும். அரசு செலவழிக்கும் பணம் தவிர வேறு எந்த பணமும் வேட்பாளர் செலவழித்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று சட்டம் கொண்டு வந்தால் இதனை நடைமுறை படுத்தலாம். தேர்தலில் பணம் செலவழிக்கும் வேட்பாளர்கள் ஒரு வியாபாரமாக அரசியலை கருதும் மனப்பாங்கு ஒழியும். கட்சி நிதி என்று மற்றவர்களிடம் பணம் பெற்று பின்னர் ஆட்சிக்கு வந்ததும் பணம் கொடுத்தவர்களுக்காக சலுகை காட்டும் நிலையும் மாறும். இதனால் அரசியலில் தூய்மையானவர்கள் மக்கள் சேவைக்கு கிடைப்பார்கள். இன்று வேட்பாளர் தேர்வின் போது எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் உங்களால் என்று வேட்பாளர் தேர்வுக்கு நடைபெறும் நேர்காணலின் போது அனைத்து கட்சிகளும் கேட்கும் கேள்வி இல்லாமல் போகும். பணம் போட்டு பணம் பண்ணும் வியாபாரமாய் இல்லாமல் அரசியல் தூய்மை அடையும். எனவே மத்திய அரசு, தேர்தல் கமிஷனின் எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவை இல்லை.   10:48:08 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மே
13
2017
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
இலவசமாக சேவை செய்த மருத்துவரான தந்தையின் வழியில் சேவை செய்யும் தங்களுக்கு வாழ்த்துக்கள். l தங்களை போன்ற ஆசிரியர்கள் தான் நாளைய சமுதாயத்திற்கு வழி காட்டும் கலங்கரை விளக்குகள். அரசு பள்ளியில் தங்களை போன்ற அர்ப்பணிப்பு உணர்வுள்ளவர்கள் இருந்தால் அனைத்து அரசு பள்ளிகளும் சாதனை படைப்பது உறுதி . ஒவ்வொரு சட்டமன்ற ,பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஒதுக்கபடும் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பகுதியை அந்தந்த தொகுதியில் உள்ள பள்ளிகளை மேம்படுத்த பயன்படுத்தினால் மாணவர்கள் பயனுறுவார்கள். பள்ளிக்கல்வி துறையும் இதில் கவனம் செலுத்தினால் நல்லது. மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்தால், அந்த குடும்பங்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் முன்னேறி விடும் என்பதில் சந்தேகமே இல்லை. அடுத்த தலைமுறை சந்ததிகளை மனதில் கொண்டு செயல் படும் உங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன் .பணத்தை மையமாக கொண்டு செயல்படும் இந்த உலகில் தனது நகையை விற்று மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் தங்களை மாணவ சமுதாயம் என்றும் மனதில் நிலை நிறுத்தும் . உங்களின் புனித சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.   22:31:36 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
7
2017
சிறப்பு பகுதிகள் தமிழர்களை தலை நிமிர்த்தும் இளைஞர்கள்!
கும்மிடிப்பூண்டி இளைஞர் களம,தமிழா' அமைப்பு,கன்னியாகுமரி மீம்ஸ், இளந்தளிர், இயற்கையோடு பயணம், ஸ்கிரீனர்' போன்ற அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள். ஒரு பேராசிரியராக, மாணவர்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளவன் நான். நாளைய உலகம் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது. கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டது போல சனி, ஞாயிறு கிழமைகளில் ஓய்வெடுத்து, 'நெட்'டில் கிடந்து, பகல் எல்லாம் தூங்கி வழிந்து, வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பொதுநல சிந்தனையுடன் சேவையை செய்யும் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் . சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் மனிதன் என்று அழைக்க படும் ராஜஸ்தானை சேர்ந்த திரு ராஜேந்தர்சிங் அவர்களின் அற்புதமான உரையை கேட்ட போது தமிழ்நாட்டில் நிலவும் வறட்சிக்கும் வெள்ளத்திற்கும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தான் காரணம் என்று ஒரு கருத்தை வலியுறுத்தி கூறினார். அவரின் கருத்து உண்மை என்பதை நாம் உணர வேண்டும். நம் மாநில மணல் திருட்டு, 'மாபியா' கும்பல், ஆற்றில் தண்ணீர் இருந்தால், மணலை திருட முடியாது என்பதற்காக, தண்ணீரை தேங்க விடாமல் செய்யும் சதி திட்டம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. என்ற இந்த செய்தியை படிக்கும் மாண்பு மிக்க நீதி அரசர்களில் ஒருவர் இதனை தான் முன் வந்து விசாரிப்பார் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நீரின்றி அமையாது உலகு, அதைப்போல சுழன்றும் ஏர்பின்னது உலகம். அதனால் நீர் நிலைகளை பராமரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. தினமலர் அருமையான கட்டுரையை பிரசுரித்த அதே நேரம் கட்டுரை ஆசிரியரின் பெயரை போடாதது ஒரு குறையாக தோன்றுகின்றது. அதை போல தமிழர்களை தலை நிமிர்த்தும் இளைஞர்கள என்று தலைப்பை கொடுத்து விவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன, ஆந்திராவின், குடிவாடா நாகரத்தினம் நாயுடுவை பற்றி குறிப்பிடுவதால் தலை நிமிர்த்தும் இளைஞர்கள என்றோ தலை நிமிர வைக்கும் இளைஞர்கள என்றோ கொடுத்து இருக்கலாம். இந்த சமுதாயத்தை மேம்படுத்த தினமலருக்கு இருக்கும் பொறுப்பான எண்ணம் வரவேற்க தக்கது. இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள். வெற்றியும் நிச்சயம்.   05:03:34 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
சிறுவர் மலர் இளஸ்... மனஸ் (57)
வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி வாழ்க்கையில் அன்பு மட்டுமே நிரந்தரமானது. அன்பிற்காக எங்கும் குழந்தைகள் ஏராளம். பணம் பணம் பணம் பணம் என்று அதன் பின்னால் மட்டுமே ஓடி குழந்தைகளின் நியாமான ஆசைகளை பூர்த்திசெய்ய தவறும் பெற்றோர் இங்கு ஏராளம். அனைவருக்கும் அறிவுரை கூறும் அற்புதமான கட்டுரை. கொடுத்த உதாரணம் மிக பொருத்தமானது. எல்லாவற்றையும் விட நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மனதில் உள்ள வலிகளை உடனே மறக்கடிக்க கூடியது. அவற்றில் ஒரு சில. ........உங்களைப் போன்ற குழந்தை கள் முதலில் ஏங்குவது, பெற்றோரின் அன்புக்காகத்தான். அதை கூட கொடுக்காமல், இவர்கள் ஓடி ஓடி உழைத்து என்ன பயன்...அழாதேம்மா... உன்னோட எல்லா கஷ்டத்திற்கும், ஒரு முடிவு வரும் கவலைப்படாதே. 21 வயதில் உனக்கு ஆபரேஷன் ஆகும் வரை, மிக மிக ஜாக்கிரதையா இரு டென்ஷன் ஆகாதே மகளே...செல்லகுட்டி இன்றைய நவீன மருத்துவ உலகம், உன்னுடைய நோயிலிருந்து உன்னை காப்பாற்றிவிடும். சந்தோஷமாக இரு. மம்மி, டாடி இனி உன்னை நல்லா பாத்துக்குவாங்க கவலைப்படாதேநீ சீக்கிரமா, சுகமடைய விரும்பும்,அன்பு ஜெனி ஆன்டி.. இந்த வரிகளில் அன்பும் பாசமும் ஆழி பேரலையாய் பொங்கி வழிவது நிதர்சனம்.   07:38:07 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
23
2017
அரசியல் நாடு முழுவதும் மதுவிலக்கு தேவை நிதிஷ்குமார்
மக்களை மதுவின் மயக்கத்தில் வைத்து அந்த மது விற்பனையில் கிடைக்கும் வருமானத்தில் மக்களை வாழ்வாங்கு வாழ வழி வகை செய்யும் முயற்சியில் ஈடுபடும் அரசியல் வியாதிகளுக்கு மக்களை பற்றி என்றும் அக்கறை இருந்தது கிடையாது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடு முழுதும் மதுவிலக்கை அமல் செய்ய வேண்டும் என்று கூறுவது பாராட்டுக்குரியது. நாடு முழுவதும் மதுவிலக்கை அமல் படுத்த அழுத்தம் தர வேண்டியது பொது மக்களே. மக்கள் ஒன்றிணைந்து பூரண மது விலக்கிற்கு தங்களின் குரலை பதிவு செய்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமே. மது இன்றைய சமுதாயத்தை மட்டும் இன்றி வருங்கால சந்ததிகளையும் மன ரீதியாக உடல் ரீதியாக பொருளாதார ரீதியாக பாதிக்கும் என்பதை உணர்ந்து மதுவிலக்கு அமுலாகும் நாள் விரைவில் வரும்.   08:08:25 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
31
2017
கோர்ட் மதுக்கடைகளை அகற்ற தமிழக அரசுக்கு அவகாசம் வழங்க மறுப்பு
உச்ச நீதி மன்ற தீர்ப்பு வரவேற்க தக்கது.. தீர்ப்பளித்த நீதி அரசர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். மக்கள் நலனில் அக்கறைஇல்லாத அரசியல் வியாதிகள் கண்டிக்க தக்கவர்கள். குடி கெடுக்கும் குடியை நடத்தி, மக்களுக்கு சேவை செய்யும் இந்த கேடு கெட்ட அரசுகள் இப்படிப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னும் திருந்துவார்களா ? மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடியை இந்த நாட்டை விட்டு அழித்து ஒழிக்கும் நாள் விரைவில் வர வேண்டும்.   17:37:00 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
29
2017
கோர்ட் மதுவை விட மனித உயிர் பெரியது சுப்ரீம் கோர்ட் கருத்து
மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசுகள் ஐநூறு மீட்டரை நூறு மீட்டராக குறைக்க சொன்ன தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி செயல் கண்டிக்க தக்கது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசுகளாக பொய் வேஷம் போடும் அரசுகளை நினைத்தாலே நெஞ்சு பொறுக்குதில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு தமிழக அரசுக்கு ரூ.25,500 கோடி வருமானத்தை பாதிக்கும். என தமிழக அரசு வாதாடியது. நமக்கு எல்லாம் தலைகுனிவு. சாராய ஆலை அதிபர்கள் அரசியல் கட்சிகளில் இருந்து கொண்டு தங்களது வருமானத்தை மட்டுமே பார்த்து கொண்டு மக்களின் நலனை கெடுக்கும் சாராயத்தை ஆறாக ஓட விடுவது எந்த விதத்தில் நியாயம்? மக்களை குடிக்க வைத்து அதனால் வரும் பணத்தில் மக்களுக்கு சேவை செய்ய போகும் இந்த கேடு கெட்ட அரசியல் வியாதிகள் அழித்தொழிக்க பட வேண்டியவர்கள். குடி கெடுக்கும் குடியை அரசு ஆதரித்து சமுதாயத்தை சீரழிக்கும் இந்த அக்கிரமம் தடுத்து நிறுத்த படவேண்டும். உச்ச நீதி மன்றம் இவர்களின் கருத்துக்கு செவி மடுக்காமல் நெடுஞ்சாலைகளிலிருந்து, 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இயங்கக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவை போட வேண்டும்.   18:30:16 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X