சசிக்கலா அரசியலுக்கு சசிகலா முழுக்கு என்பது நாடகமே. இன்னும் 10 நாட்களில் தொண்டர்கள் எனக்கு தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீங்கள் வந்தால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று அறிவுறுத்தியதால் நான் மீண்டும் முழு அரசியலில் ஈடுபட முடிவுசெய்து விட்டேன் என்ற செய்தி வரும்.
04-மார்ச்-2021 10:40:29 IST
அரசு சரியாக செயல்படவில்லை என்றால், அதை தனியார் மயமாக்கலாமா அல்லது அதை சரிசெய்ய முயற்சிக்கலாமா? எது சரி? ஒவ்வொரு அமைச்சகமும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து மறைமுகமாக எவ்வளவு பெறுகின்றனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவர்களால் தான் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தை நோக்கி செல்கின்றன. ஒரு பொதுத்துறை நிறுவனம் நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு அந்த துறையை சேர்ந்த மந்திரிதான். அந்த துறையை தனியார் துறைக்கு விற்கலாமே? வெளிநாடாக இருந்தாலும் பரவாயில்லை. அப்படி செய்தால் பொதுத்துறை நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எழுச்சியுடன் சிறந்த முறையில் எந்த வித நஷ்டமின்றி இயங்கும்.
09-பிப்-2021 11:22:01 IST
திரு பாசில், மிகச்சிறந்த இயக்குநர். நதியாவும் மிகச் சிறந்த நடிகையே. இந்த நிலைக்கு வழிகாட்டிய குருவுக்கு மரியாதை செய்வதுதான் அவருக்கு கொடுக்கும் காணிக்கை.
09-பிப்-2021 10:55:17 IST
இலங்கை மீது போர் தொடுத்தால் மட்டுமே நம் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும். அது வரை இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். விடிவு காலம் என்பது கிடையவே கிடையாது.
22-ஜன-2021 10:20:15 IST
இது அருமையான குடும்பப் படம். 2000 ஆண்டுகளில் வெளியான சினிமா பற்றி விளக்கங்கள் அ்ருமை. அது போல்1980 களில் உள்ள படங்களான ரோசாப்பூ ரவிக்கைக்காரி, பதினாறு வயதினிலே, ஆனந்தராகம், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களையும் அதன் சாதனைகளையும் குறிப்பிட்டு எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.
06-ஜன-2021 11:30:49 IST
மிகவும் நேர்மையான அரசியல்வாதி திருமதி மமதா பேனர்ஜி அவர்கள். அவர்களுக்கு சொத்து ஏதும் இருப்பது போல் தெரியவில்லை. நேர்மையானவர்களுக்கு எப்போதும் பயம் இருக்காது. யாருக்கும் அடிபணிய மாட்டார்கள். அப்படிப்பட்ட நேர்மையான அரசியல்வாதியை ஆட்சி செய்யவிடாமல் அவர்களது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது நல்லதா? இதே போல் அடுத்தவர்களுடைய கட்சியில் குழப்பம் ஏற்படுத்தினால் அதை பொறுத்துக்கொள்வார்களா? இது அராஜகம். கட்சி மாறுபவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கினால் தான் இது போல் எங்கும் நடக்காது. இந்தியாவில்தான் இதுபோல் கேவலமான நிலைமை. ஒரு கட்சியில் வெற்றி பெற்றுவிட்டு சூடு சொரணை இல்லாமல் அடுத்த கட்சியில் போய் சேருவது.
06-ஜன-2021 10:16:40 IST
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இவர் நடித்த பெரும்பாலான படங்களை பார்த்து விட்டேன். எனக்கு பிடித்த படம் - மனதில் உறுதி வேண்டும் (நந்தினி சிஸ்டர்).
05-ஜன-2021 10:49:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.