Chockalingam : கருத்துக்கள் ( 117 )
Chockalingam
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
27
2020
பொது போலீசார் கையில் லத்தி எடுக்க தடை!
விசாரிக்காமலேயே அடிப்பது தவறு. சிலருக்கு 'கோலெடுத்தால் தான் குரங்கு ஆடும்' என்ற பழமொழி ஒத்து வரும், எனவே கையில் கோல் நிச்சயம் தேவை. படத்தைப் பார்த்தால் காஸ் உருளை அத்யாவசியமாதமானதல்ல என்று காவலர் நினைத்துவிட்டார் போலும்.   09:17:47 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
12
2020
அரசியல் மக்களுக்கு எழுச்சி ஏற்பட்ட உடன் அரசியலுக்கு வருவேன் ரஜினி
திரு செந்தில் அவர்கள் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது. "மலையைத் தூக்கி என் கையில் வையுங்கள், நான் மலையைத் தூங்குகிறேன்."   23:02:46 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
8
2020
பொது ரஜினியின் புது சிஸ்டம் ரசிகர்கள் கலக்கம்!
பொதுவாகவே ஒரு சில நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் தகுதி வந்தவுடன், அடுத்து அரசியலில் இறங்க நினைக்கிறார்கள். முதல்வராகத் துடிக்கிறார்கள். இம்மாதிரி செயல்கள் எல்லாம் திரையில் நடப்பதுபோல் உடனடியாக நடப்பவை அல்ல. இங்கு பலர் குறிப்பிட்டது போல், முதலில் மக்களோடு மக்களாக செயல்பட வேண்டும். மேலும் இவர்கள் படம் வியாபார ரீதியாக வெற்றிபெற வேண்டுமென்றால், இவர்கள் படங்களோடு வேறு படங்கள் வரக்கூடாது. சிறிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், கதை அம்சமுள்ள படங்களுக்கெல்லாம் திரை அரங்கம் கிடைக்காது. இவர்களுடைய படம் மற்றுமே தனியாக, அதுவும் விடுமுறை நாட்களை ஒட்டி வெளிவரும். சில சமயங்களை நன்றாக ஓடி வசூலைக் குவிக்கலாம். ஆனால், ஒரு போட்டி என்றால் பலர் பங்குகொள்ள வேண்டும். தனது துறையைச் சார்ந்தவர்களின் பிழைப்பிலேயே மண் அள்ளிக் கொட்டுவது போன்ற செயலைச் செய்பவர்களா, நாட்டு மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார்கள். யோசிக்க வேண்டும். இவர்கள் தேர்தலில் போட்டியிடவேண்டுமெனில் வேறு யாரும் வேட்பாளராக இருக்கக் கூடாது. அப்போதுதான் இவர்கள் வெற்றிபெற முடியும். இது நடக்கக் கூடிய காரியமா? இவர்கள் தனக்குள்ள செல்வாக்கை வைத்து தனி நபர்களின் வருமானத்தை பெருக்குபவர்கள். இவர்களில் ஒருசிலர் நல்ல மனிதர்களாக இருக்கலாம். ஆனால், சுய ஒழுக்கம் உள்ளவர்களா என்று பார்க்க வேண்டும். அந்தக் காலத்து அரசியல்வாதிகள் பலர் சுயநல வாதிகள், ஏனென்றால் தான் முதலில் நல்லவனாக இருக்க வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஆனால் தற்காலத்திலோ, தான் எப்படி இருந்தாலும் மக்கள் நல்லவர்களா இருக்க வேண்டும் என நினைக்கும் பொதுநலவாதிகள். இவர்களுடன் அணி சேர்பவர்கள் எல்லாம், ஊழல், கொலை, கொள்ளை, போன்ற செயல்களில் ஈடுபடாதவர்களா? ஒருசிலரின், அதாவது ரசிகர்களின், அறியாமையைப் பயன்படுத்தி காசு சேர்ப்பவர்கள். நான் யாரையும் குறை சொல்லவில்லை. நல்லது செய்ய விரும்புவர்கள் முழுமனத்துடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட வேண்டும். எப்பொதும் காலத்தை வீணாக்கக் கூடாது.   07:54:15 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
8
2020
பொது 103 வயது சாதனை பெண்ணிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி
ஒருபுறம் முதிர்ந்த தாயிடம் ஆசீர்வாதமும், மறுபுறம் எட்டு வயது தளிரிடம் கௌரவ மறுப்பும். வேடிக்கையாக இல்லை.   06:56:01 IST
Rate this:
15 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
3
2020
அரசியல் ஆட்சி கலைப்பு என்ன கருக்கலைப்பா? செல்லூர் ராஜூ கிச்சு,கிச்சு
கருக் கலைப்பு. இது போன்ற பதிலை ஏற்கனவே திரு TR அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியதாக ஞாபகம்.   08:06:47 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2020
வாசகர் கருத்து வாசகர் கருத்து
"I am sorry, 18-ஜன-2020 09:19:18 IST." This is published in "Vaasakar Karuththu". Who felt sorry?   19:42:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
அரசியல் சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி தமிழர்கள் மட்டுமே தமிழ் பேசுகின்றனர் இல.கணேசன்
ஆங்கிலேயர்கள் வியாபாரத்திற்காக பாரதம் வந்து, பிறகு நாட்டைப் பிடித்து, ஆங்கிலத்தை திணித்து, மத மாற்றம், கலாச்சார மாற்றம், கல்வி முறை மாற்றம், அவர்களின் சுய லாபத்திற்காக செய்தார்கள். அதேபோல், வேறொரு பிரிவினர் பாரதத்தின் கோவில்களைக் கைபற்றிக் கொண்டனர். இறைவனுக்கு எல்லா மொழிகளும் தெரியும். இறைவன் ஒருவனே. இறைவன் எங்கும் நிறைந்தவன். அண்டத்திலிலுள்ள ஒவ்வொரு அணுவையும் அவன் அறிவான். மனிதனுடைய விருப்பு, வெறுப்பு அனைத்தையும் அவன் அறிவான். நாம் இறைவனிடம் வாய்விட்டு சொல்லித்தான் நமது தேவைகளை அவனிடம் தெரிவிக்க வேண்டும் என்றில்லை. அப்படி இருக்கும் போது எதற்காக இறைவனுக்கும் மனிதனுக்கும்இடையில் அர்ச்சகர் என்ற பெயரில் ஒருவர் தேவைப் படுகிறார்? அதுவும் இறைவனுக்கு, மனிதனுக்கு தெரியாத / புரியாத மொழியில் மனிதனுடைய வேண்டுதலை தெரியப்படுத்த ஒரு நபர்?   06:32:51 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
அரசியல் சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி தமிழர்கள் மட்டுமே தமிழ் பேசுகின்றனர் இல.கணேசன்
ஆம், சமஸ்க்ருதம் நாடு தழுவிய மொழி, அதாவது இந்திய நாட்டில் உள்ள ஒரு சிலரால் தழுவப்பட்ட மொழி. ஆனால் மற்ற இந்திய மொழிகள் எல்லாம் அந்தந்த மக்களால் தழுவப்பட்ட மொழி. எண்ணிக்கையில் சமஸ்க்ரிதத்தைவிட மற்ற மொழிகளே அதிகம். சமஸ்கிருத்தை கோயில்களில் ஓதுவதைத் தவிர வேறு என்ன பலன். ஆக்கபூர்வமானவற்றை கவனியுங்கள்.   19:09:40 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
அரசியல் வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம் ரசிகர்கள் குஷி
5 ஆண்டு திட்டங்கள் போல் கட்சி தொடங்கவே இத்தனை 5 ஆண்டுகள் ஆயிற்று. இவரின் பழைய ரசிகர்கள் பலர் இறந்து போயிருக்கலாம். இப்போது இருக்கும் இளைஞர்கள் எல்லாம் இவருடைய ரசிகர்களா என்றும் தெரியாது. இந்த நிலையில் இவர் என்னத்த கட்சி தொடங்கி, என்னத்த தேர்தலில் நின்று ஜெயித்து, என்னத்த ஆட்சியைப் பிடித்து, என்னத்த மக்களுக்கு நல்லது செய்வது எப்போ, ஹூம்.   07:19:16 IST
Rate this:
10 members
1 members
21 members
Share this Comment

பிப்ரவரி
9
2020
சிறப்பு பகுதிகள் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் ஏமாறினேன்!
"ஏமாந்தேன்" என இருக்க வேண்டுமென நினைக்கிறன்.   07:26:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X