SURESH KUMAR GURUSAMY : கருத்துக்கள் ( 350 )
SURESH KUMAR GURUSAMY
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2021
அரசியல் தமிழக கட்சிகளின் தூக்கத்தை கலைக்கப் போகிறேன் என சொல்லுங்கள். பாராட்டுகள். எனினும், போராட்டம் வேண்டாமே!
வாழ்த்துக்கள். தமிழர்கள் நலன் காப்போம் என்று கூறி தங்கள் நலனை மட்டுமே வளர்க்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை. தமிழகத்தில் உள்ள இந்துக்களும் தமிழர்கள்தான் அவர்கள் நலனும் முக்கியம் என்று களத்தில் இறங்கியுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். நல்ல துவக்கம்.   10:58:53 IST
Rate this:
0 members
1 members
6 members

அக்டோபர்
19
2021
பொது பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து
இந்தியாவின் உயரிய பதவியில் இருப்பதன் பொறுப்பை உணர்ந்து மதச்சார்பற்ற முறையில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார் பிரதமர் அவர்கள். குறிப்பிட்ட மத பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்துக்கள் தெரிவிக்கும் மாநிலத் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களைப் பிரித்தாளும் பாரபட்சம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் நடுநிலையான மக்கள் உங்களை தூக்கி எறிந்து விடுவார்கள்.   10:57:06 IST
Rate this:
1 members
0 members
13 members

அக்டோபர்
19
2021
பொது பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து
இந்தியாவின் உயரிய பதவியில் இருப்பதன் பொறுப்பை உணர்ந்து மதச்சார்பற்ற முறையில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார் பிரதமர் அவர்கள். குறிப்பிட்ட மத பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்துக்கள் தெரிவிக்கும் மாநிலத் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களைப் பிரித்தாளும் பாரபட்சம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் நடுநிலையான மக்கள் உங்களை தூக்கி எறிந்து விடுவார்கள்.   10:57:05 IST
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
14
2021
அரசியல் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிக அதிகாரம் திரிணாமுல் காங்., எதிர்ப்பு
நாட்டின் பாதுகாப்பிற்கு கூட மத்திய அரசு இவரைக் கேட்டுத்தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமாம். விட்டால் மேற்கு வங்கத்தை பங்களாதேஷுடன் சேர்த்து டீல் போட்டு விடுவார் போல் உள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மற்ற எல்லைகளை விட இங்கு தான் மத்திய அரசு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும்.   21:02:51 IST
Rate this:
0 members
0 members
12 members

அக்டோபர்
9
2021
பொது புதிய கல்வி கொள்கை அமல்படுத்த வேண்டும் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கோரிக்கை
முதல்வர் அவர்களே, கல்வியாளர் பாலகுருசாமி அவர்கள் கூறுவது போல புதிய கல்வி கொள்கை அமலுக்கு கொண்டு வருதல் நல்ல பலனை அளிக்கும். வருங்காலத்தில் வரும் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ மாணவிகள் ஒளிர்வார்கள். மத்திய அரசிற்கு எதிராக நடக்க வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்வி குறியாக ஆக்கி விடாதீர்கள். இப்படித்தான் தடுப்பூசியை அரசியலாக்கி இப்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மிகவும் கஷ்டப் படுகிறீர்கள். அதேபோல் ஒரு தவறு மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தமிழக மக்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு என்றால் நாட்டு மக்களின் நலனுக்காக நல்ல திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தமிழகம் சிறந்து விளங்க உங்களின் நேர்மறையான முடிவுகள் அவசியம்.   14:33:56 IST
Rate this:
1 members
0 members
10 members

அக்டோபர்
6
2021
அரசியல் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி பஞ்சாப், சத்தீஸ்கர் இணைந்து வழங்குகிறது
எவ்வளவோ புலனாய்வு அமைப்புகள் பெற்றுள்ள மத்திய அரசு இது பற்றி விசாரிக்க வேண்டும். அடுத்த மாநிலத்தவர்கள் உயிரிழப்புகளுக்கு பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் நிவாரணம் வாரி வழங்குவதின் பிண்ணனி ஆராயப்பட்டு தெளிவுபடுத்த வேண்டும். எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் அமர துடிப்பது தெளிவாகிறது.இது மாதிரியான பிரச்சினைகள் தொடர்ந்தால் மத்திய அரசு பலவீனம் அடையும். எச்சரிக்கை தேவை. ஐ பேக் போன்ற அரசியல் வியாபாரிகள் கண்காணிக்க பட வேண்டும்.   22:25:24 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
கோர்ட் ஐகோர்ட் உத்தரவால் புலியை பிடிப்பதில் கிலி - வனத்துறை என்ன செய்ய போகுது?
நல்ல விஷயம் தான். மதிப்பிற்குரிய நீதித்துறை கருத்து மிகவும் சரி. புலி பிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதில் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் விலங்குகள் ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் நாய்கள் பிடிப்பது சட்ட விரோதமான ஒன்று கோர்ட்டில் தீர்ப்பு பெற்றார்கள். ஆனால் தெரு நாய்கள் பன்மடங்காக பெருகி உணவுக்கு வழியின்றி பராமரிப்பு இன்றி, நோய் பாதிப்புகளோடு மிகவும் பாவமாக தெருக்களில் உள்ளன. நாளிதழ்களில் பார்க்கும் போது நாய்க்கடிகள், நாய்கள் ரோடுகளில் குறுக்கிடும் போது விபத்து அதிகமாக உள்ளது. மதிப்பிற்குரிய நீதித்துறை அந்த விலங்குகள் நல ஆர்வலர்களிடம் இது பற்றி கேள்வி எழுப்பி நாய்கள் பெருகுவதை தடுக்க கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.   14:41:27 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
4
2021
பொது கல்வித்துறையை மீட்டெடுக்க 12 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
முதல்வர் அவர்களே, தயவுசெய்து கல்வி விஷயங்களில் மத்திய அரசின் கொள்கைகளையே பின்பற்றுங்கள். புதிய கல்வி கொள்கை அமலுக்கு வந்த பின்னர் தமிழகத்தில் இருந்து பெரிய கல்வி சாதனைகள் இல்லை. மேலும் போட்டி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து தேர்வு பெறுவோர் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து வருகிறது. பாடத் திட்டம் தரமாக இருப்பதால் கேரளா,ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து பயிற்சியாளர்களை தமிழகத்திற்கு வரவழைத்து பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் நிலவுகிறது. இதே தமிழகத்தில் இருந்து முந்தைய கல்வி கொள்கை காலங்களில் பயின்று வெற்றி பெற்றவர்கள் மத்திய அரசின் மிகவும் முக்கியமான துறைகளில் பணியாற்றி உள்ளனர். இப்போது வேற்று மாநிலத்தவர்கள் தான் அதிகம். கல்வி கொள்கை வரையறை செய்யும் போது இந்திய அளவில் உள்ள சிறந்த கல்வியாளர்கள் இடம் பெற்றால் மட்டுமே தமிழகம் மீண்டும் கல்வியில் எழுச்சி பெறும். மத்திய அரசுக்கு எதிராக இருக்க மற்ற கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்த நீட் என்ற ஒரு விஷயத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு மற்ற கல்வித் துறைகளில் கோட்டை விட்டு விட வேண்டாம். ஏனெனில் கூட்டணிகள் நிரந்தரம் அல்ல. தனித்துவத்துடன் செயல்பட்டு தமிழகத்தை வழிநடத்துங்கள். மக்களும் உங்கள் வழி நடப்பார்கள்.   15:51:27 IST
Rate this:
0 members
0 members
11 members

அக்டோபர்
2
2021
சிறப்பு பகுதிகள் தமிழ் மொழி டி.வி.ஆர்., உயிருக்கு நேர்!
உங்களுடன் இணைந்து வாசகர்கள் நாங்களும் மகிழ்கிறோம். பத்திரிக்கை துறையில் ஒரு பெரிய இடத்தை பெற்றுத் தந்தது நிறுவனர் தான். அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள அரும்பணி ஆற்றி வரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.   12:23:16 IST
Rate this:
2 members
0 members
1 members

செப்டம்பர்
29
2021
அரசியல் டில்லி அரசு பள்ளிகளில் தேசபக்தி பாடம் துவக்கம்
கெஜ்ரிவாலின் இந்த முயற்சி நல்ல முன்மாதிரி. என்னதான் அரசியலாக இருந்தாலும் தேச நலனுக்கு ஆற்றும் பணிகள் போற்றுதலுக்குரியது. தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மற்றும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி. இந்த மாதிரியான எதையும் முயற்சிப்பது இல்லை. அரசாங்கம் அனைவருக்கும் பொதுவானது என்று கருதுதல் அவசியம். ஆனால் இங்கு வாக்கு வங்கி அரசியல் மட்டுமே.   22:15:59 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X