kuruvi : கருத்துக்கள் ( 60 )
kuruvi
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2020
பொது மின்னணு துறையில் முதலீடு செய்வோருக்கு 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு
அப்படியே தொழில்துவங்கமுனைவோரிடத்திலிருந்து கையூட்டு பெறுபவர்களுக்கு குறைந்தபட்சமாக பத்து வருடமாவது கடுங்காவல் தண்டனை என்று சட்டம் இயற்றுங்கள் .லஞ்சம் பற்றி புகார் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் அரசு அலுவலர்கள் அல்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்தி புகார் தெரிவிப்பவர்களையே குற்றவாளிகள் போல் நடத்தாமல் லஞ்சம் ரிப்போர்டிங் எளிதாகவும் ,தெரிவிப்பவர்கள் பற்றிய ஐடென்டிட்டி , பாதுகாப்புக்காக, ரகசியமாகவும் வைக்க ஏற்பாடு செய்தால் நாடு வெகுவாக முன்னேறும் ,தொழில்கள் பலமடங்கு பெருகும் .லஞ்சம் வெகுவாக இருந்தாலும் லஞ்சஒழிப்புக்காக அரசு ஒரு முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை .   21:22:48 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
7
2020
சம்பவம் சீன செயலிகளுக்கு தடை அடுத்த எச்சரிக்கை
திபெத் சீனாவால் அத்துமீறி சட்டத்திற்குபுறம்போக்காக அபகரிக்கப்பட்டநாடு .இதை ஊடகங்களும் இந்திய அரசும் சீனா எல்லை என்று குறிப்பிடாமல் திபெத் எல்லை என்று குறிப்பிடவேண்டும் .திபெத் எல்லை சம்பந்தமாக சீனாவிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தக்கூடாது .திபெத் சீனாவின் பகுதி என்பதற்கு எந்தவிதமான சரித்திரமும் கிடையாது .இதை இந்திய மக்கள் உலகளவில் எடுத்துச்சென்று புத்தரின் பூமி பௌத்தர்களுக்கே என்ற கோஷத்தை உலகெங்கும் ஓலிக்க செய்யவேண்டும் .திபெத் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்பதை உலகறிய செய்யவேண்டும் .முடிந்தால் தலாய்லாமாவிற்கு உதவிசெய்து மறுபடியும் UNO. தீர்மானம் கொண்டுவர ஏற்படு செய்யவேண்டும் .யாரும் செய்வார்களா?   03:39:46 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
4
2020
உலகம் சீன அதிகாரிகளுக்கு தடை விதிப்போம் ஜோ பிடன் திட்டவட்டம்
இது ஒரு அற்புதமான செய்தி Mr.Biden. திபெத் ஒருபோதும் சீனாவின் பகுதிகிடையாது என்பது சரித்திரம் .இதை சீனாவே ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது .பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருடந்த்து திபெத் சீனாவின் பகுதி என்று ஜிங்பி சொன்னதாக செய்தி .பதிமூன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை சீனாவை ஆண்டுவந்த Mingdynasti. சீனா வரைபடத்தில் திபெத் திபெத் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது .அது சீனா என்று குறிப்பிடப்படவில்லை .மற்றும் பதினாறாம் நூற்றாண்டில் இருந்து ,aftermingdynasti.நானூறு ஆண்டுகளாக திபெத் தனி நாடாக புத்தர் குறிக்கோள் வழிகாட்டுதல்படி மிலிட்டரி இல்லாமல் வழிநடத்தப்பட்டுள்ளது .பதிமூன்றாம் நூற்றாண்டில் இருந்து திபெத் சீனாவின் ஒருபகுதி என்றால் ஏன் தலாய்லாமா இந்தியாவிற்கு புத்தபிட்சுகளோடு தஞ்சமடைந்தார் என்று சீனா பதிலளிக்கவேண்டும்.பதினாறாம் நூற்றாண்டில் இருந்து இருபதாம் நூற்றாண்டுவரை (சினதிபெத்தை உலகச்சட்டங்களுக்கு விரோதமாக ஆக்கிரமிப்புச்செய்தவரை)சீனா தீபத்தை ஆண்டுவந்திருந்தால் ஏன் 1949.சீனாவின் படைகள் திபெத்தின்மீதுபடையெடுத்தது இன்பத்தை தெளிவுபடுத்தவேண்டும் .திபெத் பதினாறாம் நூற்றாண்டுகளுக்கு பிறகு ஒரு தனி நாடு என்பதற்கு சரித்திரம் தெளிவாக உள்ளது .உலகின் பல நாடுகளில் பழங்குடியினர்களை அவர்கள் நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் .அதேபோல் பௌத்த மதத்தினைரையும் அவர்கள் நாட்டில் பாதுகாக்கப்படவேண்டும் .Budha'slandforbudhist.இதில் இந்தியா Mr.Biden. அவர்களோடு ஒருங்கிணைந்து மற்ற உலக நாடுகளையும் ஒருங்கிணைத்து சிதைந்த திபெத் சரித்திரத்தை சரி செய்தால் இந்திய கண்டத்தில் நிரந்திர அமைதி ஏற்படும் .சீனா எப்போதுமே இந்தியாவிற்கு நண்பனாக முடியாது ,அங்கு மக்களாட்சி ஏற்படும்வரை .மற்றும் இந்தியா மற்ற நாடுகளோடு வர்த்தக பரிவர்த்தனைகளை ஏற்படுத்தும்போது மக்களாட்சி உள்ள நாடுக்ளிடித்தேயே ஏற்படுத்தவேண்டும் .இதை நாட்டின் கொள்கையாகவே கடைபிடிக்கவேண்டும் .   00:48:57 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
18
2020
உலகம் இந்தியாவுடன் சுமூகப் பேச்சுக்கு தயாராகும் ஜி ஜின்பிங் சீனா வெளியுறவுத் துறை தகவல்
சீனா திபெத்தை உலக நீதி சட்டங்களுக்கு புறம்பாக ஆகிராமிப்பதுர்க்குமுன்பாக தனி நாடாக நானூறு வருடங்களாக சுய ஆட்சி நாடாக இருந்ததாக வரலாறு கூறுகிறது .இந்த ஆக்ரிமிப்புக்கு unitednationsorganaization, மற்றும் உலகநாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்காதர்க்கு காரணம் திபெத் பௌத்தமத கோட்பாடுகளுக்கு ஏற்ப தன்வசம் மிலிட்டரி இல்லாததே காரணம் .தலாய்லாமா தன்னால் முடிந்தவரை போராடி ப்பார்த்தாகிவிட்டது .அவருடைய பேச்சு உலகநாடுகளிடையே ஏற்கப்படவில்லை .காரணம் எல்லாநாடுகளுமே திபெத்தில் லாபம் காணமுடியாது என்பதே .உலகத்தில் பல நாடுகளில் பழங்குடியினர் அவர்களுடைய நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்காமல் பாதுகாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் .அதேபோன்று திபெத்தும் புத்தமதத்தின் நாடாக பாதுகாக்கப்பட்டிருக்கவேண்டும் .அதனால் இப்போதுள்ள சூழலை கொண்டு உலகநாடுகள் சீனா திபெத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற கோட்பாட்டை கடைபிடித்து குரலெழுப்பவேண்டும் .இதை தலாய்லாமா மறுபடியும் உலகநாடுகளிடையே கொண்டு செல்ல இந்தியா துணைபுரியவேண்டும் .திபெத்தின் தனித்துவத்தை பாதுகாக்கப்படவேண்டும் .சரித்திரத்தை புரட்டிப்பார்த்து செய்வார்களா?   23:40:21 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
17
2020
பொது ஓய்வூதியம் எடுக்கவில்லையா? இறந்ததாக கருத அரசு முடிவு!
பென்ஷன் வாங்குற ஒருத்தர் நல்ல வசதியானவராக இருந்தால் ஒட்டுமொத்த பென்ஷன் திட்டத்தையே ஒழித்துவிடலாமா ?   20:31:47 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
17
2020
பொது ஓய்வூதியம் எடுக்கவில்லையா? இறந்ததாக கருத அரசு முடிவு!
தடி எடுத்தவன் தண்டல்காரன்.அரசு தண்டல் காரன் போல செயல்படுவது சரியா என்பதை யோசிக்கவேண்டும் பென்ஷனில் கைவைக்க யாருக்கும் உரிமை சட்டத்தில் இல்லை என்பது சத்தியமூர்த்திக்கு தெரியாதோ .இவர் தான்வகிக்கும் பதவிக்கு தகுதியற்றவர் என்பது இதன்மூலம் தெரிகிறது .ஒருவேளை அரசுக்கு எதிராக பென்ஷனர்களை திருப்பிவிடும் முயற்சியாகக்கூட இருக்கலாம் .இதை அரசு கவனித்து தகுந்த நடவடிக்க்கைஎடுக்கவேண்டும் .   20:28:22 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
17
2020
உலகம் டிரம்ப் பொய்களில் புரளுபவர் மட்டமான அரசியல் செய்பவர் கமலா ஹாரிஸ்
உலகில் பெரும்பாலான நாடுகளில் உள்ள பொதுவான சட்டம் அந்த நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் அந்நாட்டு பிரஜைகள் .அதுபோன்ற நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று .அப்படி இருக்கும்போது அமெரிக்காவில் பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்கன் பிரஜை என்பதில் என்ன சந்தேகம் என்று தெரியவில்லை .மற்றநாடுகளைப்போலவே அமெரிக்காவிலும் படிப்பறிவு இல்லாதோர் /சுய சிந்தனை அற்றவர்கள் கண்மூடித்தனமாக தான் போற்றும் அரசியல்வாதிகளை தீவிரமாக பின்பற்றுவோர் கூட்டம் உண்டு என்பதால் அவர்கலின் ஓட்டுகளை சித்தராமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியே அவருடைய பிறப்பைப்பற்றிக்கூறுவது .   21:52:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
18
2020
அரசியல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பசு கோமியம் குடிங்க மே.வ. பா.ஜ,.தலைவர் அறிவுரை
அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம் .நம் வீடுகளில் சுப காரியங்கள் நடக்கும்போது அல்லது நீத்தார் திதி நாட்களில் பசுவின் கோமியம் உபயோகப்படுத்தி பார்த்திருக்கிறேன் .ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீருடன் துளசி பசுவின் கோமியம் கலந்து எல்லோருக்கும் தீர்த்தமாக கொடுப்பார்கள் .அதோடில்லாம்மால் வீடு முழுவதும் தெளிப்பார்கள் . அது ஏன் என்று கேட்டபோது அவர்கள் சொன்னது அது ஒரு கிருமிநாசினி என்று .ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும்.   06:48:16 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
11
2020
சினிமா கொலைகாரர்களாக மாறிவிடாதீர்கள்: டிரால் செய்தவர்கள் பற்றி வனிதா வேதனைப் பதிவு...
இதுபோன்ற தனி நபர் விமர்சனங்களை அல்லது தனிநபர் வெறுப்புணர்ச்சி தூண்டும் பதிவுகளை பதிவிடக்கூடாது.   02:34:39 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூலை
11
2020
பொது தாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
தாரவியும் இன்னும் தாராவிபோன்ற பெரியநகரங்களிடையே இருக்கும் அடிப்படை வசதிகளில்லாமல் வாழும் மக்கள் வாழ்க்கையும் நாட்டின் அவமான சின்னங்கள் .இது ஏன் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரவர்கத்தில் இருப்பவர்கள் மனதை உறுத்தவில்லை என்றுதான் புரியவில்லை .   22:47:27 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X