S. ரெகுநாதன் : கருத்துக்கள் ( 13 )
S. ரெகுநாதன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
4
2020
அரசியல் ஹிந்துவுக்கு ஆதரவா, எதிர்ப்பா? தெளிவாக சொல்லுங்கள் ஸ்டாலின்!
இவனுகள் வலது சொல்லவில்லை என்று யார் அழுதார்கள்..??? அப்படி என்றால் நாமெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளாக "விநாயகர் சதுர்த்தி, தீபாவளி கிருஷ்ண ஜெயந்தி" எல்லாம் கொண்டாடாமல் கவலையுற்று இருந்தோமா.. இல்லை வாழ்த்துச்சொல்ல இவனுக்கள் எல்லாம் சங்கராச்சார்யர்களா..?? இந்த சித்தாந்த தடுமாற்றம் அவர்கள் எதிர்க்கட்சி ஆக இருக்கும்போது தேவையில்லாமல் அதிகரிக்கும்... அதனை திமுக கட்சியில் உள்ள இந்து உணர்ச்சி உள்ள உடன்பிறப்புகளும், வெகுஜன இந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய மனக்குமுறல் உள்ளது அனைவரும் அறிந்ததே.. அதற்க்கு வடிகாலாக பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் தமிழகத்தில் செம்மையாக கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருகிறார்கள்.. கருணாநிதி இந்துக்களை "திருடன்" எண்டு சொன்னபோதே தமிழ்நாட்டில் பொங்கி இருந்தால் இந்த திராவிட கும்பல் தங்களை திருத்தி கொண்டு இந்து மக்களை மதித்திருக்கும்.. இதற்க்கு தமிழகத்தில் உள்ள சோற்றாலடித்த பிண்டங்கள்தான் (நாம்) காரணம்.. இங்கு மேடைதோறும் இந்துக்களை மோசமாக அர்ச்சித்து வரும் ராசா, கனி, பிரசன்ன போன்றவர்களுக்கு "தில்" இருந்தால் பக்கத்துக்கு மாநிலத்திலோ அல்லது டெல்லியில் சென்று பேசமுடியுமா..?? தேவைபட்டால், புட்டபர்த்தி சாய்பாபா தலைவர் வீட்டுக்கே வந்து வாழ்த்தினார் என்று "பகுத்தறிவு பகலவர்கள்" சொல்லி புளகாங்கிதம் அடைவார்கள்.. தனக்கு தேவை படும்போது இந்துக்கள் ஓட்டை பெற்று ஆண்டு, தின்று கொழுத்து வந்தவர்களுக்கு இனியும் பக்திமிக்க தமிழ் மக்களை இந்த இணையதள உலகில் ஏமாற்றமுடியாது ஊரை அடித்து உலையில் போட்டு தன குடும்பம் வாழ மட்டுமே இலவசங்களை கொடுத்து கெடுத்த திராவிட கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்ட வரும் தமிழக சட்டமனற்ற தேர்தல் ஒரு சிறந்த சந்தர்ப்பம்.. அந்த சமயத்தை எதிர் நோக்கி ஒவ்வொரு தமிழக இந்துகளும் சரியாக பயன்படுத்தி இந்த ஊழல் பெருச்சாளிகளையும், நாத்திக மலங்களையும் துடைத்து எறியவேண்டும்.எண்டு அன்போடு வேண்டுகிறேன் ..ஜெய் ஹிந்...   09:49:48 IST
Rate this:
5 members
0 members
23 members

மே
31
2020
பொது காட்மேன் நிறுத்தப்படும்!
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தேறியுள்ளது... இனி நடப்பது நல்லதாகவே நடக்கும்.. "அதற்கு GODMAN தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன் .. இப்படி ஒரு எதிர்ப்பு வரவில்லையென்றால் இந்த தரம் தாழ்ந்த படைப்பாளிகள் துணுத்து அலைவார்கள்.. இதனை சுப்ரமணிய சுவாமி கேட்டுக்கொண்டு தடை செய்ய சொன்னது ஓரளவுக்கு சரியானாலும் இந்த எதிர்வேள்வியில் தங்களை ஈடுபடுத்தி கொண்ட பல இயக்கத்தினருக்கு, ஜாதி மதங்களை கடந்து கண்டித்திருப்பதற்கும் என் சிரம்தாழ்த்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்துமதத்தினர் மற்றும் பிராமணர்கள் இன்று புண்படுத்தப்பட்டால் அது நாளை தன் மதத்தினருக்கும் பரவும் என்ற ஏகோபித்த எதிர்ப்பு இது போன்று புரட்சி வீரர்களுக்கு மிரட்சி ஏற்படுத்தும் என்பது திண்ணம்.. இனிமேலும் இந்து மதத்தினரயோ, ப்ராமணர்களையோ பழித்து பேச தமிழ்நாட்டில் எவனும் முன்வர மாட்டான்... அப்படி பேசினால் அவர்களை மக்கள் ஏகோபித்து எதிர்ப்பார்கள் என்ற பயம் இருந்தால் திராவிட, பிற்போக்கு அரசியல்வாதிகள் குறிப்பாக, திக, திமுக மற்றும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள் இனி தங்கள் பிழைப்பினை மாற்றிக் கொள்ளவேண்டும்.. தமிழக வரலாற்றில் 1968 க்கு பிறகு நிகழ்ந்திருக்கும் மாபெரும் அதிசயம்...தமிழ்நாட்டில் 3% குறைவாக உள்ள பிராமணர்கள் யார் குடியை கெடுத்ததாக சரித்திரம் உண்டா.. ?? அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்க பட்டாலும் அவர்கள் சாத்வீக குணம் கடல்கடந்து அவர்கள் கோலோச்சும் நிலையில் இருக்கிறார்கள்.. இன்னமும் குட்ட குட்ட குனிபவன் பிராமணன் அல்ல.. அவர்களை அரவணைக்க இந்துமதத்தை சேர்ந்தவர் மட்டுமில்லாமல் இஸ்லாமிய, கிறிஸ்துவ மத நண்பர்களும் ஒன்றிணைத்துள்ளது காலத்தினால் மறக்க மறைக்க படாது .. இந்த நிகழ்வு இனிமேல தமிழ்நாட்டில் ஒரு புதிய சகாப்தம் உருவாகும் அதுவே திராவிட, கடவுள் மறுப்பாளர்களுக்கு ஒரு சம்மட்டியடி.. இந்த புனித செயலில் கலந்து கருத்து தெரிவித்து பிற்போக்கு அரசியல் வாதிகளுக்கு ஜாதி மதம் கடந்து தக்க பாடம் புகட்டிய எல்லா அமைப்பினரின் பாதங்களுக்கு மீண்டும் மீண்டும் பலகோடி வந்தனங்கள் ... ஜெய் ஹிந்   15:05:41 IST
Rate this:
4 members
0 members
14 members

மே
24
2020
சம்பவம் சிங்கம்பட்டி கடைசி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்
சிங்கம்பட்டி ராஜா என்று நெல்லை மாவட்டமே அன்புடன் அழைக்கப்படும் உயர்திரு முருகதாஸ் தீர்த்தபதி சிறந்த கல்விமான், நீதி, நியாயங்களுக்கு பிரதான முக்கியத்துவம் தருபவர்.. அவர் முன்னோர்கள் ஸ்தாபனம் செய்த அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலை பள்ளியில் படித்தவன் என்றமுறையிலும் “ராஜாவாவை “பல சந்தர்ப்பங்களில் சந்திக்க முடிந்ததையும் பாக்கியமாக கருதுகிறேன்.. மேலும் என் மாமனார் அம்பை வழக்கறிஞர் முத்துராமன் அவர்கள் சிங்கம்பட்டி ராஜாவின் சட்ட ஆலோசகர் என்ற அளவிலும் சிங்கம்பட்டி ராஜா அவர்கள் மீது மிக்க மதிப்பும், மரியாதையை என்றும் எங்களுக்கு உண்டு... அன்னார் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... ஓம் ஷாந்தி..   12:43:38 IST
Rate this:
0 members
1 members
12 members

மே
24
2020
சம்பவம் சிங்கம்பட்டி கடைசி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்
தென்னிந்தியாவின் கடைசி ஜமீன்... His Highness TNS Murugadoss Theerpathy Rajah of ZIngampatti. எங்களின் அடையாளம்,சொத்து,மன்னர் இப்போது எங்களுடன் இல்லை.இவரின் வரலாறை சரியாக எந்த ஊடகமும் எந்த சினிமாவும் சரியாக சித்தரிக்கவில்லை. இவரைப் பற்றி எழுத எனக்கு உரிமையும் அதற்கான கடமையும் இருக்கிறது என்றே கருதுகிறேன்.என் நிச்சயதார்த்தம்,திருமணம் என இரண்டு நிகழ்வுகளிலும் இவர் கலந்து கொண்டு எங்களை ஆசீர்வதித்தார்.இவை இரண்டையும் தாண்டி இவரை பற்றி எழுத நான் சரியான நபர் என்றே கருதுகிறேன். நானே சிங்கம்பட்டி ஜமீன் மறவர் உறவின்முறை வழித்தோன்றல் என்பதும்தான். தென் தமிழகத்தில் மிகவும் பழமையான சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானத்தின் 31 ஆவது பட்டத்தை பெற்ற “தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி”(சுருக்கமாக TNS Murugadoss Theerthapathy). 29.09.1931இல் பிறந்த இவர் இந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னர் என்ற பெருமை பெற்றவர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். கி.பி 1100ல் உருவான இந்த சிங்கம்பட்டி தமிழ்நாட்டில் 72 பாளையங்களுள் சிங்கம்பட்டியும் ஒன்றாக இருந்து வந்தது. தமிழகத்தின் 72 பாளையங்களில் 24ஐ சிங்கப்பட்டி ஜமீனே தலைமை தாங்கி வந்ததது.விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகம நாயக்கும், அவரது மகன் விஸ்வநாத நாயக்கும் தங்களை, மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையில், சர்வ சுதந்திரம் பெற்ற ஆட்சித் தலைவர்கள் என அறிவித்துக் கொண்டார்கள். இவர்கள், பாண்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் இருந்த குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரிவினை செய்து 72 பாளையங்களாக மாற்றியமைத்தார்கள். அப்போது பிறந்ததுதான் சிங்கம்பட்டி. சிங்கம்பட்டி ஜமீன் பற்றிய தகவல்கள் 1. தற்போது மறைந்த TNS முருகதாஸ் ஜமீன் மக்களுடன் எளிமையாக பழகியபவர். ஆன்மீக சித்தர். தத்துவ அறிஞர். வெகுஜன பூஜிதர், தயாளகுணசீலர். இலங்கை கண்டியில் படித்த இவர் அபார ஆங்கிலப்புலமை கொண்டவர். 2. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. ஆனால், அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழ்நாட்டில் இவரும் வட இந்தியாவில் ஜோத்பூர் மகாராஜாவும் மட்டுமே. இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே இவருடைய தகப்பனார் திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா இறந்துவிட்டதால் இவரை அரியணையில் ஏற்றிவிட்டார்கள். அப்போது இளவரசர் மைனராக இருந்ததால் சிங்கம்பட்டி பாளையத்தைத் தனது பராமரிப்பில் எடுத்துக் கொண்டது பிரிட்டீஷ் சர்கார். 3. வில்வித்தை,சிலம்பம்,வர்ம கலை போன்றவற்றை கற்று தேர்ந்தவர். வாயில் இருக்கும் சிகரட்டை கூட துல்லியமாக குறி பார்த்து சுடும் திறமை கொண்டவர். இரண்டு கையாலும் டென்னிஸ் விளையாடும் திறமை கொண்டவர்.Ball Room Dancer 4. உலகபுகழ்பெற்ற தாமிரபரணி நதி இன்று பல மாவட்டங்களுக்கு நீர் ஆதாரம்.அதில் தாமிரபரணி தீர்த்தம், வேததீர்த்தம், பழைய பாபநாச தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வைரவ தீர்த்தம், பாண தீர்த்தம் புண்ணிய தீர்த்தங்களாக இருந்து தாமிரபரணி நதிக்கு காரணமாகின்றன. சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த பொதிகை மலைக்கு இவர் ராஜா என்பதாலும் தீர்த்தங்களுக்கு அதிபதி என்பதாலும் தீர்த்தபதி என்ற பட்டம் சூட்டப்பட்டது. 5. சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் அம்பாசமுத்திரத்தில் பொது மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளி ஆகியவை அப்போதே கட்டப்பட்டு மக்களுக்கு இலவச சேவை வழங்கி வந்தது. இன்று அது தீர்த்தபதி அரசு பொது மருத்துவமனை,தீர்த்தபதி அரசு மேல்நிலைப்பள்ளி என்ற பெயரிலேயே இன்றும் செயல்பட்டு வருகிறது. 6. 1934ல் மகாத்மா காந்தி திருநெல்வேலிக்கு விஜயம் செய்த போது அவரது சுற்றுபயண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது சிங்கம்பட்டி ஜமீன் தான். 7. மாஞ்சோலை தேயிலை தோட்டம் பயிரிட (Bombay Burmah Trading Corporation) மேற்கு தொடர்ச்சி மலையில் 8500 ஏக்கரில் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தது சிங்கம்பட்டி ஜமீன் தான். 8. மாஞ்சோலை தேயிலை கம்பெனி மாதம் 14ஆயிரம் ருபாய் குத்தகை வாடகை பணமாக தற்போதைய ராஜாவுக்கு ஒரு காலம் வரை கொடுத்து வந்தது. அனால் அரசுக்கு பல மடங்கு பணம் வரியாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் மாஞ்சோலை பகுதியை மீட்டெடுக்காமலே விட்டுவிட்டார் ராஜா. இன்றும் மாஞ்சோலை தேயிலை நிறுவனம் இவருக்கு மரியாதை செலுத்துகிறது. 9. திருவிதாங்கூர் இளவரசர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் அவரது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்கும் இடையில் பிரச்சினை. எட்டு வீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார் வர்மாவின் தாயார் ராணி உமையம்மை. வர்மாவுக்கு உதவப்போய், எதிர்பாராத விதமாக அப்போதைய சிங்கம்பட்டி இளவரசர் மரணம் அடைந்தார். அப்படி இறந்தவருக்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கரையும் 'நல்ல குத்தி' என்ற பட்டத்தையும் ராணி உமையம்மை வழங்கினார். அதுவே, காலப்போக்கில் 'நல்ல குட்டி' ஆகிவிட்டது.இன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் இருப்பது இந்த வனப்பகுதியில் தான். 10. ஜமீன்தாரி ஒழிந்தபிறகு ஜமீனின் பல ஏக்கர் சொத்துக்கள் அரசு வசம் சென்றன. சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே இவரிடம் தற்போது உள்ளன. 11. ஜமீனுக்கு பாத்தியப்பட்ட காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட 9 கோயில்கள் இருக்கின்றன. 12. பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழாவின் போது சிங்கம்பட்டி ஜமீனுக்கு அளிக்கப்படும் மரியாதை சொல்லில் அடங்காதது. ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழா தர்பாரில் ராஜ உடையில் அரியணையில் அமர்ந்து மக்களுக்கு காட்சி தருவார். சுமார் 80 வருடங்களுக்கும் மேலாக அவ்விழாவில் ராஜ மரியாதையை இவர் பெற்றுள்ளார் 13. முன்பு, அரண்மனையில தளபதிகளாக, மந்திரிகளாக இருந்தவர்களின் வாரிசுகளே இப்போதும் அரண்மனையில் பணியாளர்களாக இருக்கிறார்கள். ராஜ விசுவாசத்தால் இவர்கள் அனைவருமே குறைவான ஊதியத்திலேயே இங்கு பணி செய்கிறார்கள். 14. சிங்கம்பட்டியில் இன்றும் அந்த அரண்மனை கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது. அரண்மனை சென்றால் கத்தி,வால்,பல்லக்குகள்,ஆங்கிலேய அரசு கொடுத்த பரிசுகள்,போர்சிளின் தட்டுகள்,துப்பாக்கி,வெள்ளி வெற்றிலை பெட்டி,ரவிவர்மாவின் ஓவியம் என காலம் தாண்டி நிற்கும் நினைவுகளை காணலாம்.அங்கே காண வரும் அனைவரையும் எளிமையாக அன்போடு அதை சுற்றி காட்ட செய்தவர் ராஜா முருகதாஸ் தீர்த்தபதி 15. Google Maps ல் ஜமீன்தார் காடுகள் என இன்று இருக்கும் ஒரே ஜமீந்தார் காடுகள் சிங்கம்பட்டி ஜமீந்தார் காடுகள் தான். 16. 2002-2005 ஆகிய மூன்று ஆண்டுகள் Honorary Wildlife Warden of Forests என்ற கெளரவ பதவியை தமிழக வனத்துறை இவருக்கு வழங்கி பெருமைபடுத்தியது. 17. சிங்கம்படியின் 24வது தலைமுறை ஜமீன்தார் தான் தூக்குத்துரை பெரியசாமித் தேவர். (விசுவாசம் படத்தின் ஹீரோ பெயர்) 18. கும்பகோண ஸ்ரீ விஜேயேந்திர ஸ்வாமிகள் இவருக்குத் “தென்பொதிகை சித்தர்” என்ற பட்டத்தினை வழங்கிச்சிறப்பித்தார். மதுரை ஆதீனம்- “இந்து ஆலய பாதுகாவலர்” என்ற பட்டத்தினை (10.06.1971) அன்று வழங்கியது. கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம், “ஆன்மீக ஆழமுடைமை” என்ற பட்டத்தினை 16.02.1997 அன்று வழங்கிச் சிறப்பித்தது. 19. தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையினர் இவருக்குச் “சிவஞானச்சித்தர்” என்ற பட்டத்தினை 25.07.1999 அன்று கொடுத்து வழங்கியது. பாளையங்கோட்டை புனித இருதய சகோதரர்கள் சபையோரின், “சித்தாந்த சிகாமணி” என்ற விருதினை 07.05.1999 அன்று வழங்கியது. இராமநாதபுரம் தமிழ்ச்சங்கம், “சித்தாந்த சிந்தாமணி” என்ற விருதினை 03.03.2002 அன்று வழங்கிச் சிறப்பித்தது. கடந்த 22.09.2002-ஆம் ஆண்டு அம்பை வட்ட தமிழாசிரியர் கழகம், “மூதறிஞர்” என்ற பட்டத்தினை வழங்கிச்சிறப்பித்துள்ளது. 20. சிங்கம்பட்டி அரண்மனையின் பல பொக்கிஷங்கள் தமிழக அரசின் அருங்காட்சியக துறையால் சென்னையில் பாதுகாக்கபடுகிறது. 21. இன்றும் பொதிகை மலை,மாஞ்சோலை,தாமிரபரணியில் உள்ள இந்து அறநிலையத்துறை சார்ந்த கோவில்களின் பல முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அரசு இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவருக்கு தகவல்களை பகிர்ந்து கொண்டும் ஆலோசனைகளும் கேட்டு வருகிறது. இப்படி பல வரலாற்று சுவடுகளை சொல்லி கொண்டே செல்லலாம். நான் இவரை கடைசியாக அவரது அரண்மனையில் October 14,2018 அன்று சந்தித்தேன். சுமார் ஒரு மணி நேர சந்திப்பில் பாலாவின் அவன் இவன் திரைப்படம் பற்றியும் பொன்ராமின் சீமராஜா திரைப்படமும் தன்னை சரியாக சித்தரிக்கவில்லை என்றும் கதை விவாதத்தில் கூட என்னை சரியாக கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறி வருத்தபட்டார்.(தவறாக சித்தரிப்பு செய்தமைக்காக பாலா மீது வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது) கடைசியாக அவர் அரண்மனையில் ராஜா என்னிடம் கூறியது.. “ சிவா.. நம்ம பிள்ளைங்களுக்கு நீ நல்ல வழிகாட்டியா இருக்கணும் பா.. சிங்கம்பட்டி ஜமீன் முறையில் உனக்கு முழு உரிமையும் கடமையும் இருக்கு...கண்டிப்பா செய்யணும”.. எங்களின் அடையாளம் தற்போது எங்களை விட்டு பிரிந்தாலும் ராஜா அவர்களின் மாண்புகளையும் நற்பண்புகளையும் தாங்கி நிற்போம்..   12:43:07 IST
Rate this:
2 members
1 members
21 members

மார்ச்
11
2020
அரசியல் தமிழக பா.ஜ., தலைவராக எல்.முருகன் நியமனம்
தாமதமாக இருந்தாலும் தகுந்த முடிவாக பிஜேபி தலைமை எடுத்துள்ளது.. வக்கீல் எல். முருகனுக்கு வாழ்த்துக்கள்.. இனிமேல் திராவிட கட்சிகளுக்கு சமுக நீதி பற்றி பேச துப்பில்லை. அதிலும் திமுக ஏதோ அவர்கள் தான் ஏகபோக குத்தகை தரர்கள் போல் பேசி வந்தார்கள்.. அப்படிப்பட்டவர்களுக்கு சம்மட்டி அடியை பிஜேபி தமிழக மாநிலத்தலைவர் வாயிலாக கொடுத்துள்ளது... சூப்பர்.. இனி புதிய தலைவர் மிக முனைப்புடன் செயல்பட்டு எல்லா தரப்பு மக்களாலும் ஏகோபித்த பாராட்டுதலையும் பெற மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து சீனியர் முன்னணி தலைவர்கள் வழிகாட்டுதலில் செயல் பட வேண்டும்.. பிஜேபி அகில இந்திய தலைமை காரைக்குடி எச். ராஜாவுக்கு வேறு பிஜேபி ஆளும் மாநிலங்கள் மூலம் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கி அவரை எதிர்வரும் மந்திரிசபை விரிவாக்கத்தில் மத்திய அமைச்சர் ஆக்கவேண்டும்.. மத்திய அமைச்சரவையில் வாசனுக்கும், OPS மகனுக்கும் மந்திரி பதவி கொடுத்தால்., அது 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் பிஜேபி க்கு சில இடங்கள் வெல்ல வாய்ப்பு கிட்டும்...   14:22:24 IST
Rate this:
3 members
0 members
11 members

மார்ச்
12
2020
அரசியல் மக்களுக்கு எழுச்சி ஏற்பட்ட உடன் அரசியலுக்கு வருவேன் ரஜினி
ரஜினி அவர்கள் பேச்சை ஊன்றி கேட்டேன்...அவர் சில நாட்களுக்கு முன்பு ரங்கராஜ் பாண்டே யு டியூபில் தெரிவித்த கருத்து உண்மை என்று தெரிந்தது.. ரஜினியின் 3 திட்டங்களும் மிக மிக சிறப்பானதாக உள்ளது.. தமிழக முன்னேற்றத்துக்கு அவை மிகப்பெரிய பங்களிப்பை செய்யும்.. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை ரஜினியின் இந்த கருத்துகளை மிக மிக விரும்புவர்... இங்கு எதிர்மறை கருத்துக்களை அள்ளி தெளிக்கும் திமுக மற்றும் இதர திராவிடகட்சி அனுதாபிகள் வயித்தெறிவது நன்றாக தெரிகிறது.. இப்படி பதவி ஆசை இல்லாமல் ரஜினி அவர்கள் வேறு ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை அளிக்க முன்வரும் பாங்கு இதுவரை இந்திய வரலாற்றில் யாரும் காணாதது .. இந்த ஒரு கருத்தே படித்த இளைஞர்கள் மத்தியில் ரஜினிக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தரும்... இப்படி ஒரு ஆளுமையை தான் தமிழ்நாடு இழந்து 50 வருடங்களுக்கு மேலாகிறது... இதனால் பெரிதாக பாதிப்படைய போகும் கட்சி திமுக தான்...எத்தனை பிரசாந்த் கிஷோர் வந்தாலும் அந்த கட்சியை தூக்கி நிறுத்த முடியாது.. அதன் அந்திம காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.. அதிமுக கண்டிப்பாக அடுத்த முறை ஆட்சிக்கு வரப்போவதில்லை.. ஆகவே பெரும்பாலான மக்கள் ரஜினியை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.. வாழ்க தமிழக மக்கள் லஞ்ச லாவண்யமிக்க ஒரு வசை பாடும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய சித்தாந்தத்தை வகுத்துக்கொடுக்கும் ரஜினியின் பின் அணிவகுத்து நின்றாள் தமிழக மக்கள் வாழ்வாங்கு தங்கள் வாழ்க்கையில் புதிய ஒளி பிறக்க ஏதுவாகும்... என்றென்றும் மக்கள் ரஜினியை மனதில் வைத்து பூஜிப்பர்..   13:20:13 IST
Rate this:
18 members
1 members
27 members

செப்டம்பர்
16
2017
அரசியல் பெரிய்ய்ய்ய கூட்டணி... பா.ஜ., கணக்கு பலிக்குமா?
கண்டிப்பாக இந்த மெகா கூட்டணி தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றிகளை பெரும்.. அதிமுக+ பிஜேபி+ரஜினி கட்சி மட்டும் போதும்...அதுவே 30 இடங்களை வெல்லும்..பாமக, மதிமுக, தேமுதிக காட்சிகள் எல்லாம் வெது வேட்டுக்கள் போன தேர்தல்களில் பார்த்துவிட்டோம்.. எனவே தமிழ்நாடு சிறக்க பிஜேபி கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும்...   01:11:15 IST
Rate this:
24 members
1 members
13 members

செப்டம்பர்
16
2017
அரசியல் 2019 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ., சுறுசுறு! கறைபடாத நபர்களை களத்தில் இறக்க திட்டம்
பாரதத்தின் உன்னதமான பிரதமர் ஸ்ரீ. நரேந்திர மோதிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அவர் பல்லாண்டு நீடூழி வாழ்ந்து நம் இந்திய திருநாட்டை உலகில் ஒரு மாபெரும் வல்லரசாக்க மாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பிஜேபி +தே.ஜ கூட்டணி அமோக வெற்றிகளை பெற்று மீண்டும் நல்லாட்சி நடத்த வேண்டுவோம்....ஜெய் ஹிந்த்   01:07:21 IST
Rate this:
25 members
0 members
17 members

மார்ச்
17
2017
அரசியல் ஆர்.கே.நகர் தொகுதியின் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன்
பிஜேபி யின் நல்ல வேட்பாளர் தேர்வு. கங்கை அமரன் கணிசமான வாக்குகளை பெறுவார்...   23:51:27 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
5
2017
அரசியல் அ.தி.மு.க., தொண்டர்கள் எதிர்ப்பை மீறி முதல்வராகிறார்... சசிகலா!எம்.எல்.ஏ.,க்கள் ஏகமனதாக தேர்வு செய்ததாக அறிவிப்பு பிடரியில் பின்னங்கால் பட, ஓ.பி.எஸ்., ஓட்டம்
இப்படி அரக்க பறக்க பதவி ஏற்பதில் ஏதும் புண்ணியம் இருக்கா?? நானும் உங்கள் அம்மா ஆதரவாளன் தான்.. ஆனால் அவரது ஆளுமையில் 1 % இவருக்கு இருக்கா? நெஞ்சில் கை வைத்து சொல்லுங்க சேகரா.. தேர்தலில் நின்று வென்று வரட்டும் நான் ஒத்துக்கிறேன்... இப்படி செய்து திமுக ரேட்டிங்கை அதிமுக ஏற்றிவிட்டது.. இந்த ஆயா செல்வாக்கால் 1 MLA வென்று வரட்டும் நாங்கள் இவர் ஒரு வெற்றியாளர் என்று ஒத்துக்கொள்கிறோம் .. தமிழ் மக்களை முட்டாளாக்கும் உங்கள் ஆயா தலைவியின் தகிடு தத்தம் உச்சநீதி மன்றத்தில் தடுத்தி நிறுத்த படும் .. இதுவே இன்றைய அதிமுக சாதாரண தொண்டன் மற்றும் ஏகோபித்த மக்களின் மனக்கிடக்கை 😠😠   08:41:49 IST
Rate this:
0 members
1 members
37 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X