JAYACHANDRAN RAMAKRISHNAN : கருத்துக்கள் ( 533 )
JAYACHANDRAN RAMAKRISHNAN
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2021
கோர்ட் ஆட்சியாளர்கள் ஏழைகளா? ஐகோர்ட் கேள்வி
பிச்சை யார் வாங்குவார்கள். ஏழைகள் தான் பிச்சை எடுப்பர். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் போட்ட பிச்சையில் தான் இன்றைய ஆட்சி நடப்பதாக பிச்சை போட்டவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஆகவே ஆட்சியில் உள்ளவர்கள் ஏழைகள் தான் இதனை குறித்து கொள்ள வேண்டும்.   07:09:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
22
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
22
2021
அரசியல் ஆக்சிஜன் விவகாரத்தில் இணை அமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டீஸ்
கோரோணா உயிரிழப்புகளை குறைத்து காட்ட அனைத்து மாநிலங்களிலும் கோரோணா உயிரிழப்புகளை மருத்துவத்தில் உள்ள பல்வேறு பெயர்களை குறிப்பிட்டு இறந்ததாக இறப்பு சான்றிதழ் அளித்துள்ளனர். உதரணமாக பலருக்கும் Myocardial Infraction என குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது போன்று வெவ்வேறு பெயர்களில் இறப்பு சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ளது. பின்னர் மத்திய அமைச்சர் சொன்னது சரிதானே. இதனால் கோரோணாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட கிடைக்காமல் போயிருக்கலாம். கோரோணா இறப்புகள் பற்றிய உண்மையான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதில் நமது பொதுமக்கள் பங்களிப்பும் உள்ளது. பலர் கோரோணாவால் உயிரிழந்தார் என்றால் கேவலம் என தவறாக நினைத்து , வேறு காரணம் கூறி இறந்ததாக சான்றிதழ் வாங்கி சென்று உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் எதிர்கட்சிகள் தவறான பிரச்சாரம் , கோரோணா பற்றி சமுக ஊடகங்களில் youtube Whatsapp போன்றவைகளில் கேலி கிண்டல் செய்து வந்த வீடியோக்கள் அரசின் நடவடிக்கைகளை குறை கூறி அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட எதிர்மறை கருத்துக்கள், செய்தி ஊடகங்கள் TRP Rate ஏற்ற போட்ட வீடியோக்களையே திரும்பத்திரும்ப போட்டு காட்டி (தற்போது ஊசி குத்தும் வீடியோக்கள்) மக்களை பயமுறுத்தியது , தடுப்பு ஊசி பற்றி கேவலமான முறையில் எதிர் கட்சிகள் செய்த பிரச்சாரம் சுடுகாடுகளில் கோரோணா பிரேதங்களை புதைக்க விடாமால் நிகழ்ந்த தகராறுகள் போன்ற செயல்கள் தான் "கோரோணாவால் இறந்தார் என்றால் கேவலமானது "என எண்ணி பொதுமக்களே தவறான மருத்துவ சான்றிதழ் பெற்றது. அதற்கு மருத்துவர்களும் அரசு இயந்திரமும் துணை போனது. இந்த விஷயத்தில் கட்சி பேதமின்றி ஆட்சியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பங்குண்டு.   13:21:34 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூலை
21
2021
பொது கடைகளில் நெரிசல் தடுக்க செய்ய வேண்டியது என்ன? அரசுக்கு சில யோசனைகள்
கோரோணா என்பது நமது வாழ்வுடன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதை நம் வாழ்க்கையில் இருந்து விலக்குவது முடியாத காரியம். தீவிரவாதிகள் கூட இனி குண்டு வீசுவது ஏகே47 மூலம் சுடுவது ராக்கெட் தாக்குதல் நடத்துவது போன்ற விலையுயர்ந்த தாக்குதல் நடத்துவது நிறுத்தி விட்டு, டூரோன்கள் மூலம் கோரோணா வைரஸ் துணிகள் மற்றும் உணவு பொருட்களில் கலந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீசியும் அல்லது வேறு எந்த விதத்திலாவது கோரோணா பரப்பி அழிவை ஏற்படுத்தலாம். ஆகவே நாம் தான் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஊரடங்கு என்றும் தனிமைபடுத்தபட்ட பகுதி என்றும் இனிமேலும் தொடர்ந்தால் நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கபடுவதோடு மக்களின் பொருளாதார நிலை மிகுந்த பாதிப்பு ஏற்படும். மக்கள் சாதாரண வாழ்க்கை நடத்தவே மிகுந்த சிரமப்படுவார்கள். மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சென்று கல்வி கற்காமல் கிடைக்கும் வேலை செய்து புத்தகம் பார்த்து பரிட்சை எழுதி வீணாக போய்விடுவார்கள். குழந்தை தொழிலாளர்கள் அதிகம் ஆகி விடுவார்கள். பெற்றோரும் குழந்தை சம்பளத்தில் வேலைக்கு செல்வதை தவிர்த்து சோம்பேறி ஆகி அக்கம்பக்கத்தினருடன் சண்டை சச்ரவில் ஈடுபட்டு சட்ட ஒழுங்கு சீர்குழைய செய்து விடுவார்கள். நாட்டில் Morality என்பது குறைந்து Mortality அதிகமாகி விடும். ஆகவே மக்களுக்கு கோரோணா பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகப்படுத்த வேண்டும். மக்கள் விழிப்புணர்வோடு உள்ளனரா என்று அடிக்கடி மக்களிடம் இருந்து Feed Back பெற்று அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோரோணாவோடு மக்கள் வாழ பழகிக்கொள்ளும் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கோரோணாவை வைத்து அரசியல் செய்யாமல் , மக்களோடு இணைந்து மக்களுக்கு அறிவுரை வழங்கி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்த கோரோணா மூலம் அதிக பயன்பெற்றவர்கள் என்றால் தங்க வியாபாரிகள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பவர்கள், மருத்துவ மனைகள் , டாக்டர்கள், அரசியல் வாதிகள், நகை அடகு காரர்கள், கடன் கொடுப்பவர்கள், மதுபானம் தாயாரிப்பவர்கள், அரசியல் வாதிகள் , அரசு அலுவலகர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர், இன்டெர்நெட் திருடர்கள், கொள்ளையடிப்போர் இவர்களின் வாழ்க்கை தரம் பன்மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால் அதே சமயம் பெரும்பான்மை மக்கள் கூலித்தொழிலாளிகள், கட்டிட வேலை செய்வோர், சிறு குறு தொழில் செய்வோர், கோவில்கள் மற்றும் ஈமக்கிரியை பணிசெய்யும் அர்ச்சகர் போன்றோர், தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர், மாணவர்கள் போன்றோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்வில் இன்னும் ஒரு நிச்சயமற்ற நிலை உள்ளது. ஆகவே நமது அரசியல் வாதிகள் சிறிது காலம் தங்கள் சுயநலத்தை விடுத்து மக்களின் நலத்திற்கு பணியாற்ற முன் வரவேண்டும். இல்லை என்றால் சிறிது காலம் அரசியல் இருந்து ஒதுங்கி , நல்லது செய்ய வருபவர்களுக்கு வழி விட்டாலே போதும்.   12:03:51 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
21
2021
அரசியல் நீட் தேர்வுக்கு யார் காரணம் தி.மு.க.,வுக்கு காங்., பதிலடி
"நீட் தேர்வை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கட்டாயமாக அமல்படுத்தியது பா.ஜ. அரசு தான்." ஆக இப்போது தான் காங்கிரஸ் உண்மையை ஒத்துக்கொண்டு உண்மையை வெளிபடுத்தியுள்ளது. ஆனாலும் மேலும் ஓர் உண்மையை மறைக்கிறது காங்கிரஸ். அது என்னவென்றால் "நீட் தேர்வு" கட்டாயம் ஆக்கபட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி நீட் தேர்வு கட்டாயம் ஆக்க படவேண்டும் என்று தீர்ப்பு பெற்று தந்தது நமது உலக பொருளாதார வல்லுனர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரும் தமிழருமான மாண்புமிகு திரு.பா.சிதம்பரம் அவர்களின் மனைவியும் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞருமான மதிப்பிற்குரிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள். இதையும் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் ஒத்துக்கொள்ள வேண்டும். இது ஒருபுறம் இருக்கட்டும் எப்படியும் இவர்கள் இதை ஒத்துக்கொள்ள தான் செய்வார்கள். மேலும் நீட் தேர்வை இந்தியாவில் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. அதற்கு மாறாக , எல்லா மாநிலங்களும் , மிகவும் பின் தங்கிய பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் கூட நீட் தேர்வுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றியும் தத்தமது மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி கொடுத்து மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி நீட் தேர்வில் வெற்றி பெறச்செய்து மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்த்து கொண்டு வருகின்றன. ஆனால் கல்வியில் சிறந்தது தமிழகம், மொழிகளில் உயர்ந்தது தமிழ், உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக அரசியல் வாதிகள் ஒன்றை சரியாக புரிந்து கொள்ளவில்லை. மொழிகளில் பழமையானது தமிழ் என்றால், கல்வியிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருக்கும். அப்படி இருந்தால் ஏன் இவர்கள் போட்டியை கண்டு பயப்பட்டு , தமிழக மாணவர்களையும் பயப்படுத்துகிறார்கள். "No Pain No Gain" இது திரு.கமல்ஹாசன் அவர்கள் கூறியது. நாம் ஏன் நம் மாணவர்களின் அறிவுத்திறனை குறைத்து மதிப்பிட வேண்டும். அவர்களிடம் இருக்கும் அறிவுத்திறனை சிறிது தூண்டி விட்டாலே போதுமே. நம் மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடத்துக்கு வருவார்கள் அல்லவா. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை சுட்டி காட்டி தமிழர் உபஜனாதிபதியாக உள்ளார். கூகுள் சுந்தர் பிச்சை தமிழர் , நோவார்டிஸ் மருந்து கம்பெனி சிஈஓ தமிழர் மாதம் 7 கோடி சம்பளம் பெறுகிறார் என்று சொல்லி கொண்டு இருந்தால் போதுமா?. அவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு தரமான கல்வியை நாடிச்சென்றதால் தானே இந்த உயரிய நிலைக்கு வந்துள்ளனர். நாமும் நம் மாணவர்களுக்கு ஏன் அந்த தரமான கல்வியை கொடுத்து முன்னுக்கு கொண்டு வரக்கூடாது.   11:13:34 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
21
2021
அரசியல் இது உங்கள் இடம் கனவு கூட காணாதீர்!
இதில் கூறப்பட்டுள்ள அனைத்து முதலீடுகளையும் திமுக ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே திரும்ப பெற்று கொண்டது. முதலமைச்சரின் கோரோணா பொது நிவாரண நிதி வசுலிக்கப்பட்ட போதே இந்த முதலீடுகளும் திரும்ப பெற்றாகிவிட்டது.   10:37:55 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூலை
20
2021
அரசியல் பெகாசஸ் அனைத்து மாநிலங்களிலும் பிரஸ்மீட், கவர்னர் மாளிகை முற்றுகை - காங்., அறிவிப்பு
பாராளுமன்றம் நடக்கும் போது ஒழுங்காக பாராளுமன்றம் போய் வாதம் செய்து எதிர்த்து நின்று மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் தடுக்க மாட்டார்கள். பாராளுமன்றம் நடக்கும் போது வெளியே போராட்டம் செய்வார்கள். பின்னர் பாரளுமன்றத்தில் அனைத்து மசோதாக்களும் நிறைவேறி ஜனாதிபதி ஒப்புதல் பெற்றது கூட தெரியாமல், மசோதாக்கள் சட்டமான பின்னர் மறுபடியும் மோடியை திட்டுவார்கள். பாமர மக்களை இப்படி தான் ஏமாற்றுவது என்ற விவஸ்தையே இல்லாத அளவுக்கு ஜனங்களை முட்டாளாக்கி ஏமாற்றி அரசியல் செய்வார்கள். இது தான் காங்கிரஸ் + கட்சிகள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் காங்கிரஸ்+கட்சிகளிடம் Subject எதுவும் இல்லை. அவர்களின் ஒரே சப்ஜெக்ட் கோடீஸ்வரர்கள் இவ்வளவு பேர் இருக்கும் போது டீ காரன் எப்படி பிரதமராக இருக்கலாம் என்பது தான்.   16:37:15 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூலை
20
2021
சம்பவம் டில்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் உளவுத்துறை எச்சரிக்கை
பயங்கர வாதிகள் என்று யாரை குறிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. பாரளுமன்றம் வேறு கூடியுள்ளது. தினமும் எம்பிக்கள் பாரளுமன்றம் சரிவர நடைபெறாமல் அமளியில் ஈடுபாடுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அப்பொழுது பயங்கரவாதிகள் யாராக இருக்கும்?   16:17:55 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
20
2021
அரசியல் 5 முறை போனை மாற்றியும் ஒட்டுக்கேட்பு பிரச்னை ஓயவில்லை பிரசாந்த் கிஷோர்
இந்திய திருநாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்பவர் திரு.பிரசாந்த் கிஷோர் அவர்கள். இவர் தான் இப்போது யார் ஆட்சிக்கு வர வேண்டும் யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்பவர். ஆக இந்தியாவின் முடிசூடா மன்னர் திரு.பிரசாந்த் கிஷோர். ஆக இந்த இந்திய திருநாட்டின் விவசாயிகள் திரு.பிரசாந்த் கிஷோரின் அடிமைகள். இந்திய திருநாட்டின் இளைஞர்கள் திரு.பிரசாந்த் கிஷோரின் அடிமைகள். இந்திய திருநாட்டின் மகளிர் திரு.பிரசாந்த் கிஷோரின் அடிமைகள். இந்திய திருநாட்டின் குழந்தைகள் திரு.பிரசாந்த் கிஷோரின் அடிமைகள். இந்திய திருநாட்டின் தொழிலாளர்கள் திரு.பிரசாந்த் கிஷோரின் அடிமைகள். இந்திய திருநாட்டின் மக்களை காக்கும் அரசியல் கட்சிகள் திரு.பிரசாந்த் கிஷோரின் அடிமைகள். ஆக இந்திய அரசு மாநில அரசுகள் திரு.பிரசாந்த் கிஷோரின் அடிமைகள். இந்திய திருநாட்டில் உள்ள அரசுகள் திரு.பிரசாந்த் கிஷோரின் அடிமைகள். ஆக மொத்தம் இனி இந்தியாவில் அனைவரும் பிரசாந்த் கிஷோர் என்ன சொல்லுகிறாரோ அது போல் தான் நடக்க வேண்டும். இல்லை என்றால் தலையை சீவி விடுவார். அரசியல் வாதிகளே ஜாக்கிரதை. பாமர ஜனங்கள் அகிய எங்களுக்கு பிரச்சனை இல்லை. பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்று போய் விடுவோம். அரசியல் வாதிகள் ஆகிய உங்களுக்கு தான் பிரச்சினை உங்கள் பரம்பரையில் வரும் அனைவரும் திரு.பிரசாந்த் கிஷோர் படுத்துகிடக்கும் கட்டில் முன் சாமரம் வீச வேண்டும் இனி வரும் பரம்பரை முழுவதும். நீங்களே பார்த்துகொள்ளுங்கள். திரு.பிரசாந்த் கிஷோர் அவர்களே, நீங்கள் 5 முறை போன் மாற்றியும் ஒட்டுக்கேட்பது நிறுத்தவில்லை என்று கூறுகிறீர்கள். இது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். ஏன் முதல் போன் ஒட்டு கேட்கும் போதே இது வெளிப்படுத்தவில்லை. ஏன் 5 வது போன் வரை வந்தபின் கூறுகிறீர்கள். ஆனால் எந்த திருடனும் எந்த அரசியல் வாதியும் இரகசியம் பேசும் போது அவர் அவர் போனில் பேச மாட்டார்கள் தானே. திருட்டு சிம்கார்டு உள்ள போனில் தானே பேசுவீர்கள். சாதாரண குடிமகனுக்கே இது நன்கு தெரியும். அரசுக்கு இது தெரியாமலா இருக்கும். உண்மையை சொல்லுங்கள் இது கால் உடைத்து மாவு கட்டு போட்டு சக்கர நாற்காலி வைத்த கதை தானே. திரு.பிரசாந்த் சார் நீங்கள் கால் உடைத்து மாவுகட்டு போட்டது சரி ஆனால் ஒன்றை மட்டும் கோட்டை விட்டு விட்டீர். ஒரு மாதம் மாவுகட்டு போட்டு சக்கர நாற்காலியில் இருந்தால் மீண்டும் பிசியோதெரபி செய்து நடந்து பழகி பின்னர் தான் நன்கு நடக்க முடியும். ஆனால் உங்கள் நோயாளி ஒட்டெடுப்பு முடிந்த அடுத்த நாளே நன்றாக நடந்து மேடையேறி வந்தார். இது எப்படி திரு.பிரசாந்த் கிஷோர் சார். எந்த திருடனும் ஏதாவது ஒரு தடயம் இல்லாமல் திருடமாட்டான் என்று போலீசில் கூறுவது ஞாபகம் வருகிறது.   13:53:41 IST
Rate this:
2 members
0 members
13 members

ஜூலை
20
2021
பொது ரியல் எஸ்டேட் தொழிலாக மாறிய மருத்துவமனைகள் சுப்ரீம் கோர்ட்
திரு.ராஜராஜன் நீங்கள் குரானா என குறிப்பிட்டு உள்ளீர்கள். அது குரானா இல்லை கோரோணா. குரானா என்றால் அது முஸ்லிம்களின் வேதம் குரானை குறிப்பது போல் உள்ளது. திரு.GMM அவர்கள் குறிப்பிட்டது போல் எந்த வக்கீலும் வாங்கும் Feesக்கு இரசீது கொடுப்பதில்லை. கோர்ட்டில் செலுத்தும் தொகைக்கு கூட இரசீது காட்டுவதில்லை. ஒரு வழக்குக்கு இவ்வளவு தான் வாய்தா என்ற நிர்ணயம் இல்லை. சாகும் வரை கூட வாய்தா வாங்கலாம். வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் அடுத்த விசாரணை தேதியில் வாதி மற்றும் பிரதிவாதி இருவரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் நீதிபதி முன் இருவரும் ஆஜராகி இருவரின் அடையாளம் உறுதி படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வக்கீலுக்கு 500 ரூபாய் கட்டணம் கொடுத்தால் வாய்தா வாங்கி விடலாம். எந்த வக்கீலும் வாங்கிய கட்டணத்துக்கு இரசீது தருவதில்லை. ரியல் எஸ்டேட் பத்திரபதிவு செய்யும் அதிகார பூர்வ எழுத்தர் எந்த கட்டணத்துக்கும் இரசீது தருவதில்லை. பத்திரம் விற்கும் விற்பனையாளர் நோட்டில் கையெழுத்து வாங்கி கொண்டு பணம் பெற்று பத்திரத்தாள் தருவார். அவரும் வாங்கிய தொகைக்கு இரசீது தரமாட்டார்.   13:09:12 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X